Sunday, April 29, 2012

பெயரில் இருக்கிறது

" பலரும் சொல்கிறார்கள்
பெயரில் என்ன இருக்கிறது?

சேரி
பறையன்
தேவடியாள்
பீ, மூத்திரம், கொசு
பன்னி
கழுதை, கருவாடு
பூணூல்
அப்பம், வடை, தயிர் சாதம்

ஆங்கிலம்
சமஸ்கிருதம்
மனு
அமெரிக்கா
சங்கர மடம்
கொழும்பு

வள்ளலார்
பெரியார்
அம்பேத்கர்
மார்க்ஸ்

பெயருக்குப் பின்னால்
எல்லாமும் இருக்கிறது “

என்ற இரா. காமராசு அவர்களின் கவிதையை ஒரு முறை கவிதா சரணில் வாசித்த போது என்னமோ செய்தது. ஆனாலும் என்னமோ தெரியவில்லை அந்த கவிதை பச்சென்று மனதிற்குள் வந்து பசை போட்டு அமர்ந்து கொண்டது.

“ பலரும் சொல்கிறார்கள்

பெயரில் என்ன இருக்கிறது?”

எனக்கும் அப்படித்தான். பெயரில் என்ன இருக்கிறது என்றுதான் நினைத்தேன். பெயர் ஒரு அடையாளம். அவ்வளவுதான். அதைத் தாண்டி அதில் என்ன இருக்கிறது என்றுதான் யோசிக்கத் தோன்றியது.

பெயருக்குள் ஜாதியும், ஜாதி அரசியலும், ஆணவமும் அடக்குமுறையும் அடிமைத்தனமும் இருக்கிறது என்பதெல்லாம் தெரிந்திருந்தும் பெயர் குறித்து பெரிதாய் நான் எப்போதும் அலட்டிக் கொண்டதில்லை.

இப்போது முக நூலில் கொஞ்சம் பரிச்சயம். சென்ற டிசம்பர் 25 அன்று முகநூலைத் திறந்தவன் அப்படியே உறைந்து போனேன். ஏறத்தாழ ஐம்பது கிருஸ்மஸ் வாழ்த்துக்கள் எனக்கு குவிந்திருந்தன. இவை பெரும் பாலும் தனி மடலிலேயே வந்திருந்தன.

எப்படி இது?

முக நூலில் என்னை பற்றிய சுய குறிப்பில் நான் ஒரு நாத்திகன் என்றும், இடது சாரி என்றும் குறிப்பிட்டிருக்கிறேன்.

டிசம்பர் 25 எனில் நம்மைப் பொருத்தவரை வெண்மணி நினைவு நாள்தானே. நமக்கெப்படி இவ்வளவு கிருஸ்மஸ் வாழ்த்துக்கள்?

இது கொஞ்சம் மனதைப் பிசைந்தாலும் அப்படியே விட்டு விட்டேன். பொங்கல் வந்தது. அன்று முகநூலில் தனி மடலில் எனக்கு எந்த பொங்கல் வாழ்த்தும் வரவில்லை.

கிருஸ்மஸ் வாழ்த்துக்கள் எனக்கு வந்து குவிந்ததற்கும் பொங்கலுக்கு வாழ்த்துக்களே வராமல் போனதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா?

யோசித்த போது ஒன்று பளிச்செனத் தட்டியது. நாத்திகன் என்றும் இடதுசாரி என்றும் நான் எழுதியிருந்த போதும் கிருஸ்மஸ் அன்று அவர்கள் வாழ்த்து அனுப்பியதற்கும் பொங்கள் அன்று அவர்கள் அவர்கள் எனக்கு வாழ்த்து அனுப்பாமல் போனதற்கும் இது ஒன்றுதான் காரணமாக இருக்க முடியும்.

முகநூல் நண்பர்கள் என்னை ஒரு கிருஸ்தவனாகப் பார்த்திருக்கிறார்கள். அதனால்தான் கிருஸ்மஸ் அன்று வாழ்த்து அனுப்பிய அவர்கள் பொங்களுக்கு அனுப்ப தவறியிருக்கிறார்கள்.

என்னை முன் பின் அறிந்திராத அவர்கள் என்னை கிருஸ்தவனாகப் பார்க்கக் காரணம் எது?

என் பெயர் என்னை ஒரு கிருஸ்தவனாக அவர்களுக்கு அடையாளப் படுத்தியிருக்கிறது.

ஆக பெயரில் ஏராளம் இருக்கிறது என்பது புரிந்தது. பலரது பெயர்கள் ஏராளமான பிரச்சினைகளையும் விவாதங்களையும் கிளப்பியுள்ள்ன.பெயர் ஒன்றும் நாம் நினைத்தது போல அப்படி லேசான ஒன்று அல்ல.

அப்படி அதிகமான விவாதங்களை கொண்டுவந்து சேர்த்த பெயர்களில் பாரதி தாசன் பெயரும் ஒன்று. அதில் அவரே பங்கெடுத்து பதிலளித்த சம்பவங்களும் உண்டு.

பார்ப்பன எதிர்ப்பு, அடங்க மறுத்துத் திமிறும் தன்மானம், கலப்படமில்லாத மொழி ஆகிய மூன்று விஷயங்களில் புரட்சிக் கவிஞர் கொஞ்சமும் சமரசம் செய்துகொள்வதில்லை என்பதில் கொஞ்சம் முரட்டுத் தனமாகவே தீவிரம் காட்டினார் என்று கொள்ளலாம்.

பார்ப்பன எதிர்ப்பில் புரட்சிக் கவிஞர் எவ்வளவு தீவிரமாக இருந்தார் என்பதை யாரும் சொல்லி யாரும் தெரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. எதிலுமே உச்சம் தாண்டியே பழக்கப் பட்ட பாரதிதாசன் பார்ப்பன எதிர்ப்பு நிலையிலும் உச்சம் தாண்டியே நின்றார். “ பாம்பையும் பார்ப்பனையும் சேர்த்துப் பார்த்தால் பார்ப்பானை அடித்து விட்டு பாம்பை அடி” என்பதில் அவர் எப்போதும் சமரசமற்று இருந்தார். இதை அவர்தான் சொன்னார் என்று சொல்பவர்களும் உண்டு.

