Sunday, May 20, 2012

எட்டப்பன் என்பதன் அரபு மொழியாக்கம்தான் மீர்சாதிக்கோ?


04.05.1799

ஸ்ரீரங்கப் பட்டிணம்.

ஆற்றங்கரையின் அந்தப் பகுதியில் ஆங்கிலப் படைகள் ஏதோ ஒரு தகவலுக்காக காத்திருக்கின்றன. பரபரப்பும் ஆர்வமும் படையின் முன்னிலிருந்த வீரன் முதல் இறுதியாக நின்ற வீரன் வரைக்கும் எல்லோர் முகங்களிலும்.

கோட்டையின் மேற்குப் பகுதியில் திப்புவின் படைகள். அங்கு வருகிறான் திப்புவின் நிதி அமைச்சர் மீர் சாதிக்.

“ வணக்கம் துரை”

“வணக்கம்”

“என்ன கட்டளை?”

“ எதுவும் இல்லை. எல்லோரும் அங்கு சென்று ஊதியம் பெற்று கொஞ்சம் ஓய்வெடுங்கள்”

அவன் காட்டிய திசை நோக்கி தங்கள் வியர்வைக்கான கூலியைப் பெறும் மகிழ்ச்சியில் வீரர்கள் நகர்கிறார்கள்.

இந்தத் தகவலை காத்திருந்த ஆங்கிலப் படைகளுக்கு அனுப்புகிறான்

எட்டப்பன் என்பதன் அரபுமொழியாக்கம்தா மீர் சாதிக்கோ.

ஆட்களே இல்லாத அந்தப் பகுதிக்குள் ஆங்கிலப் படைகள் எவ்வித தடங்கலுமின்றி நுழைகின்றன”

யாரோ ஒரு ஆங்கிலன் சொல்கிறான்,

“ மீர் பாய் மட்டும் இல்லையென்றால் இது சாத்தியமே இல்லை. அவருக்கு கடமை பட்டுள்ளோம்.”

அந்த ஆங்கிலனுக்கு இருந்த நன்றியுணர்ச்சியில் ஒரு சதம் கூட மீர் சாதிக்கிற்கு இல்லை.

தனது நிதி அமச்சனும் ஒரு துரோகிதான் என்பதை உணராமல் மதிய உணவை எடுத்துக் கொண்டிருந்த திப்புவின் கவனத்திற்கு செய்தி வருகிறது.

பாதியில் கை கழுவி விட்டு, ஆயுதங்களை எடுத்துக் கொண்டு கிழம்புகிறான்.

கொஞ்ச நேரத்தில் எல்லாம் முடிந்து விடுகிறது.

திப்புவைப் பிடிக்கத் தேடுகிறார்கள். எங்கும் காணாது போகவே, தப்பி ஓடிவிட்டானோ என்று சந்தேகிக்கிறார்கள்.

குவிந்து கிடக்கும் வீரர்களின் பிணங்களை புரட்டிப் போட்டுக் கொண்டிருந்த ஒருவன் அலறினான்.

அலறல் வந்த திக்கை நோக்கி ஓடினார்கள்.

கோட்டையின் வடக்கு மதில் சுவரில் வீரர்களோடு வீரனாய், பிணமாய் திப்பு.

திப்புவின் உடலருகே நின்று வெல்லெஸ்லி கொக்கரித்தான்,

“ மைசூரின் வீழ்ச்சி இந்தியாவின் வீழ்ச்சி, இந்தியா இறந்து பிணமாக என் காலடியில் கிடக்கிறது”

எனது இன்றைய சுதந்திர சுயேட்சையான வாழ்விற்கான உன் பங்களிப்பு மிகவும் உசத்தியானது திப்பு.

சில சொட்டு கண்ணீரும், நன்றியும், வீர வணக்கமும்.

23 comments:

  1. சில சொட்டு கண்ணீரும், நன்றியும், வீர வணக்கமும்.
    உண்மைதான் வீரனும், நாட்டின்மேல் அளவிடா நேசமும் கொண்டவன் திப்பு. அவனே மனிதன். தவிர, காட்டிக்கொடுப்புகள் எங்கும் இருப்பவை, இங்கும் இருந்தது. இன்றும் இருக்கிறது. நாட்டில் எத்தனை மீர் சாஹிப்.
    நல்ல பதிவு. இதில் திப்பு பற்றியே நினைவு ஓடுகிறது.
    வரலாறு எங்கினும் இதுதான் போலும். Roger Sinna .

    ReplyDelete
  2. அருமையான சிந்தனை வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  3. நன்று..! எட்டப்பர்கள் இன்னும் இருப்பது தான் எமது இனத்தின் சாபக்கேடு...!!

