Tuesday, May 10, 2011

கொண்டாடுவோம்

கிஷோர் எனது பெருமைமிகு சந்தோஷங்களுள் ஒன்று. 

குழந்தைகளை தாய்மொழி வழியாகத்தான் படிக்க வைக்க வேண்டும் என்று ஊர் ஊராய் போய் அடுத்தவர்களிடம் திமிரோடு பேசுவதற்குக் காரணம் நான் அவனைத் தமிழ் வழியில் படிக்க வைத்ததுதான். 

ஊர் சுற்றுவான், விளையாடுவான், கணினியில் மணிக் கணக்காய் செலவு செய்வான், தொலைக் காட்சியில்
 கிரிக்கெட் போட்டிகளை விடாது பார்ப்பான், வெள்ளைச்சியோடு வம்படிப்பான். 

இந்த வயதில் ஒரு பத்து பிள்ளைகள் எப்போதும் சேர்ந்தே இருப்பார்கள். அவர்களுக்குள் எந்த ஒளிவு மறைவோ, பொறாமையோ கிடையாது. அந்தக் குழுமத்தின் எல்லாப் பிள்ளைகளின் பெற்றோர்கள் அனைவரையும் தாயாய் தந்தையாய் பார்க்கிறார்கள். 

”உங்கள நம்பித்தாண்டா இம்புட்டு கடன வாங்கி வச்சிருக்கோம்” என்றால் எங்களுக்கு கமிஷனா கொடுத்தீங்க என்பான் ஒருவன்.  இதுதான் எல்லாத் தளங்களிலும் நடக்கும். பிள்ளைகள் பெரும்பாலும் சரியாய்த்தான் இருக்கிறார்கள். 

குழந்தைகளை சதாப் படி என்று சதா புலம்பக் கூடாது. நானோ விட்டுவோ அதை எப்போதும் செய்ததில்லை.

ஒரு முறை அவனது தாத்தா "வேண்டுமானால் தனிப் பயிற்சிக்குப் போ" என்றபோது எங்க சாருங்கள விட வேற யாரு நல்லா நடத்துவா? என்று கேட்டவன்.

இன்று காலை ஒரு நண்பரைப் பார்க்க சமயபுரம் போயிருந்த போது அலை பேசியில் அழைத்தான்.

“ என்னடா தம்பி?”

”ம்ம்... அப்பா நான் 1082” சொல்லிவிட்டு வைத்து விட்டான்.

1190 எடுத்த பிள்ளைகளும் உண்டு. ஆனாலும் இவன் எடுத்த 1082 என்னைப் பெருமையோடு துள்ள வைத்தது. 

என்ன கொஞ்சம் பீற்றிக் கொள்வது போல் தோன்றுகிறதே என்றுகூட தோன்றலாம். இல்லை நண்பர்களே, கொஞ்சம் அல்ல நிறையவேதான். அவன் வெறும் தேர்ச்சி பெற்றிருந்தாலும் இப்படித்தான் குதித்திருப்பேன். 

தோல்வியே எனினும் தோள் பிடித்து அணைத்திருப்பேன்.

நம் பிள்ளைகளை நாம் கொண்டாட மறுத்தால் யார் கொண்டாடுவார்கள். 

ரஜினிக்கு வாந்தி வந்தால் பதிவு போடுகிறோம். தோனிக்கு நான்கு கோடி கிடைத்தால் வெறியோடு கொண்டாடுகிறோம். 

அருள் கூர்ந்து அவரவரும் நம்பிள்ளைகளின் சிறிய வெற்றியே ஆயினும் பகிர்ந்து கொண்டாடுவோம். பிள்ளைகள் பிரும்மாண்டமாய் வளர்வார்கள். 

நான் ஆரம்பித்து வைத்திருக்கிறேன். நீங்களும் வஞ்சனையின்றி வாருங்கள்.

28 comments:

  1. முதலில் அதிக மதிப்பெண் பெற்ற சகோதரனுக்கு எங்கள் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. தோல்வியே எனினும் தோள் பிடித்து அணைத்திருப்பேன்.


    இந்த வரியில் நான் என் அப்பாவைப் பார்க்கிறேன்....நெகிழ்ந்தேன்..

    ReplyDelete
  3. நம் பிள்ளைகளை நாம் கொண்டாட மறுத்தால் யார் கொண்டாடுவார்கள்.

