இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து “மதச்
சார்பற்ற” என்ற வார்த்தையை எடுத்துவிட வேண்டும். அப்போதுதான் இந்தியா இந்து
நாடாக மாறுவடற்கு வழி பிறக்கும் என்பது மாதிரி திரு தொகாடியா அவர்கள் கூறியுள்ளதாக
செய்திகள் கூறுகின்றன.
ஒரேமாதிரி திருமணம்தான் தேசம் முழுக்க நடக்க வேண்டும் என்று மத்திய
அரசு விரும்பினால் நாட்டில் இருக்கிற அனைத்துவிதமான திருமண சட்டங்களையும் ரத்து
செய்துவிட்டு மதச்சார்பற்ற சிறப்பு சட்டட்தின் அடிப்படையிலேயே அனைவரும் திருமணம்
செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து அதை செயல்படுத்த வேண்டும் என்று
உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை டிஓஐ ஏட்டினை மேற்கோள் காட்டி தனது முகநூல் பக்கத்தில்
பதிவிட்டிருக்கிறார் தோழர் அருணன்.
இவை
இரண்டையும் தனித்தனியாக புரிந்து கொள்வதைவிட ஒன்றோடு ஒன்றைப் பொருத்திப்
பார்த்திப் பார்த்து புரிந்துகொள்ள முயற்சித்தோமென்றால் இவற்றிற்கு பின்னே
இருக்கும் அசிங்கமான சதி புலப்படும்.
ஒரே நாடு,
ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே வகையான திருமண சட்டம், உச்சமாக பொடு சிவில் சட்டம் என்பதை
எவ்வளவுதான் கவர்ச்சிகரமான வார்த்தைகளில் இவர்கள் கூப்பாடு போட்டாலும் அனைத்தையும்
கடந்து எதோ ஒரு புள்ளியில் இவர்கள் அம்பலப்படவே செய்கிறார்கள்.
இப்போது
உச்சநீதிமன்றமும்கூட புதிதாக ஒரு திருமண சடத்தை கொண்டுவர சொல்லவில்லை. அதற்கு
தேவையும் இல்லை. ஏற்கனவே “மதச்சார்பற்ற சிறப்பு திருமணங்கள் சட்டம்” இருக்கிறது.
எனவேதான் ஒரே மாதிரியான திருமணங்கள்தான் நடக்கவேண்டும் என்று மத்திய அரசு
விரும்பினால் இருக்கிற மற்றைய சட்டங்களை அவை எந்த மதத்தைச் சார்ந்தவையாக
இருந்தாலும் ரத்து செய்துவிட்டு இதை கையில் எடுத்துக் கொள்ளுமாறு உச்சநீதிமன்றம்
கூறுகிறது.
இத்தான்
சரியானதும்கூட. இந்தியாவில் நடக்கும் திருமணங்கள் இந்திய மதச்சார்பற்ற சிறப்பு
திருமணசட்டங்கள்வழிதான் நடக்கும் என்று நடைமுறைப் படுத்தினால் பிரச்சினைகள்
இருக்காது.
அனால்
இங்குதான் தொகாடியாவின் கருத்தை நாம் இங்கு பரிசீலிக்க வேண்டி இருக்கிறது. ஏறத்தாழ
என்றெல்லாம் கொள்ள முடியாது. இருநூறு விழுக்காடு தொகாடியியாவின் குரல்தான் மத்திய
அரசின் குரலும்.
இந்திய
அரசியல் அமைப்புச் சட்டத்திலிருந்தே “மதச் சார்பற்ற“ என்ற
வார்த்தையை நீக்கிவிட வேண்டும் என்று சொல்கிறார் தொகாடியா. இதன் பொருள் இந்தியாவை
இந்துநாடாகப் பிரகடணப் படுத்த வேண்டும் என்பதுதான்.
இவரின்
குரல்தான் மத்திய அரசின் குரல் எனும்போது இந்து திருமணச் சட்டத்தை இந்திய திருமணச்
சட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதுதான் உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசின்
கோரிக்கையாகும்.
நல்லவேளை
நீதிமன்றம் இதை நிராகரித்திருக்கிறது. நீதிமன்றத்தின் நிராகரிப்பை மீறி இதை
எப்படிக் கொண்டு செல்வது என்று அரசு யோசிக்கவே செய்யும்.
