ஏறத்தாழ இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு எங்களூர் சுடுகாடு வரைக்கும் போய் திரும்பவேண்டிய அவசியம் வந்தது.
மாமா இறந்து போனார். ஊரில் பக்கத்து பக்கத்து வீடு. எங்கள் அம்மாவும் அவரும் சித்தப்பா பெரியப்பா பிள்ளைகள். நான் மிகச் சின்ன பிள்ளையாய் இருந்த காலத்தில் மனைப் பிரிவினையின் பொருட்டு எங்கள் அப்பா அம்மாவிற்கும் அவருக்கும் நிறைய பிரச்சினைகள். ஏதேனும் ஒரு வாரம் சனியோ ஞாயிறோகூட வராமல் போகலாம் ஆனால் எங்கள் வீட்டிற்கும் அவருக்கும் குறைந்தது வாரம் ஒருமுறையேனும் சண்டை நடந்தே தீரும்.
“வேனாப் பாரேன் நீ நாசாமாப் போயிடுவ” என்று அவரும் எங்கம்மாவும் அடிக்கடி ஒருவரையொருவர் மண்ணை வாரித் தூற்றிக் கொள்வதை எத்தனையோமுறை வேடிக்கை பார்த்திருக்கிறோம்.
அந்த மாமாவின் உயிர்பிரிந்த வேளையில்தான் நான் அவரது கால்களைப் பிடித்தவாறே கண்கலங்கி நின்றேன். அப்போது அழ ஆரம்பித்த என் அம்மா இன்று மாலை நான் வீட்டை விட்டு புறப்படும்வரை அழுதுகொண்டிருக்கிறது.
அவர் உயிர் பிரியும் போது கலங்கியக் கண்களோடு அங்கே இருந்தது அவரது மருமகளைத் தவிர நான், விட்டு, என் அம்மாயி, அம்மா, கிஷோர், கீர்த்தனா.
சதா எங்கள் அம்மா அப்பாவை மண்வாரித் தூற்றி சபித்துக் கொண்டும், சாபத்தை வாங்கிக் கொண்டும் இருந்த மாவை, இன்னும் சொல்லப்போனால் சிறு பிராயத்தில் எங்கள் எதிரியாகவே நாங்கள் பாவித்த மாமாவோடு எப்போது இப்படி ஒரு ஐக்கியம் வந்தது?
எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. எங்கள் தாத்தா இறந்தபோது அவருக்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் எங்கள் மாமாதான் கொள்ளி வைத்தார். அவருக்கு நான் கொள்ளி வைக்க முடியாது.ஏனெனில் நான் என் அம்மாவின் மூத்தாள் பெற்ற பிள்ளை. எங்கள் அம்மாவிடம் என்னை விட்டுவிட்டு அவர் கைக்குழந்தையாய் இருந்த போதே போய்விட்டாராம்.
கொள்ளி வைத்ததும் , கொள்ளிவைத்த தனக்குதான் சொத்து வேண்டும் என்று அடம்பிடிக்க ஆரமித்துவிட்டார். அதனால்தான் அவருக்கும் அங்கள் வீட்டிற்கும் சண்டை.
ஒரு வழியாய் பஞ்சாயத்து வைத்து பிரச்சினை தீர்ந்த பொழுது சொத்துக்களை எங்கள் அப்பா பெயரில் எழுதி வைத்துவிட்டது எங்கள் அம்மாயி.
ஒரு வாரம் சர்வேயர், அவர் இவர் என்று முகாமிட்டு காட்டையும் வீட்டையும் பிரித்து பட்டா செய்து கொடுத்துவிட்டு சென்று விட்டனர். அது ஒரு கூட்டுப் பட்டா. அன்று முதல் மாமா கோபத்தோடு ஒதுங்கிவிட்டார். சண்டைக் காட்சிகள் ஒரு முடிவுக்கு வந்தன.
