லேபில்

Friday, December 26, 2014

கவிதை 23


ஈர யூனிபார்ம் 
சொட்டச் சொட்ட
புத்தகப்பை 
சொட்டச் சொட்ட
நனைந்த விரல்கள்
வெளிறி 
விறைத்து நிற்க
நடுக்கத்தோடு
தேர்வறை நுழையும் குழந்தைக்கு
உடனடித் தேவை
வினாத்தாள் அல்ல
ஒரு கோப்பை தேநீர்
குடிக்கிற சூடில்

2 comments:

  1. நானும் இதைத்தான்
    விரும்பியிருக்கிறேன்
    சொற்பமாகப் பார்த்த
    தேர்வறைப் பணியில்.

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023