Tuesday, July 12, 2016

65/66, காக்கைச் சிறகினிலே ஜூலை 16

இந்த ஆண்டு பீஹாரில் நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தங்கள் மாவட்டத்தில் முதல் இடத்தைப் பிடித்த மாணவியை மிகுந்தஉற்சாகத்தோடு நேர்காணத் தொடங்கியது அந்த உள்ளூர் தொலைக்காட்சி. 500 மதிப்பெண்ணிற்கு 444 மதிப்பெண் பெற்றிருந்தாள் ரூபி ராய் அந்தப்பிள்ளை.

அவளது சிறுவயது அனுபவங்கள் குறித்து, குடும்பம் குறித்து, எதிர்காலத் திட்டம் குறித்து என்று நகர்ந்து கொண்டிருக்கிறது நேர்காணல். எல்லாம்நல்லபடியாகத்தான் நகர்ந்து கொண்டிருந்து. ”அரசியல் அறிவியல்” பாடத்தில் அவளது மதிப்பெண் பிரகாசமாக ஜொலிக்கவே தனது கவனத்தை அங்குதிருப்பினார் நேர்கண்டவர். ‘புரோடிகல் சயின்ஸ்’ என்று ரூபி முதல் முறை உச்சரித்தபோது ஏதோ பிழையாக உச்சரித்து விட்டதாகவே நினைக்கிறார்.ஆனால் மீண்டும் மீண்டும் ‘பொலிடிகல் சயின்ஸ்’ என்பதை ‘புரோடிகல் சயின்ஸ் என்றே ரூபி உச்சரித்தது அவருக்கு அதிர்ச்சியை அளித்தாலும் ’சரி,அப்படித்தான் உச்சரிப்பாள் போல’ என்று கடந்து போகிறார்.

இன்னும் கொஞ்சம் நீண்ட நேர்காணலின் ஒரு இடத்தில் ‘அரசியல் அறிவியல்’ என்பது சமையல் கலை குறித்தான பாடம் என்று ரூபி சொல்லவேநேர்கண்டவர் அப்படியே உறைந்து போகிறார். அரசியல் அறிவியல் என்பது சமையல் கலை குறித்தான பாடம் என்று கூறும் ஒருவர் எப்படி அந்தப்பாடத்தில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் எடுத்திருக்க முடியும்?

இந்த சந்தேகம் நேர்காணலை பார்த்துக் கொண்டிருந்த நேயர்களுக்கு வரவே அவர்களில் சிலர் பள்ளிக் கல்வித்துறைக்கு இது குறித்து புகார் செய்கிறார்கள்.அதன் விளைவாக ரூபி தற்பொழுது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அந்தப் பாடம் எது குறித்தது என்று அறியாத ஒருவர் அந்தப் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறார் என்றால் கீழ்க்காணும் இரண்டில் ஒன்றுநடந்திருக்க வேண்டும்

தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்திருக்க வேண்டும்
அயோக்கியத் தனத்தின் உச்சத்தில் நின்றுகொண்டு ஏதோ ஒரு சமூக விரோதி காசுக்காக தேர்வுத்தாளை திருத்தியிருக்க வேண்டும்.

இதில் எது நடந்திருந்தாலும் சம்பந்தப்பட்ட நபரான ரூபியும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களும் கடுமையாக தண்டிக்கப் பட வேண்டும்.

கல்வியில் ஊழல் என்பதை சகித்துக் கொள்ளக் கூடாது

********************************************************************************     

நுங்கம்பாக்கம் ரயிலடியில் காலை நேரத்தில் ஜனத்திரளுக்கு மத்தியிலே நின்றுகொண்டிருந்த சுவாதி என்ற குழந்தை கொடூரமாக கொலைசெய்யப்பட்டிருக்கிறாள்.

ஆயிரமாயிரமாய் அதற்கான காரணங்கள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் அலசப் படுகின்றன. காரணம் எதுவாயினும் அது இந்தக் கொலையைநியாயப் படுத்திவிடாது.

இதற்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி ஒரு எதிர்ப்பியக்கத்தை நடத்தியிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் மாண்பமை ஸ்டாலின் அவர்கள்  சுவாதியின் வீடுசென்று அவளது பெற்றோருக்கு ஆறுதல் சொல்லி வந்திருக்கிறார்.

இரண்டு வகையான விமர்சனங்கள் எழுகின்றன.

சுவாதி வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய திரு ஸ்டாலின் அவர்கள் ஆணவக் கொலைகள் நடந்தபொழுது கொலையுண்டவர்களின் வீடுகளுக்கு சென்றுஏன் கூறாதது ஏன்? ஆணவக் கொலைகளை கண்டு கொள்ளாத, ஆணவக் கொலைகளை ஆதரித்த அரசியல் இயக்கங்களோடு தேர்தல் உடன்பாடு கொள்ளத்துடித்த பாரதிய ஜனதாக் கட்சி சுவாதியின் கொலைக்காக தெருவிறங்கி போராடியது அவர் பிராமணர் என்கிற ஒற்றைக் காரணத்திற்காகவன்றி வேறுஎதற்காக?
மற்ற ஆணவக் கொலைகள் நடந்த பொழுது பொங்கிக் கொந்தளித்த தலித் மற்றும் முற்போக்கு இயக்கங்கள் குறிப்பாக மாதர் சங்கங்கள் இப்போதுபொங்காதது சுவாதி ஒரு தலித் அல்ல என்பதும் அவர் ஒரு பிராமணப் பெண் என்பதுமன்றி வேறென்ன?
ஆணவக் கொலைகள் அனைத்திற்கும் ஜாதி முழுமுதற் காரணமாக இருந்தது என்பதையும் சுவாதியின் கொலைக்கான காரணம் இன்னும் கண்டடையப்படவில்லை என்பதையும் அப்படி ஒருக்கால் அவர் கொல்லப் பட்டதற்கு ஜாதிதான் காரணம் எனில் அதுவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதேஆகும்.

வன்புணரப் படுபவள், கொலை செய்யப் படுபவள் எந்த ஜாதியை சார்ந்தவளாக இருப்பினும் அவள் என் மகளேயாகும். அதேபோல அதை செய்பவன் எந்தஜாதியச் சார்ந்தவனாக இருப்பினும் அவன் மிகக் கொடூரமாக தண்டிக்கப்பட வேண்டியவனே.

இதை சொல்பவர்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த வேண்டியது அவசியம் என்று படுகிறது.

சில வருடங்களுக்கு முன்னால் ‘நக்கீரன்’ இதழில் ‘எங்கே போகிறது இந்து மதம்’ என்றொரு தொடர் வந்தது. ஒவ்வொரு பிராமணனும் கடவுளிடத்தில்தனக்கு இந்த ஜென்மமே கடைசி ஜென்மமாக அமைந்து தான் இறைவனின் காலடியில் இளைப்பாறும் அருள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்களென்றும், ஒவ்வொரு பிராமணப் பெண்ணும் அடுத்த பிறவியில் தான் ஒரு பிராமணனாகப் பிறந்து அதுவே தனது இறுதி ஜென்மமாகவும்அமைந்து அத்சன்பிறகு தான் இறைவனின் காலடியில் இளைப்பாறும் பாக்கியம் வேண்டும் என்றும் வேணிக் கொள்வார்கள் என்றும் அதில் ஒரு இடத்தில்அதை எழுதிய ஜீயர் சொல்வார்.

