Tuesday, July 24, 2012

கருப்பு




இன்று எதேச்சையாகமுக நூலை மேய்ந்து கொண்டிருந்தபோது ஜானகிராமன் ஹரிஹரன் மேல்காணும் கவிதையை பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்த பிறகு என்னால் வேறு எதுவுமே செய்ய இயலவில்லை. ஆகச் சமீபத்தில் வேறு எதனாலும் நான் இந்த அளவிற்கு பாதிக்கப் பட்டிருப்பதற்கு வாய்ப்பே இல்லை.

ஒரு பெண் குழந்தை எழுதியதாக நம்பப் படுவதாய் ஜானகி சொன்னார்.

யாரென்று தெரியவில்லை?

எழுதிய குழந்தைக்கு எழுந்து நின்று வணங்கி என் மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னால் முடிந்தவரை நம் மொழிப்படுத்த முயற்சித்திருக்கிறேன்.

கவிதை எங்கேனும் நீர்த்துத் தெரியுமானால் தவறு என்னுடையது.

பொறந்தப்ப நாங்கருப்பு
வளாந்தப்பவும் கருப்புதான்
வெயிலில் கிடந்தப்பவும் நாங்கருப்புதான்
பயந்து மெரண்டு திருதிருன்னு முழிச்சப்பவும்
நாங்கருப்புதான்
சீக்காக் கிடந்தப்பவும்
செத்துப் போனப்பவும்
நாங்கருப்புதான்
பொறந்தப்ப நீ சாயம்போன சிவப்பு
வளர வளர வெள்ளையான
வெயில்ல வெளிய வந்தப்ப செவந்த நீ
சளிக்கு நீலமான
மெரண்டப்ப மஞ்சளா
சீக்குல பச்சையான
செத்தா உன் நெறம் சாம்பல்
ஆனாலும் நக்கலுனக்கு
நாங்கருப்புன்னு







40 comments:

  1. நல்ல கவிதை! உணர்ச்சிமயமானதும் கூட!

    ReplyDelete
  2. மாறும் மனிதனின் மாறாத கருப்பழகு.நேரமொரு நிறம் காட்டும் வெள்ளை....ம்ம்ம் !

    ReplyDelete
  3. being called colored is supposedly a politically correct way. In that context, I am able to appreciate the original poem. ஆனால், 'சாயக்காரங்க' என்று யாரும் அவர்களை அழைப்பதில்லை என்பதால் அதிகம் ஈர்க்கவில்லை. கவிதைக்கு பின்னூட்டம் இடும் அளவு கவிதையை ரசிக்கும் அறிவு இல்லை என்றாலும் எனக்கு தோன்றிய ஒரு சிறு விளக்கம்..

    ReplyDelete
  4. /// மதுரை சரவணன் said...
    nice.. ///

    மிக்க நன்றி தோழர் சரவணன்

    ReplyDelete
  5. /// வரலாற்று சுவடுகள் said...
    நல்ல கவிதை! உணர்ச்சிமயமானதும் கூட! ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  6. /// ஹேமா said...
    மாறும் மனிதனின் மாறாத கருப்பழகு.நேரமொரு நிறம் காட்டும் வெள்ளை....ம்ம்ம் ! ///

    மிக்க நன்றி ஹேமா

    ReplyDelete
  7. /// bandhu said...
    being called colored is supposedly a politically correct way. In that context, I am able to appreciate the original poem. ஆனால், 'சாயக்காரங்க' என்று யாரும் அவர்களை அழைப்பதில்லை என்பதால் அதிகம் ஈர்க்கவில்லை. கவிதைக்கு பின்னூட்டம் இடும் அளவு கவிதையை ரசிக்கும் அறிவு இல்லை என்றாலும் எனக்கு தோன்றிய ஒரு சிறு விளக்கம்.. ///

    மிக்க நன்றி தோழர்.
    பிழை நேர்ந்துவிடக்கூடாது என்பதி உங்களுக்கு இருக்கும் அக்கறைக்கு கடமைப் பட்டிருக்கிறேன் தோழர். எதற்கு தன்னடக்கத்தோடு ரசிக்கும் அறிவு இல்லை என்றெல்லாம் சொல்லிக் கொண்டு.

    இந்தக் கவிதையே எப்போதும் கருப்பாய் நிறம் மாறாமல் இருக்கும் எம்மை சந்தர்ப்பத்துக்கு ஏற்றார்போல் வண்ணம் மாற்றும் நீ coloured people என்பதா என்பதுதான். இது ஒரு வலி கலந்த எள்ளல்.