பார்ப்பன எதிர்ப்பு என்றால் அப்படியொரு பார்ப்பன எதிர்ப்பு.

ஒருமுறை, சரியாகச் சொவதெனில் கலைஞரது அறுபதாவது பிறந்த நாள் சமயத்தில் அவரைப் பற்றி வைரமுத்து இப்படிச் சொன்னதாக ஞாபகம்.

“சொல்
காலைச் சொறியவேனும்
குழந்தைக்கு முத்தம் கொடுக்கவேனும்
நீ
தலை குனிந்ததுண்டா?” என்று.

அது கலைஞருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ பாரதி தாசனுக்கு மிகச் சரியாகப் பொருந்தும்.யாருக்காகாவும் எதற்காகவும் யாரிடமும் வளையவோ வணங்கவோ பழக்கப்படாத வணங்காமுடி அவர்.

மொழி விஷயத்தில் சொல்லவேத் தேவை இல்லை. தாயைவிடவும் தாய் மண்ணை விடவும் மொழியை நேசித்தவர் . உண்மையை சொல்லப் போனால் தன் மொழியைப் பற்றி இவரளவிற்கு எழுதியவர்கள் யாரேனும் இருப்பார்களா? என்பது தெரியவில்லை.

பாரதி தாசன் கவிதைகளில் சில இடங்களில் வடமொழிச் சொற்கள் இருப்பதாகவே படுகிறது. ஆனால் அதை வைத்துக் கொண்டு அவரது எதிர்ப்பாளர்களாலேயே அவரது மொழித் தூய்மையை அசைத்துவிட முடியாது.

ஆனால் அப்படிப்பட்ட புரட்சிக் கவிஞர் தனது பெயரிலேயே தாசன் என்ற வடமொழிச் சொல்லை ஏன் அனுமதித்தார்?

காலைச் சொறிவதற்கும் தலையைக் குனியாத வணங்கா முடியான அவர் ஏன் அடிமை எனப் பொருள் தரும் தாசன் என்ற சொல்லை தனது பெயராக்கினார்?

பார்ப்பன எதிர்ப்பில் மிகத் தீவரமாக இருந்த கனக சுப்புரத்தினம் பாரதி என்ற பார்ப்பனருக்கு தாசனாக மாறியது ஏன்? அது சரிதானா? அவர் காலத்தில் அது பற்றிய விவாதம் நடந்ததா?

பொதுவாகவே பாரதியை பாரதியாகவும் பாரதி தாசனை பாரதி தாசனாகவும் பார்க்கிற போக்கு மொழித் தளத்தில் குறைந்து கிடக்கிறது. இது அவர்கள் இருவருக்கு மட்டுமல்ல. யாரையும் அவராகப் பார்க்காமல் சார்ந்து பார்த்து மிகைப் படக் கொண்டாடுவதோ அல்லது நியாயமே இல்லாத அளவிற்கு நார் நாராய்க் கிழிப்பதோதான் இன்றைய மரபாக இருக்கிறது.

பாரதியை எற்றுக் கொண்டாடும் பலர் இன்னமும் பாரதி தாசனைத் தீண்டவேத் தயங்குகிறார்கள் என்பதில் ஏகத்திற்கும் உண்மை இருக்கவே செய்கிறது.

பாரதி தாசனை ஏற்றுக் கொண்டாடும் பலர் பாரதியை நிராகரிக்கிறப் போக்கும் இருக்கவே இருக்கிறது.

இது ஏதோ இலக்கியத்தில் மட்டுமல்ல சமூகத் தளத்திலும் பெரியார் தனது தலைவராக ஏற்றுக் கொண்ட அம்பேத்கரை ஏற்காத வறட்டுத்தனமான பெரியாரிஸ்டுகளும்,அம்பேத்கர் தனது தலைவராக ஏற்றுக் கொண்ட பெரியாரை ஏற்காது கிழிக்கும் வறட்டுத் தனமான அம்பேத்காரிஸ்டுகளும் இருக்கவே செய்கிறார்கள்.

பாரதியை ஒரு சந்தன மரம் போன்றவர் என்று சொல்லுவார் பாரதிதாசன்.

பொதுவாகவே சந்தன மரத்திற்கென்று ஒரு குணம் உண்டு. என்னதான் இழைக்க இழைக்க மணத்தைத் தந்தாலும் சந்தன மரத்திடட் கொள்வதற்கு கொஞ்சமும் பொருட்டற்ற குணம் ஒன்று உண்டு. அது தன் நிழலில் எந்த ஒரு தாவரமும் வளர்வதற்கு அனுமதிக்காது. ஆனால் பாரதி என்ற சந்தன மரம் பாரதிதாசன் என்ற சந்தன மரத்தை தன் நிழைலேயே வாஞ்சையோடு வளர அனுமதித்து இருக்கிறது.

இந்தச் சூழலில் கனக சுப்புரத்தினம் தனது பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டதற்கு பாரதிதாசன் காலத்தில் அல்ல பாரதிதாசனிடத்திலேயே இது குறித்த விமர்சனம் சென்றிருக்கிறது என்பது ச.சு .இளங்கோவனது “ பாரதி தாசன் பார்வையில் பாரதி” என்கிற நூலில் காணக் கிடக்கிறது.

பட்டுக்கோட்டை அழகிரி அவர்களுக்கு இது நெருடலாகப் படவே அவர் பாரதி தாசனை சந்தித்த ஒரு பொழுதில்

“ பாரதி ஒரு பார்ப்பனர் ஆயிற்றே, போகவும் தாசன் என்றால் அடிமை என்று பொருள் வருமே. பாரதிதாசன் என்றால் பாரதிக்கு அடிமை என்றாகிவிடாதா?”

