Monday, November 11, 2013

மாத்தி யோசி

இது 2012 பொங்கலை ஒட்டிய ஒரு தினத்தில் நடந்தது.

ரயிலுக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். தொலைக் காட்சியிலிருந்து வெளிப்பட்ட குதூகலமும் கூச்சலும் கொப்பளிக்கிற சத்தமும் கீர்த்தனாவின் கைதட்டலும் ஆவென்ற கூப்பாடும் போகிற போக்கில் அதை பார்க்க வைத்தன. 

ஏதோ ஒரு சேனலின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியின் முன்னோட்டம் அது. 

அனிதா (புஷ்பவனம் குப்புசாமியின் மனைவி ) அமர்ந்திருக்கிறார். கண்கள் கட்டப்பட்ட நிலையில் புஷ்பவனம் ஒரு கம்பினால் பானைகளை உடைக்க முயன்று கொண்டிருந்தார்.

“ மூனு பானைகளையும் உடைச்சுட்டா உங்க அறுபதாம் கல்யாணத்த ஜாம் ஜாம்னு கொண்டாடலாம்” என்று உற்சாகமும் நக்கலும் கொப்பளிக்க அனிதா சொல்ல...

“ஆமாம் என்னோட அறுபதாம் கல்யாணத்துக்கு பொண்ணு யாரு?”

“ஏய்...”

எங்கள் வீட்டில் எல்லோரும் சிரிக்கிறார்கள். ஏன் , அனிதாகூட ரசித்து சிரிக்கிறார்.

ஒருக்கால் கண்கள் கட்டப்பட்ட நிலையில் அனிதா ஒரு கம்பினால் பாவைகளை உடைக்க முயற்சி செய்வதாகவும், “ மூனு பானைகளையும் உடைச்சிட்டா உனது அறுபாதவது கல்யாணத்த ஜாம் ஜாம்னு கொண்டாடலாம்” என்று குப்புசாமி சொல்ல,


 “ஆமாம், அறுபதாம் கல்யாணத்துல எனக்கு  மாப்ள யாரு?” என்று அனிதா கேட்டிருந்தால் குப்புசாமியோ, புஷ்பவனம் கேட்டபோது ரசித்து சிரித்த என் மனைவி மகள் உள்ளிட்டவர்களோ  ரசித்து சிரித்திருப்பார்களா?

16 comments:

  1. இதைப்படித்தவுடன் கலைவாணர் என்.எஸ்..கிருஷ்ணன் அவர்களின் நகைச்சுவை நினைவில் வந்தது .
    இனி அவரைப்பேச விட்டுக்கேட்ப்போம் .
    என் .எஸ்.:நமக்கு திருமணமாகி 15வருடம் ஆச்சுஇல்லையா ?
    மதுரம் :ஆமா .அதுக்கென்ன இப்போது .?
    என் .எஸ் :கொழந்த ....இல்லை .........
    மதுரம் :எனக்கு நீங்க குழந்தை ,உங்களுக்கு நான்குழந்தை
    .என் எஸ்:நம்மசொத்துக்கெல்லாம் ஒரு வாரிசு வேண்டாமா ?
    மதுரம் :ஒரு குழந்தையை தத்தெடுத்துக்குவோம்.
    என்.எஸ் :சே ....நம்ம குழந்தையா . நெனைக்க முடியாது .மதுரம் :வேற என்னதான் செய்வது ?
    என்.எஸ்:இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும் .
    மதுரம்:வேணாங்க கஷ்டமா இருக்கும் .
    என்.எஸ் :நான் சொல்லறதை நீ கேப்பியா மாட்டியா ?
    மதுரம் :கேப்பேன் .
    என்.எஸ்:அப்பா இன்னொரு கல்யாணம் பன்னிக்கனும்.
    மதுரம் :வேனாங்க .......
    என்.எஸ் :நம்ப சொத்துக்கு ஒரு வாரிசு வேணும் .நான் குழந்தை இருந்தா எவ்வளவு ஸந்தொஸமாஇருப்பபேன்...?
    ..........................................................................................................................................................................................................................................................................................................................................மதுரம் :ரொம்ப கட்டாயப்படுதுறீங்க ..உங்களுக்கு குழந்த்தைமேல ...ரொம்ப ........சரிங்க நல்ல மாப்பிளையா ..(வெட்கப்படுக்கொண்டே)...பாருங்க .
    கலைவாணரின் சிந்தனைகள் ,மிக உயர்ந்தவை .சமூகச்சட்டங்களைச்சாடும்போது கூட ,கோபம்வராது .யாருக்கும். . .....
    உங்களது உரத்த சிந்தனை அப்படித்தான் இருக்கிறது .
    மிகநன்று .
    கலைவாணரின் வரிகளை அப்படியே தரமுடிய வில்லை .தொலைக்கட்சியில் பார்த்தது .மீழ் நினைவு உங்களால் .நன்றி .

    ReplyDelete
    Replies
    1. அருமையான விஷயம் தோழர். மிக்க நன்றி

      Delete
  2. நாம் இன்னும் மிக நீண்ட தொலவு செல்ல வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க அய்யா. மிக்க நன்றி

      Delete
  3. நிச்சயமாக சிரித்திருக்க மாட்டார்கள் தோழரே.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது தோழர். மிக்க நன்றி

      Delete
  4. எழுத்தாளர் தேவபாரபாரதி அவர்களின் அப்துல்லா நூல் வெளியீட்டு விழாவில் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் மேடையில் பேசுகையில் சிந்து பைரவி படத்தில் சிவக்குமார் ச்ங்கீதம் தெரியாத தன் மனைவியை ஞான சூன்யம்ன்னு திட்டுவாரு மக்களும் ஆனா சுவையான சமையல் செய்யவோ அதுபத்தி பேசவொ செய்யாத சிவக்குமார் தன் மனைவியின் பார்வையில் ஞான சூன்னியம்தானானே அதை யார் சொல்வதுன்னு கேடார். எனக்கும் அன்றுதான் அது உறைத்தது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர் அகலிகன். தொடர்ந்து தொடர்பிலிருப்போம்

      Delete
  5. தெரியவில்லை.. இப்ப எதுக்கு சிரிக்கிறாங்கன்னு தெரிய மாட்டீங்குது...

    ReplyDelete
  6. ஒரு வழியா கண்டு பிடிச்சு வந்துட்டேன் உங்க ஸ்பாட்டுக்கு. எங்கே ஆரத்தி

    ReplyDelete
  7. பேச்சில் மாறுதல்கள் இப்போதெல்லாம் இருந்தாலும் எண்ணத்தில் செயலில் மாறுதல் ஏற்பட வேண்டும் தோழர்.
    உங்களின் பதிவு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது...வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் எழில். மிக்க நன்றி எழில்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...