இரண்டில் ஒன்றைத் திறக்க வேண்டும்.
காதலி வந்தால் திருமணம். சிங்கமெனில் மரணம்.
இல்லாத சாமியையெல்லாம் வேண்டிக் கொண்டு திறக்கிறான்.
இரண்டுமில்லை.
அங்கே கருநாகம். கருநாகத்திடமிருந்து தப்பிக்க வேண்டி அடுத்த கூண்டைத் திறக்கிறான். அங்கோ சிங்கம்.
அங்கே கருநாகம். கருநாகத்திடமிருந்து தப்பிக்க வேண்டி அடுத்த கூண்டைத் திறக்கிறான். அங்கோ சிங்கம்.
இந்தக் கதையில் வரும் அடிமையின் நிலையில்தான் இன்றைய இந்திய வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்பதாக விரிந்து நுட்பத்தோடு ஆழமாகப் பயணிக்கிறது ”களம்” என்ற வலையில் இருக்கும் “ மாற்று அணி உருவாகுமா?” என்ற கட்டுரை.
எந்தச் சிக்கலுமின்றி அழகாக அவிழ்ந்து விடுகின்றன குறியீடுகள்.
அடிமைதான் இந்திய வாக்காளர்கள். இளவரசிதான் அவர்களது வாழ்க்கை.
நமக்கிருக்கும்
சிரமம் கூண்டுகளுக்குள் இருக்கும் கருநாகம் மற்றும் சிங்கம் இவற்றுள் எது காங்கிரஸ்,
எது பாரதிய ஜனதா கட்சி என்பதைத் தீர்மானிப்பதில்தான்.
ஆட்சி மாற்றமோ மாற்றுத் தலைமையோ இந்திய மக்களின் வாழ்க்கையை உத்திரவாதப் படுத்தப் போவதில்லை. அரசியல் மாற்றமும் மற்றும் சிந்தனை மாற்றமும் மட்டுமே இந்திய மக்களைக் காப்பாற்ற முடியும் என்பதை நுட்பமாக சொல்கிறார் அரிஅரவேலன்.
கொஞ்சமும் வறட்டுத் தனமின்றி சுவையாகவும் லாவகமாகவும் ஒரு மாற்று அரசியலுக்கான தேவையை முன் வைப்பதன் மூலம் தனது சமூக அக்கறையோடு கூடிய அரசியலை முன்வைக்கிறது “ களம் ”
பொது நிலங்களை தனியார் சுரண்டுவதையும் அதற்கு அரசு அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகங்கள் ஆகியவை துணைபோவது பற்றியும் அவற்றிற்கு எதிரான வழக்குகள் பற்றியும் பேசுகிறது “ பூனைக்கு மணி கட்டித்தானே ஆகவேண்டும்” என்ற கட்டுரை.
பொது நிலங்களைக் களவாடுவது குற்றம் எனில் பொதுக் குளங்களை, ஏரிகளை அழித்து கட்டிடங்கள் கட்டுவது என்பது கொலைக் குற்றமே ஆகும்.
தமிழ்நாட்டில் இருக்கிற நீர்ப் பிரச்சினைக்கு கர்நாடகம் எந்த அளவிற்கு காரணமோ அதே அளவு காரணம் நம்மிடம் இருந்த ஏரிகளையும் குளங்களையும் அழித்து கட்டிடங்களாக்கியது. இதை அயோக்கியத்தனமான, மக்களுக்கெதிரான தேசத்துரோகமாகவே கொள்ளவேண்டும்.
இப்படித்தான் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் இருந்த ஒரு குளத்தினை அழித்து வீடாக்கிக் கொள்கிறார் ஜெயபால்சிங். ஒருகட்டத்தில் இவரது எதிரியாக மாறிய தேவ்சிங் என்பவர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு முறையிடுகிறார். அரசு அலுவலகங்கள் முறைப்படி சரி செய்யப் படவே அரசு நிர்ணயித்த விலையை கட்டிவிவிட்டு இடத்தை ஜெயபால்சிங் வைத்துக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிடுகிறார்.