    சூப்பர் சார் :-)

    ReplyDelete
  4. ரஜினிக்கு வாந்தி வந்தால் பதிவு போடுகிறோம். தோனிக்கு நான்கு கோடி கிடைத்தால் வெறியோடு கொண்டாடுகிறோம்.

    அதானே.... ஹி ஹி :-)

    ReplyDelete
  5. அருள் கூர்ந்து அவரவரும் நம்பிள்ளைகளின் சிறிய வெற்றியே ஆயினும் பகிர்ந்து கொண்டாடுவோம். பிள்ளைகள் பிரும்மாண்டமாய் வளர்வார்கள்.

    நான் ஆரம்பித்து வைத்திருக்கிறேன். நீங்களும் வஞ்சனையின்றி வாருங்கள்.


    இதற்க்கு மறுமொழி இடாமல், வேறு எதற்கு முடியும்...முதலில் மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கள் பிள்ளைக்கும், தங்கள் அன்புக்கும் ....அவன் நினைத்த படி, அவன் வாழ்க்கை சிறக்க வேண்டுகிறேன்....

    ReplyDelete
  6. உங்கள் அன்பையும் வாழ்த்துக்களையும் கிஷோரிடம் சொல்வேன். மிக்க நன்றி ரேவா

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் சார் உங்கள் மகனுக்கு

    ReplyDelete
  8. ///அருள் கூர்ந்து அவரவரும் நம்பிள்ளைகளின் சிறிய வெற்றியே ஆயினும் பகிர்ந்து கொண்டாடுவோம். பிள்ளைகள் பிரும்மாண்டமாய் வளர்வார்கள். // உண்மை தான்

    ReplyDelete
  9. மிக்க நன்றி தோழர் கந்தசாமி

    ReplyDelete
  10. முதலில் பிள்ளைகளைத் தாய் மொழியில் படிக்க வைக்கிற உங்கள் இருவருக்கும் என் சிறப்புக் கைதட்டல்கள்.கிஷோருக்கு வாழ்த்துக்கள். பிள்ளைகளைக் கொண்டாடச் சொல்லும் எழுத்தும், அதான் பின்னுள்ள அன்பும் அழுகை வர வைத்தது. நிறைய எழுதுங்கள் பெற்றோர்களுக்கு. அவர்களே குழந்தையின் உணர்வுக் காப்பாளர்கள்.

    ReplyDelete
  11. முதலில் கிஷோருக்கு என் வாழ்த்துக்களைச் சொல்ல்லுங்கள். அவன் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியிருப்பதை மறந்தே போனேன். நல்ல மதிப்பெண்கள் எடுத்திருக்கிறான்.
    தோல்வியே ஆனாலும் தாங்கிப் பிடிக்கும் பெற்றோர்கள் குறைந்து போனதால் தான் தற்கொலைக்கு முயலும் பிள்ளைகள் அதிகமாகிப் போகிறார்கள். நேற்று நான் பணி புரியும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேர்வில் தோல்வியடைந்ததால் விஷம் குடித்த மாணவி ஒருத்தியை தூக்கிக் கொண்டு வந்தார்கள். அந்த அழகான சின்னப் பெண் மயங்கிக் கிடப்பதை பார்க்க வயிறு கலங்கிப் போனது..... என்று மடியும் இந்த தேர்வு பயம் என்னும் பூதம்?

    ReplyDelete
  12. கிஷோருக்கு என் வாழ்த்துக்களை தெரிவியுங்கள். நல்ல முயற்சி. கிஷோர் அப்பாவுக்கு (உங்களக்கு) என் தோழமையான வணக்கம்.

    ReplyDelete
  13. அன்பின் மிருணா,
    வணக்கமும் நன்றியும். உண்மையில் நெகிழ்ந்து போனேன். உண்மையை சொல்லவா நான் உங்கள் எழுத்துக்களின் ரசிகன். ஏன் தோழர் நிறைய எழுத மறுக்கிறீர்கள்?

    ReplyDelete
  14. அன்பின் ப்ரியா,
    வணக்கம். தற்கொலை செய்து கொள்ளும் பிள்ளைகளைப் பார்த்தால் பொத்துக் கொண்டு வருகிறது.இதை மாற்றிவிடக் கூடுமா என்று தெரியவில்லை. ஆனால் ஏதேனும் செய்ய முயற்சிக்காமல் சாவதற்கு தைரியமில்லை.

    ReplyDelete
  15. சமூகப் போராளிகளாக நான் மதிக்கிற மணிச்சுடர் தோழர் வாழ்த்துவது மிகவும் கௌரவத்திற்குரிய விஷயம். மிக்க நன்றி தோழர்.