    ReplyDelete
  4. ///Anonymous said...
    சில சொட்டு கண்ணீரும், நன்றியும், வீர வணக்கமும்.
    உண்மைதான் வீரனும், நாட்டின்மேல் அளவிடா நேசமும் கொண்டவன் திப்பு. அவனே மனிதன். தவிர, காட்டிக்கொடுப்புகள் எங்கும் இருப்பவை, இங்கும் இருந்தது. இன்றும் இருக்கிறது. நாட்டில் எத்தனை மீர் சாஹிப்.
    நல்ல பதிவு. இதில் திப்பு பற்றியே நினைவு ஓடுகிறது.
    வரலாறு எங்கினும் இதுதான் போலும். Roger Sinna .///

    மிக்க நன்றி தோழர். மறக்கடிக்கப் பட்ட பக்கங்கள்

    ReplyDelete
  5. /// புன்னியாமீன்... said...
    அருமையான சிந்தனை வாழ்த்துக்கள் நண்பரே ///
    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  6. /// Anonymous said...
    நன்று..! எட்டப்பர்கள் இன்னும் இருப்பது தான் எமது இனத்தின் சாபக்கேடு...!! ///

    மிக்க நன்றி தோழர். மீர்சாக்கள் எங்கும் உண்டு

    ReplyDelete
  7. short &thoughtful.so many mirs as officials &politicians in our land.teachers' role in shaping thippus is essential.pl read viii std tamil book -page no;70 cuddalore Anjalaiammal's contribution to freedom struggle is vividly given. she is my grandma[amma's amma].i too possess a drop of Thippu's spirit i believe.lets do something socially&rationally

    ReplyDelete
  8. வரலாற்றைப் புரட்டிப்பார்க்கும் போது எத்தனை விடயங்கள் புதைந்து கிடக்கின்றன... அத்தனையும் புதையலாய்.... ஆனால் இந்த எட்டப்பர்கள் மட்டும் இன்னும் மறையவில்லை.... அருமையான பதிவு தோழமையே.........

    ReplyDelete
  9. சுருக்கமாக உண்மையை சொல்லிவிட்டீர்கள், ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியாலே இந்தியாவை அடிமைப்படுத்தினார்கள்,பிளாஸ்ஸி யுத்தம் முதலே அதனைக்காணலாம்,

    மைசூர் சென்றிருந்த போது ,ஶ்ரீரெங்கப்பட்டிணம் பெருமாள் கோயில் செல்லும் வழியில் ஒரு இடத்தில் இங்கு தான் திப்பு என்ற புலி சடலமாக கண்டு எடுக்கப்பட்டார்னு ஒரு நினைவு நடுகல் கூட நட்டு வைத்துள்ளதைப்பார்த்தேன்.

    இன்னும் சிதிலமான கோட்டை சுவர்,அகழி ஆகியவற்றின் எச்சம் அங்கு இருக்கு.

    ReplyDelete
  10. நேரம் இருந்து மனம் இருந்தால் என் பதிவு “கலாச்சாரக் காரணங்கள் “ படிக்கவும்.

    ReplyDelete
  11. ///Mangai A said...
    short &thoughtful.so many mirs as officials &politicians in our land.teachers' role in shaping thippus is essential.pl read viii std tamil book -page no;70 cuddalore Anjalaiammal's contribution to freedom struggle is vividly given. she is my grandma[amma's amma].i too possess a drop of Thippu's spirit i believe.lets do something socially&rationally///

    திமிரே நியாயம் மங்கை

    ReplyDelete
  12. ///SANTHOSHI said...
    வரலாற்றைப் புரட்டிப்பார்க்கும் போது எத்தனை விடயங்கள் புதைந்து கிடக்கின்றன... அத்தனையும் புதையலாய்.... ஆனால் இந்த எட்டப்பர்கள் மட்டும் இன்னும் மறையவில்லை.... அருமையான பதிவு தோழமையே.........///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  13. /// வவ்வால் said...
    சுருக்கமாக உண்மையை சொல்லிவிட்டீர்கள், ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியாலே இந்தியாவை அடிமைப்படுத்தினார்கள்,பிளாஸ்ஸி யுத்தம் முதலே அதனைக்காணலாம்,

    மைசூர் சென்றிருந்த போது ,ஶ்ரீரெங்கப்பட்டிணம் பெருமாள் கோயில் செல்லும் வழியில் ஒரு இடத்தில் இங்கு தான் திப்பு என்ற புலி சடலமாக கண்டு எடுக்கப்பட்டார்னு ஒரு நினைவு நடுகல் கூட நட்டு வைத்துள்ளதைப்பார்த்தேன்.

