காலை பள்ளியில் தேர்வுப்பணிக்கான கூட்டங்கள் குறித்த பதற்றத்தில் இருந்தால்
அதைவிட பதற்றத்தோடு வருகிறார் தமிழாசிரியை ஜெயா
யாராச்சும் வந்து கூப்பிட்டால்தான் பள்ளிக்கு வருவதாக 10 A அனிதா சொல்லி இருக்கிறாள்
அதுதான் அவ்வளவு பதற்றம் அவருக்கு
அவரது பதற்றத்திற்கு இன்னும் இரண்டு காரணங்களும் இருந்தன
நேற்றைய கணக்கு சிறப்பு வகுப்பிற்கு வந்திருந்த அனிதா இன்றைய தனது வகுப்பிற்கு வரவில்லை
ஆகவே கணக்கில் தேர்ச்சி பெற்று தனது பாடத்தில் கோட்டை விட்டுவிடுவாளோ என்ற பயம் ஒரு காரணம்
B க்ளாசில் அனைத்துப் பிள்ளைகளும் வந்துவிட்டபோது தன் பிள்ளை மட்டும் வராத கோபம் இன்னொரு காரணம்
பிரச்சினை என்னவெனில்,
நேற்று அனிதாவின் தாயார் ஏதோ ஒரு காரணத்தின் பொருட்டு அவளை அடித்திருக்கிறார்
அந்தக் கோவத்தை பள்ளியின்மீது காட்டியிருக்கிறாள் குழந்தை
சரி என்று இரண்டு குழந்தைகளை அனுப்பி வைத்தோம்
இவர்கள் போவதற்குள்,
பள்ளிக்கூடம் போவதற்கு இவ்வளவு அலும்பா என்று அவளது அம்மா இரண்டு போட கோவத்தின் உச்சத்திற்கே போய்விட்டாள் அனிதா
அழைக்கப் போன குழந்தைகளிடம் டீச்சர் வந்து கூப்பிட்டால்தான் வருவேன் என்று சொலிவிட்டாள்
வேறு வழி,
டீச்சர் அழைத்து வந்தார்
குழந்தைங்க பள்ளிக்கு வர எந்த அளவிற்கும் குனிவோம்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்