நிறுத்தமில்லாத சில இடங்களில் விசிலடித்து பேருந்தை நிறுத்த வைத்த நடத்துனர் தனது இருக்கையில் வந்தமர்ந்ததும் ஓட்டுனர்,
"ஏண்டா சிவக்குமாரு, நீ பாட்டுக்கு கண்ட இடத்துலையும் விசிலிருக்குன்னு ஊதிடுற. பி.எம் மைலேஜ் குறையுதுன்னு கத்தறார்"
"கண்டக்டர் கண்ட இடத்துலயும் ஊதறான்னு சொல்லிக்க"
"சொன்னேன்டா"
"அதுக்கு என்ன சொன்னார்?"
"அவன் அப்படித்தான் ஊதுவான். நீதான் கண்டுக்காம நகரனும். 6 கிலோ மீட்டருக்கு குறையக்கூடாதுங்கறார்
"அப்படியா சொன்னாரு அந்த ஆளு. ஏங்கிட்ட என்னடான்னா நீதான் எப்படியாவது அங்கங்க நிறுத்தவச்சு டிக்கட்ட ஏத்தனும். கிலோமீட்டருக்கு 36 ரூபாய்க்கு குறையக்கூடாதுங்கறார்"
அதிகாரிகள் அதிகாரிகள்தான்.
தமிழக எல்லா போக்குவரத்து கழக பஸ்களிலும் இதே நிலைமைதான் !
ReplyDeleteத ம 1
ஆமாம் தோழர்.
ReplyDeleteயதார்த்தத்தை மிகவும் அழகாகப் பதிந்துள்ளீர்கள். பல துறைகளிலும் இவ்வாறான நிகழ்வு காணப்படுகிறது.
ReplyDeleteமிக்க நன்றிங்க தோழர்
Delete