அவர் முடிக்கும் முன்னரே இடை வெடித்தார் பாரதி தாசன்

“ ஆமாண்டா, நான் பாரதிக்கு அடிமைதாண்டா”

ஏறத்தாழ இதே மாதிரி ஒருக் கேள்வியைக் கேட்ட மதுரை சீனிவாசன் அவர்களிடம்,

“இதன் உள் நோக்கம் புரிகிறது. குறும்புத் தனமானது. அய்யருக்கு அடிமையா என்பது போலத்தான் இதுவும். நான் என்றென்றும் உளமாரப் போற்றி வழி படுகிற தெய்வம் இந்த அய்யர். அன்பும் தமிழுணர்வும் ஒருங்கு சேர்ந்த பொன்னுருவம் அவர்.பாரதியாருக்கு நான் தாசனாக இருப்பதில் உங்களுக்கு என்ன ஆட்சேபனை?

இந்த வினாவினை யார் விடுத்தாலும் எனக்கு கோவம் வரும். ஏனெனில் கழகத்தவர்களோ முன்னேற்றம் காணத் துடித்தவர்களோயாராக இருந்தாலும் சரி, சீர்திருத்தம் எனும் சொல்லை எழுத்துக் கூட்டி வாசிக்கக் கற்றுக் கொள்வதற்கு பல நாட்களுக்கு முன்னரேதமது வாழ்க்கையில் சீர்திருத்த செயலகள் பலவற்றை செய்து காட்டியவர் பாரதியார்”

எள்ளும் கொள்ளுமாய் வெடித்த கவிஞரின் முகத்தைப் பார்த்த சீனிவாசனும் அவரது நண்பர்களும் எதுவும் பேசாமல் போய்விட்டார்களாம்.

“பாரதியின் மீது உங்களுக்கு பற்று இருக்கலாம். அதில் நாங்கள் தலையிட முடியாது. ஆனால் ‘பாரதி தாசன்’ என்று நீங்கள் பெயர் வைத்திருப்பது எங்களுக்கு சரியாகப் படவில்லையே. கொஞ்சம் பரிசீலிக்கலாமே? “ என்று பேராசிரியர். க. அன்பழகன் அவர்கள் ஒருமுறை கேட்டிருக்கிறார்.

”பாரதியைப் பற்றி மற்றவர்கள் தவறாகக் கருதுவது போலவே நீயும் கருதுகிறாயே!அவரோடு நான் பன்னிரெண்டு ஆண்டுகள் பழகியிருக்கிறேன். அவருடைய உள்ளத்தில் சாதி வேறுபாடு அறவே இல்லை.பிராமணர்களை அவர் துளிக் கூட மதிப்பது இல்லை. அது போக என்னுடைய கவிதைகளில் கிடைக்க்ற முற்போக்கு கருத்துக் க்மளுக்கும் அவரே காரணம்.

எல்லோரிடமும் சினந்து வெடித்த பாரதிதாசன் மிகுந்த கனிவான குரலில் அவருக்கு பதில் சொல்லியிருக்கிறார். ஆக பெயர் குறித்த விவாதம் பாரதிக்கும் பாரதி தாசனுக்கும் இடையில் இருந்த உறவினயும் உபரியாகத் தருகிறது.

அடிமைத் தனத்தை வேரோடு சாய்க்க போராடும் நீங்கள், யாருக்கும் யாரும் அடிமை இல்லை என்று கருதும் நீங்கள் எப்படி இப்படி? என்பது மாதிரி கேட்ட தோழர் தா. பாண்டியன் அவர்களுக்கு

“அடிமைப்புத்தியை விரும்பாத நானே ஒருவருக்கு தாசன் என்று சொல்லிக் கொள்வேன் என்றால் அவர் எவ்வளவு உயர்ந்தவராக இருப்பார் என்று யோசிக்க மாட்டாயா பாண்டியா”

ஆக,

பெயரில் இருக்கிறது.

நன்றி : காக்கைச் சிறகினிலே

83 comments:

  1. இருக்கிறது என்றுப்பார்த்தால் ..இருக்கும் இல்லை எனப்பார்த்தால் இருக்காது :-))

    கவிதை ரொம்ப ஆவேசமாக இருக்கு ,அதுக்கு ஏற்றார்ப்போல ஆவேசமான பாரதிதாசன் நிகழ்வுகளை சொல்லி இருக்கிங்க, பாரதிதாசனுக்கு நல்ல நினைவேந்தல்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  3. பெயரில் என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு என்ன இல்லை என முகத்தில் அறைகிறது கவிதை..அப்போதே தங்கள் மன துவேசத்தை புகுத்த முயன்றவர்களை
    நெட்டி தள்ளிய பாரதிதாசன் பற்றிய பதிவு அருமை

    ReplyDelete
  4. ஒ நல்ல கட்டுரை.ஒவ்வோரு சொல்,பெயருக்கும் பின் வர்க்கத்தின் சாயல் இருக்கிறது என்பது மெய்தானே.கம்பீரமாக எதை எதையோ விவாதிக்கப் போகிறது என் நினைத்தால் சுருக்கமாக முடித்து விட்டீர்களே;வாழ்த்துகள்

