எனது நண்பரின் பிள்ளை ஒரு பொறியியல் கல்லூரியில் படிக்கிறான். நன்கு படிக்கக் கூடிய பிள்ளை.
நேற்று அவனது அறைத் தோழர்களில் ஒருவன் தீடீரென என் நண்பருக்கு அலை பேசி இருக்கிறான்.
“அப்பா, நவீனுக்கு கொஞ்சம் உடம்பு கொஞ்சம் சரியில்லை. அதனால ஆஸ்பத்திரியில சேத்துருக்கோம்.ன் ஒன்னும் பயப்பட வேண்டாம். “
நண்பர் பதறியிருக்கிறார்.
“அப்பா பயமே வேண்டாம். சாதாரண ஜுரம்தான்.அவன் நல்லாத்தான் இருக்கான். நாள்?ஐக்கு கூட்டிட்டுப் போய்டுவோம். கொஞ்சம் பணம் மட்டும் அவனோட கணக்குல போட்டுடுங்க.”
இன்னும் பதறியிருக்கிறார்.
“ ஒன்னும் இல்லப்பா. வேணும்னா நவீண்ட்டயே பேசுங்களேன்”
“தம்பீ. என்னப்பா செய்யுது? எப்படி இருக்க?”
”ஒன்னும் இல்லப்பா. ஜுரம்தான். டாக்டர்தான் சீசன் சரியில்ல. எதற்கும் இருந்து பார்த்துட்டுப் போன்னார். நானும் இங்க ரொம்ப ஜாலியாத்தான் இருக்கேன். பயப்படாதீங்க”
“ஜாலியாவா?”
“ஆமாம்பா, காலேஜ் போக வேணாம்ல...”
இதற்குனென்ன காரணம்.
கல்லூரி படுத்துகிற்தா அப்படி?
அல்லது பிள்ளைகளின் புரிதலில் பிழையா?
விரிவாக, ஆழமாக யோசிப்பதும் பேசவதும் இந்த நொடியின் ஆக அவசியமான விஷயம்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்