பிராமணர்களைத் தவிர பிராமணப் பெண்களே ஆனாலும் இறைவனிடம் செல்ல இயலாது என்று இருப்பதாகத்தான் அவர் அதில் குறிப்பிடுகிறார்.

ஆக பிராமணப் பெண்களும் ஏதேனும் ஒரு பிறவியில் பிராமணர்களாகப் பிறந்தால்தான் வீடுபேறு சாத்தியம் என்றாகிறது. அப்படியிருக்க அவர்களைபிராமணக் குலத்தில் சேர்ப்பது நியாயமில்லை என்றே படுகிறது.

கொலை என்பது எதன் பொருட்டு நடந்தாலும் ,யார் கொலை செய்யப்படினும் எதிர்ப்போம்.

*************************************************  

சமீபத்தில் NLC தொழிற்சங்க அங்கீகாரத்திற்கு நடந்த தேர்தலில் நான்காயிரத்தி எண்ணூறு வாக்குகளுக்குமேல் பெற்று CITU முதலிடத்திற்குவந்திருக்கிறது. அதற்கடுத்தாற்போல் வந்த தி.மு.க விற்கு 2400 வாக்குகளை ஒட்டியே கிடைத்திருக்கிறது. ஆளும் கட்சியான அ.தி.மு.க தோல்வியடைந்துபேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதற்கான தனது உரிமையை இழந்திருக்கிறது.

தி.மு.க வும் அ.இ.அ.தி.மு.க வும் கணிசமான அளவில் பணத்தை இறக்கிய போதிலும் CITU வின் வெற்றி எந்த அளவிற்கு ஆளும் கட்சியும் எதிர்கட்சியும்உழைக்கும் வர்க்கத்தின் நம்பிக்கையை இழந்திருக்கின்றன என்பதை படம் பிடித்து காட்டுகிறது. இந்த வெற்றி இடதுசாரிகளின் இடத்தை அங்கீகரித்ததோடுஅவர்களது பொறுப்பு அளவு கடந்து கூடியிருப்பதையும் எடுத்துச் சொல்கிறது.

ஆனாலும் தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தலில் திமுகவும் சி.பி.எம் மும் வெற்றி பெற்றன என்று எழுதிய விநோதத்தைத்தான் விளங்கிக் கொள்ளமுடியவில்லை.

****************************************************************** 

திரைபடங்களுக்கு பாடல் எழுதுவீர்களா? என்று கேட்கப்பட்டபோது ஒருமுறை அப்துல்ரஹ்மான் ‘ அம்மி கொத்துவதற்கு சிறி எதற்கு’ என்று பதில்கூறினார். ‘மாமல்ல புரத்திலும் அம்மி கொத்துவதற்கான தேவை இருக்கவே செய்கிறது’ என்று உடனடியாக அதற்கு கவிஞர் மு.மேத்தாஎதிர்வினையாற்றினார். என்றபோதிலும் சினிமா பாடல்கள் கொஞ்சம் மாற்றுக் குறைவான விஷயமாகவே பார்க்கப் படுகின்றன. சினிமாப் பாடல்களேஅப்படி என்றால் அதில் வரும் குத்துப் பாடல்களைப் பற்ரிக் கேட்கவே வேண்டாம்.

குத்துப்பட்டு பாடல்கள் பெரும்பாலும் கொச்சையாகவே பார்க்கப் படுகின்றன. ஆனால் இரவு அதிலுங்குறிப்பாக பின்னிரவு நேரங்களில் ஓட்டுனர்களைவிழித்திருக்கச் செய்வதன் மூலம் பெரும்பான்மை விபத்துக்களை தடுப்பவை குத்துப் பாட்டுக்ககளே.
"குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்" என்ற பிரபலமான பக்திப் பாடல்கூட குத்துப்பட்டு வடிவம்தான்.

பக்தியையே குத்துப்பட்டு வழியே தரமுடியும் எனில் சமுகத்திற்கான பாடல்களை இன்னும் இன்னும் ஏராளமாய் தரமுடியும்தான்

&********************************************************


"லியோ அண்ணன் வீடு எது பாப்பா? "
கேரம்போர்டை நகர்த்தி வழி விட்டவாறே,
" இப்படியே மேல ஏறுனா இதேமாதிரி இடம் வருமா, ஆனா அங்க எங்கள மாதிரி யாரும் கேரம் விளையாடிட்டிருக்க மாட்டாங்க அங்க இந்தப் பக்கம்ரெண்டு வீடு இருக்கும். ரெண்டும்  பூட்டிருக்கும். அதுல தட்டாதீங்க. ஊருக்கு போயிருக்காங்க. அதுக்கு ஆப்போசிட்ல ரெண்டு வீடு இருக்கும். அதுல பஸ்ட்வீடு பூட்டியிருக்கும். அதுலயும் தட்டாதீங்க. யாரும் குடி இல்ல. பக்கத்து வீட்டில் தட்டுங்க லியோ அண்ணன் வருவாங்க. "
தாயே சரண் நான்.


Monday, July 11, 2016

குட்டிப்பதிவு 50

மனிதத் தனமே இல்லாமல் கொடூருமாகத் தாக்கிய காவலர்களை கண்டிக்கும் அதே வேளையில் அத்தனை பொது வெளியில் மனைவியை கணவன் தாக்கியதை எதிர்த்தும் கண்டித்தும் கொந்தளித்த யாவருக்கும் என் முத்தங்கள்

இத்தோடு நிறுத்திக் கொள்வோமா?

ஆட்டோ ஓட்டுனரான ராஜா, துப்புரவு தொழிலாளியான அவரது மனைவி உஷா அவர்களது மகன் சூர்யா ஆகிய மூவரும் செங்கம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏதோ பிரச்சினை வந்திருக்கிறது. ராஜா உஷாவை அடித்திருக்கிறார்.
அப்போது அந்தப் பக்கம் வந்த மூன்று காவலர்கள் ராஜாவையும் சூர்யாவையும் சகட்டு மேனிக்கு தாக்கியிருக்கின்றனர். பொது மக்கள் முன்னிலையில் இது நடந்திருக்கிறது.
குடும்பமே மருத்துவ மனைக்கு போயிருக்கிறது. அவர்களை வலுக்கட்டாயமாக இடைமறித்த காவலர்கள் அவர்களைபேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார்கள்.
இதற்கிடையே இந்தக் காட்சியின் க்ளிப்பிங் தொலைக் காட்சிகளில் வந்திருக்கிறது. சமூக வலைதளங்களிலும் இது பெரிதாக அலசப் பட்டிருக்கிறது. ராஜாவின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகை இட்டிருக்கிறார்கள்.
இதன் விளைவாக அந்தக் காவலர்கள் மூவரும் ஆயுதப்படைக்கு மாற்றப் பட்டிருக்கிறார்கள். அவர்களை பணிநீக்கம் செய்யக் கோறி சாலை மறியல் நடக்கிறது.
இது நமக்கு கிடைத்திருக்கும் தகவல்.
பொது இடத்தில் அத்தனை மக்களுக்கு முன்னால் மனைவியை கணவன் அடிப்பது என்பது ஆணாதிக்கத்தின் உச்சம். வன்மையாக கண்டிக்கப் படவும் கைது செய்யப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப் படவும் வேண்டும்.
அந்த வழியே வந்த காவலர்கள் சமாதானப் படுத்தி ராஜாவை கடுமையாகக் கண்டித்து அனுப்பியிருக்க வேண்டும். அல்லது அவரை கைது செய்து வழக்கு தொடுத்திருக்க வேண்டும்.
மாறாக இவ்வளவு வன்மமாகவும் மோசமாகவும் நடந்துள்ளது கண்டிக்கத் தக்கது.
இத்தோடு நிறுத்திக் கொள்வோமா?
அல்லது முகநூல் என்பது சமூக வலைதளத்தின் ஒரு கூறு. ஆகவே இது மாதிரி இனியேனும் நடக்காதிருக்க ஏதேனும் நம்மால் செய்ய இயலுமா என்று பரிசீலிக்கலாமா?
கூடி முடிவெடுப்போமா?

