Wednesday, July 28, 2021

மாறாக பள்ளிகள் குழந்தைகளிடம் போக வேண்டும்

 கிராமங்களில் தொடக்கப் பள்ளிகளைத் திறப்பதற்கு இயலுமா என்பதை ஆராயுமாறு சென்னை உயர்நீதி மன்றம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொண்டிருக்கிறது

சத்துணவு இல்லாமையால் குழந்தைகள் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஒருவர் நீதிமன்றத்தில் மனு கொடுத்திருப்பதாகத் தெரிகிறது
பள்ளிகள் இல்லாததால் குழந்தைகளைக் கடத்தியோ அல்லது பெற்றோரின் சம்மதத்தோடோ வேலைகளில் அமர்த்தப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன
நிறைய குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன.
எனில்,
அனைத்து தடுப்பரண்களையும் கடந்து சில திருமணங்கள் நடந்திருக்கவும் கூடும்
இவை அனைத்தும் பள்ளிகள் உடனடியாகத் திறக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்துகின்றன
பிள்ளைகள் இல்லாத பள்ளிகளில் எத்தனைக் காலம்தான் காலை முதல் மாலை வரை வேலை பார்ப்பது?
எங்களுக்கும் பள்ளிகளைத் திறக்க வேண்டும்
பிள்ளைகளின் இரைச்சலைக் கேட்காத எங்கள் செவிகளும் “டேய் என்ன அங்க சத்தம்” என்று சொல்லாத எங்கள் குரலும் அய்யோ என்று போகட்டும்
ஆனால் குறைந்துகொண்டே வந்த தொற்றின் எண்ணிக்கை இன்று சன்னமாகக் கூடியிருப்பதாக பத்திரிக்கையாளர் குணசேகரன் எச்சரிக்கிறார்
சென்னையில் நேற்று 122
இன்று 164
கோவையில் நேற்று 164
இன்று 179
நேற்றுவரை இறங்குமுகம். இன்று மீண்டும் ஏறத் தொடங்கி இருக்கிறது
மூன்றாம் அலை இன்னும் மோசமாகும் என்றும் செய்திகள் வருகின்றன
குழந்தைகளின் பிறப்பு விகிதம் மூன்றில் இரண்டு பங்காகக் குறைதுள்ளதாக ஒரு தகவல் இருக்கிறது
மரண விகிதம் அதிகரித்திருக்கிறது
தமிழ் நாட்டில் மக்கள் தொகை குறைந்து வருவதாகவும்
எனவே தமிழ் மக்கள் குடும்பக்கட்டுப்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்றும்
வேறு ஒரு காரணத்திற்காக அவர் சொல்லி இருந்தாலும் தோழர் மணியரசனின் இந்தத் தகவலும் அச்சமளிப்பதாகவே உள்ளது
இந்த நிலையில் குழந்தைகள் கூடி
வேறு மாதிரி ஆனால்
வேண்டாம் அந்தச் சிந்தனைக்குள் போகவே வேண்டாம்
குழந்தைகள்,
பட்டினியில் வாடக் கூடாது
வேலை வாங்கப்படக் கூடாது
குழந்தைத் திருமணங்கள் நடக்க கூடாது
கல்வியும் அவர்களுக்குப் போக வேண்டும்
அது எப்படி?
பள்ளிகளும் திறக்கப்படாமல் இத்தனையையும் சாத்திய படுத்துவது?
அது நமது வேலை
சாத்தியப் படுத்த என்ன செய்யலாம் என்று கூடிப் பேச வேண்டும்
மார்த்தி சொன்னதில் ஒன்று சொல்கிறேன்
சொல்வார்,
INSTEAD THE SCHOOL SHOULD GO TO THE STUDENTS"
இப்படிப் பெயர்க்கலாம்,
குழந்தைகள் பள்ளிக்கு வருவதற்கு மாறாக பள்ளிகள் குழந்தைகளிடம் போக வேண்டும்
இந்தக் காலத்திற்கு ஏற்றார்போல் சொல்வதெனில்
கொரோனா முற்றாய் முடியும்வரை மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதற்கு பதில் பள்ளிகளை மாணவர்களை நோக்கி நகர்த்துவோம்
எப்படி?
சத்தியமாய் இந்தப் புள்ளியில் என்னிடம் ஏதும் இல்லை
ஆனால் உட்கார்ந்து இதுகுறித்து அக்கறையோடு உரையாடும்போது
என்னிடம் இருந்தும் கருத்துக் கிடைக்கும்
உங்களிடம் இருந்தும் கிடைக்கும்
யோசிப்போம்
#சாமங்கவிய ஒருமணி பன்னிரண்டு நிமிடம்
28.07.2021

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...