கிஷோரின் இணையேற்புக்குப் பிறகு என்னை மிகவும் மகிழ்ச்சிப்படுத்திய செய்தி இதுதான்
ஒரு மாவட்டத்தில்
அதுவும் ஒரு வருவாய் மாவட்டத்தின் புறநகர்ப் பகுதியில் மட்டும்
குடிநீர் வசதி,
சாலை வசதி,
பேருந்து வசதி,
ஏரிகளை தூர்வாரி பராமரித்தல்
நூறுநாள் வேலைத் திட்டத்தை ஒழுங்குபடுத்துதல்
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து CPM ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறது
20 ஆண்டுகளுக்கு முன்னால் ஒருநாள்
தமுஎச வின் திருச்சி மாவட்ட மாநாட்டினை முடித்துவிட்டு நானும் இன்றைய திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் தோழர் Trichy Jayaseelan Jayaseelan Cam அவர்களும் நடந்து வருகிறோம்
திருச்சி வெல்லமண்டி அருகே திரு வெற்றிகொண்டான் பேச ஆரம்பிக்கிறார்
நமக்கும் அவர்களுக்கும் ஏதோ பிரச்சினை இருந்த நேரம்
இப்படியாக ஆரம்பிக்கிறார்,
”இங்க இருந்து ஒன்றரை கிலோமீட்டருக்கு கூட்டம் இருக்கிறது. இவ்வளவு பெரிய கூட்டத்தை வைத்துக் கொண்டு
இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தின் தலைவர் அவர்களே என்றுதான் ஆரம்பிப்போம்
ஆனால் சிலபேர் இருக்காய்ங்க
கூடியிருக்கிறவங்கள தெரட்டுனா ஒரு லாரிக்கு தேறமாட்டானுங்க
ஆனா,
இந்த மாபெரும் மாநாட்டின் தலைவர் அவர்களே என்று ஆரம்பிப்பானுங்க ”
எங்களைதான் கிண்டல் செய்கிறார்
ஆனாலும்
எனக்கும் ஜெயசீலனுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை
வலிக்கவும் செய்தது
இதற்கு அதே ஜெயா இப்போது பதில் சொல்லி இருப்பதாகவே எனக்குப் படுகிறது
திருச்சி புறநகர் மாவட்டத்தில் மட்டும் 227 இடங்களில் ஒரே நேரத்தில் ஆர்ப்பாட்டம்
அய்ய்யோ
எனில் எத்தனை கிளைகள் ஜெயா எனக் கேட்டபோது
400 கும் மேல் இருப்பதாக சொல்கிறார்
15 நாட்களாக வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து ஆர்ப்பட்டம் குறித்து விளக்கி இருக்கிறார்கள்
மக்கள் திரண்டிருக்கிறார்கள்
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தில்லாம்பட்டி
ஓடிக்கொண்டிருந்த பேருந்து நின்றுபோயிருக்கிறது
ஆர்ப்பாட்டத்திற்கு முதல் நாளில் இருந்தே காலை 8 மணிக்கு மீண்டும் இயங்கத் தொடங்கி இருக்கிறது
சமயபுரம் அருகே உள்ள கூத்தூரில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி அப்போதே முடிந்திருக்கிறது
பல இடங்களுக்கு அதிகாரிகள் வந்திருக்கிறார்கள்
சிலவற்றை செய்து தருவதாக சொல்லி இருக்கிறார்கள்
மகிழ்ச்சியில் ரெக்கைகள் முளைக்கின்றன
227 இடங்களுக்கு தலைவர்கள் வேண்டுமே ஜெயா?
பக்கத்து மாவட்டங்களில் இருந்து கடன் வாங்கியாச்சே
உங்கள் ஊரில் இருந்தும் தான் என்கிறார்
பெர்மபலூரை சொல்கிறார்
அகா, ஆகா,
திருச்சி மாவட்டத்தின் ஒவ்வொரு தோழருக்கும் என் வணக்கம்
ஒரே ஒரு குறை
ஊடகங்கள் இதை முறையாக கொண்டு போகவில்லை
நம்மால் முடிந்தவரை கொண்டுபோவோம்
யூட்யூப் சேனல்களை ஒவ்வொரு ஊரிலும் உருவாக்குவோம்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்