வழக்கமாக பயன்படுத்தப்படும் அல்லது எளிதில் சிக்கக்கூடிய விஷயங்களை அல்லது பொருள்களை விடுத்து அரிதானவற்றை உவமையாக்குவதை "Far fetched simile" என்று ஆங்கிலத்திலே சொல்வோம்
தமிழில் இதற்கு என்ன பெயர் என்று தெரியவில்லை
யாரேனும் சொன்னால் மேலே உள்ள வரியை எடுத்துவிட்டு அதை வைத்துவிடலாம்
ஆனால் அப்படிப்பட்ட ஒரு அரிய உவமையை தமிழில் இன்று காண முடிந்தது
தஞ்சை அகழியில் ஒரு நீர்த்தூம்பியை முனைவர் மணிமாறன் அவர்களும் சுவடியியல் ஆய்வாளர் கோ.ஜெயலட்சுமி அவர்களும் கண்டறிந்தனர்
நீர்த்தூம்பி என்றால் பூமிக்கு கீழே நீரை எடுத்து வரும் குழாய் என்று கொள்ளலாம்
இத்தோடு இதை நிறுத்திக் கொள்கிறேன்
நீர்த்தூம்பி குறித்து சொல்ல வந்த அவர்கள்
“பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல
அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்”
என்ற “மணிமேகலை” வரிகளை எடுத்து வைத்திருக்கிறார்கள் என்ற செய்தியை இன்றைய தீக்கதிரில் வாசித்து அசந்து போனேன்
பெரிய ஏரிகளிலே தேக்கப்பட்ட தண்ணீர் பூமிக்கு அடியே செல்லும் சிறிய குழாய்கள் வழியாக சென்று மக்களுக்கு பயன்களைத் தருவது போல
சிறிய செவித்துளை வழியே அறக்கருத்துகள் மனதை சென்றடைந்து நெறிப்படுத்தும்
மூன்று விஷயங்கள் சொல்ல
மணிமேகலை காலத்தில் நிறைய பெருஏரிகள் வெட்டப்பட்டு பராமரிக்கப்பட்டிருக்கின்றன என்பது ஒன்று
பூமிக்கு கீழே குழாய்களை செலுத்தி அவற்றின் வழியாக நீரை மக்களுக்கு கொண்டு செல்லும் நீர் மேலாண்மை அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது என்பது இரண்டு
சின்ன செவித்துளை வழியாக கொண்டு செல்லப்படும் நல்ல விஷயங்களுக்கு பூமிக்கு கீழே சிறிய குழாய் வழியாக கொண்டு செல்லப்படும் தண்ணீரை உவமையாக்கும் நுட்பம் தமிழில் உண்டு என்பது மூன்று
#சாமங்கவிய ஒருமணி பதினைந்து நிமிடங்கள்
26.07.2021
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்