Thursday, October 13, 2022

தினக்கூலியே குறைவென்பதும்

 


அங்கன்வாடிகளில் உள்ள LKG மற்றும் UKG வகுப்பெடுப்பதற்கு
தாற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்திரவிட்டிருக்கிறது
மாதத்திற்கு 5000 ரூபாய் தொகுப்பூதியம் என்றும்
அதுவும் வருடத்திற்கு 11 மாதங்கள்தாம் என்றும் தெரிகிறது
இது வன்மையன கண்டனத்திற்கு உரியது
அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
சங்கங்கள் அரசிற்கு அழுத்தத்தைத் தர வேண்டும்
தனியார் பள்ளிகளில் அதுதானே என்பார்கள் சிலர்
அதுவும் தவறென்றும்
அதற்கெதிராகவும் அழுத்தங்களைத் தரவேண்டும் என்பதே நமது கோரிக்கை
இதைக் கண்டிக்கிற வேளையில்
இது தினக்கூலியைவிடக் குறைவாக இருக்கிறது என்றும்
துப்புரவுத் தோழர்களின் சம்பளத்தைவிடக் குறைவென்றும் தோழர்கள் பதிவது வருத்தம் அளிக்கிறது
தொகுப்பூதியம் குறைவென்பதும்
அது அநியாயமென்பதும்
அது களையப்பட வேண்டும் என்பதுதான் அவர்கள் சொல்ல வருவது
அதை சொல்ல வருகிறபோது தம்மையும் அறியாமல் தவறி விடுகிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது
தினக்கூலியே குறைவென்பதும்
துப்புரவுப் பணியாளர்களின் ஊதியம் குறைவென்பதையும்
உணர முடியாதவர்கள் அல்ல நாம்
100 நாள் வேலைத் திட்டத்தை முறைப்படுத்தி ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்
அந்தப் பணிக்கான ஊதியமும்
ஆண்டு முழுவதும் வேலை என்பதையும்
உறுதிப்படுத்த வேண்டும் என்பதும் நாம் உணராதது அல்ல
கவனமாக கேட்போம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...