ஹரியானா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் ’காப் பஞ்சாயத்து’ என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து அமைப்புகள் சட்டவிரோதமாக செயல்படுகின்றன. இந்த அமைப்புகள் காதல் திருமணம் செய்துகொள்பவர்களை கடுமையாக தண்டிக்கின்றன. இதன் விளைவாக பலர் தற்கொலை செய்துகொள்ளவும் செய்கின்றனர். எனவே உச்சநீதிமன்றம் இந்தக் கொடுமைகளுக்கு முடிவுகட்டவேண்டும் என்றும் சக்திவாகினி என்ற தொண்டுநிறுவனம் உச்சநீதிமன்றத்திடம் முறையிட்டது.
அதை விசாரித்த உச்சநீதிமன்றம் இத்தகைய சட்டவிரோத அமைப்புகளிடம் இருந்து காதலர்களை காப்பதற்கான ஆலோசனைகளை மனுதாரரும் அரசும் தமக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு வழக்கை வரும் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது.
ஒரு நல்ல விசயத்திற்காக ஆலோசனை கேட்பது நல்லது. இந்த ஆலோசனைக்கான கோரிக்கையை பொதுமக்களாஇ நோக்கி வைத்திருந்தால் இன்னமும் நலமாக இருந்திருக்கும்.
ஆனால், மணல் கொள்ளை, பாபர் மசூதி விவகாரம், ஊழியர்களின் நியாயமான வேலை நிறுத்தங்கள் போன்றவற்றில் தலையிடும்போது மட்டும் தன்னிச்சையான ஒருதலை பட்சமான முடிவுகளாஇ எடுப்பதை கைவிட்டு அப்போதும் பொதுத்திரள் ஆலோசனையை கேட்பதும் தேவை என்பதை மாண்பமை நீதிமன்றங்கள் செயலபடுத்த வேண்டும் என்பது கைஏந்தி நாம் வைக்கும் கோரிக்கை.
மற்றபடி இதைப் பொறுத்தவரை சட்டவிரோதமான அமைப்புகள் என்று தெளிவாகத் தெரிந்த இந்த விசயத்தில் அவர்களை முட்டிக்கு முட்டித் தட்டி உள்ளே தள்ளுவதும் இதற்கு ஒத்துழைக்க மறுக்கும் அரசுகளை குற்றவாளிக் கூண்டிற்கு கொண்டுவருவதும் இந்த அமைப்புகளுக்கு ஆதரவாக இருக்கும் அரசியல் அமைப்புகளை தயவு தாட்சன்யமின்றி தடை செய்வதும் போதும்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்