    ReplyDelete
  5. பெயரில் எல்லாமும் உண்டு. அம்பேத்கர் என்ற பெயர் ஒரு போலீஸ் அதிகாரியை அவர் பிறப்பால் ஒரு தலித்தாக இல்லாத போதும் அவரை எந்த அளவு பாதித்தது என்பதை கடந்த விகடனில் நண்பன் அருள் எழிலனின் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் தோழர். எனக்கே கூட அந்த அனுபவம் உள்ளது. நான் பிறப்பால் ஒரு பார்ப்பனன். ஆனால் எனது சினிமாப் பெயராக நந்தன் ஶ்ரீதரன் என்ற பெயரை தேர்ந்தெடுத்தபோது அனைத்து நண்பர்களுமே எனது தேர்வை கேள்வி கேட்டனர். இது ஒரு புறம் இருக்க, பாரதியின் கவிதைகளை அவர் இருந்த காலத்தை மனதில் கொண்டு பார்க்க வேண்டும் என்பதே எனது கருத்து. அவரது படைப்புகளில் சாதி குறித்த மற்றும் பால் பேதமுள்ள பல ஆட்சேபிக்கக் கூடிய கருத்துகள் உள்ளனதான். ஆயினும் அடிப்படையில் அவரது கவிதைகளில் உள்ள சாதிய எதிர்ப்பு என்பதை அந்தக் காலத்தையும் கருத்தில் கொள்கையில் நாம் பாராட்டித்தான் ஆக வேண்டி உள்ளது. தவிரவும் எழுதுவது பெரிய விஷயம் அல்ல.. எழுத்தின்படி வாழ்வதுதான் பெரிய விஷயம். பள்ளுப் பறை எல்லாம் சரி சமம் என எழுதிவிட்டு ஒரு தாழ்த்தப்பட்டவன் உட்கார்ந்து எழுந்த இடத்தை சாணி போட்டு மெழுகி சுத்தப்படுத்துவது நேர்மை ஆகாது. ஆக மனதளவில் பாரதி எப்படி இருந்தார் என்பது உடன் வாழ்ந்து அறிந்தவர்களால் சொல்லக்கூடிய விஷயம் மட்டுமே. அந்த வகையில் பாரதி தாசனார் சொன்னதை உண்மை என நான் நம்புகிறேன். அந்த கால கட்டத்தில் பாரதி எழுதிய விடயங்கள் மிக முக்கியமானவைதாம் என்பது எனது கருத்து. எது எப்படி இருப்பினும் உங்களது கேள்வி நிறைந்த இப்பதிவு பல பதில்களையும் ஆரோக்கியமான விவாதங்களையும் துவக்கிவைக்கும் என்ற நம்பிக்கையோடு இதனைப் பகிரவும் செய்கிறேன். நன்றி வாத்தியார்.. எனது பெயர் இங்கு எனது blog name ஆனா அசிஸ்டண்ட் டைரக்டர் என வந்தாலும் நான் janakiraman hariharan என்ற facebooker தான். எங்கெனினும் பெயர் ரொம்ப முக்கியம் வாத்தியாரே..

    ReplyDelete
  6. ஒரு கவிதையை ஒரு காலத்தில் நடந்த கருத்து யுத்ததோடு தொடர்பு படுத்தி அதில் தெளிவையும் கண்ட விதம் அழகு !

    ReplyDelete
  7. \\\EN ULAGAM said...
    பெயரில் என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு என்ன இல்லை என முகத்தில் அறைகிறது கவிதை..அப்போதே தங்கள் மன துவேசத்தை புகுத்த முயன்றவர்களை
    நெட்டி தள்ளிய பாரதிதாசன் பற்றிய பதிவு அருமை\\\

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  8. \\\ இரா.தெ.முத்து said...
    ஒ நல்ல கட்டுரை.ஒவ்வோரு சொல்,பெயருக்கும் பின் வர்க்கத்தின் சாயல் இருக்கிறது என்பது மெய்தானே.கம்பீரமாக எதை எதையோ விவாதிக்கப் போகிறது என் நினைத்தால் சுருக்கமாக முடித்து விட்டீர்களே;வாழ்த்துகள் ////

    மிக்க நன்றி தோழர்.
    இதை எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் தேவைக்கு ஏற்ப நீட்டிக் கொள்ளலாம்.

    பாரதியை ஏற்பவர்கள் பாரதி தாசனை நிராகரிப்பதிலும் பாரதி தாசனை ஏற்பவர்கள் பாரதியை நிராகரிப்பதிலும் உள்ள நியாயமின்மையை சொல்லவே இது.

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  9. \\\

    அசிஸ்டன்ட் டைரக்டர் said...
    பெயரில் எல்லாமும் உண்டு. அம்பேத்கர் என்ற பெயர் ஒரு போலீஸ் அதிகாரியை அவர் பிறப்பால் ஒரு தலித்தாக இல்லாத போதும் அவரை எந்த அளவு பாதித்தது என்பதை கடந்த விகடனில் நண்பன் அருள் எழிலனின் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் தோழர். எனக்கே கூட அந்த அனுபவம் உள்ளது. நான் பிறப்பால் ஒரு பார்ப்பனன். ஆனால் எனது சினிமாப் பெயராக நந்தன் ஶ்ரீதரன் என்ற பெயரை தேர்ந்தெடுத்தபோது அனைத்து நண்பர்களுமே எனது தேர்வை கேள்வி கேட்டனர். இது ஒரு புறம் இருக்க, பாரதியின் கவிதைகளை அவர் இருந்த காலத்தை மனதில் கொண்டு பார்க்க வேண்டும் என்பதே எனது கருத்து. அவரது படைப்புகளில் சாதி குறித்த மற்றும் பால் பேதமுள்ள பல ஆட்சேபிக்கக் கூடிய கருத்துகள் உள்ளனதான். ஆயினும் அடிப்படையில் அவரது கவிதைகளில் உள்ள சாதிய எதிர்ப்பு என்பதை அந்தக் காலத்தையும் கருத்தில் கொள்கையில் நாம் பாராட்டித்தான் ஆக வேண்டி உள்ளது. தவிரவும் எழுதுவது பெரிய விஷயம் அல்ல.. எழுத்தின்படி வாழ்வதுதான் பெரிய விஷயம். பள்ளுப் பறை எல்லாம் சரி சமம் என எழுதிவிட்டு ஒரு தாழ்த்தப்பட்டவன் உட்கார்ந்து எழுந்த இடத்தை சாணி போட்டு மெழுகி சுத்தப்படுத்துவது நேர்மை ஆகாது. ஆக மனதளவில் பாரதி எப்படி இருந்தார் என்பது உடன் வாழ்ந்து அறிந்தவர்களால் சொல்லக்கூடிய விஷயம் மட்டுமே. அந்த வகையில் பாரதி தாசனார் சொன்னதை உண்மை என நான் நம்புகிறேன். அந்த கால கட்டத்தில் பாரதி எழுதிய விடயங்கள் மிக முக்கியமானவைதாம் என்பது எனது கருத்து. எது எப்படி இருப்பினும் உங்களது கேள்வி நிறைந்த இப்பதிவு பல பதில்களையும் ஆரோக்கியமான விவாதங்களையும் துவக்கிவைக்கும் என்ற நம்பிக்கையோடு இதனைப் பகிரவும் செய்கிறேன். நன்றி வாத்தியார்.. எனது பெயர் இங்கு எனது blog name ஆனா அசிஸ்டண்ட் டைரக்டர் என வந்தாலும் நான் janakiraman hariharan என்ற facebooker தான். எங்கெனினும் பெயர் ரொம்ப முக்கியம் வாத்தியாரே..///

    மிக்க நன்றி ஜானகி.

