லேபில்

Saturday, December 6, 2014

குட்டிப் பதிவு 14

இந்த மலைய ஒடச்சா இந்த உலகத்துக்கே ரோடு போடலாம்ல என்று பேருந்து கடந்து கொண்டிருந்த பெருங்குன்றொன்றினைக் காட்டி முன்னிருக்கை பொடிசு சொன்னான்.

இயற்கையை அழிப்பது தப்பென்றும் ஆபத்தென்றும் பதறியவாறு சொன்னான் பக்கத்து பெரும்பொடிசு.

மலைய ஒடச்சாதானே ரோடு போடலாம், வீடு கட்டலாம். மலைய வச்சு என்ன பன்றது என்ற சின்ன பொடிசுக்கு பதில் சொல்ல முடியாது தவித்தான் பெரிசு.

அழிப்பதற்கான காரணங்கள் எல்லோரிமும் இருக்கிறது.

இயற்கையை காக்க நினைப்பவர்கள் அதற்கான காரணங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும்.

கற்றுத் தரவும் வேண்டும்.

வேலை இருக்கிறது ஆமாம்.

2 comments:

 1. உண்மைதான் தோழர்
  கற்றுக் கொள்ளவும் வேண்டும்
  கற்றுத் தரவும் வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தோழர். இரண்டிற்குமான தேவையை உணர்தலே அவசியமாய் படுகிறது

   Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023