ஊரும் கால்களோ
வருடும் விரல்களோ
நடுநிசியின் நிசப்தத்தில்
என்னவோ செய்தது ஏதோ ஒன்று
தனித்து கிடந்த என்னை
அழுக்கும் பிசுக்குமாய் படுக்கையானதால்
ஊர்ந்திருக்கக் கூடும் ஜந்தெதுவும்
விரல்கள் போலவே உணர்ந்ததால்
வருடலாயுமிருக்கலாம்
கால்களா விரல்களா
ஏதெனக் கண்டடையுமுன்
வந்து தொலைத்தது
தூக்கம்
வருடும் விரல்களோ
நடுநிசியின் நிசப்தத்தில்
என்னவோ செய்தது ஏதோ ஒன்று
தனித்து கிடந்த என்னை
அழுக்கும் பிசுக்குமாய் படுக்கையானதால்
ஊர்ந்திருக்கக் கூடும் ஜந்தெதுவும்
விரல்கள் போலவே உணர்ந்ததால்
வருடலாயுமிருக்கலாம்
கால்களா விரல்களா
ஏதெனக் கண்டடையுமுன்
வந்து தொலைத்தது
தூக்கம்
மிக மிக அருமை
ReplyDeleteசட்டென வந்து மறைந்து போகும் சில
நிகழ்வுகளின் நினைவுகள்
கவிதைக்கான கரு முதலானவைகளை
நினைவுறுத்திப்போனது தங்கள் படைப்பு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி தோழர்
Deleteரசித்தேன்... ஆழ்ந்த தூக்கம்...!
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteமிகவும் அருமையான படைப்பு. அக மகிழ்ந்தேன். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்! :)
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteதூக்கம் வந்து நிம்மதியாக்கியது..
ReplyDeleteஇல்லையெனில் ஜந்துவின்,
ஜாதகம் கணிக்கப் போய்
மனம் உழன்றிருக்கும் தூக்கம் போய்..
அடடா...
Deleteமிக்க நன்றி தோழர்
வருடலோ விரல்களோ ,, தூக்கம் வருடிவிட்டது போலும்... நல்ல கவிதை.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteசாலையோரங்களையே வீடுகளாய் கொண்ட சொந்தங்களின் நிலையை இதை விட சிறப்பாக சொல்ல முடியும் என்று தோன்றவில்லை. கவிவரிகள் கண்டு கலங்குகிறது கண்கள். அவர்களுக்கான விடிவு காலம் நோக்கி எனது இறைவேண்டல் தொடரும். நல்லதொரு பகிர்வுக்கு நன்றீங்க அய்யா. புதுக்கோட்டை கணினித் தமிழ்ப் பயிலரங்கத்தில் தங்கள் இடி முழக்க பேச்சை இமைக்காமல் கேட்டவன் நான். தொடர்வேன் தங்களையும், வலைப்பக்கத்தையும்.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteபுரியலீங்க தோழர்
ReplyDeleteஅருமையா கவிதை அய்யா!
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteஅருமையான படைப்பு
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteஅருமையான படைப்பு
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
DeleteVery nice!
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteஎதுவென்று அறியும் முன்னர்
ReplyDeleteஏனோ தூக்கம் வந்தது ?
எங்களை தவிக்க விடவோ ?
ஆஹா ஆஹா
Deleteமிக்க நன்றி தோழர்
ஊரும் கால்களோ
ReplyDeleteவருடும் விரல்களோ
நடுநிசியின் நிசப்தத்தில்
என்னவோ செய்தது ஏதோ ஒன்று....................அருமையான உணர்வு தோழர்.........
மிக்க நன்றி சசி
Deleteஊரும் கால்களோ
ReplyDeleteவருடும் விரல்களோ
நடுநிசியின் நிசப்தத்தில்
என்னவோ செய்தது ஏதோ ஒன்று...............அருமையான உணர்வு தோழர்.........
மிக்க நன்றி சசி
Deleteவணக்கம் கவிஞரே.
ReplyDeleteதூக்கத்திலும் கவிதையா?நுண்மையான உணர்வைக் கூறியது.
வணக்கம் தோழர். அருமை..இப்படியும் கூட கவிதை பிறக்குமோ?
ReplyDelete//கால்களா விரல்களா
ஏதெனக் கண்டடையுமுன்
வந்து தொலைத்தது
தூக்கம்//
ஏதுமறியா தூக்க த்தை உணர்வு பொங்கும் கவிதையாக்கிய தோழமைக்கு இனிய வாழ்த்துகள்.
மிக்க நன்றி தோழர்
Deleteவருடும் விரல்களையும் தவிர்த்து உறக்கம் வருகிறதென்றால் நீங்கள் கொடுத்துவைத்தவர்தான். இந்த நிம்மதியான தூக்கமில்லாமல் அவதியுறுபவர்கள் எத்தனை பேர்? அழகான கவிதை. பாராட்டுகள்.
ReplyDeleteஅந்த ஜந்து தங்களை கடிக்கவில்லையா சார் !! :) உணர்வுகள் மறந்த உறக்கம் என்பது வரம் ,வரம் கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள் :)
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...
மிக்க நன்றி தனபாலன்
Delete