    மிக்க நன்றி தோழர். தொடர்ந்து சந்திப்போம்

    ReplyDelete
  8. சகாய நிறம் என்ன வெள்ளையாக இருந்தாலும் கறுப்பில்லிருக்கும்  நெருக்கம் உணர்வுகள் வெள்ளையில் வருமா விதி எழுதிச் செல்லும் நிறத்தில் அந்தக்குழந்தையும் ஏங்கும் நிலையை என்ன சொல்வது!ம்ம் கவிதை ரசனையாக இருக்குது வாத்தியாரே!

    ReplyDelete
  9. உங்களின்
    மொழிப் பெயர்ப்பில்
    கவிதை ஆழமாய் பதிகிறது சார்

    சொல்லில் உறங்கும் பொருள்
    உண்மை

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. சில வார்த்தைகளை மொழி பெயர்க்கும் பட்சத்தில் அது நீர்த்துபோவது உண்மைதான் 'Colored' எனப் படிக்கும் போது ஏற்படும் உணர்வு சாயக்காரண் என்பதில் முழுமையாக இல்லாமல் போனது, இந்த கவிதையில் மொத்த அர்த்தத்தையும் சொல்லி விளங்க வைக்கவேண்டியதாய் இருப்பதாய் என் கருத்து தோழரே.

    ReplyDelete
  12. ஸ்ரீரசாJuly 25, 2012 at 6:40 AM

    அன்புள்ள எட்வின்,
    இந்தக் கவிதை குறுஞ்செய்திகளில் உலாவந்து வருசக்கணக்காகின்றது. உங்கள் கண்களில் இப்போதுதான் பட்டதென்பது ஆச்சரியம். இதனைப் பலர் மொழி பெயர்ப்புச் செய்ய முயன்றுள்ளனர். நான் உட்பட. தீக்கதிரில் கூட ஒன்று வெளிவந்தது... ஆனால் அதிலுள்ள coloured என்பதனை அதன் உயிர்ப்போடு மொழி பெயர்ப்பதில் தமிழுக்கு வெகு சிரமம் உள்ளது. அதன் பொருள் வேறு... நீங்கள் சொல்வதுபோல் சாயக்காரன் அல்ல... சாயக்காரன் என்பதன் பொருள் இங்கு வேறு... இன்னும் கூடப் பொருத்தமான உயிர்ப்பான வார்த்தை ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்... அது படிப்பவரை குறிப்பாக உங்களைப்போல என்னைப்போலக் கவிதையோடு கொஞ்சம் நெருங்கிய தொடர்புடையவர்களை நிச்சயம் அசைக்கின்ற கவிதை... நிறவெறிக்கு எதிரான வலுவான குரல்...

    ReplyDelete
  13. /// ஸ்ரீரசா said...
    அன்புள்ள எட்வின்,
    இந்தக் கவிதை குறுஞ்செய்திகளில் உலாவந்து வருசக்கணக்காகின்றது. உங்கள் கண்களில் இப்போதுதான் பட்டதென்பது ஆச்சரியம். இதனைப் பலர் மொழி பெயர்ப்புச் செய்ய முயன்றுள்ளனர். நான் உட்பட. தீக்கதிரில் கூட ஒன்று வெளிவந்தது... ஆனால் அதிலுள்ள coloured என்பதனை அதன் உயிர்ப்போடு மொழி பெயர்ப்பதில் தமிழுக்கு வெகு சிரமம் உள்ளது. அதன் பொருள் வேறு... நீங்கள் சொல்வதுபோல் சாயக்காரன் அல்ல... சாயக்காரன் என்பதன் பொருள் இங்கு வேறு... இன்னும் கூடப் பொருத்தமான உயிர்ப்பான வார்த்தை ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்... அது படிப்பவரை குறிப்பாக உங்களைப்போல என்னைப்போலக் கவிதையோடு கொஞ்சம் நெருங்கிய தொடர்புடையவர்களை நிச்சயம் அசைக்கின்ற கவிதை... நிறவெறிக்கு எதிரான வலுவான குரல்...///

    அன்பின் ஸ்ரீரசா,
    ரொம்ப காலமாச்சு.

    நேற்றுதான் அது என் பார்வைக்கு வந்தது தோழர்.வருடக் கணக்கில் பின்தங்கியிருக்கிறேன்.

    நேற்று முக நூலில் வந்த பொழுதே நிறையபேர் அதை செய்திருப்பார்கள் என்று நினைத்தேன்.