பட்டா சரியாக உள்ளதா என்று பார்த்த்போதுதான் அப்பாவிற்கு மாமாவைவிட 40 செண்ட் காடு அதிகமாகப் பிரிந்திருப்பதைக் கண்டு பிடிக்கிறார்.
உடனே பட்டாவை எடுத்துக் கொண்டு மாமா வீட்டிற்குப் போகிறார். மாமா பேசவே இல்லை. “ வாங்கண்ணா” என்று அத்தை மட்டுமே அழைத்து உட்கார வைக்கிறார்.
“இல்லம்மா, பிரிச்சப்ப எனக்கு நாத மணிய விட 40 செண்ட் கூட ஒதுங்கிடுச்சு. அவர்ட்ட சொல்லி என்றைக்கு வசதிப் படும்னு கேளு. 20 செண்ட்டை எழுதிக் கொடுத்திடறேன்.”
சொன்னமாதிரியே எழுதிக் கொடுத்தார். அன்று இணைந்தார்கள். அதன் பிறகுஅவரது மரணம் வரைக்கும் நல்ல மைத்துனராக , நண்பனாக அப்பாவோடு வாழ்ந்தார்.
அதன் பிறகு நேற்றுவரை எங்களது தாய் மாமாவாய் மூழுதாய் செய்து தீர்த்திருக்கிறார்.
முழுச் சுய நிணைவோடு இல்லாத எங்கள் அப்பாவை அவர் சகித்துத் தாங்கிய அந்தப் பெருந்தன்மைக்கே நானும் என் குடும்பமும் அவருக்கு கடமைப் பட்டிருக்கிறோம். பெரிய சோகம் என்னவெனில் மாமா இறந்து போனது அவருக்கு முழுதுமாய் பிடிபட வில்லை.
“அப்பா நேரா நேரத்துக்கு மாத்திரை சாப்பிடனும். மாமாவப் பார்த்தீங்கள்ள”
“அவரு சளிய கவனிக்கலடா. நாந்தான் சளி வந்தா சிந்தீடறேனே”
இதுதான் எங்கள் அப்பா.
அவரு சளிய கவனிக்கலடா என்கிற போது இருந்த அழுத்தம் அடுத்த வரியிலேயே காணாமல் போய்விடுகிறது.
நல்ல சுய நினைவு இருந்த ஒரு புள்ளியில்
“மாமாவ எரிச்சிடாதீங்கடா. குழியில வச்சுடுங்க. நான் போனப்புறம் அவரோட பக்கத்துல வச்சுடுங்க.”
சுடுகாடு போனோம். புதைத்தோம்.
வழக்கம் போல் சுடுகாடு தர்பார் தொடங்கியது.
முன்பெல்லாம் தப்படித்த தோழர்களும், சலவைத் தோழர்களும், துப்புறவுத் தொழிலாளித் தோழர்களும், முடிவெட்டும் தோழரும் அந்த சபைனரின் காலில் விழுது ஊதியத்தினைப் பெறுவது வழக்கம்.
அந்தச் சபையில் 16 வயது பையனும் இருப்பான். அவனை உள்கொண்ட சபையின் காலில் விழுந்து வணங்குபவர்களில் 65 வயதுக்காரரும் இருப்பார்.
இப்போது நிறைய மாறியிருந்தது.
சபையினரின் கால்களில் விழத் தேவை இருக்கவில்லை. கெஞ்சி கூலியை உயர்த்திக் கேட்கத் தேவை இருக்க வில்லை. சபையினரிடம் இருந்து மரியாதைக் குறைச்சலான வார்த்தைகள் இல்லை.
ஒவ்வொருவரும் அழைக்கப்பட்ட போது துண்டேந்தி ஊதியத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.
அடுத்த நாள் காலை அப்பா மாமா வீடு போய்விட்டார்.
“ஏம்மா பத்மா, நாதமணி வந்தாச்சா. எங்க அவரு?”
படு இயல்பாய் கேட்டிருக்கிறார்.