    ReplyDelete
  16. தோல்வியே எனினும் தோள் பிடித்து அணைத்திருப்பேன்.//

    வாழ்த்துகள் குழந்தைக்கும் உங்கள் எண்ணத்துக்கும்..

    நல்ல முதிர்ச்சி..

    ReplyDelete
  17. உங்கள் ஆசை மகனுக்கு என் பிந்திய வாழ்த்துக்கள் சகோ,

    ReplyDelete
  18. ஆங்கில மொழி மோகத்தில் பலர் அலையும் நாட்டில், கிஷோரின் தமிழ் மொழி மீதான பற்றுதலும், அவரை ஊக்குவிக்கும் உங்களின் செயலும் போற்றுதற்குரியது.

    ReplyDelete
  19. ஆங்கில மொழி மோகத்தில் பலர் அலையும் நாட்டில், கிஷோரின் தமிழ் மொழி மீதான பற்றுதலும், அவரை ஊக்குவிக்கும் உங்களின் செயலும் போற்றுதற்குரியது.

    ReplyDelete
  20. \\எண்ணங்கள் 13189034291840215795 said...
    தோல்வியே எனினும் தோள் பிடித்து அணைத்திருப்பேன்.//

    வாழ்த்துகள் குழந்தைக்கும் உங்கள் எண்ணத்துக்கும்..

    நல்ல முதிர்ச்சி..//

    மிக்க நன்றி தோழர். தொடர்ந்து சந்திப்போம்

    ReplyDelete
  21. மிக்க நன்றி நிரூபன். இதை எல்லாம் இவ்வளாவு சுளுவாக பரிமாற முடிகிறதெனில் அது உங்கள் உதவியால்தான்.

    ReplyDelete
  22. பிள்ளைகள் பெரும்பாலும் சரியாய்த்தான் இருக்கிறார்கள். //
    மிகத் திருப்தியான அருமையான பகிர்வு. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

    ReplyDelete
  23. தங்களது வருகையும் கருத்தும் என்னை மிகவும் கௌரவப் படுத்துகின்றன. மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் தொடர்ந்து வரவேண்டும்.

    ReplyDelete
  24. \\இராஜராஜேஸ்வரி said...
    பிள்ளைகள் பெரும்பாலும் சரியாய்த்தான் இருக்கிறார்கள். //
    மிகத் திருப்தியான அருமையான பகிர்வு. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
    May 11, 2011 6:31 PM//


    தங்களது வருகையும் கருத்தும் என்னை மிகவும் கௌரவப் படுத்துகின்றன. மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் தொடர்ந்து வரவேண்டும்.

    ReplyDelete
  25. ”ம்ம்... அப்பா நான் 1082”

    இந்தப் பக்குவத்துக்கும் சேர்த்து வாழ்த்துகிறேன் தோழர்... உங்களையும் கிஷோரையும் !!

    ReplyDelete
  26. மிக்க நன்றி தோழர் நிலா

    ReplyDelete
  27. பிள்ளைக‌ளின் தோள்க‌ளில், நமது தோல்விக‌ளை சும‌த்தாம‌ல் இருந்தாலே
    அவ‌ர்க‌ள் ந‌டை அவர்க‌ள் வ‌ச‌மாகிவிடும். நெளிவு, சுழிவு, ஏற்ற இற‌க்க‌ங்க‌ளை
    அவ‌ர்க‌ளே க‌ற்று தெளிந்து ப‌ய‌ண‌த்தையே ர‌சிக்க‌ தொட‌ங்கிவிடுவ‌ர். இல‌க்கை நோக்கி ஓடி ஓடியே வாழ்க்கைப் ப‌ய‌ண‌த்தை தொலைத்த‌து நம்மோடு போக‌ட்டும். சைக்கிள் ஓட்ட‌ப் ப‌ழகும் குழ‌ந்தையின் கூட‌வே செல்வோம், சைக்கிளைப் பிடிக்காம‌ல்.
    கிஷோருக்கும்,அவ‌ரது நண்பர்க‌ளுக்கும், பெற்றோர்க‌ளுக்கும் எங்க‌ளின் வாழ்த்துக்க‌ளை தெரிவியுங்க‌ள்.

    ReplyDelete
  28. அன்பின் தோழர் வாசன்,
    வணக்கம்.அருமையான கருத்து தோழர். கிஷோர், அவனது நண்பர்கள் மற்றும் அனைவரின் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...