Friday, October 18, 2013

நிலைத் தகவல்...21


  • நேற்று மாலை சட்டமன்ற விடுதி வரை சென்றுவிட்டு திரும்புகிற வழியில் உட்ஸ் சாலையில் ஒரு வேலை வைத்திருந்தார் நண்பர் சிவா.

    அவரது நண்பரது மகிழுந்துக்கு ஒரு உதிரி பாகம் வாங்க வேண்டி இருந்தது.

    அப்போது உட்ஸ் சாலையில் ஒரு கடையின் பெயர் பலகை வளைத்துப் போட்டது. அந்தக் கடையின் பெயர்

    “ மகிழுந்து அணிகலன்கள்”

    அவர் கேட்ட உதிரி பாகம் அடுத்த சந்தான PG சாலையில்தான் கிடைக்கும் என்றார்கள்.

    போனோம்.

    அங்கு ஒரு கடையின் பெயர்

    “ மகிழுந்து ஒலிப்பான்கள்”

    ஆட்டோவில் திரும்பும் போது அவை பற்றியே சுற்றி சுற்றி பேச்சு வந்தது.

    சொன்னேன்

    “எவ்வளவு அழகான பெயர்கள். ஆனாலும் இப்பவும் சொல்வார்கள் ,

    அசெசரி கு இணையான சொல் அணிகலன் அல்ல என்று”

    சிவா சொன்னார்

    “சொல்லட்டும் எவனாச்சும், போடா போய் அணிகலனுக்கு இணையான ஆங்கிலச் சொல்லைத் தேடுனுவேன்”

    ஆட்டோ ஓட்டுநர் நண்பர் புஷ்பராஜ் ஒருவித குதூகலத்தோடும், ஒரு குலுக்கலோடும் சொன்னார்

    “அய்யா எனக்கு தரவேண்டிய காசுல பத்து ரூபாய சிவா அய்யாக்கிட்ட கொடுத்துடுங்க”

    இந்தத் துள்ளலும் குதூகலமும் பொருப்புணர்வும் மட்டும் வர வேண்டியவர்களுக்கு வந்து விட்டால் தமிழ்தான் இல்லை என்ற தன் வரியை கல்லறையிலிருந்து எழுந்து வந்து பாரதிதாசன் மாற்றிவிட்டு நிதானமாய் மீண்டும் நடந்து போய் நிம்மதியாய் படுத்துக் கொள்வான்.

17 comments:

  1. ரசித்தேன் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அய்யா அழகு
      மனதும் கழிப்புற்றது

      Delete
    2. அய்யா அழகு மனம்
      கழிப்புற்றது

      Delete
    3. அய்யா அழகு
      மனதும் கழிப்புற்றது

      Delete
    4. மிக்க நன்றி முஹமது

      Delete
    5. மிக்க நன்றி முகமது

      Delete
  2. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி ஐயா...

    ReplyDelete
  3. நல்ல விடயம் அய்யா. மாற்றம் எல்லோர் மனதிலும் வேண்டும். பகிர்வுக்கு நன்றீங்க அய்யா. தமிழ்மணம், தமிழ்மணம் ஓட்டும் அளித்தும் விட்டேன் படித்து விட்டு மட்டும் போக மனமின்மையால்.

    ReplyDelete
  4. Replies
    1. நிச்சயம் வாழும் தோழர். மிக்க நன்றி

      Delete
  5. தானியின் ஓட்டுனருக்கு இருக்கும் குதுகலம் பெரும்பான்மைக்கு இல்லை..
    1. சில மாதங்களுக்கு முன்னர் ஒரு தந்தை சொன்னார் காபி ஷாப்பில் என் மகள் தமிழில் பேசினால் எனக்கு அவமானமாக இருக்கு என்று ஒய்யல கொளுத்தினா என்ன என்று நினைத்தேன்.

    2. ஆங்கில வழியில் பயின்று வெளிநாடுகளில் பணியாற்றும் எனது மாணவர்களிடம் இருக்கும் தமிழ் பற்று இங்கே சிலருக்கு இல்லை.. உளவியல் காரணிகள் குறித்து சிந்திக்றேன்

    ReplyDelete
  6. தமிழ் எளியோரிடம் வாழ்கிறது

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கீதா. உழைக்கும் ஜனத்திரள்தான் பேசிப் பேசியே மொழியை உயிரோடு வைத்திருக்கிறது

      Delete
  7. நன்றாக இருந்தது

    ReplyDelete
  8. இரசித்தேன்....

    ReplyDelete
  9. அணிகலன்களையும்,ஒலிப்பான்களையும் மகிழ்ந்து, மகிழ்ந்து படித்தேன்.நன்றி.

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...