இவரது நிலைக்காகவும் சேர்த்து அழுதுகொண்டே பத்மா அப்பாவைக் கொண்டு வந்து விட்டது.
நான்கு விஷயங்களுக்காக நான் அழுகிறேன்,
1) மாமாவின் மரணம்
2)அப்பாவின் நிலை
3)குழந்தைத் தொழிலாளிகள் இல்லாத பூமிக்கான கனவோடு உழைக்கும் நம் கண்முன்னே சுடுகாட்டில் பள்ளிச் சீருடையோடு வேட்டி விரித்த சிறுவன்
4) நாள் முழுக்க உழைத்த பின்பு அதற்கான ஊதியத்தை துண்டேந்தி வாங்க வேண்டிய அவலம்

//1) மாமாவின் மரணம்
ReplyDelete2)அப்பாவின் நிலை
3)குழந்தைத் தொழிலாளிகள் இல்லாத பூமிக்கான கனவோடு உழைக்கும் நம் கண்முன்னே சுடுகாட்டில் பள்ளிச் சீருடையோடு வேட்டி விரித்த சிறுவன்
4) நாள் முழுக்க உழைத்த பின்பு அதற்கான ஊதியத்தை துண்டேந்தி வாங்க வேண்டிய அவலம்//
சிறந்த பகிர்வு.
//// சுவனப் பிரியன் said...
ReplyDelete//1) மாமாவின் மரணம்
2)அப்பாவின் நிலை
3)குழந்தைத் தொழிலாளிகள் இல்லாத பூமிக்கான கனவோடு உழைக்கும் நம் கண்முன்னே சுடுகாட்டில் பள்ளிச் சீருடையோடு வேட்டி விரித்த சிறுவன்
4) நாள் முழுக்க உழைத்த பின்பு அதற்கான ஊதியத்தை துண்டேந்தி வாங்க வேண்டிய அவலம்//
சிறந்த பகிர்வு. ///
மிக்க நன்றித் தோழர்
vaazhakai thaan eppadiyellaam-
ReplyDeletepayanikkirathu....
மனம் தொட்ட பதிவு
ReplyDeleteமனதைத் தொட்ட பதிவு.
ReplyDelete/// Seeni said...
ReplyDeletevaazhakai thaan eppadiyellaam-
payanikkirathu....///
ஆமாம் சீனி தோழர். வாழ்க்கையில் எதுவுமே அநித்தியம்தான்.
மிக்க நன்றி தோழர்
மயான தர்பார்... அற்புத தலைப்பு. இறந்தவரின் வீட்டு பணத்தினை ஈமச்சடங்குகள் செய்யும் தொழிலாளிக்கு வழங்கும் போது அதேவர்க்கத்தினை சார்ந்தவருக்கும் முதலாளித்துவ குணம் குடியேறும் சில நிமிடநேரங்கள். சாதிய ஆதிக்கம் அரசியல் சட்டங்களாலும் தொடர்ச்சியான போராட்டங்களாலும் குறைகிற மாயை இருந்தாலும் வர்க்க ஆதிக்கத்தால் அது நீறு பூத்த நெருப்பே. வர்க்கப்போரின் மேலோங்கிய அவசியத்தினை வலியுறுத்த ”மயான தர்பார்” ஒரு உதாரணம்.
ReplyDeleteமயான தர்பார்... அற்புத தலைப்பு. இறந்தவரின் வீட்டு பணத்தினை ஈமச்சடங்குகள் செய்யும் தொழிலாளிக்கு வழங்கும் போது அதேவர்க்கத்தினை சார்ந்தவருக்கும் முதலாளித்துவ குணம் குடியேறும் சில நிமிடநேரங்கள். சாதிய ஆதிக்கம் அரசியல் சட்டங்களாலும் தொடர்ச்சியான போராட்டங்களாலும் குறைகிற மாயை இருந்தாலும் வர்க்க ஆதிக்கத்தால் அது நீறு பூத்த நெருப்பே. வர்க்கப்போரின் மேலோங்கிய அவசியத்தினை வலியுறுத்த ”மயான தர்பார்” ஒரு உதாரணம்.
