லேபில்

Sunday, June 15, 2014

நிலைத் தகவல் 38

சிதம்பரம் அருகில் உள்ள பாலுத் தங்கரை பகுதியில் வசிக்கும் 20 நரிக் குறவ குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் படிக்காமல் சுற்றிக் கொண்டிருந்திருக்கின்றனர்.

இவர்களில் சிலர் துவக்கப் பள்ளி முடித்தவர்கள்.

இதை அறிந்த சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் அவர்கள் அந்தக் குழந்தைகள் தங்களது கல்வியைத் தொடர எடுத்த முயற்சியின் விளைவாக சிதம்பரம் நந்தனார் பள்ளியில் சில குழந்தைகள் எட்டாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளிலும் சேர்க்கப் பட்டுள்ளனர் என்ற செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது.

அதிலும் அதிலொரு குழந்தை பெண் குழந்தை என்பதும் அவளது பெயர் தமிழ்ச் செல்வி என்பதும் கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

குழந்தைகளை இன் முகத்தோடு வரவேற்று வாஞ்சையோடு அரவணைத்துக் கொண்ட அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பால்ராஜ் அவர்களையும் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் அவர்களையும் மனதார பாராட்டுகிறோம்.

கல்வி யாவருக்கும் பொதுவானது.

4 comments:

  1. சட்ட மன்ற உறுப்பினரும் பள்ளித் தலைமையாசிரியரும் போற்றப்பட வேண்டியவர்கள்
    போற்றுவோம்
    தம 2

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழர். உங்களோடு சேர்ந்து நானும் போற்றுகிறேன் மீண்டுமொரு முறை

      Delete
  2. இருவருக்கும் வாழ்த்துக்கள் பல...

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023