    விவாதம் வந்து ஏதேனும் சன்னமான அசைவு வந்தால்கூட நல்லதுதான்.

    முக நூலில் இதைப் போட வேண்டும்.

    ReplyDelete
  10. \\\ mannai muthukumar said...
    ஒரு கவிதையை ஒரு காலத்தில் நடந்த கருத்து யுத்ததோடு தொடர்பு படுத்தி அதில் தெளிவையும் கண்ட விதம் அழகு !///
    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  11. அருமையான பதிவு.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  12. மிக்க நன்றி. ஜாதிப் பித்தர்கள் தான் அந்தந்த் பெரியவர்களை தங்கள் ஜாதி என்று கொண்டாடுகிறார்கள். திரு பாரதியாரோ, திரு அப்துல் கலாம் அவர்களோ, திரு காமராஜர் அவர்களோ அந்தந்த ஜாதிக்கு உரியவர்கள் அல்ல. அவர்களது மனதில் அவர்கள் இந்தியர்கள், மனிதர்கள். இது எனது கருத்து.

    ReplyDelete
  13. \\\ Rathnavel Natarajan said...
    மிக்க நன்றி. ஜாதிப் பித்தர்கள் தான் அந்தந்த் பெரியவர்களை தங்கள் ஜாதி என்று கொண்டாடுகிறார்கள். திரு பாரதியாரோ, திரு அப்துல் கலாம் அவர்களோ, திரு காமராஜர் அவர்களோ அந்தந்த ஜாதிக்கு உரியவர்கள் அல்ல. அவர்களது மனதில் அவர்கள் இந்தியர்கள், மனிதர்கள். இது எனது கருத்து.///

    மிக்க நன்றிங்க அய்யா

    ReplyDelete
  14. \\\ வில்லனின் விநோதங்கள் said...
    அருமையான பதிவு.... ///
    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  15. நிச்சயமாக இது பெயருக்கு எழுதப்பட்ட கட்டுரையாக இல்லை. பெயரின் அரசியல் குறித்து விவாதிக்கத் தூண்டியிருக்கிறீர்கள். பாரதி, பாரதிதாசன் தாண்டி இந்த விவாதத்தை விரிவான களத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும்.

    ReplyDelete
  16. அப்படியொரு விவாதம் தொடங்கப் பட்டால் நல்லது தோழர்

    ReplyDelete
  17. அய்யன்பேட்டை தனசேகரன்April 30, 2012 at 6:34 AM

    பாரதிதாசன் பெயர் பற்றிய செய்திகளின் தொகுப்பு அருமை. கட்டுரை வழங்கியுள்ள விதமும் அருமை.

    ReplyDelete
  18. மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  19. தோன்றின் புகழொடு தோன்றுக தோன்றலின்
    தோன்றாமை நன்று.---குறள்.
    ஒருவர் உலகின் முன்னே அறிமுகமாகும்போது,
    பெயரினால் அறிமுகம் அல்லது உருவத்தால் அறிமுகம்
    செய்வது உலகு வழக்கம். சில மரபுகளை நாம் ஏற்றேயாக
    வேண்டும்.
    முன்னால் முதல்வர் திரு.எம்.ஜி.ஆர். அவர்கள்கூட கொத்தனாரை
    வைத்து கட்டிடங்களை திறந்தார். பின்பு மாற்றிக்கொண்டது தெரியுமல்லவா. எனவே கொள்கைகள் வேறு. பெயர்கள் வேறு. நோக்குமிடமேல்லாம் நாம் நாமே. மாறமுடியாது.

    ReplyDelete
  20. \\\ Anonymous said...
    தோன்றின் புகழொடு தோன்றுக தோன்றலின்
    தோன்றாமை நன்று.---குறள்.
    ஒருவர் உலகின் முன்னே அறிமுகமாகும்போது,
    பெயரினால் அறிமுகம் அல்லது உருவத்தால் அறிமுகம்
    செய்வது உலகு வழக்கம். சில மரபுகளை நாம் ஏற்றேயாக
    வேண்டும்.
    முன்னால் முதல்வர் திரு.எம்.ஜி.ஆர். அவர்கள்கூட கொத்தனாரை
    வைத்து கட்டிடங்களை திறந்தார். பின்பு மாற்றிக்கொண்டது தெரியுமல்லவா. எனவே கொள்கைகள் வேறு. பெயர்கள் வேறு. நோக்குமிடமேல்லாம் நாம் நாமே. மாறமுடியாது.///

    பெயரோடு வாருங்கள்

    ReplyDelete
  21. சிந்தனையைத் தூண்டும் ஒரு அற்புதமான பதிவு. தமிழர் என்னும் அடையாளத்தைப் பதியாமல் சாதியையும் மதத்தையும் பதியும் பெயர்களில் எல்லாமே இருக்கிறது, இருக்கவேண்டிய தமிழின உணர்வு தவிர.

    ReplyDelete
  22. \\\\ கீதமஞ்சரி said...
    சிந்தனையைத் தூண்டும் ஒரு அற்புதமான பதிவு. தமிழர் என்னும் அடையாளத்தைப் பதியாமல் சாதியையும் மதத்தையும் பதியும் பெயர்களில் எல்லாமே இருக்கிறது, இருக்கவேண்டிய தமிழின உணர்வு தவிர.///

    மிக்க நன்றி தோழர். கல்வி குறித்த் oஒரு நூல் எழுத வேண்டும். அதற்கு உங்கள் தொடர் உதவும்

    ReplyDelete
  23. அன்பரசன்April 30, 2012 at 12:46 PM

    சிறப்பான கட்டுரை....
    பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்....