நம்மாலும் முடியும்

திருவண்ணாமலைக்கருகில் ஒரு குடும்பத்தை பொது இடத்தில் வைத்து அத்துனை குரூரமாக காவல்துறையினர் தாக்கும் காணொல்ளியை AD Bala பதிந்திருக்கிறார். ரத்தம் உறைகிறது. என்ன விவரமென்று தெரியவில்லை. தெரிந்துகொண்டு எழுத வேண்டும்.
ஏதாவது செய்வோம். நம்மாலும் முடியும்

புதுப் புது அர்த்தம்

ஒவ்வொரு வார்த்தையும் அவ்வப்போது தனக்கான புதிய அர்த்தத்தை மாற்றிக்கொள்கின்றன. சில நேரங்களில் பழைய அர்த்தம் வழக்கொழிந்து போவதும் சில நேரங்களில் பழைய அர்த்தங்களோடு புதிதாய் சேர்வதும் வாடிக்கையான விஷயம்.
முகநூல் வந்ததும் "LIKE"என்ற வார்த்தை தனது முந்தைய பொருளோடு "பார்க்கப்பட்டது" "படிக்கப்பட்டது " என்ற அர்த்தங்களையும் சேர்த்துக்கொண்டது

Sunday, July 10, 2016

உரத்து எதிர்ப்போம்.

“முன்னெல்லாம் காதலிக்கிறேன்னு சொல்லிட்டு வவுத்த ரொப்பிப்புட்டு கட்டிக்கமாட்டேன்னு சொனாதாம்பா கொல செய்வாய்ங்க. இப்பல்லாம் என்னடான்னா கல்யாணமே ஆயிருந்தாலும் பரவாயில்ல வவுத்துல புள்ள இருந்தாலும் பரவாயில்ல புள்ளைய வுட்டுடுங்கறாய்ங்க. இல்லாட்டி கொல்ராய்ங்கப்பா. இவிங்களும் இவிங்க சாதிநாட்டாமையும் நாசமாப் போகட்டும்” என்று பேருந்தில் ஒரு பெரியவர் அறற்றி புலம்பி தன் எதிர்வினையை பதிந்துகொண்டிருந்தார்.

ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படும் முன்னரே கொலைகள் நடந்து கொண்டுதான் இருந்தன. குவியல் குவியலாய் கொலைகள் செய்யப்பட்டால் அதற்கு போர் என்று பெயர். வரலாறு, இதிகாசம், புராணங்கள், வேதப் புத்தகங்கள், இலக்கியம் என்று எல்லா இடங்களிலும் கொலைகள் குறித்த பதிவுகள் விரவியே கிடக்கின்றன. ஆக கொலைகள் நமக்கு பழக்கமானவைதான். கொலைகளுக்கான காரணமும், செய்யப்படும் விதமும், கொலைக்குப் பிறகான கொலையாளிகளின் திமிர்த்தனமான அளப்பறைகளும் நாம் வாழும் சமூகம் குறித்தான கவலையையும் அச்சத்தையும் நமக்களிக்கின்றன.

முன்பெல்லாம் கொலைகுறித்த திட்டமிடலின்போது ஆள்நடமாட்டம் இல்லாத இடமாகத்தான் தேர்வு செய்தார்கள். காரணம் ஆள்நடமாட்டம் உள்ள பகுதியென்றால் கொலையை யாரேனும் பார்த்துவிடக் கூடும். பார்த்தவர் சாட்சியமளித்தால் தனக்கு தண்டனை கிடைக்கக் கூடும். கொலைகாரனுக்கும் போலீஸ் குறித்தும் சிறை குறித்தும் ஒருவிதமான பயம் இருந்தது. சாட்சிகள் வந்துவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பயம் இருந்தது.

கொலை நடந்துவிட்டால் ஒன்று அதற்கு எதிராகத்தான் எல்லோரும் பேசுவார்கள் அல்லது பேச பயந்துகொண்டு பேசாமல் இருப்பார்கள்.

ஆனால் சமீபத்தில் உடுமலைபேட்டையில் நடந்த இளைஞன் சங்கரின் கொலை அது நடத்தப்பட்ட முறையால் அனைத்து கொலைகளிலிருந்தும் வேறுபட்டு நிற்கிறது.

கொலை நடந்த இடம் நட்டநடு சாலை. சுள்ளென கொளுத்தும் வெயில் பொழுது. ஏறத்தாழ நூறுபேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சற்றேரக்குறைய இருநூறுக் கண்களை சாட்சியாக வைத்து கொலை நடந்திருக்கிறது. கொலையை செய்த யாரும் தங்களது அடையாளங்களை மறைத்துக் கொள்ளவில்லை. சுவைக்க சுவைக்க ஊதி ஊதி தேநீர் குடிப்பது மாதிரி ரசித்து ரசித்து வெட்டிச் சாய்த்திருக்கிறார்கள் பிள்ளையை.

எந்த அசைவும் பார்வையாளிடம் இல்லை. ஒரு சத்தம், ஒரு கல்லெறிதல் என்று எந்தவிதமான எதிர்ப்பும் அந்தக் கொலைக்கு இல்லை. இந்தவிதமான சமூகக் கட்டமைப்புதான் நமக்கு எரிச்சல் கலந்த கவலையைத் தருகிறது. திரண்டுநின்ற அந்தக் கூட்டம் சிலிர்த்திருந்தால் அந்தக் கொலையைத் தடுத்திருக்க முடியும்.

சாதி மனிதர்களைத் தின்றுகொண்டே இருக்கிறது.

மகள் வெட்டப் படுவதை ஒரு காரினுள் இருந்து அவளது தந்தை பார்த்துக் கொண்டிருந்தார் என்ற செய்தி சகலவிதமான நம்பிக்கைகளையும் தகர்த்துப் போட்டு நம்மை உறைய வைக்கிறது.

இதுகுறித்து கேட்கப்பட்டபோது மரியாதைக்குரிய எச்.ராஜா அவர்கள் ‘அவனவனும் அவனவன் ஜாதியில் கல்யாணம் செய்துகொண்டால் ஏன் பிரச்சினை வருகிறது?’ என்று கேட்கிறார்.

சமூக வலைதளங்களில் இளைஞர்கள் அருவாளோடு ’எங்கசாதிப் பொண்ண வேறசாதிக்காரன் கல்யாணாம் செய்தால் வெட்டுவோம்டா’ என்று கூறுகிறார்கள். இந்த இரண்டிற்கும் நமக்கு பெரிதாய் வேறுபாடு தெரியவில்லை.  

நாட்டில் உள்ள பெரிய கட்சிகள் மௌனம் காக்கின்றன.

நாம் நம் மௌனம் கலைத்து உரத்து எதிர்ப்போம்.