பகையின் அழுத்தம் தேவ்சிங்கை தூங்க விடவில்லை. ஆணையாளருக்கு மேல் முறையிடுகிறார். கட்டடத்தை இடிக்க வேண்டும் என்று அவர் ஆணையிடுகிறார்.. ஜெயபால்சிங் உச்சநீதிமன்றம் வரை செல்கிறார். உச்சநீதிமன்றம் உடனடியாக கட்டடம் இடிக்கப் பட்டு ஆக்கைரமிப்பு அகற்றப் படவேண்டும் என்று உத்திரவிட்டதுடன் இதுமாதிரி ஆக்கிரமிக்கப் பட்டுள்ள நிலங்கள் குறித்த தகவலை மே மாதத்திற்குள் நீதிமன்றத்திற்கு வழங்கவேண்டும் என்று கூறியுள்ளது.
இங்கு கவனிக்கப் படவேண்டிய விஷயம் என்னவெனில் ஒருக்கால் தேவ் சிங்கிற்கும் ஜெயபால் சிங்கிற்கும் பகை ஏற்படாமல் போயிருப்பின் இந்த ஆக்கிரமிப்பு வெளிச்சத்திற்கே வந்திருக்க வாய்ப்பில்லை.
அரசின் கையிலிருந்த புறம்போக்கு நிலம் மொத்த நிலபரப்பில் 15 சதவிகிதமாகும். இது ஆண்டுக்கு1.9 சதவிகிதம் அளவில் பெருமுதலாளிகளால் ஆக்கிரமிக்கப் படுகிறது என்ற தகவலையும் 2010 ஆண்டு வரை 834000 ஹெக்டேர் நிலம் இவ்வாறு ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது என்ற தகவலையும் இந்த வலை நமக்கு சொல்கிறது.
எந்த இடத்திலும்
புள்ளிவிவரங்களைப் படிக்கிற சோர்வோ அயர்வோ நம்மிடம் வருவதில்லை. புள்ளிவிவரங்களைக்
கூட புனைவுமாதிரி சுவையோடு சொல்கிறது இந்த வலை.
பெருகும் புலம் பெயர்தலினால் சுருங்கி அழிந்து வரும் வேளாண்மை குறித்து அக்கறையோடும் கவலையோடும் உரையாடுகிறது இந்த வலையில் உள்ள ஒரு கட்டுரை. 91 ஆண்டு 73.3 சதவிகிதமாக் இருந்த ஊரக மக்கள் விகிதாச்சாரம் 2011 ஆம் ஆண்டு 51.6 சதவிகிதமாக சுருங்குவதையும், புலம் பெயர்ந்து நகர்ப் புறங்களுக்குப் போன அவர்கள் அங்கு அனுபவிக்கும் பிரச்சினைகளையும் வலிக்க வலிக்கத் தருகிறது “ களம் “
சிறந்த காந்தியவாதியான ஏக்தாத் பரிசத்தின் தேசியத் தலைவர் ராஜகோபால் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து ஒரு கட்டுரை அலசுகிறது.
தலித்துகளுக்கான விடுதலைக்காக போராடும் அவரிடம் காந்திய வாதிகள் சிலரே தலித்துகளுக்குள்ளேயே பிரிவினைகள் இருக்கிறதே. அதிலிருந்து அவர்கள் முதலில் மீண்டு வரட்டும் , நாம் பிறகு பேசலாம் என்பதும் அப்படியே பதியப் படுகிறது. அதை தலித்துகள் பார்த்துக் கொள்வார்கள். நாம் இதை பார்க்கலாம் என்று இவர் வரும்போது இவரை கிறிஸ்தவர் என்றும் இவர் மக்களை மதம் மாற்றுகிறார் என்றும் புரளியைக் கிளப்பிவிடுகிறார்கள்.
இவரது காந்திய
நண்பகளில் சிலரே இவர் தன்னை இந்து என்று பிரகடனப் படுத்திக் கொள்ள வேண்டும் என்றபோது
“நான் மனிதன்” என்ற ராஜகோபாலின் பதில் சிலிர்ப்பைத் தருகிறது.
“ பகுத்தறிவுச்
சூடி “ என்ற தலைப்பில் இந்த
வலையிலும் சில ஆத்திச் சூடிகள்
இருக்கின்றன.
“ நேர்மையே
கற்பு” என்கிறது ஒரு ஆத்திச்சூடி.கற்பு என்பதை ஆணாதிக்கத்தின் குறியீடாகப் பார்ப்பதால்
அந்த வார்த்தையின் மீதே ஒரு வெறுப்போடிருக்கும் நமக்கு அந்த வார்த்தையை ஒரு புது கோணத்தில்
தருகிறது இந்த வலை.
