Thursday, June 23, 2016

பி.ஆர் எனும் பிதாமகன்

NLC அப்படி ஒன்றும் எளிதாய் வாய்த்த ஒன்றல்ல. இந்திய அரசு அதில் அப்படி ஒன்றும் ஆர்வம் காட்டியதாய் தெரியவில்லை. மாறாக அதைத் தடுப்பதில் மிகவும் முனைப்பு காட்டியிருக்கிறார்கள்.
பி.ஆர் என்றே அறியப்படும் தோழர் பி.ராமமூர்த்தி அவர்கள் கால்களை விந்தி விந்திக் கொண்டே பாராளுமன்றத்தின் மத்தியப் பகுதிக்கு சென்று பொட்டலம் கட்டிப் போயிருந்த நெய்வேலி மண்ணை கொட்டியவாறே.
" பாருங்கள். எங்கள் மண்ணில் நிலக்கரி கிடக்கிறது. எடுக்க உதவுங்கள். எங்கள் பூமி வளப்படும். எங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும்"
அந்த அமைச்சரின் பெயர் சட்டென்று நினைவுக்கு வர மறுக்கிறது. அநேகமாக TTK வாக இருக்கக் கூடும். சொன்னாராம்.
"அங்கு கிடப்பது பழுப்பு நிலக்கரி. எதற்கும் உதவாது. "
இந்தச் சூழலில் பி.ஆர் ஒரு தொழிற்சங்க மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டி ஜெர்மன் போகிறார். அங்கு பழுப்பு நிலக்கரியைக் கொண்டு இரும்பை உருக்குவதையும். மின்சாரம் தயாரிப்பதையும் பார்க்கிறார். அவை குறித்த தரவுகளைத் திரட்டுகிறார். மீண்டும் அவையில் போராடுகிறார். இப்போது வேறுாரணங்களை முண் வைக்கிறார்கள். சொன்னார்கள்.
"அந்தப் பகுதியில் நிலத்தடி நீர் அதிகம் இருக்கிறது. அதை என்ன செய்வது? "
பி.ஆர் சொன்னார்.
"நல்லதாய்ப் போயிற்று. அந்தப் பகுதியில் உள்ள குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்த்துவிடலாம்"
எனக்குத் தெரிந்ததை சொன்னேன். இன்னும் நிறைய பேர்களிண் உழைப்பும் இருக்கக் கூடும் சொன்னால் தெரிந்து கொள்வேன்.
இத்தகைய போராட்டங்களின் பலனாகத்தான் NLC சாத்தியப் பட்டது.
அதன் பங்குகளைதான் பெரு முதலாளிகளுக்கு விற்றுவிட மத்திய அரசு துடியாய்த் துடிக்கிறது. தடுத்தே ஆகவேண்டும். எண்ண விளை கொடுத்தும்.
மாநில அரசு இந்தப் பங்குகளை வாங்கினால் என்ன?

3 comments:

  1. மாநில அரசு வாங்கும் என நம்புவோம்

    ReplyDelete
  2. அப்போது பொது நலம். இப்போது எங்கும் சுயநலம்தானே ஐயா அதிகமாகிவிட்டது."தடுத்தே ஆகவேண்டும். எண்ண விளை கொடுத்தும்" என்பது "தடுத்தே ஆக வேண்டும், என்ன விலை கொடுத்தும்" என்றிருக்கவேண்டும் என நினைக்கிறேன் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அய்யா

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...