Thursday, June 19, 2014

நிலைத் தகவல் 40

குஜராத்தில் சனந்த் பகுதியில் உள்ள நானோ கார்த் தொழிற்சாலையை 35 முதல் 40 நாட்களுக்கு மூடுவது என்று டாடா நிறுவனம் முடிவெடுத்திருப்பதாக 15.06.2014 நாளிட்ட தீக்கதிர் சொல்கிறது.

இது அது தொடர்ந்து சந்தித்து வரும் நட்டத்தை ஈடு கட்டுவதற்கான முயற்சி என்றும் தெரிகிறது.

நண்பர்கள் எனக்குத் தெளிவு படுத்த வேண்டும்.

தொடர் நட்டம் என்று காரணம் சொல்லி இதை சிக் யூனிட் என்று இவர்களால் ஏதோ ஒரு புள்ளியில் சொல்லிவிட இயலுமா?

அப்படி இவர்கள் சொல்லும் பட்சத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியை செலுத்தத் தொடங்கினால் போதும் என்கிற சலுகையோடு வங்கி இவர்களுக்கு கொடுத்துள்ள 9000 கோடிக்கு நெறுக்கமான தொகையை வங்கி ரைட் ஆஃப் செய்து விட வாய்ப்புள்ளதா?

அதற்காகவே இவர்கள் இப்படி செய்வதற்கும் வாய்ப்பு உள்ளதா?

ஏன் கேட்கிறேன் எனில்,

வங்கிக் கடன் ஏறத்தாழ 9000 கோடி ரூபாய். ஆனால் நானோவின் சொத்து மதிப்பு ஏறத்தாழ 3000 கோடி மட்டுமே.

ஒருக்கால் கொடுத்த தொகைக்காக வங்கி சொத்துக்களை அப்போது எடுத்துக் கொண்டாலும் இவர்களுக்கு 6000 கோடி லாபமாகிறதே.

தெரிந்து கொள்வதற்கான சந்தேகங்களே இவை.

என் அய்யங்கள் சரி எனும் பட்சத்தில் இது குறித்து தரவு திரட்டி எழுதவும் இல்லாத பட்சத்தில் உண்மையை என்னவென்று அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்கிறேன்.

2 comments:

  1. அன்புள்ள தோழர் எட்வின்

    வண்க்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் வலைப்பதிவிற்கு வந்தேன், நானோ கார் தொழிற்சாலை மட்டுமல்ல நோக்கியா நிறுவனத்திலும் 25 வயதில் கட்டாயப் பணி ஒய்வு அளிப்பதாக ஒரு கட்டுரை வாசித்தேன். அக்கட்டுலையில் அநநிறுவன்திற்கு அரசின் சலுகையும் எந்நேரமும் தடையில்லா மின்சாரமும் வழங்கப்பட்டதாம், இன்றும் சற்று ஆழமாக அதனையும் உங்கள் கட்டுரை தொடர்பாகவும் விரிவாகவும் தேடிப் படிக்கவேண்டும். இன்னும் எல்லாத் திறமையும இருந்து தெருவில் அலைபவன் அலைந்துகொண்டுதான் இருக்கிறான்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஹரணி. தரவு தேடி எழுத வேண்டும்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...