நன்றி: காக்கை ஏப்ரல் 2016
  


பெயர் என்னவோ அழைப்பதற்குத்தான்

அந்த ஆசிரியர் பயிற்சிப்பள்ளியின் ஆண்டுவிழாவிற்கு முதல்வர் உம்மன்சாண்டியை அழைத்திருக்கிறார்கள். அவரும் இசைவளித்துவிட்டார். அந்தப் பயிற்சிப் பள்ளிக்கென ஒரு துவக்கப் பள்ளியும் இருக்கிறது. உம்மன் சாண்டி அவர்களை வரவேற்பதற்காக ஆசிரியப் பயிற்சிப் பள்ளி மாணவர்களோடு துவக்கப் பள்ளிக் குழந்தைகளும் வரிசையில் நிற்கிறார்கள். காக்கவே வைக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்கு மிகச்சரியாக முதல்வர் வருகிறார். குழந்தைகளின் வரவேற்பை மகிழ்ச்சியோடும் புன்னகையோடும் ஏற்றவாறே அவர் மேடையை நோக்கி நடக்கிறார். கிட்டத்தட்ட மேடையை நெருங்கிய நேரத்தில் அவருக்கு பின்னால் இருந்து “உம்மன்சாண்டி” என்று யாரோ அழைக்கும் குரல் கேட்கிறது. நிச்சயமாய் அது ஒரு மழலைக்குரல். நின்று திரும்பிப் பார்க்கிறார். பள்ளியின் முதல்வருக்கும் ஆசிரியர்களுக்கும் பதட்டம் அப்பிக் கொள்கிறது.

ஒரு இரண்டாம் வகுப்பு பெண்குழந்தை கையைத் தூக்கியவாறே, “நான்தான் கூப்பிட்டேன். இங்க கொஞ்சம் வாங்களேன்” என்று கூறுகிறாள். மொத்த விழாத் திடலும் அப்படியே உறைந்து போகிறது. எல்லோர் முகத்திலும் பயம் அப்பிக் கொள்கிறது. ’இப்படி செய்து விட்டாளே பாவி. எப்படித் திட்டுவாரோ? நிகழ்ச்சியை ரத்து செய்து விடுவாரோ’ என்ற கலக்கம் எல்லோருக்கும் வந்திருக்கக் கூடும்.

எதைப் பற்றியும் கவலைப்படாதவளாக அந்தக் குழந்தை ‘கொஞ்சம் இங்க வாங்களேன். உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்’ என்கிறாள்.

”இதோ வரேன்” என்றவாறே அவளை நோக்கி நடக்கிறார்.

ஒரு மாநிலத்தின் முதல்வர் தன்னைப் பெயர்சொல்லி அழைக்கும் குழந்தையை நோக்கி போகிறார். இதே தமிழ்நாடாக இருந்திருந்தால்…? விளைவுகளை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

“என்னடா?” என்று அவள் உசரத்திற்கு குனிய முடியாத்தால் கொஞ்சம் ஒரு மாதிரியாக உட்கார்ந்தவாறு கேட்கிறார்.

தன்னுடைய வகுப்புத் தோழன் ஒருவனின் பெயரைச் சொல்லி அவனது பெற்றோர் இருவரும் உடல்நலமற்று இருப்பதாகவும். மருந்து வாங்கவே சிரமப்படுவதாகவும் கூறுகிறாள். காதுகொடுத்து கேட்ட முதல்வரிடம் அவனுக்கு சாப்பாடே பலநேரம் இல்லை என்றும் எனவே முதல்வர் அந்தக் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்றும் கூறுகிறாள். ‘சரி பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு அவளைக் கொஞ்சியவாறே மீண்டும் மேடைக்கு நகர்கிறார்.

மேடைக்குப் போனதும் பள்ளி முதல்வரை அழைத்து அந்தக் குழந்தை சொன்ன விவரங்கள் உண்மையா என்று உடனே சரிபார்க்க சொல்கிறார். அலைந்து பறந்து விசாரிக்கிறார்கள். அவை முழுக்க உண்மை என்று தெரியவருகிறது. அந்த இடத்திலேயே ஒரு பெரிய தொகையை (இரண்டு லட்சமா அல்லது மூன்று லட்சமா என்று சரியாகத் தெரியவில்லை) அந்தக் குடும்பத்திற்கு வழங்குவதற்கு உத்தரவிடுகிறார்.

உதவித் தொகையை வழங்கியதுகூட எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அது அவர் இருக்கும் நிலைக்கு மிக மிக எளிதானது. ஒரு இரண்டாம் வகுப்பு படிக்கும் சின்னக் குழந்தையின் அழைகுரலுக்கு மரியாதையளித்து தேடிப்போய் அவளோடு உரையாடியதுதான் எனக்கு மிகப் பெரிய விஷயமாகப் பட்டது. ஒருக்கால் தமிழ்நாட்டுக்காரன் என்பதால் நமக்கு இவ்வளவு பெரிய விஷயமாக இது தெரிவதற்கும் வாய்ப்புண்டு.

ஒரு ஏழு வயது சிறுமி தனது மாநில முதல்வரை பெயர் சொல்லி அழைக்கிறாள். அவரும் திரும்பிப் பார்க்கிறார். தன்னிடம் வருமாறு அழைக்கிறாள். போகிறார். ஒரு குழந்தையின் கோரிக்கையை காது கொடுத்து கேட்கிறார். நானும் இதை மகிழ்ந்து கொண்டாடிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோதுதான் தம்பி ஸ்டாலின் தி அவர்களின் முகநூல் பதிவொன்றினைப் படிக்க நேர்ந்தது.

“கேரள் முதல்வர் உம்மன்சாண்டி அவர்களை ஒரு பள்ளிக்குழந்தை பெயர் சொல்லி அழைத்ததையும், அவர் அழைத்த அந்தக் குழந்தையிடம் சென்று விசாரித்ததையும் பெருமைபட பேசிக் கொண்டாடுகிறார்கள். இணையதளங்களில் ஏராளமான பதிவுகள் இதுகுறித்து எழுதப்படுகின்றன. இன்னமும் எங்கள் கிராமங்களில் அறுபது வயது மதிக்கத்தக்கப் பெரியவரை ஐந்து வயது சிறுவன் ‘ஏய் கோவாலு, எங்க அய்யா உன்ன கூட்டிட்டு வரச் சொன்னாரு, வெரசா வா” என்று அழைப்பது வாடிக்கையாக இருக்கும்போது உம்மன்சாண்டியை ஒருகுழந்தை உம்மன்சாண்டி என்று அழைத்ததில் ஏதும் பெரிதாகத் தெரியவில்லை” என்பதுமாதிரி அந்தப் பதிவு போகும். அவர் சொன்னத்தை வார்த்தைப் பிசகாமல் எழுதியிருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால் விஷயம் இதுதான்.

முதல்வரை அந்தக் குழந்தை பெயர் சொல்லி அழைத்ததும், வயது முதிர்ந்த தலித் பெரியவர்  ஒருவரை ஒரு ஆதிக்கசாதியை சேர்ந்த சிறுவன் ‘ஏய், கோவாலு’ என்று அழைப்பதும் ஒன்றுதானா? இரண்டையும் ஒன்றாகத்தான் கருத வேண்டுமா? இரண்டையும் ஒன்றாக கருத முடியுமா?