ReplyDeleteமானுடவுணர்வு என்பது ஒருவரை ஒருவர் மனத்தினால் விரும்பிக் கொண்டிருப்பது! அந்த உணர்வில் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு வடிக்களாகப் பதியும். வாழ்க்கை என்பது இன்பத்தை விட துன்பத்திற்காகவே அதிக காலங்களைச் செலவு செய்கிறது!
ReplyDeleteஅந்த சோகமான நினைவுகளை இறக்கிவைக்கும் போது மனத்துக்குள் ஒரு அமைதி வந்து போகும்!
மனதைத் தொட்ட பதிவு
ReplyDeleteஏன் எட்வின். சுடுகாட்டு தர்பாரில் ஒரு அங்கத்தினராய் நீங்களும் இருந்திருப்பீர்கள். துண்டேந்துவதை தடுக்க முனைந்தீர்களா? ஆம் என நம்புகிறேன்.. இல்லை எனில் அழுகைக்கு அர்த்தம் இல்லை.
ReplyDeleteஅவ்வளவு தான் சார் - வாழ்க்கை...!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி....
பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)
இயல்பா உள்ள பிரச்சனையை அழகாகச் சொல்லி உள்ளீர்கள். கண்ணீருடன் உங்கள் சோகத்தில் நானும் பங்கு கொள்கிறேன் எட்வின். ஆனால் அந்த நான்காவது கவலையை அந்த ஒரு நாள் நீங்கள் நினைத்தால் மாற்றியிருக்கலாம்.
ReplyDeleteசின்னதாக ஒரு மலர்ச்சியான நன்றி நவிலலுடன் தாங்கள் அந்தக் கூலியைத் தந்திருக்கலாம்.
பூனைக்கு எழுத்தால் மட்டுமல்ல.. செயலாலும் மணி கட்டி இருக்கலாமோ என்று எனக்குத் தோன்றுகிறது.
ஏனென்றால் தாங்கள் எப்போதும் அப்படிச் சிந்திக்கக் கூடியவர். அதனால் சொல்கிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
/// அய்யன்பேட்டை தனசேகரன் said...
ReplyDeleteமயான தர்பார்... அற்புத தலைப்பு. இறந்தவரின் வீட்டு பணத்தினை ஈமச்சடங்குகள் செய்யும் தொழிலாளிக்கு வழங்கும் போது அதேவர்க்கத்தினை சார்ந்தவருக்கும் முதலாளித்துவ குணம் குடியேறும் சில நிமிடநேரங்கள். சாதிய ஆதிக்கம் அரசியல் சட்டங்களாலும் தொடர்ச்சியான போராட்டங்களாலும் குறைகிற மாயை இருந்தாலும் வர்க்க ஆதிக்கத்தால் அது நீறு பூத்த நெருப்பே. வர்க்கப்போரின் மேலோங்கிய அவசியத்தினை வலியுறுத்த ”மயான தர்பார்” ஒரு உதாரணம்.////
மிக்க நன்றி தோழர்.
/// முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' said...
ReplyDeleteமானுடவுணர்வு என்பது ஒருவரை ஒருவர் மனத்தினால் விரும்பிக் கொண்டிருப்பது! அந்த உணர்வில் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு வடிக்களாகப் பதியும். வாழ்க்கை என்பது இன்பத்தை விட துன்பத்திற்காகவே அதிக காலங்களைச் செலவு செய்கிறது!
அந்த சோகமான நினைவுகளை இறக்கிவைக்கும் போது மனத்துக்குள் ஒரு அமைதி வந்து போகும்! ///
ஆமாம் தோழர். மிக்க நன்றி
//குழந்தைத் தொழிலாளிகள் இல்லாத பூமிக்கான கனவோடு உழைக்கும் நம் கண்முன்னே சுடுகாட்டில் பள்ளிச் சீருடையோடு வேட்டி விரித்த சிறுவன்
ReplyDeleteநாள் முழுக்க உழைத்த பின்பு அதற்கான ஊதியத்தை துண்டேந்தி வாங்க வேண்டிய அவலம்// நீங்கள் மட்டுமல்ல.... நமது ஒட்டுமொத்த சமுதாயம் அழவேண்டும்.
