Sunday, November 29, 2015

தஞ்சை UNICEF பயிற்சி பட்டறை




நேற்று தஞ்சையில் UNICEF ஏற்பாடு செய்திருந்த குழந்தை நேயப்பள்ளி பட்டறையை தலைமையேற்று துவக்கி வைத்த போது.

அரசு துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் தம் மீதான மதிப்பீடுகளையும் விமர்சனங்களையும் சம விருப்போடு அணுகும் ஆரோக்கியமான எதார்த்தம் மகிழ்வைத் தந்தது என்றால் அவர்களது கறாரான சுய மதிப்பீடு பொதுத் துவக்கக் கல்வியின் மீது நம்பிக்கையைத் தருகிறது

எதை கற்பிப்பது எப்படிக் கற்பிப்பது என்பதில் குழந்தைகளைப் போல் அவர்கள் காட்டிய ஆர்வம் நம்பிக்கையை உறுதி செய்தது.

போட்டி வைத்து அதிலொரு முதல்வனைத் தேர்ந்தெடுத்தால் நீங்கள் ஆசிரியர். ஒவ்வொரு பிள்ளையும் முதல் பரிசு வாங்க அவவனுக்கு என்ன போட்டிகள் வைக்கலாம் என்று நீங்கள் யோசிக்கத் தொடங்கினால் நீங்கள் குழந்தை நேய ஆசிரியர் என்று பேசிவிட்டு வந்தேன்.

இது நல்ல தொடக்கம்

தொடர்ந்து இவர்களோடு உழைத்தோமெனில் விரைவில் வகுப்பறை என்பது கற்றலுக்கானது மட்டுமே. நல்ல வகுப்பறையில் கற்பித்தல் இருக்காது என்பதை இவர்கள் சாத்தியமாக்குவார்கள்

இந்த வேலையில் யாரும் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் பிழியலாம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...