இந்தியாவின் கனவுகளை நனவாக்குவேன் என்பதுமாதிரி பிரதமர் மோடி அவர்கள் சிட்னியில் பேசியதாக செய்திகள் சொல்கின்றன.
கல்வி குறித்தான இந்த மண்ணின் கனவு வண்ணமயமானது. அது கடந்த சில பத்து ஆண்டுகளாக அதிலும் கடந்த இறுதிப் பத்தாண்டுகளில் சிதைவுகளை மட்டுமல்ல, எதிர்திசையில் பயணித்துக் கொண்டிருப்பதையே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
கல்வி குறித்த இந்த மண்ணின் கனவு என்ன என்பது பற்றியும் மோடி அவர்களின் கடந்தகால கல்விதள செயல்பாடுகளையும் அறிந்தவர்களால் மகிழ்ச்சியுற முடியாது.
கல்வி குறித்த இந்த மண்ணின் கனவு என்ன என்பது பற்றியும் மோடி அவர்களின் கடந்தகால கல்விதள செயல்பாடுகளையும் அறிந்தவர்களால் மகிழ்ச்சியுற முடியாது.
முதலில் யாருக்கு கல்வி தர வேண்டும்? கொஞ்சமும் யோசிக்காமல் பாரதி சொல்வான் “ஆங்கோர் ஏழைக்கு” என்று. ஆனால் நடைமுறையில் வசதியுள்ளவனுக்கே கல்வி என்று ஆளும் வர்க்கமும் ஆண்டைவர்க்கமும் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படத் தொடங்கி அதில் பெருமளவு வெற்றியும் பெற்றுவிட்டார்கள். மாடு மேய்ப்பவன் குழந்தைக்கும் செருப்பு தைப்பவன் குழந்தைக்கும் எதற்கு கல்வி என்று உரத்துப் பேசியவர்களும் போராடியவர்களும்தான் இன்று மோடி அவர்களோடு உடனிருந்து அவரை இயக்குபவர்கள் என்ற நிலையில் ஏழைக்கு கல்வி என்பது எப்படி இவரது செயல்திட்டமாகும்?
ஊர்தோறும் தெருதோறும் தமிழ்ப் பள்ளிகளைத் தொடங்க வேண்டும் என்றான் பாரதி. தான்மட்டும் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால் தாய்மொழி தவிர்த்து பிறமொழியில் கல்வி பயில்பவர்கள் சிறைக்குத்தான் போகவேண்டும் என்கிறார் காந்தியடிகள் .இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன.
1) ஊர்தோறும் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் தெருதோறும் என்று பாரதி சொல்வதை அருகமை பள்ளிகள் என்றுதான் கொள்ள வேண்டும். தூரப் பள்ளிகள் கல்வியை ஒடுக்கப்பட்ட ஏழை மக்களிடமிருந்து அந்நியப் படுத்திவிடும் என்பதே பாரதியின் கவலை. அதனால்தான் தெருதோறும் என்கிறான்.
அவன் கேட்கும் பள்ளிகள் பொதுப் பள்ளிகள். பொழுதிற்கொன்று என்ற கணக்கில் பொதுப்பள்ளிகள் மூடப் படுவது ஆபத்தென்றால் பொழுதிற்கு நூறென்ற கணக்கில் தனியார் பள்ளிகள் தோன்றி செழிப்பது மகா ஆபத்தானது. கல்வித் தளத்தை சந்தைப் படுத்துவதற்கு மோடி உள்ளிட்ட பெரும்பான்மை அரசியல்வாதிகள் எல்லா வகைகளிலும் பாடுபடும்போது கல்வி குறித்த கனவு எப்படி மெய்ப்படும்.
2) தாய்மொழி வழிக் கல்விமட்டுமே ஒருமனிதனை சிறந்த கல்விமானாக மாற்றும். தாய்மொழியில் படிப்பதை கேவலப்படுத்தும் இவர்களால் கல்விபற்றிய கனவு எப்படி மெய்ப்படும்?
நல்ல இந்தியக் கல்வி என்பது வங்கத்தில் ஓடி வரும் மிகை நீரைக் கொண்டு வையத்து நாடுகளில் பயிர் செய்யக் கற்றுத்தர வேண்டும். காவிரியை அரசியலாக்கியதில் இவர்களது பங்கும் அவரது கூற்றோடு சேர்த்தே கவனத்திற்கு வருகிறது.
”இந்திரன் வச்சிரம் ஓர்பால்
அதில் எங்கள் துளுக்கர் இளம்பிறை ஓர்பால்”
அதில் எங்கள் துளுக்கர் இளம்பிறை ஓர்பால்”
என்கிறான் பாரதி. தேசம் கிழியாமல் இருக்க வேண்டுமெனில் இந்திரன் வச்சிரத்தையும் பிறையையும் கொடியில் வைக்க வேண்டும் என்ற மாகவியின் கனவே இந்த மண்ணின் கனவாகவும் இருக்க முடியும். கொஞ்சமும் மதச் சகிப்புத் தன்மையற்ற இவர்களால் இது சாத்தியப் படாது.
மனிதப் படுத்துதலே கல்வியின் நோக்கமாக இருக்க முடியும். அது நிறைவேறினால்தான் இந்த மண்ணின் கனவு நிறைவேறியதாகக் கொள்ளமுடியும்.
மக்கள் எழுச்சியைத் தவிர இவர்களால் இது மெய்ப்படாது.
மனிதப் படுத்துதல்
ReplyDeleteஅருமையாக எளிமையாக சொன்னீர்கள் தேர்ழர்
இவர்களெல்லாம் இயந்திரப் படுத்துதல் அல்லவா
செய்து கொண்டிருக்கிறார்கள்
தம 2
ஆமாம் தோழர்.நமக்கான வேலைகள் நிறைய இருப்பதாகவே உணர்கிறேன்
Deleteமக்கள் எழுச்சி என்பதானது சரிதான். இவ்வாறான செயல்களில் ஒன்றுபட்டு வெற்றி பெறுவதே இவை போன்றவற்றைத் தடுக்க முடியும்.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteமனிதப்படுத்தினால் கல்வி வியாபாரம் படுத்துவிடுமே சார்...செய்வார்களா...அல்லது செய்யதான் விடுவார்களா...
ReplyDeleteமிக்க நன்றி கீதா
Delete