Monday, November 4, 2013

கேளிர்?

சேறு
நாற்று நடும் 
கருப்பாத்தா

வேப்பமர நிழல்
கயிற்றுக் கட்டில்
ஆண்டை

ஏசி அறை
இருண்ட வெளிச்சம்
மேசை துடைக்கும்
சிறுவன்

ருசித்து உண்ணும் 
மந்திரி

குமட்டும் நாற்றம்
சாக்கடை அள்ளும் 
காத்தான்

சாரதி காட்டன்
செண்ட்
சேர்மன் பவுடர்பழனி

மன்னித்து விடு 
பூங்குன்றா

12 comments:

  1. அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன்

      Delete
  2. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. எதிரும் புதிருமான இருவேறு வர்க்கங்கள்
    எப்போது மேடுகள் சரிந்து பள்ளங்கள் நிமிரும்...?

    ReplyDelete
    Replies
    1. மேட்டை வெட்டித்தான் பள்ளத்தை நிறப்ப வேண்டும் அய்யா

      Delete
  4. வணக்கம் சகோதரரே..
    சமூக சிந்தனையை வெளிப்படுத்தும் கவிதை. சமத்துவம் பேசும் ஜனநாயக நாட்டில் ஏற்றத்தாழ்வுகள் எனும் சங்கடங்கள் மாறாத சமுதாயம் நமக்கெல்லாம் வேதனை தான். நன்றி.

    ReplyDelete
  5. மன்னித்தோம்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி செல்வகுமார்

      Delete
  6. இதுதான் மனித வாழ்க்கையின் அவலம் என்பதா?

    ReplyDelete
  7. மனிதர்கள் பலவிதம் :(
    கனியன் பூங்குன்றனார் !! யாவரும் கேளீர் !!

    ReplyDelete
  8. தோழர் பூங்குன்றன் யார் என யோசித்து ...
    என்ன போராட்டம்..?
    எனக் குழம்பி
    விடைகிடைக்க
    முறு(வலி)த்து
    அருமை

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...