கொஞ்சமும் தீவிரமாய் யோசிக்க செலவில்லாமலேயே பளிச்செனத் தெரியும் இரண்டும் ஒன்றில்லை என்பது. இரண்டையும் ஒருபோதும் ஒன்றாக எடுத்துக் கொள்ள முடியாது. அப்படி இரண்டையும் ஒன்றாக ஒரே தட்டில் வைத்துப் பார்க்குமாறு எங்கேனும் பாடம் நடத்தப் படுமானால் அது அயோக்கியத்தனமானது.

உம்மன்சாண்டியை அந்தக் குழந்தை பெயர்சொல்லி அழைத்தது குழந்தைத்தனத்தின் உச்சம். அதை இயல்பாக எடுத்துக் கொண்டதன்மூலம் உம்மன்சாண்டியின் ஆளுமையின் விழுமியம் பெருமளவில் கூடிப்போனது. இன்னும் சொல்லப்போனால் அது ரசிக்கிற மாதிரியான ஒரு மழலையின் சாரல்.

ஆனால் அந்தக் கிராமத்து பெரியவரை, ‘ஏய், கோவாலு’ என்று அழைப்பது வலி மிகுந்தது. அதற்குள் புதைந்திருக்கும் சாதிய படிநிலை கோரமும் அசிங்கமுமானது. அந்தப் பதிவில் ஸ்டாலின் இதை சொன்னாரா இல்லையா என்று சரியாய் நினைவில்லை. ‘ஏய், கோவாலு’ என்று அழைத்த அந்த சிறுவனிடம் அந்தப் பெரியவர் , ‘சரிங்க அய்யா. நீங்க போங்க, உங்க பொறவாடியே வாரேன்’  என்றுதான் சொல்லியிருப்பார். சொல்லியிருப்பார் என்ன, அப்படித்தான் சொல்ல முடியும். அப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று சாதி நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது.

தனது ஒரே அழைத்தலின் மூலம் ஏகப் பிரசித்திப் பெற்றுவிட்ட அந்தக் குழந்தையின் செயலை எல்லோரும் ஏகத்திற்கும் கொண்டாடி இருந்தாலும் அதில் பெரும்பான்மையோர் ’பெரியவங்கள அப்படியெல்லாம் பெயர் சொல்லிக் அழைக்கக் கூடாது’ என்று அந்தக் குழந்தைக்கு புத்திமதி சொல்லியிருப்பார்கள். குறைந்த பட்சம் அந்தக் குழந்தையின் ஆசிரியர்களாவது அந்தக் குழந்தையிடம் ‘வயதில் பெரியவர்களிடம் மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும். இப்படி பெயர் சொல்லி அவர்களை அழைப்பது மரியாதை அல்ல’ என்று நிச்சயமாக வகுப்பெடுத்திருப்பார்கள். ஆயிரம்தான் அந்த நிகழ்வு பெரு மகிழ்ச்சியோடு கொண்டாடப் பட்டிருந்தாலும் அந்தக் குழந்தையின் அம்மாவிற்கு உள்ளூர உதறல் இருந்திருக்கவே செய்யும். “இன்னொருதரம் இப்படி செஞ்ச கரண்டிய காயவச்சு வாய் வாயா போட்டுடுவேன்” என்றுகூட பயமுறுத்தி வைத்திருக்கக் கூடும்.

இரண்டு விஷயங்களை நாம் கொஞ்சம் இங்கு அலசுவதற்கு தேவை இருக்கிறது.

1)   முதலாவதாக, உம்மன்சாண்டி அவர்களை பெயர் சில்லி அழைத்ததற்காக அந்தக் குழந்தையை ‘அப்படியெல்லாம் பெயர் சொல்லி அழைக்கக்கூடாது. பெரியவர்களுக்கு மரியாதை தர வேண்டும்’ என்று ஆசிரியர்களும் அந்தக் குழந்தையின் பெற்றோரும் புத்திமதி கூறியதுபோல் ‘ஏய், கோவாலு’ என்று அழைத்த சிறுவனிடம் அவனது ஆசிரியர்களும் பெற்றோரும் பெரியவர்களை அப்படியெல்லாம் மரியாதை குறைவாக பெயர் சொல்லி அழைக்கக் கூடாது என்று ஏன் புத்திமதி கூறுவது இல்லை.
2)   அழைத்த குழந்தையிடம் நடந்துபோய் என்னவென்று கேட்ட முதல்வரை ஆகா ஓஹோவென்று புகழ்ந்து, ‘இதுவல்லவோ பெருந்தன்மையின் உச்சம்’ என்று கொண்டாடிய, கொண்டாடிக் கொண்டிருக்கிற யாரும், எந்த ஊடகமும் ஒரு சிறு பையன், ‘ஏய், கோவாலு’ என்றதும் என்னங்க சாமி என்று கேட்கும் அந்தப் பெரியவரின் செயலை பெருந்தன்மை என்று ஒருபோதும் கொண்டாடுவதில்லையே. அது ஏன்?
3)   தன்னை பெயர் சொல்லி அழைக்கக் கூடாது என்று அந்தக் குழந்தையிடம் சொல்வதற்கான அதிகாரம் உம்மன்சாண்டிக்கு இருக்கிறது. ஆனால் அத்தகையதொரு அதிகாரம் கோவலு அவர்களுக்கு இல்லாமல் செய்த சக்தி எது?

காரணம் ரொம்ப சுளுவானது. அந்தப் பெரியவர் மாநிலத்தின் முதல்வர். இந்தப் பெரியவர் பிறப்பால் ஒரு தாழ்த்தப் பட்டவர். முதல்வர் என்பதுகூட எல்லா இடங்களிலும்செல்லாது என்றே படுகிறது. எல்லா சாதி முதல்வர்களுக்கும் இது வாய்க்காது என்றே வரலாறு நமக்கு சொல்கிறது.

இந்தியாவின் ராணுவ அமைச்சராக இருந்த மாண்பமை பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் ஒருமுறை ஒரு ஆலயத்திற்குள் நுழைகிறார். இந்தத் தேசத்தின் ராணுவ அமைச்சரை உள்ளே நுழையவிடாமல் அவர்களால் தடுக்க இயலாமல் போனது. ஆனால் வழிபாட்டினை முடித்துக் கொண்டு அமைச்சர் வெளியேறியதும். ஆலயத்தை தண்ணீர் விட்டுக் கழுவினார்கள். ஏனென்று கேட்டதற்கு ’ஆயிரம்தான் அமைச்சராக இருந்தாலும் அவர் ஒரு தாழ்த்தப் பட்டவர். அவர் உள்ளே வந்ததால் ஆலயம் தீட்டுப் பட்டுவிட்டது. ஆகவே தீட்டைக் கழுவினோம்’ என்று கூறினார்கள்.

ஒரு தலித் அமைச்சர் வந்து போனதற்காக ஒரு பள்ளி தீட்டுப்பட்டுவிட்டதாகக் கூறி அதை கழுவியிருந்தார்கள் என்றால் அன்றைய பிரதமர் அந்தப் பள்ளி நிர்வாகிகளை விட்டு வைத்திருப்பார்களா? பள்ளி என்றால் நடவடிக்கை எடுத்திருப்பார்கள். ஆலயம் என்பதனால் எதையும் செய்ய இயலவில்லை என்றால் ஆலய நிர்வாகிகள் பிரதமர் கைகளையே கட்டிப்போடும் அளவிற்கு சக்தி மிக்கவர்களா? என்று கேட்டால் ஆமாம், அவர்களது சாதிய சக்திக்கு முன்னால் பிரதமரின் வல்லான்மையும் கொஞ்சம் சுறுங்கித்தான் போகும்.

