சில நாட்களுக்கு முன்னால் கரூரில் ஒரு திருமணம்.
கரூரில் இறங்கியதுமே வயிறு கட முடா என்றது.
நகராட்சி கட்டணக் கழிவறைக்கு வெளியில் டோக்கன் வாங்குமிடத்திலேயே ஏகத்துக்கும் கூட்டம்.
டோக்கன் கொடுப்பவர் கத்திக் கொண்டே இருந்தார்,
“ ஒன்னுக்கு ரெண்டு ரூவா, ரெண்டுக்கு மூனு ரூவா. சில்லறையா கொண்டு வாங்க”
இதையெல்லாம்கூட விற்க ஆரம்பிச்சுட்டாங்களா?
அந்த அவஸ்தையிலும் சிரிப்பு வந்தது.
ஒரு வழியாய் உள்ளே நுழைந்தால் ரேஷன் கடை கூட்டத்தில் கால் வாசி தேறும் போல இருந்தது.
கைகளைப் பின் கட்டி, கால்களை தரையில் அழுத்தி, இடுப்பை நெளித்து என்று என்னன்னவோ செய்து கொண்டிருந்தேன். ஏறத்தாழ எல்லோருமே அப்படித்தான்.
அங்கு நின்று கொண்டிருந்த இருவர் தனியார் பள்ளி ஆசிரியர்கள் என்பது அவர்களது பேச்சிலிருந்து தெரிந்தது.
பணி மூப்பை மதிக்காமல் பதவி உயர்வினை பள்ளி நிர்வாகங்கள் வழங்கிக் கொண்டிருப்பது பற்றி விவரங்களோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.
கோவத்தை எள்ளலோடு வெளிப்படுத்தும் ஆற்றல் இருந்தது இருவருக்கும்.
அந்த அவஸ்தையின் உச்சத்திலும் கொடுமை கண்டு எள்ளலோடு அவர்களால் பொங்க முடிந்தது.
என்னாலும் ரசிக்க முடிந்தது.
அவர்களைப் பார்த்து புன்னகைத்தேன். அவர்களும் புன்னகைத்தார்கள்.
“ தனியார் பள்ளி ஆசிரியர்களா சார்?”
“ ஆமாம் சார். நீங்கள்?”
“ நானும்தான்”
இப்படி எங்களுக்குள் ஒரு உரையாடல் துவங்கியிருந்த நேரத்தில் ஒரு அறை காலியாகவே எங்களுக்குப் பின்னால் நின்றிருந்த இளைஞன் உள்ளே நுழைந்து விட்டான்.
“ இங்க வரிசையில நிக்கறவனெல்லாம் மனுசனா இல்லையா?” என்று சகட்டு மேனிக்கு ஒருவர் திட்ட ஆரம்பித்து விட்டார்.
மற்றொரு ஆசிரியர் அவரை சமாதானப் படுத்தினார்.
சிரித்துக் கொண்டே என்னிடம் சொன்னார்,
“ பாருங்க சார், இவனவிட ஏழு வருஷம் ஜூனியரை தலைமை ஆசிரியரா போட்டாங்க. அப்பக் கூட சிரிச்சான். இன்னமும் அந்த ஹெச்.எம் மோட நல்லாதான் பழகுறான். ஆஃப்டர் ஆல் இந்த சின்ன விஷயத்துக்கு இப்படி பாயறான் பாருங்களேன்”
“ எதுடா சின்ன விஷயம்?”
“ இது அவ்வளவு பெரிய விஷயமாடா?”
“ இல்லையா பின்ன. HM ப்ரொமோஷன உட்டுக் கொடுத்ததால என் பேண்ட்டு நாறாது. இங்க அப்படியில்லை”
அரசு ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்,
பள்ளிகள், ஆலயங்கள், மருத்துவ மனைகள் இவை எவற்றின் தேவைக்கும் குறைச்சலானது அல்ல கழிவறைகள்.
ஜனத் தொகைக்கேற்ப சுத்தமான, சுகாதாரமான கழிவறைகள் நிறைய அவசியம்.

“இல்லையா பின்ன. HM ப்ரொமோஷன உட்டுக் கொடுத்ததால என் பேண்ட்டு நாறாது. இங்க அப்படியில்லை” - பதவி மூப்பை விட இந்த விசயம் அவ்வளவு முக்கியம் இந்தியாவில்
ReplyDeleteநமது நகரமே சுகாதாரக் கேட்டினால் பாதிப்படைவதற்குக் காரணம் கழிவறைகள் இல்லாமையே. பெரிய பெரிய அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றால்கூட, நாற்றம் தாங்க முடியதில்லை. கழிவறைகளே சுகாதாரத்தின் முதற்படி , சாலையெங்கும் அதிகரிக்க வேண்டும்
ReplyDeleteமிகச் சரியாக சொன்னீர்கள் தோழர். மிக்க நன்றி
Deleteமிக அருமை விட்டு கொடுப்பதற்கு விட்டுக் கொடுக்கலாம் எல்லாதிற்கும் எப்படிவிட்டு தர முடியும் .....அடிப்படைத் தேவை எல்லாத்தையும் இந்த அரசுகள் காசாய் மாற்றியுள்ளது என்பதை மறந்து விட முடியாது ....சமீபத்தில் வந்த பத்து ரூபாய்க்கு ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீர் என்பது பகல் கொள்ளை பச்சை அய்யோக்கியத் தனம்
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteசுகாதாரமாக சுத்தமாக பராமரிக்க ஆட்களையும் நியமிக்க வேண்டும்...
ReplyDeleteமிக்க நன்்றி தோழர்
Deleteஅடிப்படை வசதிகளில் கூட கை வைத்து வசூல் செய்வது மிக கேவலமான கலாச்சாரமாகவே தெரிகிறது தோழர்.. இது குறித்து முகனூலில் முன்னமே பதிவு செய்திருந்தேன். நன்றி

Delete