Wednesday, May 8, 2024

இவை இரண்டுமே குழுக் கொலைகளுக்கு சமமானவை

இருநூறுக்கு இருநூற்றிப் பன்னிரெண்டு

இது தேர்வில்
நூறு வாக்காளர்கள் இருக்கிற இடத்தில் நூற்றி ஒன்பது பேர் வாக்களித்திருக்கிறார்கள்
இது தேர்தல்
இரண்டும் பாஜக ஆளும் மாநிலங்கள்
பூஜியம் வாங்கிய ஒரு பிள்ளைக்கு ஐம்பத்தி ஆறு விழுக்காடு ஒரு தாளில்
அந்தப் பிள்ளை மருந்தாளுனர் பட்டயப் பிரிவு மாணவன்
இதுவும் பாஜக ஆளும் மாநிலம்
இந்தப் பிள்ளை விடைத்தாள் முழுக்க ”ஜெய் ஸ்ரீராம்” மட்டுமே எழுதி இருக்கிறான்
எனக்கென்ன கோவம் எனில், ஜெய் ஸ்ரீராமிற்கே 56 விழுக்காடுதானா?
பிழையான விடைக்கு மதிப்பெண் கொடுத்தால் கடவுளுக்கு ஆகாது
அதுவும் கடவுளுக்கே 56 தான் என்றால்
லூசு அவருக்கும் 56, எனக்கும் 56 தானாடா என்று கடவுளுக்கு கோவம் வராதா
பொறுங்கள் பாவிகளா உத்திரப் பிரதேசத்தில் 56 விழுக்காடு இடங்கள் கூட உங்களுக்கு வராமல் கடவுள் பார்த்துக் கொள்வார்
தேர்வானாலும் தேர்தலானாலும் இரண்டிலும் விளையாடி இருப்பது அரசியல்
1989 முதல் AO வாக, AE ஆக, SO ஆக, CE ஆக அனைத்து நிலைகளிலும் தாள் திருத்தும் பணியை செய்திருக்கிறேன்
அதே 1989 தேர்தல் முதல் 2021 இல் நடந்த சட்டமன்றத் தேர்தல்வரை தேர்தல் பணியும் செய்திருக்கிறேன்
எந்த விதமான தயக்கமும் தன்னடக்கமும் இன்றி என் அனுபவத்தில் சொல்கிறேன்
இவற்றில் எதுவுமே சாத்தியமே இல்லை
இப்படி ஒரு நிகழ்வு தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் சத்தியமாக சாத்தியமே இல்லை
இங்கு நிகழ்ந்திருந்தால் செய்தவர்கள் பாடு
நடவடிக்கையை விடுங்கள், மக்களே அசிங்கப்படுத்தி இருப்பார்கள்.
செய்தவன் நாண்டு இருப்பான்
அந்த மாநிலங்கள் சலனமே இல்லாமல் இருக்கின்றனவே
அவர்கள் அரசியல் அப்படி
600 வாக்காளர்கள் என்று கொள்வோம்
600 வாக்குகளும் பதிவாகாது
குறைவாகத்தான் இருக்கும்
600 வாக்குகள் உள்ள இடத்தில் 620 வாக்குகள் பக்கம் பதிவாகி உள்ளது என்றால்…
அச்சச்சோ…
17 C இல் இவ்வளவு வித்தியாசம் எனில் இங்கெல்லாம் பெட்டியைத் தரவே இயலாது
600 வாக்குகள்
540 வாக்களிப்பு என்றால்
17 C யிலும், மார்க்ட் பட்டியலிலும் வாக்குச் சாவடி முகவர்கள் பட்டியலிலும் ஒன்றாக இருக்க வேண்டும்
எண்ணிக்கையில் ஒன்று பிசகினாலும் முகவர்கள் விட மாட்டார்கள்
எனில் இது எப்படி சாத்தியம்
அனைத்து முகவர்களையும் வெளியே அனுப்பிவிட்டு தனது முகவர்களை மட்டும் உள்ளே வைத்துக் கொண்டு இந்த ஆட்டத்தை நடத்தி இருக்க வேண்டும்
இப்படி செய்பவர்கள் பெரும்பாலும் மொத்த வாக்காளர் வரம்பிற்குள் நின்று செய்வார்கள்
இவர்கள்தான் எல்லாம் கடந்தவர்களாயிற்றே
இதைவிட அசிங்கம் இதற்கு தேர்தல் ஆணையம் அளித்த பதில்
தேர்தல் அலுவலர்கள் தங்களுக்கு வேறு இடத்தில் உள்ள வாக்குகளை இங்கு போட்டுவிட்டார்கள் என்று கூறுகிறதுன் தேர்தல் ஆணையம்
109 சதவிகிதம் பதிவு
எனில்
9 சதவிதம்பேர் ஒரு வாக்குச்சாவடியில் பணி புரிந்தார்களா
இங்கு வாக்கு இல்லை எனில் தபால் வாக்கு
அதே தொகுதியில் பணி செய்பவர்கள் எனில் EDC
தேர்தல் ஆணையம் என்ன வகுப்பு நடத்தியது?
தேர்தல் முடிந்ததும் மக்கள் தெருவிற்கு வந்து கேள்வி கேட்க வேண்டும்
தேர்விற்கு வருவோம்
தாளின் முதல் பக்கம் போஸ்டிங் போடுவோம்
இருநூறுக்கு இருநூற்றி பன்னிரெண்டெல்லாம் வாய்ப்பே இல்லை
AE ஒருவர் திருத்துவார்
SO சரியாகத் திருத்தி இருக்கிறாரா என்று சரி பார்ப்பார்
ரேண்டமாக CE சரி பார்ப்பார்
இவ்வளவும் கடந்து 212 என்றால்
ஆமாம் ,
நாங்கள் குஜராத்தியர்கள்
டபுள் எஞ்ஜின் அரசாங்கம்
அப்படித்தான் செய்வோம் என்ற அகம்பாவம்
இவை இரண்டுமே குழுக் கொலைகளுக்கு சமமானவை
All re

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...