அதனால்தான் மாண்பமை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களை தரையில் அமர்த்தி பேசி, ஆசீர்வதித்து அனுப்பும் இடங்கள் சுப்ரமணிய சாமி போன்றவர்களை நாற்காலி போட்டு அமரவைத்து ஆசீர்வதித்து அனுப்புகின்றன.

சரி, கொஞ்சம் இப்படி பார்ப்போம். அந்தக் குழந்தை தன்னைப் பெயர் சொல்லி அழைத்தபோது ‘அப்படியெல்லாம் அழைக்கக் கூடாது’ என்று முதல்வரால் சொல்லியிருக்க முடியும். அப்படி அவர் சொல்லியிருந்தால் நிச்சயமாக அந்தக் குழந்தையின் உதடுகளை பழுக்கக் காய்ச்சப்பட்ட கரண்டிக் காம்புகள் பதம் பார்த்திருக்கும். குழந்தையைத் தண்டித்த அவளது பெற்றோர்கள் ஊடகத்தால் பெரியவர்களை பெயர்சொல்லி அழைத்தமைக்காக குழந்தையை தண்டித்ததற்காகக் கொண்டாடப் பட்டிருப்பார்கள்.

கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம். ‘ஏய், கோவாலு’ என்று அழைத்த பையனிடம் கோவாலு அவர்கள் ’பெரியவர்களை அப்படியெல்லாம் பெயர் சொல்லி அழைக்கக் கூடாது’ என்று சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும். ஆலமரத்தடியில் பஞ்சாயத்துக் கூடியிருக்கும். அந்தப் பையனிடம் மரியாதைக் குறைவாக கோவாலு நடந்து கொண்டார் என்று புகார் வாசிக்கப் பட்டிருக்கும். அந்தக் குற்றத்திற்காக கோவாலு அவர்களின் குடும்பமே அந்தப் பையனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டிருக்கும்.

பெயர் என்னவோ அழைப்பதற்குத்தான் என்பதில் நமக்கு எந்தவிதமான கருத்து முரண்பாடும் கிடையாது. ஆனால் எல்லோரையும் எல்லோராலும் பெயர் சொல்லி அழைக்க முடியாது. அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதற்கு சாதி ஒரு காரணமாக இருப்பதை இன்னும் எத்தனை காலத்திற்கு நாம் சகித்துக் கொண்டிருக்கப் போகிறோம்? 

நன்றி: காக்கை ஏப்ரல் 2016   
  


      

இணைந்திருந்து களமாடுங்கள்

இழுபறியாகத்தான் இருக்கும் என்று பொதுவாய் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் முடிவு வேறுவிதமாக, இன்னும் சொல்லப்போனால் அ.இ.அ.தி.மு.கவும் தி.மு.கவுமே சற்றும் எதிர்பாராத விதமாக எந்தவிதமான குழப்பத்திற்கும் இடமின்றி தெளிவாக வந்திருக்கிறது. தி.மு.க அப்படி இப்படி என்றி ஒரு வழியாக பெரும்பான்மை பெறும் அல்லது ஒரு தொங்கு சட்டசபை ஏற்பட்டு ஒரு கூட்டணி ஆட்சியை தி.மு.க அமைக்கும் என்றுதான் பெரும்பான்மை ஊடகங்களும் கருதின. ஏறத்தாழ் இதுதான் பொதுப் புத்தியாகவும் இருந்தது. ஆனால் மக்கள் முற்றிலும் வேறுமாதிரியாக முடிவெடுத்திருந்தார்கள்.

இன்னும் இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் மிச்சமிருக்கிற நிலையில் அ.இ.அ.தி.மு.க 134 தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு அருதிப் பெரும்பான்மை பெற்றிருக்கிறது. இன்னும் இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் மிச்சமிருக்கிற நிலையில் தி.மு.க 89 இடங்களில் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.

அந்த இரண்டு தொகுதிகளுக்குமான தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில் அந்த இரண்டு கட்சிகளுக்குமிடையேயான விகிதாச்சாரம் சட்டசபையில் இவற்றில் ஏதோ ஒன்றாகத்தான் இருக்கும்.

1)   136:89
2)   134:91
3)   135:90

இந்த மூன்றில் எது நிகழ்ந்தாலும் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடப் போவதில்லை.

சென்றமுறை பிரதான எதிர்கட்சியாகக்கூட வரமுடியாத நிலையில் இருந்த தி.மு.க இந்த முறை அசுர பலத்துடன் ஒரு பலம் வாய்ந்த எதிர்கட்சியாக வந்திருக்கிறது. கொஞ்சம் இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றிருக்கிறது என்பதைத் தவிர இந்த இரண்டு பெரிய கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் தாங்கள் நின்ற அனைத்து தொகுதிகலிலும் அநேகமாக பிணைத் தொகையை பறி கொடுத்திருக்கின்றன.

குறிப்பிட்டு சொல்லும்படியான தோல்வி என்று பார்த்தால் தோழர் திருமாவளவன் அவர்களுடைய தோல்வியைத்தான் சொல்ல வேண்டும். ஏறத்தாழ 128 தபால் வாக்குகள் அவரது கணக்கில் இருக்கிற சூழலில் 86 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியை சந்தித்திருக்கிறார். அந்த 128 வாக்குகளும் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப் பட்டிருக்கின்றன. அவரது சின்னத்திற்கு நேரேதான் மிகச் சரியாக வாக்களிக்கப் பட்டிருக்கின்றன. ஆனாலும் தபால் வாக்குகளை அனுப்பும்போது அத்தோடு இனைத்து தரப்படும் படிவத்தில் சான்றொப்பம் இடத் தகுதியான நபர்களிடமிருந்து சான்றொப்பம் பெற்று இணைக்க வேண்டும் என்பது விதி. அதுவும் இந்த முறை தேர்தல் வகுப்புகளிலேயே தபால் வாக்குகளை. சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சான்றொப்பம் இடத் தகுதியான அதிகாரிகளை சான்றொப்பம் இடுவதற்காக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

தபால் வாக்குகளை போடுபவர்களில் பெரும்பான்மையோர் ஆசிரியர்கள். தேர்தலை முழுமையாக நடத்தித் தருவதிலும் வாக்குகளை எண்னி முடிவுகளை அறிவிப்பவர்கள். அப்படியிருக்க அத்தகைய ஆசிரியர்களுக்கு இந்த விவரமெல்லாம் தெரியாமல் எல்லாம் இருக்க வாய்ப்பில்லை. பிறகு எப்படி இத்தனை வாக்குகள் செல்லாத வாக்குகளாக அமைந்தன?

சான்றொப்பம் பெறாமல் தபால் வாக்குகளை எப்படி சேர்த்தார்கள்? இதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்.பொதுவாக இதுமாதிரி தபால் வாக்குகளை போடக்கூடிய ஆசிரியர்கள் தாங்கள் சார்ந்திருக்கக்கூடிய அல்லது அனுதாபிகளாக இருக்கக் கூடிய கட்சிகளின் வேட்பாளார்களிடம் நேரடியாகவோ அல்லது அவர்களது பிரதிநிதிகளிடமோ தபால் வாக்குச்சீட்டினை சேர்த்து விடுகிறார்கள். இதற்கான காரணம் ‘பார்த்தாயா எனது வாக்கினை ஒனக்குத்தான் போட்டிருக்கிறேன்’ என்று நிறுவிக் கொள்வதற்காக.

