Sunday, October 27, 2013

சம்மதமில்லையெனக்கு அதிசயங்களை சாப்பிட...

ரட்சிப்பு
மன்னிப்பு

இளைப்பாறுதல்
எது கொண்டும்
பொங்க மறுக்கிறது என் உலை
நீரை ரசமாக்கலாம்
ஐந்து துண்டுகளால் கூடைகளை நிரப்பியும் நீட்டலாம் நீ
சம்மதமில்லையெனக்கு அதிசயங்களை சாப்பிட
போக
உழைத்துதான் உண்ணனும் கர்த்தரே
முடியுமெனில்
கூலிக்கொரு வேலைக்கொடு

18 comments:

  1. /// உழைத்துதான் உண்ணனும் ///

    அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர் தனபாலன்

      Delete
  2. உழைத்துத்தான் உண்ண வேண்டும்
    ஆலயங்கள் உழைக்க கற்றுத் தருமானால்
    இல்லங்களில் ஏது வேதனை

    ReplyDelete
  3. வணக்கம்.சீனப் பழமொழி நினைவில்.மீன் தருவதை விட மீன் பிடிக்க கற்றுக்கொடு என்பது.தன்னம்பிக்கையான வரிகள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மிகவும் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி செல்வகுமார்

      Delete
  5. கர்த்தரே! கருணை கொள்..எங்கள் எட்வின் மன்றாடுதலை செவி சாய்த்து..இனிய காலை வணக்கம்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர். அப்படி ஒருவன் இருந்திருந்தால் நாம் ஏன் மன்றாட வேண்டி வருகிறது. நமக்கான வேலை நிறைய இருக்கு தோழர்

      Delete
    2. யாரிடமும் மன்றாடத் தேவையில்லை ஐயா...திறமையுள்ள மனிதன் பிழைப்பான் ...

      Delete
  6. முடிந்தால் கூலிக்கு ஒரு வேலை கொடு.//

    உங்கள் கோபம் எனக்கு புரிகிறது.

    //உழைத்துத் தான் உண்ணனும் //
    ஒன்றே சொல்லினும் நன்றே சொன்னீர்.

    ஒவ்வொரு கவளமும் உள்ளே போகும்போது
    இந்த நினைப்பு தேவை.

    இந்த உணவு நாம் உண்ணுகின்ற இந்த உணவு
    நம் உழைப்பின் பலனா ? என்ற எண்ணம் ஒவ்வொரு குடிமகன் நெஞ்சிலும் எழவேண்டும்

    உங்கள் வலைக்கு கரந்தை ஜெயக்குமார் அவர்கள் வலை வழியே வந்தேன்.

    திரும்பவும் நன்றி.

    உங்கள் நூல் எங்கே கிடைக்கும் எனச் சொன்னால் படிப்பேன்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர். இந்த நூல் சந்தியா பதிப்பகம் போட்டது. 044 24896979 இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் தோழர்

      Delete
  7. உழைத்துதான் உண்ணவேண்டும். உழைப்பே இல்லாமல் உட்கார்ந்து சாப்பிட நினைக்கும் ஒருவகைக் கூட்டத்திற்கு கூலிக்கு வேலை கொடுத்தாலும் குனிந்து நிமிர உடம்பு வளையாதே.

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரரே..
    உங்கள் ஆதங்கம் வரிகளில் பளிச்சிடுகிறது. உழைத்து வாழ வேண்டுமெனும் உயரிய கொள்கையே என்றும் வெற்றி தரும். நல்லதொரு சிந்தனைக்கு நன்றி.

    ReplyDelete
  9. உண்மையை சொன்னால் நாத்திகவாதி என்பார்கள் . உழைத்துதான் உண்ணனும் கர்த்தரே
    முடியுமெனில்
    கூலிக்கொரு வேலைக்கொடு-அருமையான வரிகள் அய்யா

    ReplyDelete
  10. நல்ல சிந்தனை ஐயா வாழ்த்துக்கள் :)

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...