    ReplyDelete
  24. அன்பரசன்April 30, 2012 at 1:02 PM

    சிறப்பான கட்டுரை....
    பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்....

    ReplyDelete
  25. மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  26. பெயர் வெறுமனே பெயரல்ல என்பதோடு அதன் பின் இருக்கும் அரசியல் குறித்தும் தெளிவாய் எழுதியது அருமை.. தோழர்.அ.கு. சொன்னது போல இந்த விவாதம் விரிவுபடுத்தப்பட வேண்டும். தொடர்ந்து எழுதுங்கள். எழுத்து, சமூகம் குறித்தானதாகவும் அதன் சமூகத்தின் அவலங்களை அம்பலபடுத்துவதாகவும் இருத்தல் வேண்டும் என்பதோடு ஒன்றி இருக்கும் உங்கள் எழுத்து தொடர்க..

    ReplyDelete
  27. \\\ SFI North Chennai said...
    பெயர் வெறுமனே பெயரல்ல என்பதோடு அதன் பின் இருக்கும் அரசியல் குறித்தும் தெளிவாய் எழுதியது அருமை.. தோழர்.அ.கு. சொன்னது போல இந்த விவாதம் விரிவுபடுத்தப்பட வேண்டும். தொடர்ந்து எழுதுங்கள். எழுத்து, சமூகம் குறித்தானதாகவும் அதன் சமூகத்தின் அவலங்களை அம்பலபடுத்துவதாகவும் இருத்தல் வேண்டும் என்பதோடு ஒன்றி இருக்கும் உங்கள் எழுத்து தொடர்க..////////

    மிக்க நன்றி தோழர்.

    இதில் இரண்டு விஷயங்களுக்கான விவாதங்களை எதிர் நோக்குகிறேன்

    1) பாரதியை ஏற்று பாரதி தாசனை தீண்டத் தயங்கும் அல்லது மறுக்கும் கயமை
    அதேபோல பாரதி தாசனை ஏற்று பாரதியை நிராகரிக்கும் போக்கு இவற்றிற்கு எதிரான விவாதங்கள்

    2) பெயருக்குள் புதைந்து கிடக்கும் ஜாதி, ஜாதி அரசியல், ஆணவம், ஆதிக்கம், அடக்குமுறை குறித்த விமர்சனங்கள்

    வந்தால் மகிழ்வேன்

    ReplyDelete
  28. ilangovan balakirshnanApril 30, 2012 at 5:46 PM

    நல்ல பதிவு. சொற்கள் ஒவ்வொன்றும் அது அதற்கான வீரியத்தை தன்னகத்தே கொண்டவை.

    முன்முடிவுகள் இல்லாமல் பார்ப்பது என்பது எல்லோராலும் எல்லா நேரமும் சாத்தியப்படுவதில்லை.

    பாரதியார், பாரதி தாசனார் பற்றிய குறிப்புகள் அருமை.

    பெயரில் என்ன இருக்கிறது என்று அப்படி லேசாய் எதையும் எடுத்துவிட முடியாது... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. மிக்க நன்றி இளங்கோ

    ReplyDelete
  30. பெயரில் என்ன இருக்கிறது?. ஆனால் பெயர் மட்டுமே தனியாக எதையும் செய்யும் என்பதில் உடன்பாடு இல்லை. இந்தியாவில் எத்தனையோ லெனின் ஸ்டாலின் சேகுவாரா இருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள். பெரியாரும் பாரதிதாசனும் அடையலாம் கண்டுகொள்ளப்பட்டது அவர்களுடைய பெயர்களால் அல்ல அவர்கள் செய்த காரியத்திற்காக, என் பெயரை வைத்துதான் என்னை புரிந்துகொள்கிறார்கள் என்றால் நான் சமுதாயத்தில் அடையாலபடுத்திகொள்ளவில்லை என்பதே அதன் பொருள் என நினைக்கிறேன் தோழர்.

    ReplyDelete
  31. \\\\ Christopher said...
    பெயரில் என்ன இருக்கிறது?. ஆனால் பெயர் மட்டுமே தனியாக எதையும் செய்யும் என்பதில் உடன்பாடு இல்லை. இந்தியாவில் எத்தனையோ லெனின் ஸ்டாலின் சேகுவாரா இருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள். பெரியாரும் பாரதிதாசனும் அடையலாம் கண்டுகொள்ளப்பட்டது அவர்களுடைய பெயர்களால் அல்ல அவர்கள் செய்த காரியத்திற்காக, என் பெயரை வைத்துதான் என்னை புரிந்துகொள்கிறார்கள் என்றால் நான் சமுதாயத்தில் அடையாலபடுத்திகொள்ளவில்லை என்பதே அதன் பொருள் என நினைக்கிறேன் தோழர்./////

    உங்களுக்குத் தெரியுமோ என்னவோ இங்கு எங்கள் ஊருக்கு அருகில் மங்களேஸ்வரன் என்று பெயர் வைத்தமைக்காக கட்டி வைத்து உரித்தெடுத்த சம்பவம் 5 ஆண்டுகளுக்கு முன் நடந்தது.
    நாமும் பாலபாரதி வந்த போது சன்னமாய் ஒரு எதிர்ப்பியக்கம் நடத்தினோம்.

    சே கேஸ்ட்ரோ எல்லாம் இங்கு வைக்கலாம். ஆனால் எங்கள் ஊரில் தலித்துகள் இன்னும் நல்ல பெயர் வைக்கத் தயங்குகிறார்கள்.

    நான் கோவிலுக்குப் போய் 34 ஆண்டுகள் ஆனாலும் என் பெயர் என்னை இன்னமும் கிருஸ்தவனாகவே அடையாளப் படுத்துகிறதுதோழர்

    ReplyDelete
  32. பெயருக்குள் ஜாதியும், ஜாதி அரசியலும், ஆணவமும் அடக்குமுறையும் அடிமைத்தனமும் இருக்கிறது என்பதெல்லாம் தெரிந்திருந்தும் பெயர் குறித்து பெரிதாய் நான் எப்போதும் அலட்டிக் கொண்டதில்லை.