இப்பொழுதெல்லாம் வேட்பாளர்களே தங்களோடு தொடர்பில் இருக்கக் கூடிய ஆசிரியர்களை அணுகி வாக்குச் சீட்டுகளைப் பெற்று வாக்கு எண்ணுமிடத்தில் நேரடியாக சேர்த்து விடுகிறார்கள். அநேகமாக இந்த இடத்தில்தான் தவறு நிகழ்ந்திருக்க வேண்டும்.

தபால் வாக்குச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்டவர்கள் தங்களுக்கிருந்த நெருக்கடியான பணிச்சுமையில் சான்றொப்பம் பெறுவதை மறந்திருக்க வேண்டும்.

எது எப்படியோ இந்தக் கவனக் குறைவினால் மகத்தான ஒரு தலைவர் சட்டசபைக்கு செல்வது தடுக்கப் பட்டிருக்கிறது. எவ்வளவோ நவீன யுக்திகளை நடைமுறைப்படுத்தும் தேர்தல் ஆணையம் தபால் வாக்குச்சீட்டினை அந்தந்த ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளுக்கே அனுப்பி அவர்களது தலைமை ஆசிரியர்கள் சான்றொப்பமிட்டு ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

நானும் 1989 இல் இருந்து தபால் வாக்குகளை போட்டுக் கொண்டிருக்கிறேன். சென்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில்தான் முதல் முறையாக வாக்குச்சீட்டினை விலைக்கு வாங்குவதற்காக சிலர் அணுகுவதைக் கண்டேன். இது எனக்கு பேரதிர்ச்சியைத் தந்தது என்றாலும் இதற்கு முன்னரும் இதுபோன்று இருந்ததா என்று தெரியவில்லை. தேர்தல் ஆணையம் வருங்காலங்களில் கவனத்தில் கொள்ளவேண்டிய மிக முக்கியமான விஷயங்களுள் மிக முக்கியமானது இது.

நடந்து முடிந்த தேர்தலைப் பொறுத்தவரை சில விஷயங்களை பரிசீலிப்பது அவசியம் என்று படுகிறது.

1)   வாக்காளார்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது
2)   வாக்காளர்களுக்கு பணாம் பட்டுவாடா செய்யப்பட்டது என்பதை தேர்தல் கமிஷனே ஒத்துக் கொண்டு இரண்டு தொகுதிக்களுக்கான தேர்தலை ஒத்தி வைத்தது
3)   பணம் பட்டுவாடா செய்யப்பட்டதால்தான் தாங்கள் தோற்றதாக அல்லது தங்களுக்கு வந்திருக்கவேண்டிய இடங்கள் கிடைக்காமல் போனதாக தி.மு.க, அ.தி.மு.க  மக்கள்நலக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகளின் அறிக்கைகள்
4)   வெற்றியைக் கொண்டாடவேண்டிய தி.மு.க சுணங்கிக் கிடப்பது
5)   தான் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனதற்காக மக்கள்நலக் கூட்டணியை தி.மு.க சாடுவது
6)   மக்கள்நலக் கூட்டணி எதிர்காலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியது

வாக்காளார்களுக்கு கையூட்டு தருவது என்பது எப்போது தொடங்கியது என்று தெரியவில்லை. ஆனால் கடந்த சில தேர்தல்களாக வாக்காளார்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவது பற்றிய செய்திகள் பரவலாக பேசப்படுகிறது. திருமங்கலம் இடைத்தேர்தலில்தான் பணப்பட்டுவாடா வெளிச்சத்திற்கு வந்தது.. அந்த இடைத் தேர்தல் முடிவுதான் திரு அழகிரி அவர்களை தி.மு.கவின் அசைக்க முடியாத சக்தியாக மாற்றியது. அதன்பிறகு நடந்த இடைத்தேர்தல்களில் அ.இ.அ..தி.மு.க இதுகுறித்து வகுப்பு எடுக்குமளவிற்கு வளர்ந்ததாகவே சொல்லப்பட்டது. தி.மு.க ஆட்சியில் இருக்கும்போது இடைத்தேர்தல் நடந்தால் அ.இ.அ.தி.மு.கவும் அ.இ.அ.தி.மு.க ஆட்சி நடந்தால் தி.மு.க வும் அதில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது.

ஆனாலும் பரந்து நடக்கும் பொதுத் தேர்தல்களில் பணப் பட்டுவாடா என்பது இலைமறைவில்தான் என்றிருந்தது. கடந்த இரண்டு தேர்தல்களாகத்தான் இது பகிரங்கமாக நடைபெறுவதாகத் தெரிகிறது.

நான் ஒரு குக்கிராமத்திற்கு சென்றிருந்தபோது ஒரு விஷயத்தைக் கேள்விபட்டேன். அந்த ஊரில் இருந்த அனைவருமே ஒரே ஜாதிதான். எல்லோருமே உறவினர்கள். ஒரு வீட்டிலேயே தி.மு.க பொறுப்பாளாரும் அ.இ.அ.தி.மு.க பொறுப்பாளரும் இருக்கக்கூடிய ஊர்.

தி.மு.க வும் அண்ணா தி.மு.கவும் பணப்பட்டுவாடாவை ஒரே நபர்மூலமே செய்திருக்கிறார்கள். அதற்கு அவருக்கு கூலியும் தரப்பட்டிருக்கிறது. எதற்கு இரண்டுமுறை என்று அந்த மனிதர் ஒரே தடவையிலேயே இரு கட்சிகளின் பணத்தையும் பட்டுவாடா செய்திருக்கிறார்.

கடந்த தேர்தல்களில் பணப் பட்டுவாடா குறித்து புகார்கள் எழுந்தபோதெல்லாம் மௌனம் சாதித்த தேர்தல் ஆணையம் இந்தமுறை தானே அந்தக் குற்றச்சாட்டை கூறியிருக்கிறது.

பொதுவாக பணப்பட்டுவாடா குறித்து தமக்கு புகார் வந்திருப்பதாக கூறும் ஆணையம் இந்தமுறை பணப்பட்டுவாடா நடந்திருப்பதாக அறிவிக்கிறது. தமிழகத் தேர்தல் ஆணையர் ‘கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்பதாக புலம்பியிருக்கிறார். நீதிபதியே சாட்சியாக இருக்கும்போது விசாரனை எதற்கு நேரடியாகத் தண்டனையைத் தருவதுதானே நியாயம்.

இரண்டுத் தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடந்துள்ளதாக ஆணையம் அறிவிக்கிறது. ஒரு விஷேஷம் என்னவெனில் ஆணையத்தின் இந்தக் குற்றச்சாட்டினை எந்தக் கட்சியும் மறுக்கவில்லை.
    

யாரெல்லாம் பணம் கொடுத்தது என்பது ஆணையத்திற்கு தெரிந்திருக்கிறது. ஆணையம் அந்தத் தொகுதியில் பணம் பட்டுவாடா செய்த கட்சியை அல்லது கட்சிகளை மூன்று தேர்தல்களுக்கு அந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்கு தடை விதித்திருக்கலாம். அல்லது குறைந்த பட்சம் இந்தத் தேர்தலிலாவது போட்டியிடத் தடை விதித்திருக்கலாம். அல்லது வேட்பாளர் தடை என்கிற நிலையிலாவது நின்றிருக்கலாம்.இவற்றில் எதையும் செய்யாமல் இரண்டுத் தொகுதிகளில் தேர்தலை தள்ளி வைத்திருப்பதுதான் ஏனென்று புரியவில்லை.

