கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ( மகளிர் ) அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் அருந்ததிய மாணவிகளுக்கான இடங்கள் யாரும் சேராததால் அப்படியே காலியாக இருப்பதாகவும் யாரேனும் ஏதாவது செய்தால் நல்லது என்பது மாதிரியும் தோழர் அ. மார்க்ஸ் ( Marx Anthonisamy ) வேதனையோடு எழுதியிருந்தார்கள்.
அதற்கு பின்னூட்டம் இட்டிருந்த ஒரு தோழர் அங்கு மட்டுமல்ல மாயவரம் , தஞ்சை உள்ளிட்ட இடங்களிலும் இப்படித்தான் என்று சொல்லியிருந்தார்.
அநேகமாக மாநிலம் முழுக்கவும் இதுதான் நிலையாக இருக்கக் கூடும்.
த.மு.எ.க.ச, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அருந்ததிய அமைப்புகள், அனைத்து இடதுசாரி அமைப்புகள் மற்றும் தோழர்கள் மட்டுமல்லாது விடுதலைச் சிறுத்தை அமைப்பினரும் இது விசயத்தில் கவனம் கொள்வது அவசியம்.
ஒவ்வொரு ஊரிலும் படிப்பைத் தொடர இயலாத அருந்ததிய குழந்தைகள் குறித்த விவரங்களை சேகரிப்பது என்பது அனைத்து ஊர்களிலும் கட்டமைப்பை வைத்திருக்கக் கூடிய மேற்சொன்ன அமைப்புகளுக்கு கடினமானது அல்ல.
அமைப்புகளை முடுக்கி விட்டு பட்டியல் தயாரித்து, அவர்களை பள்ளிகளில் கல்லூரிகளில் சேர்ப்பதற்கு ஆவண செய்ய வேண்டும்.
பொருளாதார விஷயத்தில் தேவைப் பட்டாலும் நண்பர்களிடம் திரட்டி விடலாம்.
மதுரை அரசுக் கல்லூரியில் இந்த நிலைமை இல்லை. குறிப்பிட்ட சாதிப் பிரிவினரின் வாழிடம் சார்ந்த நிலைமையா எனத் தெரியவில்லை. உங்கள் பதிவு தேவையான ஒன்று.
ReplyDeleteமதுரையில் அப்படி ஒரு நிலைமை இல்லை என்பதே மகிழ்ச்சியைத் தருகிறது . மிக்க நன்றி தோழர்
Delete