Thursday, July 15, 2021

வாழ்த்துகள் எங்கள் அப்பா தோழரே

 அன்பின் முதல்வருக்கு,

வணக்கம்.




இன்று நமது தோழர் சங்கரய்யா அவர்களுக்கு நூறாவது பிறந்த நாள்
அரசு விழாவாக அதைக் கொண்டாட வேண்டும் என்று கோரினோம்
குறைந்த அவகாசம், நடைமுறை சிக்கல் போன்றவை அது நிகழாமல் செய்துவிட்டிருக்கும் என்றே கருதுகிறேன்
அவரது நூற்றாண்டு தொடக்கத்தில் இரு செய்திகளையும் ஒரு கோரிக்கையையும் உங்களிடம் வைக்க வேண்டும் என்று தோன்றுகிறது
1968 இல் இருமொழிக் கொள்கையை சட்டமன்றத்தில் அண்ணா கொண்டு வருகிறார்
பட்டும் கற்றும் தெளிந்த அனுபவத்தோடு
இதை வாழ்த்துகிறேன். ஆனால் ஒருமொழிக் கொள்கையை நீங்கள் கொண்டு வந்திருக்க வேண்டும். இதை ஒருநாள் நீங்கள் உணர்வீர்கள்
என்று கூறினார்
அதை நாம் உணார்கிறோம்
ஆனால், அதுகுறித்து எதுவும் பேசுவதற்கோ கோருவதற்கோ உரிய நேரம் இது இல்லை
1992 இல் சட்டமன்றத்தில் பேசும்போது
திமுகவும் அதிமுகவும் உரிமை மற்றும் மாநில சுயாட்சி குறித்து அதிகமாக பேசுவதும் செயல்படுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது
ஆனால் தராளமயமாக்கல் அனைத்தையும் உலக வங்கியிடம் கொண்டுபோய் அடகு வைத்துவிட்ட பிறகு
தாரளமயத்தை உலகமயமாக்கலை எதிர்க்காமல் இவற்றை அடைய இயலாது என்பதை உணருங்கள் என்றார்
இதை கோரிக்கையாக வைக்க ஆசைப்படுகிறேன்
வெற்றி பெற்றதும் நீங்கள் தோழர் சங்கரய்யா அவர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்ற பாங்கு எங்களை நெகிழச் செய்தது
தந்தை மகன் பாங்கு அது
அந்தத் தந்தையின் கோரிக்கையை பரிசீலியுங்கள்
தாராள மயத்தை, உலகமயமாக்கலை எதிர்த்து களமாடாமல் அதை அடைய இயலாது
திமுக அவற்றிற்கெதிராக களமாடுவது
அரசு விழாவைவிட அவரை மகிழ்ச்சிப்படுத்தும்
அதுதான் அவர் நம்மிடம் எதிர்பார்க்கும் வாழ்த்துமாகும்
நன்றி முதல்வரே
வாழ்த்துகள்
எங்கள் அப்பா தோழரே

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...