Sunday, September 29, 2013

ஐந்து கேள்விகள் என்னிடம்

 முன் குறிப்பு:

இதை எழுதியும் பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் அமெரிக்காவின் ஈனத்தனமான , அமைத்திக்கு விரோதமான போக்கு வலுப்பட்டிருக்கிறதே அல்லாமல் மறையவில்லை. எனவே பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் இதற்கு உயிர் இருக்கிறது.

யுகமாயினியில் வெளி வந்து பிறகு “ அந்தக் கேள்விக்கு வயது 98” என்ற தொகுப்பிலும் இடம் பெற்றது.

.....................................................................................................................................................................

“ எதற்கெடுத்தாலும் அமெரிக்காவையோ, ஜார்ஜ் புஷ்ஷையோ வம்புக்கு இழுக்காட்டிஒங்களுக்கு தூக்கமே வராதா?” என்று கேட்பவர்கள் ஏராளம்.

தூக்கம் எப்படி வரும்?

நல்ல விலைக்கு அண்ணன் கையில் ஒரு துப்பாக்கியையும், தம்பி கைகளில் இன்னொரு துப்பாக்கியையும், இனாமாய் இருவருக்குமிடையில் பகையையும் விற்பது

ஒவ்வொரு நாடுகளிலும் எழுகின்ற தீவிரவாதக் குழுக்களை அடையாளங்கண்டு, உற்சாகப் படுத்தி, ஒருங்கிணைத்து, அவர்களை அந்தந்த நாடுகளுக்கெதிராக உசுப்பி விடுவது, பிறகு இருவருக்குமிடையில் பஞ்சாயத்து செய்வது, கட்டணமாகாந்தப் பிராந்தியத்தின் வளங்களைச் சூறையாடுவது.

உலகச் சமூகத்தின் அமைதியக் குறிவைத்துக் குலைப்பது.

உலக நாடுகளின், அதிலும் குறிப்பாக வளரும் நாடுகளின் கனிம, நீர் மற்றுமெண்ணெய் வளங்களை ரவுடியாய் சூறையாடுவது. இத்தனை அயோகியத் தனங்களையும்செய்து கொண்டு “ நானே உலகின் நண்பன், என்னையன்றி சமாதானத் தூதுவன் இல்லை” என்று அரிதாரம் பூசுவது. பூசிய அரிதாரம் களையக் களைய அம்பலப் பட்டாலும், அது குறித்து கவலையே கொள்ளாத ஈனத்தனம் என்று நீளும் அமெரிக்க செயல்பாடுகள்.

நாம் நேசிக்கிற இந்தப் பூமியைச் சுரண்டுபவனை, பூமியின் மேற்பரப்பில் திட்டுத் திட்டாய் உறைந்து கிடக்கும் மனித ரத்தத்திற்குக் காரணமானவனை, இர்ராக்கில் சரிந்து கிடக்கும் பிணக் குவியல் பத்தாதென்று ஈரான், பாலஸ்தீனம் என அகோரப் பசியோடு அலைபவனை, குறைந்த பட்சம் சபிக்காமல்கூட விட்டால் வருங்காலத் தலைமுறை நம் கல்லறையில் காறி உமிழாதா?

ஆனால் ஒன்று. வெள்ளை மாளிகை, அதன் விசுவாசிகள், உலகமெங்கும் பரவிக் கிடக்கும் அதன் அடியாட்கள் ( இதில் பலர்பல நாடுகளின் அதிகாரத்திலும் உண்டு ) ஆகியோரை மட்டுமே இலக்கு கொண்டு எதிர்க்கிறோம்.

அமெரிக்க மக்களை எங்கள் சொந்த சகோதரர்களாகவே பார்க்கிறோம்.

ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் இருபத்தி நான்காயிரம் பேர் உலகம் முழுவதும் உயிர் வாழத் தேவையான உணவைப் பெற முடியாமல் உயிரிழந்து வருகிறார்கள்” என்று பட்டினியைத் தடுப்பதற்கான சர்வதேச நிறுவனத்தை மேற்கோள் காட்டி கூறுகிறார் ஜான் பெர்கின்ஸ் தனது “ ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்ற நூலில்.

இராக் போருக்காக 87 பில்லியன் டாலர்களை அமெரிக்கா செலவிடுகிறது. ஆனால், உலக மக்கள் அனைவரும் சுத்தமான நீரும், போதுமான உணவும், மற்ற அடிப்படை வசதிகளும், கல்வியும் அளிக்க இதில் பாதித் தொகையே தேவைப்படும்” என்று ஐ.நா சபையின் மதிப்பீட்டையும் அவர் அதே நூலில்மேற்கோள் காட்டுகிறார்.