பூனைக்குடி
வெளியே வந்துவிட்டது.
இந்துவாக
மாறு அல்லது இந்தியாவைவிட்டு வெளியேறு என்பது இப்போது மதவெறியர்களின் குரலாக
உள்ளது. பையப் பைய இது ஆளும் கட்சியின் குரலாக மாறும். அதற்கும் பிறகு இது
இவர்களது அரசின் குரலாகவும் மாறக்கூடும்.
இந்தக்
குரல் மதநம்பிக்கை உள்ள சாமானிய இந்துக்களை ஈர்ப்பதற்கான அவர்களது ஆயுதம்.
ஒரே மதம்
என்று பேசும் இவர்கள் ஒரே சாதி என்று என்று ஒருபோதும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
பன்முகத்
தன்மையை பாதுகாப்பதற்கு கருத்தாலும் கரத்தாலும் களமேகவேண்டிய அவசியமான காலகட்டம்
இது.
****************************** ****************************** *****************
தமிழகத்திலிருக்கிற
அனைத்துவகைப் பள்ளிகளிலும் தமிழை ஒரு கட்டாயப் பாடமாக அறிவித்து சட்டம் இயற்ற
வேண்டும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் திரு ஸ்டாலின் கோரியிருப்பது நியாயமானதும்
வரவேற்கவேண்டியதுமாகும்.
இவர்கள்
இருந்தபோது இதை செய்யாமல் இப்போது கோருவதில் நியாயமில்லை என்றோ , இதை
கோருவதற்கு இவர்களுக்கு அருகதை இல்லை என்றோகூட சிலர் எதிர்க்கக் கூடும். ஆனால்
இவர்கள் ஆட்சியில் இருந்தபோது இந்த அக்கறை எங்கு போனது என்றுகூட சிலர் கேட்கவும்
கூடும். அதில் ஓரளவிற்கு நியாயம் இருக்கவும் இருக்கலாம்.
ஆனால்
தமிழகத்துப் பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமாக அறிவிக்க வேண்டும் என்பது நமது
கோரிக்கை. அதை யார் முன்னெடுத்தாலும் அவர்களை வரவேற்கவே செய்வோம். இப்போது
ஸ்டாலின் இந்தக் கோரிக்கையை வைத்திருக்கிறார். வரவேற்கிறோம் அவ்வளவுதான்.
பக்கத்து
மாநிலமான கேரளாவில் இந்த சட்டம் நிறைவேறியுள்ளது.
மும்மொழிக்கொள்கையை
கடைபிடிக்கும் மாநிலமன மேற்கு வங்கத்திலும் வங்கமொழி கட்டாயப் பாடமாக்கப்
பட்டுள்ளது. பிரச்சினை என்னவெனில் மும்மொழிக் கொள்கையை மேற்கு வங்கம்
ஏற்றிருந்தாலும் இந்தியைக் கற்காமலே மாணவன் அங்கு பள்ளிப் படிப்பை முடித்துவிட
முடியும்.
அங்கு
பள்ளிப் படிக்கும் பிள்ளைகள் மூன்று மொழிகளைக் கட்டாயம் படிக்க வேண்டும்.
மேலோட்டமாகப் பார்க்கும்போது வங்கம் இந்தி ஆங்கிலம் ஆகியவற்றை கட்டாயம் படிக்க
வேண்டும் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் மம்தாவின் ஏற்பாடு வேறு.
மேற்கு
வங்கத்தில் வங்கம் கட்டாயம். மற்றவை தேர்வு மொழிகள். ஆங்கிலம் இந்தி மற்றும்
வங்கத்தில் பேசப்படும் மொழிகளில் இருந்து இரண்டு மொழிகளைத் தேர்வு செய்து
கொள்ளலாம். ஆக மும்மொழிக் கொள்கை இருந்தாலும் இந்தியைப் படிக்காமலே அங்கு ஒரு
குழந்தையால் பள்ளிப் படிப்பை முடிக்க முடியும்.
ஆனால்
இருமொழிக் கொள்கையைக் கடைபிடிக்கும் தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காமல் இந்தியைப்
படித்து ஒரு குழந்தையால் பள்ளிக் கல்வியைக் கடந்துபோக முடியும்.