மொழி
அரசியலை நுணுக்கமாக முன்வைக்கின்றன இவரது
இரண்டு ஆத்திச் சூடிகள்.
” தாய்மொழி
வழி பயில்” என்கிறது ஒரு ஆத்திச் சூடி. ஆஹா என்று மகிழ்வதற்குள் அடுத்து ஒரு கவளம்
மகிழ்ச்சியை பிசைந்து தருகிறது “மொழி பல அறி” என்கிற ஆத்திச் சூடி.
இதுதான் சரியான
மொழிப் பார்வை.
“ கருவறைக்
கல்லுக்கு
பூசை பண்ண
பூணூல் பார்ப்பான்
தெருக் கூட்ட
சாக்கடை வார
பீயள்ள
அருந்ததியக்
குடும்ப ஆள்
அட
யாருங்க இப்ப
சாதி பார்க்கிறா?
என்று நீண்டு
போகும் ஒரு கவிதை இன்றைய சாதியக் கட்டுமானத்தை தோலுரிக்கிறது.
மாற்று அரசியலுக்கான
தேவையை, மாற்றுத் திட்டத்திற்கான தேவையை கொஞ்சமும் வறட்சியின்றி சுவைக்க சுவைக்க தருகிறது
“ களம்” மாற்றத்தை விரும்பும் யாவரும் அவசியம் வாசிக்க வேண்டிய வலை.
பாருங்கள்:
http://ariaravelan.blogspot.in/
நன்றி : “ புதிய தரிசனம்.
இத்தளத்தில் "களம்" பற்றிய வலைக் காட்டில் படித்ததை அருமையாக வடித்து தந்துள்ளீர்கள்...தோழர் அரிகரனுக்கு ஆத்மார்த்தமாக செய்துள்ள உங்கள் பதிவு மிக அருமை தோழரே..இனிய இரவு வணக்கம்..
ReplyDeleteவாக்காளர்களின் நிலையை சொல்லும் குறீயீட்டு கதை வெகு பொருத்தம். இந்த நாட்டில் மனிதன் என்ற ஒரு அடையாளத்துடன் வாழ்வதே மாபெரும் சவால் என்பதை ராஜகோபால் போன்றவர்களே அனுபவித்துள்ளனர் எனும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்-:((
ReplyDeleteவலிக்கும் உண்மைகள் பாஷா
Deleteஅடிமைதான் இந்திய வாக்காளர்கள். இளவரசிதான் அவர்களது வாழ்க்கை.
ReplyDeleteநமக்கிருக்கும் சிரமம் கூண்டுகளுக்குள் இருக்கும் கருநாகம் மற்றும் சிங்கம் இவற்றுள் எது காங்கிரஸ், எது பாரதிய ஜனதா கட்சி என்பதைத் தீர்மானிப்பதில்தான். = நிஜம் தான். அருமையான பதிவு. மிக்க நன்றி.
மிக்க நன்றிங்க அய்யா
Deleteஇந்த தருணத்தில் அற்புதமான பதிவு.இந்திய வாக்காளர்கள் நுட்பமானவர்கள்.1000 பேர் களத்தில் நின்றாலும் பொருத்தமானவர்களை தேர்வு செய்வார்கள்.
ReplyDeleteஇப்போதெல்லாம் யாரும் பார்ப்பனர்களைக் அழைத்துதான் அனைத்தையும் செய்யவேண்டும் என்றுக் கட்டாயம் இல்லை.
ReplyDeleteகிருத்துவ மதத்தில் அனைத்து விதமான பாகுபாடும் களையபட்டுவிட்டது போல.
முதலில் தங்கள் வீட்டை மாற்றுங்கள்.பின் சமூகம் மாறிவிடும்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
வணக்கம் தோழர். கிறிஸ்தவ மதத்தில் அனைத்து பாகுபாடுகளும் அகற்றப் பட்டு விட்டனவா? வியப்பாயிருக்கிறதே. தலித் கிறிஸ்தவர்களுக்கான தனி தேவாலயங்கள் இருப்பது தெரியுமா தோழர். தலித் கிறிஸ்தவர்கள் குடியிருக்கும் தெரு வழியாக மாதா சப்பரம் போகாத ஊர்களின் எண்னிக்கை தெரியுமா தோழர்
Delete