//// Uma said...
ReplyDeleteஏன் எட்வின். சுடுகாட்டு தர்பாரில் ஒரு அங்கத்தினராய் நீங்களும் இருந்திருப்பீர்கள். துண்டேந்துவதை தடுக்க முனைந்தீர்களா? ஆம் என நம்புகிறேன்.. இல்லை எனில் அழுகைக்கு அர்த்தம் இல்லை.////
மிக்க நன்றி உமா.
என்ன முயன்றும் ஒன்றும் செய்ய இயலாத நிலைதான். ஒரு ஊர் முழுக்க நான் ஒருவன். என்ன முடியுமோ அதை செய்திருக்கிறேன்.அவ்வளவுதான்.
இது போன்ற விசயங்களில் நமக்கு போலீஸ் தடியடியெல்லாம் கூட பலமுறை கிடைத்திருக்குதான்
இன்னும் கொஞ்சம் காலம் போனால் எல்லாம் சரியாகிவிடும்... இப்போதே எங்கள் பகுதியில் யாரும் துண்டேந்தி எல்லாம் வாங்குவதில்லை...
ReplyDelete"முன்பெல்லாம் தப்படித்த தோழர்களும், சலவைத் தோழர்களும், துப்புறவுத் தொழிலாளித் தோழர்களும், முடிவெட்டும் தோழரும் அந்த சபைனரின் காலில் விழுது ஊதியத்தினைப் பெறுவது வழக்கம்.இப்போது நிறைய மாறியிருந்தது."இது போல் இன்னும் மாறும்
ReplyDeleteமுதல் இரண்டு விஷயங்கள் கூட காலங்கள் போக போக மாறிவிடக் கூடும். மீதி இரண்டு விசயங்களை நாம் என்ன செய்து ஒழிக்கப் போகிறோம் என்பதை நினைத்தால் துயரம் கவ்விக் கொள்கிறது.
ReplyDelete//// திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteஅவ்வளவு தான் சார் - வாழ்க்கை...!
பகிர்வுக்கு நன்றி.... ///
மிக்க நன்றி தோழர்
//// ஆதிரா said...
ReplyDeleteஇயல்பா உள்ள பிரச்சனையை அழகாகச் சொல்லி உள்ளீர்கள். கண்ணீருடன் உங்கள் சோகத்தில் நானும் பங்கு கொள்கிறேன் எட்வின். ஆனால் அந்த நான்காவது கவலையை அந்த ஒரு நாள் நீங்கள் நினைத்தால் மாற்றியிருக்கலாம்.
சின்னதாக ஒரு மலர்ச்சியான நன்றி நவிலலுடன் தாங்கள் அந்தக் கூலியைத் தந்திருக்கலாம்.
பூனைக்கு எழுத்தால் மட்டுமல்ல.. செயலாலும் மணி கட்டி இருக்கலாமோ என்று எனக்குத் தோன்றுகிறது.
ஏனென்றால் தாங்கள் எப்போதும் அப்படிச் சிந்திக்கக் கூடியவர். அதனால் சொல்கிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும். ////
வணக்கம் ஆதிரா.
எடுத்த எடுப்பில் ஒன்றை சொல்லிவிட வேண்டும். ஏதேனும் தவறாய் சொல்லியிருந்தேன் எனில் மன்னிக்கவும் என்று சொல்வதில் எனக்கு உடன் பாடில்லை. ஏதோ உள் நோக்கத்தோடு பேசுபவர்கள் சொல்வது அது. நீங்கள் அப்படி சொல்ல வேண்டாம்
ஒரு பதிவை எழுதிப் போட்டுவிட்டால் அது பொது சொத்து. அது குறித்த எந்த விதமான கருத்தையும் யாரும் சொல்லலாம்.