    ஆனால் அந்தக் குரலினுள்ளிருந்த வலியும் அதன் அழுத்தமும் உடனே இன்னும் கொஞ்சம் பேருக்கு அதை கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன். அதுதான் தோழர்.

    அந்தப் படைப்பை இன்னும் ஒரு நூறு பேருக்கு கொண்டுபோய் சேர்த்த ஒரு தபால்காரரது வேலை மட்டுமே என் வேலை.

    கருப்பு என்று தலைப்பையும்,

    ஆனாலும் நக்கலுனக்கு
    நாங்க கருப்புன்னு
    என்று இறுதி வரியையும் மாற்றியிருக்கிறேன்.

    இதில் ஏதேனும் நெருடல் ஏற்பட்டிருப்பின் அது என்னுடைய பிழையால் நேர்ந்ததுதான். மூலம் அவ்வளவு கனமானது.

    ஆனாலும் ஸ்ரீரசாவை என்னோடு பேச வைத்திருக்கிறது . அந்த வகையில் நான் இன்னும் கூடுதலான கடனாளியாக உணர்கிறேன் அந்தக் குழந்தைக்கு.

    ReplyDelete
  14. /// Kaarti Keyan R said...
    சில வார்த்தைகளை மொழி பெயர்க்கும் பட்சத்தில் அது நீர்த்துபோவது உண்மைதான் 'Colored' எனப் படிக்கும் போது ஏற்படும் உணர்வு சாயக்காரண் என்பதில் முழுமையாக இல்லாமல் போனது, இந்த கவிதையில் மொத்த அர்த்தத்தையும் சொல்லி விளங்க வைக்கவேண்டியதாய் இருப்பதாய் என் கருத்து தோழரே. ///

    மிக்க நன்றி கார்த்திகேயன்.

    இது ஏற்கனவே பல சுற்று வந்த கவிதை என்பதை இப்போது அறிகிறேன்.

    ஆனாலும் நேற்று இரவுதான் இது எனக்கு அறிமுகம். உடனே இதை இன்னும் கொஞ்சம் பேருக்கு கொண்டு போக நினைத்தேன். அவ்வளவுதான் தோழர்.

    மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல் அது. ஆனாலும் மூலத்தில் தட்டுப்படும் வலியும் ஆழமும் இதில் கிடைக்காது போயின் அது என் பிழை மட்டுமே.

    ஆனால் அதில்கூட எனக்கு வருத்த்மில்லை. பத்து புதிய நபர்களுக்காவது புதிதாய் போய் சேர்ந்திருக்கிறது. அந்த வகையில் நிறைவுதான்.

    தலைப்பை “கருப்பு” என்றும் இறுதி வரியை

    ஆனாலும் நக்கலுனக்கு
    நாங்க கருப்புன்னு
    என்றும் மாற்றியிருக்கிறேன். பார்த்து சொல்லுங்கள்.

    ReplyDelete
  15. /// செய்தாலி said...
    உங்களின்
    மொழிப் பெயர்ப்பில்
    கவிதை ஆழமாய் பதிகிறது சார்

    சொல்லில் உறங்கும் பொருள்
    உண்மை///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  16. /// தனிமரம் said...
    சகாய நிறம் என்ன வெள்ளையாக இருந்தாலும் கறுப்பில்லிருக்கும் நெருக்கம் உணர்வுகள் வெள்ளையில் வருமா விதி எழுதிச் செல்லும் நிறத்தில் அந்தக்குழந்தையும் ஏங்கும் நிலையை என்ன சொல்வது!ம்ம் கவிதை ரசனையாக இருக்குது வாத்தியாரே! ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  17. அருமையான கவிதை .பகிர்ந்தமைக்கு நன்றிகள் !!.

    ReplyDelete
  18. தோழர்! அருமையான கவிதையை அதே உயிர்ப்புடன் மொழிபெயர்க்க முயற்சித்து உள்ளீர்கள். உண்மையிலேயே சிரமமான ஓன்று. சிறு திருத்தம் செய்ய முடியுமா என பாருங்கள் அந்த குழந்தை தன்னை ஒருமைபடித்தியும் வெள்ளையனை கூட்டாகவும் சொல்வதாக பொருள் படுகிறது அனால் தாங்கள் பண்மையில் அந்த பெண் சொல்வதாக கூறுவது கவிதையின் பொருளின் ஆழத்தை பிரதிபலிப்பதாக அமைகிறதா என நோக்குங்கள்- நக்கலுனக்கு
    நாங்க கருப்புன்னு- பொருள் வித்தியாசபடுகிறது, தோழர். மன்னிக்கவும் எனக்கு பட்டதை சொல்லிவிட்டேன்.