எனவே
ஸ்டாலினின் இந்தக் கோரிக்கை என்பது நமது நீண்ட காலக் கோரிக்கை என்பதால் அதை நாம்
வரவேற்கிறோம்.
கோரிக்கையை
வைத்ததில் அவருக்கு பேர் வந்துவிடும் என்பதில் அரசுக்கு சங்கடம் இருக்குமானால்
இந்தச் சட்டத்தை இயற்றுவதன் மூலம் அவரைவிடவும் பெரும் பெயரை இந்த அரசால்
சம்பாரிக்க முடியும்.
****************************** ******************************
மக்களின்
எழுச்சியான போராட்டத்தால் மிரண்டுபோன மத்திய அரசு வேறு வழியே இல்லாமல் கீழடி
ஆராய்ச்சியைத் தொடர்வதற்கு நிதி ஒதுக்கி அனுமதி அளித்தது.
ஆனால்
அதைத் தொடர்ந்து தொல்லிய ஆய்வு நடக்கும் இடங்களில் கட்டடங்களைக் கட்டுவதற்கு
அனுமதி வழங்கலாம் என்றும் அறிவித்திருக்கிறது.
இதன்மூலம்
கீழடி ஆய்வை முடக்கிப் போடவும் அதனால் முடியும். அகழ்வாராய்ச்சி நடக்கும்
இடங்களில் குறிப்பிட்ட எல்லைவரை கட்டிடங்கள் கட்ட அனுமதி இல்லை. காரணம் ஆய்வின்
பொருட்டு அகழ்வை எந்த நேரமும் விஸ்தீரிக்க நேரிடலாம். அங்கு கட்டிடங்கள் இருப்பின்
இந்தப் பணி தடை படலாம். ஆகவேதான் இத்மாதிரி இடங்களில் கட்டிடங்கள் கட்டுவதற்கு
அனுமதி மறுக்கப் படுகிறது.
அனுமதி
வழங்குவதால் கீழடியில் புதிதாய் கட்டிடங்கள் கட்டப்படலாம். இந்தக் கட்டிடங்கள்
எழுந்த இடம் ஒருக்கால் ஆய்விற்காக
அகழ்வதற்கு தேவைப் படலாம். அந்த இடத்தில் கட்டிடம் இருப்பதால் அகழ்வு
தடைப் படலாம். அகழ்வு தடைப் படுவதன் மூலம் ஆய்வு தடைப் படலாம். பிறகென்ன கீழடியை
ஊத்தி மூடிவிடலாம்.
தொன்மம்
காப்போம்
****************************** ********
’வாகை’ என்றொரு
இலக்கிய அமைப்பை தோழர்கள் முருக தீட்சன்யாவும், துவாராகா
சாமிநாதனும் மயிலாடுதுறையில் கட்டி இருக்கிறார்கள். அதன் துவக்க விழாவை
மயிலாடுதுறைAVC கல்லூரி
விழாஅரங்கில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
1) “காக்கைச்
சிறகினிலே” அறிமுகம்
2) என்னுடைய
“எது கல்வி?” நூல்
விமர்சனம்
3) யவணிகா
ஸ்ரீராமின் நூல்கள் விமர்சனம்
என்பதாக
விழா நகர்ந்தது.
தம்பி
துவாரகா சாமிநாதன் காக்கை குறித்து விரிவாக உரை நிகழ்த்தினார். குழு சாராமல்
செயல்படும் காக்கையின் நிலைப்பாடு தம்மை பெரிதாக ஈர்ப்பதாக கூறியவர், எந்த
கட்டத்திலும் ஒடுக்கப் பட்டவர்களின் குரலையே காக்கை ஒலிப்பதாகக் கூறியது மகிழ்வைத்
தந்தது.
கூட்டம்
முடிந்தது என்று அவர்கள் அறிவிக்கும் வரைக்கும் ஒருவரும் வெளியேறவில்லை.
எல்லோர்
கைகளிலும் காக்கை இருந்தது. என்னோடு உரையாடிய அனைவரும் காக்கை பற்றி
உரையாடினார்கள். பேராசிரியர் தமிழ்வேல் அவர்கள் அந்தப் பகுதியில் காக்கையை கொண்டு
போவதற்கு தன்னால் ஆன அனைத்தையும் செய்வதாகக் கூறினார்.
காக்கையின்
கூடு மயிலாடுதுறை.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்