அதற்கு எதிர் கருத்து இருந்தால் அதை சொல்வதும், இல்லையெனில் வந்த கருத்தை ஏற்பதும்தான் நியாயம்.
அங்கு என் தரப்பில் என்ன நடந்தது என்பதோ அதற்கு என்ன எதிர்வினை வந்தது என்பதோ அதில் வர அவசியம் இல்லை என நான் நினைத்தேன்.
எந்த தனி மனித சாகசத்திலும் நம்பிக்கை இல்லாதவன். வெகுமக்கள் இயக்கமே எதையும் தீர்மானிக்கும் என்று நம்புபவன்.
என்னால் முடிந்த அளவு வெகுமக்கள் இயக்கங்களில் பங்கேற்பவன்.
இது போதும் ஆதிரா.
அன்பிற்கு நன்றி
உங்கள் மாமா வின் இறப்பிற்கு முதற்கண் இரங்கல்கள்.. சோகம் என்பதை தன்னுடையது பிறருடையது என பிரித்து பார்க்காமல் அழுகிற உங்கள் கட்டுரைக்கு பாராட்டுக்கள்..
ReplyDeleteநல்ல பதிவு...... மரணம் தவிர்க்க முடியாதது, கடிசியாக சொன்ன அவலத்தை வேண்டுமானால் தவிர்க்க முயற்சிப்ப்போம்
ReplyDelete"எரிப்பதும் வழக்கமில்லை
ReplyDeleteபுதைப்பதும் வழக்கமில்லை
எந்த குலத்திற்கும்;
செத்தவன்
எந்த உறவாய் இருந்தாலும்
வெட்டியானை தவிர..!"
வெட்டியான் என்ற தலைப்பிலான என்னுடைய கவிதை ஒன்றின் சில வரிகள் இவை நேரமிருக்கும் போது முழுகவிதையையும் வாசித்து பாருங்கள் தோழர்..
http://www.kannam.com/2011/05/blog-post.html
சொல்ல வார்த்தைகளில்லை.... இன்னொரு முறை வாசிக்கவேண்டுமென நினைக்கிறேன்...
ReplyDelete/// குடந்தை அன்புமணி said...
ReplyDeleteஇன்னும் கொஞ்சம் காலம் போனால் எல்லாம் சரியாகிவிடும்... இப்போதே எங்கள் பகுதியில் யாரும் துண்டேந்தி எல்லாம் வாங்குவதில்லை... ///
வணக்கம் தோழர்.
அது தானாக எப்போதும் மாறியதில்லை.
இனி அது எப்போதும் தானாக மாறவும் மாறாது. பெரும் உழைப்பு தேவைப் படுகிறதும்.
மிக்க நன்றி தோழர்
/// samy gopal said...
ReplyDelete"முன்பெல்லாம் தப்படித்த தோழர்களும், சலவைத் தோழர்களும், துப்புறவுத் தொழிலாளித் தோழர்களும், முடிவெட்டும் தோழரும் அந்த சபைனரின் காலில் விழுது ஊதியத்தினைப் பெறுவது வழக்கம்.இப்போது நிறைய மாறியிருந்தது."இது போல் இன்னும் மாறும் ////
மிக்க நன்றி தோழர்
//// இளங்கோ said...
ReplyDeleteமுதல் இரண்டு விஷயங்கள் கூட காலங்கள் போக போக மாறிவிடக் கூடும். மீதி இரண்டு விசயங்களை நாம் என்ன செய்து ஒழிக்கப் போகிறோம் என்பதை நினைத்தால் துயரம் கவ்விக் கொள்கிறது.///
மிக்க நன்றி தோழர்.
ஒத்த தோழர்கள் கருத்தாலும் கரத்தாலும் கள்மிணையும்போது நமது துயரம் பறந்து போகும்
வணக்கம் தோழர்”.மயான தர்பார்” நிகழ்வினைப் படித்தேன்..