    ReplyDelete
  19. வணக்கம் எட்வின் சார். உங்கள் ப்ளாக் குறித்து இன்று வீடுதிரும்பலில் எழுதி உள்ளேன். பாருங்கள் நன்றி

    http://veeduthirumbal.blogspot.in/2012/07/blog-post_25.html

    ReplyDelete
  20. தங்களின் மொழிப் பெயர்பைப் பார்த்து அசந்துட்டேன் சார் !
    நன்றி.. (த.ம. 3)
    திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  21. "அந்தப் படைப்பை இன்னும் ஒரு நூறு பேருக்கு கொண்டுபோய் சேர்த்த ஒரு தபால்காரரது வேலை மட்டுமே என் வேலை."...this is nice.

    ReplyDelete
  22. சொல்ல வார்த்தைகள் இல்லை...... ஆப்ரிக்க மண்ணின் வலி வரிகளின் வழியாய் மனத்தை பிசைந்தெடுக்கிறது......

    ReplyDelete
  23. உங்களின் பதிவுகளை இன்றுதான் நான் படிக்க நேர்ந்தது. இத்தனை நாட்களாக உங்கள் பதிவுகளை படிக்காமல் விட்டதற்கு வருத்தப்படுகிறேன், தொடர்ந்து உங்கள் பதிவுகளை படிப்பதில் நானும் ஒருவனாக இருப்பேன். நன்றிகள்.

    ReplyDelete
  24. வலிகள் நிறைந்த வரிகள்......

    ReplyDelete
  25. /// எழில் நிலவன் said...
    "அந்தப் படைப்பை இன்னும் ஒரு நூறு பேருக்கு கொண்டுபோய் சேர்த்த ஒரு தபால்காரரது வேலை மட்டுமே என் வேலை."...this is nice. ///

    அவ்வளவுதான் தோழர் என்னோட வேலை இதில்.

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  26. /// முருகேசன் பொன்னுச்சாமி said...
    அருமையான கவிதை .பகிர்ந்தமைக்கு நன்றிகள் !!. ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  27. /// இளங்கோ said...
    உங்களின் பதிவுகளை இன்றுதான் நான் படிக்க நேர்ந்தது. இத்தனை நாட்களாக உங்கள் பதிவுகளை படிக்காமல் விட்டதற்கு வருத்தப்படுகிறேன், தொடர்ந்து உங்கள் பதிவுகளை படிப்பதில் நானும் ஒருவனாக இருப்பேன். நன்றிகள். ///

    மிக்க நன்றி தோழர் இளங்கோ.தொடர்ந்து சந்திப்போம்

    ReplyDelete
  28. /// Madusudan C said...
    சொல்ல வார்த்தைகள் இல்லை...... ஆப்ரிக்க மண்ணின் வலி வரிகளின் வழியாய் மனத்தை பிசைந்தெடுக்கிறது...... ///

    மிக்க நன்றி மது

    ReplyDelete
  29. /// மோகன் குமார் said...
    வணக்கம் எட்வின் சார். உங்கள் ப்ளாக் குறித்து இன்று வீடுதிரும்பலில் எழுதி உள்ளேன். பாருங்கள் நன்றி ///

    மிக்க நன்றி தோழர்.
    உங்கள் வலை பார்த்தேன். நாளை உங்கள் வலையினை என் முகப்பில் வைத்து விடுவேன்

    ReplyDelete
  30. /// Christopher said...
    தோழர்! அருமையான கவிதையை அதே உயிர்ப்புடன் மொழிபெயர்க்க முயற்சித்து உள்ளீர்கள். உண்மையிலேயே சிரமமான ஓன்று. சிறு திருத்தம் செய்ய முடியுமா என பாருங்கள் அந்த குழந்தை தன்னை ஒருமைபடித்தியும் வெள்ளையனை கூட்டாகவும் சொல்வதாக பொருள் படுகிறது அனால் தாங்கள் பண்மையில் அந்த பெண் சொல்வதாக கூறுவது கவிதையின் பொருளின் ஆழத்தை பிரதிபலிப்பதாக அமைகிறதா என நோக்குங்கள்- நக்கலுனக்கு
    நாங்க கருப்புன்னு- பொருள் வித்தியாசபடுகிறது, தோழர். மன்னிக்கவும் எனக்கு பட்டதை சொல்லிவிட்டேன். ///

    மிக்க நன்றி தோழர்.

