Thursday, May 12, 2011

பழைய எண் 229 / புதிய எண் 29







இது...

என் மகன் வீடு 
அவன் நண்பர்களுக்கு

என் தங்கையின் வீடு 
அவள் தோழியர்க்கு

என் மனைவியின் வீடு
அவர் அக்கா, அம்மா, மற்றும்
தோழியர்க்கு

என் வீடுதான்
இது
என் நண்பர்களுக்கு

தொண்ணுறு விழுக்காடு 
இன்னமும்
கனரா வங்கியின் வீடு
இது

9 comments:

  1. வங்கிக் கடனில் வாங்கிய வீட்டின் உரிமம் பற்றிய நகைச்சுவக் கவிதை, யதார்த்த நிலமையினை உணர்த்துகிறது. ரசித்தேன்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி நிரூபன்

    ReplyDelete
  3. கவிதை அருமை...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. முரண் என்பதைக் கருவியாக்கி பல்வேறு உணர்வுகளை எழுப்புவதாய் இருக்கின்றன உங்கள் கவிதைகள். இந்த கவிதையும் அதன் முரண் மூலம் ஒரு நகை அலையை எழுப்பிப் போகிறது

    ReplyDelete
  5. பார்க்க, படிக்க அழகாவே இருக்கு எங்களுக்கும்! கடைசி பத்தி புன்னகை தருவிப்பதாய்.

    ReplyDelete
  6. மிக்க நன்றி தோழர் சரவணன்

    ReplyDelete
  7. மிக்க நன்றி நிலா

    ReplyDelete
  8. மிக்க நன்றி மிருணா. ஒரு நேயர் விருப்பம் நிறைய எழுதுங்கள். உண்மையை சொன்னால் இந்தக் கவிதை எழுதி ஒரு பதினைந்து ஆண்டுகள் கடந்திருக்கும்.

    ReplyDelete
  9. வீடு அழகாக இருக்கிறது.
    பதிவும் நன்றாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...