    உண்மைகளை உங்களுக்கே உரித்தானே பாங்கில் சொன்ன விதம் அருமை...சமுக சிந்தனை தொடரட்டும்

    ReplyDelete
  33. \\\\\ Vazeer Ali said...
    பெயருக்குள் ஜாதியும், ஜாதி அரசியலும், ஆணவமும் அடக்குமுறையும் அடிமைத்தனமும் இருக்கிறது என்பதெல்லாம் தெரிந்திருந்தும் பெயர் குறித்து பெரிதாய் நான் எப்போதும் அலட்டிக் கொண்டதில்லை.

    உண்மைகளை உங்களுக்கே உரித்தானே பாங்கில் சொன்ன விதம் அருமை...சமுக சிந்தனை தொடரட்டும்/////

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  34. “அடிமைப்புத்தியை விரும்பாத நானே ஒருவருக்கு தாசன் என்று சொல்லிக் கொள்வேன் என்றால் அவர் எவ்வளவு உயர்ந்தவராக இருப்பார்......நிச்சயமாக நண்பரே உமது கருத்துகளில் தெளிவும் உண்மையும் பொதிந்து இருக்கிறது .
    முகநூல் நண்பர்கள் என்னை ஒரு கிருஸ்தவனாகப் பார்த்திருக்கிறார்கள். அதனால்தான் கிருஸ்மஸ் அன்று வாழ்த்து அனுப்பிய அவர்கள் பொங்களுக்கு அனுப்ப தவறியிருக்கிறார்கள்.
    நிச்சயமாக உங்கள் கணிப்புகள் சையகவே உள்ளது .உங்கள் எழுத்துகளில் அர்த்தம் குவிந்துள்ளது ..உங்கள் தேடலில் விளையும் பயிர்களில் நானும் பசியாறக் காத்திருக்கிறேன்

    ReplyDelete
  35. \\\\ Anonymous said...
    “அடிமைப்புத்தியை விரும்பாத நானே ஒருவருக்கு தாசன் என்று சொல்லிக் கொள்வேன் என்றால் அவர் எவ்வளவு உயர்ந்தவராக இருப்பார்......நிச்சயமாக நண்பரே உமது கருத்துகளில் தெளிவும் உண்மையும் பொதிந்து இருக்கிறது .
    முகநூல் நண்பர்கள் என்னை ஒரு கிருஸ்தவனாகப் பார்த்திருக்கிறார்கள். அதனால்தான் கிருஸ்மஸ் அன்று வாழ்த்து அனுப்பிய அவர்கள் பொங்களுக்கு அனுப்ப தவறியிருக்கிறார்கள்.
    நிச்சயமாக உங்கள் கணிப்புகள் சையகவே உள்ளது .உங்கள் எழுத்துகளில் அர்த்தம் குவிந்துள்ளது ..உங்கள் தேடலில் விளையும் பயிர்களில் நானும் பசியாறக் காத்திருக்கிறேன் ////

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  36. //“அடிமைப்புத்தியை விரும்பாத நானே ஒருவருக்கு தாசன் என்று சொல்லிக் கொள்வேன் என்றால் அவர் எவ்வளவு உயர்ந்தவராக இருப்பார் என்று யோசிக்க மாட்டாயா பாண்டியா”//

    இது அறிந்த செய்தியாயினும் மீண்டும் மீண்டும் படிக்கும் போது பாரதிதாசனின் மீது பற்று கூடுகிறது. பாரதியின் மீது பக்தியே கூடுகிறது. அருமையான கட்டுரை எட்வின் அவர்களே. எனக்குத் தெரியும் தாங்கள் சாதி மதத்திற்குள் அடங்காதவர் என்று...மற்றவர்கள் இப்போது அறிவர்.

    ReplyDelete
  37. மிக்க நன்றி ஆதிரா

    ReplyDelete
  38. என் பெயரை யாரேனும் புனைபெயரா...? அப்பா வைத்த பெயர் என்ன? என்று கேட்கும் போது எனக்கும் கோவம் வருகிறதே...
    ஆம் கோபம்...பெயரில் இருக்கிறது...

    ReplyDelete
  39. மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  40. பிராமின் என்பதற்காக பாரதி, அவரை விட குறைந்த கவிஞர் என்றோ என்னால் ஒத்துக்கொள்ள முடியாது.அவர் பாரதி.இவர் பாரதி தாசன்.அதுதான் அவர்களின் உயரங்கள் குறித்தான என் அளவீடும்.ஒருவர் கொண்டிருக்கும் கொள்கைக்கே அவர் எவ்வளவு உண்மையானவர் என்பதை துல்லியாமாகக சொல்ல இயலாத போது பெயரை வைத்து எவரையும் எடைபோடுதல் சாத்தியமல்ல என்றே கருதுகிறேன்.அதோடு,நீங்கள் குறிப்பிட்ட அந்த கிறிஸ்துமஸ் வாழ்த்தில் எந்த தவறும் இல்லை.அது அன்பின் வெளிப்பாடு மட்டுமே!ஆத்திக - நாத்திக கருதுகோள் எல்லாமே தனிமனித பிரச்சனைகள் என்பதே என் கருத்து.அதையும் பெயரையும் ஏன் குழப்பிக் கொள்ள வேண்டும்?அதையும் மீறி தன் பெயர் தனிப்பட்ட எந்த சாதி,மத அடையாளத்தையும் வெளிபடுத்தக் கூடாது என எண்ணுபவர்கள் சுலபமாக தங்கள் பெயரை மாற்றிக்கொள்ளலாமே! இது யாவுமே என் தனிக்கருத்துதான்.அன்புக்கும் நட்புக்கும் எந்த எல்லைக்கோடுகளும் தடையல்லவே!அன்பும் நட்பும் மனிதநேயமும் மட்டுமே ஒரு அருமையான சமுதாயத்தை,புத்துலகை உருவாக்கும்!அதன் பிரஜைகளாக என்றும் நாமிருப்போமே!என்றும் நேசமிகு எஸ்.ராஜகுமாரன். 2 - 5 - 2012