    இன்னும் சிதிலமான கோட்டை சுவர்,அகழி ஆகியவற்றின் எச்சம் அங்கு இருக்கு. ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  14. /// G.M Balasubramaniam said...
    நேரம் இருந்து மனம் இருந்தால் என் பதிவு “கலாச்சாரக் காரணங்கள் “ படிக்கவும்.///

    ஏற்கனவே வாசித்தாயிற்று தோழர்

    ReplyDelete
  15. அய்யன்பேட்டை தனசேகரன்May 20, 2012 at 11:57 PM

    மீர்சாதிக் இடத்தில் இன்று அலுவாலியாக்களும் சிதம்பரம்களும்...!!

    ReplyDelete
  16. சமீபத்தில் திப்புவைப் பற்றின உங்கள் இரண்டாவது பதிவென்று நினைக்கிறேன்..

    நன்றி தோழர் சிறந்த பதிவுகளுக்கு...

    ReplyDelete
  17. ரொம்ப நன்றி தோழரே ...ரத்தின சுருக்கமாய்,அதே நேரத்தில் மிக அழுத்தமான பதிவு ...எட்டப்பன் மற்றும் மிர் சாதிக் எல்ல காலங்களிலிலும் நம்மிடையே வாழந்து கொண்டுதான் இருக்கின்றனர் நாம்தான் அவர்களை அடையாளம் காணாமல் ஏமாந்து விடுகிறோம்

    ReplyDelete
  18. /// அய்யன்பேட்டை தனசேகரன் said...
    மீர்சாதிக் இடத்தில் இன்று அலுவாலியாக்களும் சிதம்பரம்களும்...!! ///

    ஆமாம் ஆமாம் ஆமாம் தோழர்

    ReplyDelete
  19. ////Venkadesan said...
    சமீபத்தில் திப்புவைப் பற்றின உங்கள் இரண்டாவது பதிவென்று நினைக்கிறேன்..

    நன்றி தோழர் சிறந்த பதிவுகளுக்கு...////

    ஆமாம் தோழர் .மிக்க நன்றி

    ReplyDelete
  20. ///pakkir kani said...
    ரொம்ப நன்றி தோழரே ...ரத்தின சுருக்கமாய்,அதே நேரத்தில் மிக அழுத்தமான பதிவு ...எட்டப்பன் மற்றும் மிர் சாதிக் எல்ல காலங்களிலிலும் நம்மிடையே வாழந்து கொண்டுதான் இருக்கின்றனர் நாம்தான் அவர்களை அடையாளம் காணாமல் ஏமாந்து விடுகிறோம் ////

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  21. ///pakkir kani said...
    ரொம்ப நன்றி தோழரே ...ரத்தின சுருக்கமாய்,அதே நேரத்தில் மிக அழுத்தமான பதிவு ...எட்டப்பன் மற்றும் மிர் சாதிக் எல்ல காலங்களிலிலும் நம்மிடையே வாழந்து கொண்டுதான் இருக்கின்றனர் நாம்தான் அவர்களை அடையாளம் காணாமல் ஏமாந்து விடுகிறோம் ////

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  22. வரலாறை பாடமாக மட்டுமே படித்திருந்திருக்கிறேன் போலும்..! மீர் சாதிக் பற்றி இங்கு தான் முதன் முதலில் கேள்விப்படுகிறேன்..! இம்மாதிரி ஆட்கள் சிறிதேனும் தாய்மண்ணிற்கு விசுவாசம் காட்டியிருந்தால், இந்தியாவின் வரலாறே(தலையெழுத்தே) இன்று வேறு..! ஹிம்ம்.. பெருமூச்சு மட்டுமே எஞ்சுகிறது..!

    ReplyDelete
  23. /// திவ்யா @ தேன்மொழி said...
    வரலாறை பாடமாக மட்டுமே படித்திருந்திருக்கிறேன் போலும்..! மீர் சாதிக் பற்றி இங்கு தான் முதன் முதலில் கேள்விப்படுகிறேன்..! இம்மாதிரி ஆட்கள் சிறிதேனும் தாய்மண்ணிற்கு விசுவாசம் காட்டியிருந்தால், இந்தியாவின் வரலாறே(தலையெழுத்தே) இன்று வேறு..! ஹிம்ம்.. பெருமூச்சு மட்டுமே எஞ்சுகிறது..! ///

    மிக்க நன்றி திவ்யா. காக்கைக்கு கவிதை அனுப்பும்மா

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...