    ஆமாம் அது என்னது மனதில் பட்டதை சொன்னேன் என்பது மாதிரியெல்லாம்?

    அதைத்தானே தோழர் செய்ய வேண்டும்.

    ஆனாலும் கவிதையில் ஒருமையில்தான் தோழர் போட்டிருக்கிறேன்

    ReplyDelete
  31. /// விழுப்புரம் DYFI said...
    வலிகள் நிறைந்த வரிகள்...... ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  32. /// திண்டுக்கல் தனபாலன் said...
    தங்களின் மொழிப் பெயர்பைப் பார்த்து அசந்துட்டேன் சார் !
    நன்றி.. (த.ம. 3) ///

    மிக்க நன்றி தோழர்.

    ஆனாலும் ரொம்பப் பெருந்தன்மை தோழர் உங்களுக்கு

    ReplyDelete
  33. /// Seeni said...
    arumaiyaana kavithai! ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  34. ஏற்கனவே இந்த கவிதையை வாசித்திருக்கிறேன் மொழிபெயர்ப்பும் அருமை.

    ReplyDelete
  35. //// Uma said...
    ஏற்கனவே இந்த கவிதையை வாசித்திருக்கிறேன் மொழிபெயர்ப்பும் அருமை. ////

    ஆனால் என் பார்வைக்கு அது இப்போதுதான் வந்தது. பல வருடங்கள் பிந்தங்கியிருக்கிறேன் என்பது புரிகிறது.

    மிக்க நன்றி உமா

    ReplyDelete
  36. குழந்தை கவிதையின் குழந்தைமை மாறாமல் மொழி பெயர்த்து இருக்கிறீர்கள்.பாராட்டு. அது ஒரு குழந்தையின் கவிதையா இல்லையா என்கிற ஆராய்ச்சி நமக்கெதற்கு? கவிதையின் நியாயம் கன்னத்தில் அறைவது நிஜம்.

    ReplyDelete
  37. வணக்கம் எட்வின் தோழர். இன்றுதான் உங்களின் வலையில் சிக்கிய கவிதையை உங்களின் மொழியாக்கம் மூலமாகவும் படித்தேன். ஏற்கனவே எனக்கு அறிமுகமான கவிதை என்றாலும், எப்ப படிச்சாலும்நம்மள ஒரு உலுக்கு உலுக்கி விடும் வல்லமையுள்ள கவிதை இது.அந்தக் குழந்தையின் கண்கள் நம்மை ஊருடுவித் துளைத்து விடும், நீயாடா என்னை இப்படி கறுப்பி என்று சொல்பவன் என்று. அத்தனை ஆழமும், ஆளுமையும், அழகும் நிறைந்த கவிதை தோழர். கருப்புத்தான் வலியது, வலிமைமிக்கது. போராட வலுவுள்ளது.இயற்கை மனிதனை கருப்பாகத்தான் படைத்திருக்கிறது. மனிதன் உருவானபோது, எதேச்சையாக, கருப்பு நிறமி வந்துவிட்டது.எதிர்பாராமல் வந்த கருப்பு நிறமிதான், நமது சமயசஞ்சீவி. இன்று மனித இனம் உயிரோடு உலவக காரணியும் கருப்பு நிறமிதான்.ஒருகாலத்தில் வெள்ளைத்தோல் உள்ள மனிதர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாய் சூரியனின் தாக்கத்தைத் தாக்குப் பிடிக்கமுடியாமல் அழிந்துவிட்டனர், விரல் விட்டு என்னும் மனிதர்கள் தவிர. அவர்களிலிருந்து வந்தவர்கள்தான் நாம்.(பரிணாமம்)இந்த கட்டுரையை நான் உங்களின் காக்கைக்கு அனுப்புகிறேன் தோழர்.ஆதாரங்களுடன். கருப்புதான் எதனையும் தாக்குதல், தாக்குப் பிடிக்கும் திறனுள்ளது. கருப்புதான் எனக்குப் பிடித்த வண்ணம். பாட்டில் மட்டுமல்ல நேசத்திலும், நெசத்திலும்தான். தோழர்.. வாழ்த்துகள் தோழர்.பதிவுகளுக்கும், சமூக பிரக்ஞைக்கும்.உங்கள் மொழியாக்கம்அற்புதம். தெய்வம் தோழர் நீங்கள்.

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...