ரட்சிப்பு
மன்னிப்பு
இளைப்பாறுதல்
எது கொண்டும்
பொங்க மறுக்கிறது என் உலை
நீரை ரசமாக்கலாம்
ஐந்து துண்டுகளால் கூடைகளை நிரப்பியும் நீட்டலாம் நீ
சம்மதமில்லையெனக்கு அதிசயங்களை சாப்பிட
போக
உழைத்துதான் உண்ணனும் கர்த்தரே
முடியுமெனில்
கூலிக்கொரு வேலைக்கொடு
/// உழைத்துதான் உண்ணனும் ///
ReplyDeleteஅருமை ஐயா... வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி தோழர் தனபாலன்
Deleteஉழைத்துத்தான் உண்ண வேண்டும்
ReplyDeleteஆலயங்கள் உழைக்க கற்றுத் தருமானால்
இல்லங்களில் ஏது வேதனை
மிக்க நன்றி தோழர்
Deleteவணக்கம்.சீனப் பழமொழி நினைவில்.மீன் தருவதை விட மீன் பிடிக்க கற்றுக்கொடு என்பது.தன்னம்பிக்கையான வரிகள்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி கீதா
Deleteமிகவும் சிறப்பு.
ReplyDeleteமிக்க நன்றி செல்வகுமார்
Deleteகர்த்தரே! கருணை கொள்..எங்கள் எட்வின் மன்றாடுதலை செவி சாய்த்து..இனிய காலை வணக்கம்..
ReplyDeleteமிக்க நன்றி தோழர். அப்படி ஒருவன் இருந்திருந்தால் நாம் ஏன் மன்றாட வேண்டி வருகிறது. நமக்கான வேலை நிறைய இருக்கு தோழர்
Deleteயாரிடமும் மன்றாடத் தேவையில்லை ஐயா...திறமையுள்ள மனிதன் பிழைப்பான் ...
Deleteமுடிந்தால் கூலிக்கு ஒரு வேலை கொடு.//
ReplyDeleteஉங்கள் கோபம் எனக்கு புரிகிறது.
//உழைத்துத் தான் உண்ணனும் //
ஒன்றே சொல்லினும் நன்றே சொன்னீர்.
ஒவ்வொரு கவளமும் உள்ளே போகும்போது
இந்த நினைப்பு தேவை.
இந்த உணவு நாம் உண்ணுகின்ற இந்த உணவு
நம் உழைப்பின் பலனா ? என்ற எண்ணம் ஒவ்வொரு குடிமகன் நெஞ்சிலும் எழவேண்டும்
உங்கள் வலைக்கு கரந்தை ஜெயக்குமார் அவர்கள் வலை வழியே வந்தேன்.
திரும்பவும் நன்றி.
உங்கள் நூல் எங்கே கிடைக்கும் எனச் சொன்னால் படிப்பேன்.
சுப்பு தாத்தா.
மிக்க நன்றி தோழர். இந்த நூல் சந்தியா பதிப்பகம் போட்டது. 044 24896979 இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் தோழர்
Deleteஉழைத்துதான் உண்ணவேண்டும். உழைப்பே இல்லாமல் உட்கார்ந்து சாப்பிட நினைக்கும் ஒருவகைக் கூட்டத்திற்கு கூலிக்கு வேலை கொடுத்தாலும் குனிந்து நிமிர உடம்பு வளையாதே.
ReplyDeleteமிக்க நன்றி அய்யா
Deleteவணக்கம் சகோதரரே..
ReplyDeleteஉங்கள் ஆதங்கம் வரிகளில் பளிச்சிடுகிறது. உழைத்து வாழ வேண்டுமெனும் உயரிய கொள்கையே என்றும் வெற்றி தரும். நல்லதொரு சிந்தனைக்கு நன்றி.
உண்மையை சொன்னால் நாத்திகவாதி என்பார்கள் . உழைத்துதான் உண்ணனும் கர்த்தரே
ReplyDeleteமுடியுமெனில்
கூலிக்கொரு வேலைக்கொடு-அருமையான வரிகள் அய்யா
நல்ல சிந்தனை ஐயா வாழ்த்துக்கள் :)
ReplyDelete