மேட்டுத் தெரு
குப்பனை
சிக்கனக்காரனென்றுதான்
ஊரே சொல்லும்
சந்தைக்கு
நடந்தே போவான்
நடந்தே திரும்புவான்
இரண்டு மணி செலவழித்து
நான்கு ரூபாய் சேமிப்பான்
முக்கால் மணி நேரம் நடப்பான்
முத்து வீட்டில்
பேப்பர் படித்துவிட்டு
மீண்டும் ஒரு முக்கால் மணி நடந்து
சேமிப்பான் பேப்பர் காசை
மாத்திரை போட்டா
பத்தே நிமிடத்தில் பறந்து போகும்
தலைவலி
சொன்னால்
மாத்திரைக்கு ஒரு ரூபாயா என்பான்
பத்துப் போட்டு
மூன்று நாளில் குணமாவான்
நேரம் செலவழித்து
காசை சேமிக்கும்
மேட்டுத் தெரு
குப்பனை
சிக்கனக்காரனென்றுதான்
ஊரே சொல்லும்
சிக்கனக்காரன் பற்றி...ஒரு நையாண்டிக் கவிதை தந்துள்ளீர்கள்..
ReplyDeleteமேட்டுத் தெருக் குப்பனை நினைத்துச் சிரித்தேன்.
சின்னப்புத்தி சிக்கனக்காரன்.
ReplyDeleteதோழர்கள் நிரூபன் மற்றும் ராஜ ராஜேஸ்வரி இருவருக்கும் அன்பும் நன்றியும்
ReplyDeleteஇந்த குப்பன் சிக்கனக்காரனா கஞ்சனா?
ReplyDelete//முக்கால் மணி நேரம் நடப்பான்
முத்து வீட்டில்
பேப்பர் படித்துவிட்டு
மீண்டும் ஒரு முக்கால் மணி நடந்து
சேமிப்பான் பேப்பர் காசை//
இப்படி இருப்பவன் நிச்சயம் (நிதமும் செய்திதாள் படித்து உலக விஷயங்களை அறிந்தவன்) முட்டாளாயிருக்க வாய்ப்பில்லை. எனவே அவனுக்கு கஞ்சதனத்திற்க்கும் சிக்கனத்திற்க்கும் வித்தியாசம் தெரிந்து இருக்காதா??????
உங்களது கவிதையே முரணாக உள்ளது. :-))))
அவனுக்கு சிக்கனக் காரனென்று பேர்...
ReplyDeleteசார்
ReplyDeleteமுதல்ல கருத்து சொன்ன நிரூபன் & இராஜராஜேஸ்வரி இரண்டு பேருமே குப்பனை "சின்னப்புத்தி சிக்கனக்காரன்" அப்படின்னு தெளிவா வரையறை செஞ்சிருக்காங்க.
அவங்களுக்கும் நீங்க நன்றின்னுதான் சொல்லிருக்கிங்க.
நானு குப்பனை நல்லவன்னு சொல்லிருக்கிறேன். அதுக்கும் ஆமான்னு சொல்றீங்க
தெளிவா குழப்புறீங்க சார்
:-)))))))))
இவன் சிக்கனக்காரன், ஆனால் சின்னப்புத்திக்காரனில்லை. கொஞ்சம் common sense குறைந்தவன் எனலாம். சரியா ஐயா?
ReplyDeleteநேரத்தின் அருமை பற்றி பேச எத்தனித்த முயற்சி தோழா. அவ்வளவுதான்
ReplyDelete