ReplyDeleteஅதில் ஊர்ந்தேன்.
மனம் ஆழ்ந்தேன்,
பறிகொடுத்தேன்
எண்ணற்றக் கோடிக்குவியலாய்
எண்ண ஊற்றுகள்.
பழைமையும், புதுமையும், கதம்பமாய்..
எங்கே செல்கிறது சமூகம்,
எப்படி இதற்கு தீர்வு?
யார் இந்த முடிச்சை அவிழ்க்க?
நீயா நானா, நம் சந்ததியா?
//1) மாமாவின் மரணம்
2)அப்பாவின் நிலை
3)குழந்தைத் தொழிலாளிகள் இல்லாத பூமிக்கான கனவோடு உழைக்கும் நம் கண்முன்னே சுடுகாட்டில் பள்ளிச் சீருடையோடு வேட்டி விரித்த சிறுவன்
4) நாள் முழுக்க உழைத்த பின்பு அதற்கான ஊதியத்தை துண்டேந்தி வாங்க வேண்டிய அவலம்//
அற்புதமான படைப்பு தோழர். நாம் செல்ல வேண்டிய் தூரம், மாளாமல் நீண்டு கொண்டே செல்கிறது தோழர். அய்யன் பேட்டை சொன்ன மாதிரி, இந்த மாதிரி துக்க நிகழ்வுகளில், பணம் பட்டுவாடா செயபவர் ஒரு முதலாள்த்துவ முகத்தை மாட்டிக்கொண்டே செய்வார். இதனை ஒட்டி , என் மனதில் பழைய எண்ண ஓட்டம் எட்டிப் பார்த்தது. எங்கள் ஊர் ரொம்ப பழமை ரொம்பிய கிராமம். வர்க்கப்பிரச்சினை, வர்க்கம் கரை கட்டி நிற்கும், கீழத்தஞ்சையின் காவிரிக்கரை..தலித்துகள் கைகட்டி, அக்குளில் துண்டு வைத்து நிற்பார்கள்.. ஆண்டுகளுக்கு முன்.நாலுவ்யது பொடியன், எழுபது வயது பெரியவரை, ஏய் மண்ணாங்கட்டி என்று கூப்பிடுவான். வர்க்கத்தின் திமிர் அது. இப்போது என் அப்பா இறந்த போது வீட்டில் சொன்னார்கள்,இப்பலலாம் வெட்டியான் குழி வெட்டமாட்டானுங்க, நாமதான் வெட்டணும் என்றார்கள். அப்பா போன துக்கத்தினூடே, மனசில் சின்ன சந்தோஷம் எட்டிப்பார்த்தது. அதே உணர்வுதான் இங்கும்,.வாழ்த்துகள். நிறைய பத்விடுங்கள். சந்திப்போம். மோகனா..பழநி
//// இந்திரன் said...
ReplyDeleteநல்ல பதிவு...... மரணம் தவிர்க்க முடியாதது, கடிசியாக சொன்ன அவலத்தை வேண்டுமானால் தவிர்க்க முயற்சிப்ப்போம் ///
மிக்க நன்றி தோழர் இந்திரன்
//// sathish prabu said...
ReplyDelete"எரிப்பதும் வழக்கமில்லை
புதைப்பதும் வழக்கமில்லை
எந்த குலத்திற்கும்;
செத்தவன்
எந்த உறவாய் இருந்தாலும்
வெட்டியானை தவிர..!"
வெட்டியான் என்ற தலைப்பிலான என்னுடைய கவிதை ஒன்றின் சில வரிகள் இவை நேரமிருக்கும் போது முழுகவிதையையும் வாசித்து பாருங்கள் தோழர்../////
மிக்க நன்றி தோழர். இரண்டு முறை முயற்சித்தும் உங்களது இணைப்பைப் பெற இயலவில்லை. இன்று இரவு அவசியம் முயற்சிப்பேன்
/// Madusudan C said...