உலகத்தின் பட்டினியைத் தீர்த்து, அனைவருக்கும் கல்வி மற்றும் சுத்தமானநீர் ஆகியவற்றை அளிப்பதற்கு ஆகும் செலவைப் போல் இரு மடங்கு தொகையினை இராக்கின் இறையாண்மைய, மக்கள் உரிமைகளை, மக்களை , அழிப்பதற்குப் பயன்படுத்தும்  ஒரு ஸ்தாபனத்தை, அதன் தலைவனைக் குற்றம் சுமத்துவதென்பது குறைந்த பட்சத்திற்கும் கொஞ்சம் குறைவானதுதான்.

ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருக்கும் இருபத்தி நான்காயிரம் மக்களைக் காக்கும் வல்லமை கொண்ட ஒருவன், தனது வல்லமையை, ஆற்றலை அதற்குப் பயன்படுத்தாமல், சிலநூறு இராக்கியர்களைக் கொல்வதற்கு பயன்படுத்தும் அதன் தலைமையைஅம்பலப் படுத்துவதும், அதற்கெதிராய் ஜனங்களைத் திரட்டுவதுமே படைப்பின் முதற்கடமையாகும்.

மின்னஞ்சலில் கண்ட நகைச்சுவைத் துணுக்கு மாதிரியான ஒரு செய்தியையும் அப்படியே தருகிறேன்.

ஜார்ஜ் புஷ் ஒரு பள்ளிக்கு செல்கிறார். புன்னகை தவழ, மாணவர்களை நோக்கிச் சொல்கிறார், “ குழந்தைகளே, என்னிடம் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்வி கேளுங்கள்”

“ அதிபர் பெருமானே, வணக்கம். நான் ஜான்”

“ நல்லது குழந்தையே, கேள்”

“ என்னிடம் மூன்று கேள்விகள் உள்ளன”

“ கேள் ஜான்”

1. ஏன் தேவையில்லாமல் ஈராக் யுத்தம்?

2. பின்லேடன் எங்கே?

3.ஏன் முஷாரப்பை இப்படித் தாறுமாறாய் வளர்த்து வருகிறீர்கள்?

புன்னகை மாறாத புஷ் பள்ளி நிர்வாகிகளைப் பார்க்கிறார்.

குறிப்பறிந்து அவர்கள் மண் அடித்து பள்ளிக்கு இடைவேளை விடுகிறார்கள்.

இடைவேளை முடிந்து பள்ளி மீண்டும் தொடங்குகிறது.

புன்னகைத்தபடியே அதிபர் கேட்கிறார், “ வேறு யாருக்கும் ஏதேனும் கேள்விகள் உண்டா?”

” என் பெயர் பீட்டர். என்னிடம் ஐந்து கேள்விகள் உள்ளன.”

“ கேள் பீட்டர்.”

 1. ஏன் தேவையில்லாமல் ஈராக் யுத்தம்?

2. பின்லேடன் எங்கே?

3.ஏன் முஷாரப்பை இப்படித் தாறுமாறாய் வளர்த்து வருகிறீர்கள்?

4. ஏன் வழக்கத்திற்கு மாறாக இருபது நிமிடங்களுக்கு முன்னமே இடைவேளை விட்டீர்கள்?

5. ஜான் எங்கே. என்ன செய்தீர்கள் அவனை?6 comments:

 1. வெ.ரங்கநாதன்,உடுமலை.October 5, 2013 at 9:58 PM

  அதிகாரத்தை நோக்கி கேள்வி கேட்டால் அமெரிக்கா என்ன? எல்லா ஊரிலும் இதுதான் நிலை.

  ReplyDelete
 2. அமெரிக்காவின் வல்லரசுத்தனம் என்பது அடுத்தவீட்டில் இழவு விழுந்தால்தான் நிலைக்கும்...? இது வல்லரசாக ஆசைப்படும் நாடுகளுக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. இழவு வீடுகளை உருவாக்குவதும் எல்லோரும் அழுது கதறும் வேளையில் அங்கிருந்து கிடைப்பதை அள்ளிப் போவதும்தான் அமெரிக்காவின் அன்றாட வேலை

   Delete
 3. உயிர்ப்புள்ள கேள்விதான் ஐயா

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஜெயக்குமார்

   Delete
 4. ///இதை எழுதியும் பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் அமெரிக்காவின் ஈனத்தனமான , அமைதிக்கு விரோதமான போக்கு வலுப்பட்டிருக்கிறதே/// எப்படி அய்யா மாற்றிக் கொள்ளும் உலகத்திற்கே நான் தான் பெரியண்ணன் என்ற நினைப்பு. விவேகனந்தர் நேரடியாகவே அமெரிக்காவிடம் சிகோகோ மாநாட்டில் ஏழைகளுக்கு உதவுங்கள் என்றே கேட்டிருப்பார். இருந்தும் என்ன பயன்? பதிவு பலவிதமாக யோசிக்க வைக்கிறது நன்றீங்க அய்யா.

  ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...