பணப்பட்டுவாடா மட்டும் தடுக்கப் பட்டிருக்குமானால் தாங்கள் இன்னும் அதிக இடங்களில் வென்றிருப்போம் என்று அ.தி.மு.க தொண்டர்கள் கூறுவதும், பணப் பட்டுவாடாவை தடுத்திருந்தால் தாங்கள் ஆட்சிக்கு வந்திருப்போம் என்று தி.மு.க கூறுவதும்தான் வேடிக்கை எதனினும் சரியான வேடிக்கை..

பணம் கொடுக்கப் பட்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால் பணம்தான் வாக்குகளைத் தீர்மானித்தது என்று கூறுவதும் பணத்தை வாங்கிக் கொண்டுதான் மக்கள் வாக்களித்தார்கள் என்பதும் மிகவும் அபத்தமானதும் மக்களை கேவலப் படுத்துவதும் ஆகும்.

ஏதோ ஒரு கட்சி மட்டும் பணத்தைக் கொடுத்து அந்தக் கட்சிக்கு மட்டும் மக்கள் வாக்களித்திருந்தார்கள் என்றால் இந்தக் கூற்று சரியானது என்று சொல்லலாம். தமிழகத்தின் இரண்டு பெரிய கட்சிகளுமே மக்களுக்கு கையூட்டு கொடுத்திருக்கக் கூடிய நிலையில் இந்தக் கூற்று தவறானது.

இந்தத் தேர்தல் முடிவுகளை கவனமாக பரிசீலித்தால் இந்தத் தேர்தலில் மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைந்திருப்பது தி.மு.கதான். நூறுக்கும் குறைவான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருந்தபோதே மேடைக்கு மேடை ‘மைனாரிட்டி தி.மு.க சர்க்கார்’ என்று மரியாதைக்குரிய ஜெயலலிதா அவர்கள் நையாண்டி செய்தபோதும் ஐந்தாண்டு காலம் ஆட்சியினை கொண்டுசேர்த்த 89 உறுப்பினர்களோடு எதிர்க்கட்சியாக எவ்வளாவு சிறப்பாக செயல்பட முடியும். வெறும் 48 உறுப்பினர்களை மட்டுமே வைத்துக் கொண்டு மாண்பமை எம்.ஜிஆர் அவர்களையே எதிர்கொண்ட தி.மு.கவால் 89 உறுப்பினர்களை வைத்துக் கொண்டு இந்த அரசை எதிர்கொள்ள முடியாதா?


இன்னும் சொல்லப்போனால் இத்தனை அசுர பலத்தோடு இருக்கிற தி.மு.கவைப் பார்த்து அ.தி.மு.க தானே பயப்பட வேண்டும்.

உற்சாகத்தோடு வெற்றியைக் கொண்டாட வேண்டிய தி.மு.க தோழர்கள் ஏன் சுணங்கிக் கிடக்கிறார்கள் என்று புரியவில்லை. அவர்களைப் பொறுத்தவரை ஆட்சி என்பது மட்டுமே வெற்றி எனக் கொள்ல்ளப்படுகிறது.

மரியாதைக்குரிய கலைஞர் உள்ளிட்டு திமுகவினர் மக்கள்நலக் கூட்டணியை வறுத்து எடுக்கிறார்கள். ‘ஜெயலலிதா தோற்கடிக்கப்பட வேண்டியவர்தானே? எனில் நீங்கள் எங்களோடு அல்லவா நின்றிருக்க வேண்டும்’ என்று கேட்கிறார்கள். இப்போது மட்டுமல்ல RK நகர் இடைத்தேர்தலில் மரியாதைக்குரிய ஜெயலலிதா நின்றபோதும் அவர் தோற்கடிக்கப் படவேண்டியவர்தானே. அவரை திமுக எதிர் கொண்டிருக்க வேண்டுமல்லவா? ஏன் அதை செய்யவில்லை?

அதைக்கூட விட்டுவிடலாம். அப்போது இடதுசாரி வேட்பாளாராக களாமிறக்கப் பட்ட தோழர் மகேந்திரனுக்காவது திமுக தனது ஆதரவைத் தந்திருக்க வேண்டாமா? அந்தத் தேர்தலில் சிந்தாமல் சிதறாமல் திமுகவினர் ஜெயலலிதா அவர்களுக்குத்தானே வாக்களித்தனர். இப்போது மக்கள் நலக் கூட்டணியை அதிமுகவின் பி அணி என்று சொல்லும் திமுக ஆர்கே நகர் இடைத் தேர்தலில் திமுகவின் பி அணியாகத்தானே செயல்பட்டது.

இதைவிடக் கொடுமை என்னவெனில் தாங்கள் தோற்றதற்கான காரணங்களில் ஒன்றாக பணப்பட்டுவாடாவை மக்கள் நலக் கூட்டணியினரும் சொல்வதுதான்.

ஒரு விஷயத்தை அவர்கள் உணர வேண்டும். எத்தகைய அலை தங்களுக்கு எதிராக வீசினாலும் திமுகவும் அதிமுகவும் 25 லிருந்து 27 சதவிகித வாக்குகளையாவது நிரந்தரமாக வைத்திருக்கிறார்கள். எவ்வளவு மோசமாக தோற்ற போதிலும் இந்த வாக்கு வங்கியை அவர்கள் பத்திரமாக வைத்திருக்கிறார்கள்.

தங்களது உழைப்பை, தங்கள் மீதான மக்களின் அன்பை நம்பிக்கையை வாக்குகளாக மாற்றும் வித்தையை ம ந கூ குறிப்பாக இடதுசாரிகள் கற்கவேண்டும்.

தங்களது மாற்றத்திற்கான கோஷம் இன்னும் உயிரோடிருக்கும் உன்னதம் என்று தோழர் திருமா, தோழர் ஜி ஆர் ஆகியோர் கூறியுள்ளது வரவேற்கத் தக்கது.


மக்கள் நலக் கூட்டணி தொடர்ந்து ஜீவித்திருக்கவேண்டும்.. மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து களமாட வேண்டும். குறாஇந்த பட்சம் இடதுசாரிகளும் சிறுத்தைகளும் இணைந்திருந்து களமாட வேண்டும். 

நன்றி: காக்கை ஜூன் 2016  

ஆனால் அதற்கும் ஒரு வரையறை இல்லையா?




மரணம் தவிர்க்க முடியாதுதான்.
ஆனால் அதற்கும் ஒரு வரையறை இல்லையா?.
சாகிற வயசா தாயே? எனக்காக அழுவதற்கான ஆட்கள் குறைந்து கொண்டே இருக்கிறீர்கள்.
உங்களது துயரிலும் துக்கத்திலும் பங்கேற்கிறேன் சரவணன் (Madurai Saravanan)
அன்புத் தோழன் சரவணனின் தங்கை பிரேமி நேற்று மரணமடைந்தார்

Saturday, July 9, 2016

கவிதை 49

கேட்டிருக்கக் கூடாதா?
என்றழுது புலம்பும் அவனுக்கு
கேட்டிருக்க நியாயமில்லை
நான் கேட்டிருக்கவே தேவையில்லை 
நட்பு அசலெனில்
கேட்டிருந்தாலும் புண்ணியமில்லை
அப்படியில்லையெனில்
என்ற
வயித்து வலிக்கு மருந்து வாங்க
காசற்று
நாண்டு கொண்டவனின்
பிணத்தின் குரல்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...