ReplyDeleteசொல்ல வார்த்தைகளில்லை.... இன்னொரு முறை வாசிக்கவேண்டுமென நினைக்கிறேன்...///
மிக்க நன்றி மது.
எழுதுங்க தோழா
//// அருணன் பாரதி said...
ReplyDeleteவணக்கம் தோழர்”.மயான தர்பார்” நிகழ்வினைப் படித்தேன்..
அதில் ஊர்ந்தேன்.
மனம் ஆழ்ந்தேன்,
பறிகொடுத்தேன்
எண்ணற்றக் கோடிக்குவியலாய்
எண்ண ஊற்றுகள்.
பழைமையும், புதுமையும், கதம்பமாய்..
எங்கே செல்கிறது சமூகம்,
எப்படி இதற்கு தீர்வு?
யார் இந்த முடிச்சை அவிழ்க்க?
நீயா நானா, நம் சந்ததியா?
//1) மாமாவின் மரணம்
2)அப்பாவின் நிலை
3)குழந்தைத் தொழிலாளிகள் இல்லாத பூமிக்கான கனவோடு உழைக்கும் நம் கண்முன்னே சுடுகாட்டில் பள்ளிச் சீருடையோடு வேட்டி விரித்த சிறுவன்
4) நாள் முழுக்க உழைத்த பின்பு அதற்கான ஊதியத்தை துண்டேந்தி வாங்க வேண்டிய அவலம்//
அற்புதமான படைப்பு தோழர். நாம் செல்ல வேண்டிய் தூரம், மாளாமல் நீண்டு கொண்டே செல்கிறது தோழர். அய்யன் பேட்டை சொன்ன மாதிரி, இந்த மாதிரி துக்க நிகழ்வுகளில், பணம் பட்டுவாடா செயபவர் ஒரு முதலாள்த்துவ முகத்தை மாட்டிக்கொண்டே செய்வார். இதனை ஒட்டி , என் மனதில் பழைய எண்ண ஓட்டம் எட்டிப் பார்த்தது. எங்கள் ஊர் ரொம்ப பழமை ரொம்பிய கிராமம். வர்க்கப்பிரச்சினை, வர்க்கம் கரை கட்டி நிற்கும், கீழத்தஞ்சையின் காவிரிக்கரை..தலித்துகள் கைகட்டி, அக்குளில் துண்டு வைத்து நிற்பார்கள்.. ஆண்டுகளுக்கு முன்.நாலுவ்யது பொடியன், எழுபது வயது பெரியவரை, ஏய் மண்ணாங்கட்டி என்று கூப்பிடுவான். வர்க்கத்தின் திமிர் அது. இப்போது என் அப்பா இறந்த போது வீட்டில் சொன்னார்கள்,இப்பலலாம் வெட்டியான் குழி வெட்டமாட்டானுங்க, நாமதான் வெட்டணும் என்றார்கள். அப்பா போன துக்கத்தினூடே, மனசில் சின்ன சந்தோஷம் எட்டிப்பார்த்தது. அதே உணர்வுதான் இங்கும்,.வாழ்த்துகள். நிறைய பத்விடுங்கள். சந்திப்போம். மோகனா..பழநி ///
மிக்க நன்றி தோழர்.
உங்களது வருகையும் கருத்தும் எனக்கு கூடுதலான பொருப்பைத் தந்திருக்கிறது.
மகிழ்ச்சி.
//// Unknown said...
ReplyDeleteஇது மயானத்தில் மட்டும் அல்ல பன்னாட்டு நிறுவனங்களின் குளிரூட்டப்பட்ட அறையிலும் இந்நிலை உள்ளது... எத்துறையானாலும் கூலிக்கு மன்றாட வேண்டி உள்ளது...///
மிக்க நன்றி தோழர்.
நமக்கான வேலை அதிகமாகவே இருக்கிறது தோழர்
theend
ReplyDelete