    ReplyDelete
  41. பிராமின் என்பதற்காக பாரதி, அவரை விட குறைந்த கவிஞர் என்றோ என்னால் ஒத்துக்கொள்ள முடியாது.அவர் பாரதி.இவர் பாரதி தாசன்.அதுதான் அவர்களின் உயரங்கள் குறித்தான என் அளவீடும்.ஒருவர் கொண்டிருக்கும் கொள்கைக்கே அவர் எவ்வளவு உண்மையானவர் என்பதை துல்லியாமாகக சொல்ல இயலாத போது பெயரை வைத்து எவரையும் எடைபோடுதல் சாத்தியமல்ல என்றே கருதுகிறேன்.அதோடு,நீங்கள் குறிப்பிட்ட அந்த கிறிஸ்துமஸ் வாழ்த்தில் எந்த தவறும் இல்லை.அது அன்பின் வெளிப்பாடு மட்டுமே!ஆத்திக - நாத்திக கருதுகோள் எல்லாமே தனிமனித பிரச்சனைகள் என்பதே என் கருத்து.அதையும் பெயரையும் ஏன் குழப்பிக் கொள்ள வேண்டும்?அதையும் மீறி தன் பெயர் தனிப்பட்ட எந்த சாதி,மத அடையாளத்தையும் வெளிபடுத்தக் கூடாது என எண்ணுபவர்கள் சுலபமாக தங்கள் பெயரை மாற்றிக்கொள்ளலாமே! இது யாவுமே என் தனிக்கருத்துதான்.அன்புக்கும் நட்புக்கும் எந்த எல்லைக்கோடுகளும் தடையல்லவே!அன்பும் நட்பும் மனிதநேயமும் மட்டுமே ஒரு அருமையான சமுதாயத்தை,புத்துலகை உருவாக்கும்!அதன் பிரஜைகளாக என்றும் நாமிருப்போமே!என்றும் நேசமிகு எஸ்.ராஜகுமாரன். 2 - 5 - 2012

    ReplyDelete
  42. மிக்க நன்றி தோழர்

    நீங்கள் சொன்னதுன் போல் எதையும் மாற்றிக் கொள்ளலாம்

    மதத்தைக் கூட

    ஆனால் என்ன செய்தாலும் ஒருவன் தனது ஜாதியை மாற்ற முடியாது

    கிருஸ்மஸ் அன்று எனக்கு வாழ்த்து அனுப்பியதில் குறை இல்லை தோழர்

    ஆனால் ஒரு விஷயம்,

    அதே நண்பர்கள் எனக்கு பொங்கல் வாழ்த்து அனுப்பவில்லை தோழர்

    எனில்

    பொங்கலன்று அவர்களுக்கு அன்பு இல்லாமல் போனதா? என்று பார்த்தால்

    கிருஸ்மஸ் அன்று வாழ்த்து அனுப்ப வைத்ததும் பொங்களன்று எனக்கு வாழ்த்து அனுப்பத் தேவை இல்லை என்றும் அவர்களை இயக்கியது என் பெயர்தான்.

    ஆக பெயரில் ஒரு அரசியலும் இருக்கிறது

    ReplyDelete
  43. அன்புத் தோழருக்கு
    எதையும் தொடங்க ஒரு இடம் வேண்டும், என்பதுபோல் அற்புதமாக கவிதையில் தொடங்கி, முகப் புத்தகத்தில் நம்மை குத்துமதிப்பாகப் புரிந்துகொண்டவர்கள்ப்பற்றியும் சொல்லி, பெயர் பற்றிய பார்வை நன்றாக இருக்கிறது.
    பெயரில் என்ன இருக்கிறது?
    நிறைய இருக்கிறது,
    என்பதற்று நீங்களே இன்னும் பல உதாரணங்களை உங்கள் வாழ்க்கையில் இருந்தே சொல்ல முடியும். இது எல்லோருக்கும் சாத்தியமே. எங்கள் தோழர் கு.பா.விற்கு ‘தனிநபர் கடன்’ வழங்கிய வங்கி மேலாளர் இவர் மற்றும் இவரது மனைவியின் பெயரை தொடர்பற்று சாதிப் பெயராகப் புரிந்து கொண்டதை சுவைபடச் சொல்லியிருக்கிறார் - பலமுறை.
    பெயரில் நிறைய இருக்கிறது.
    மேதின வாழ்த்துக்கள் யாரும் தங்களுக்குச் சொன்னார்களா? சொல்லவே இல்லையே.
    ஏனெனில் இடதுசாரிகளில் பலரும் ஆயுதபூஜைக்கு பட்டிமன்றம் நடத்த தொலைக்காட்சியில் அழைத்ததற்காக அதனையே தொழிலாளர் தினமாக அறிவித்து வருகிறார்கள். அங்கேயும் தொழிலாளர் தினம் என்ற பெயரில் நிறைய இருக்கிறது.
    நல்ல பதிவு வாழ்த்துக்கள் தோழர்.
    என்றென்றும் அன்பு

    ReplyDelete
  44. மிக்க நன்றி தோழர்

    அவர்கள் வாயை பேனாவை மூளையை என்று சகலத்தையும் விற்கத் தொடங்கிய பிறகு அவர்களிடம் மே தின வாழ்த்துக்களை எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்?

    ஆனாலும் கட்சியின் அடிமட்ட ஊழியன் மே தினத்தின் உயிர்ப்பை இன்னமும் சுமந்து பயணிக்கவே செய்கிறான் தோழர்

    ReplyDelete
  45. "What's in a name? That which we call a rose; By any other name would smell as sweet," said Shakespeare. But there are various theories behind this thought "whats in a name" - the most profound being the relevance of sound, and this sound impacts the mind of the one who pronounces your name. There are a lot of theories behind it.

    Your blog post added yet another perspective to it. Very nice, thought-provoking post.

    Keep it flowing!.

    ReplyDelete
  46. மிக்க நன்றி கோமதி

    ReplyDelete
  47. தாங்கள் ஒரு நாத்திகர் என்பதில் நான் மட்டுமல்ல எல்லோருமே பெருமைப்படவேண்டிய செய்திதான். ஆனால் தங்களை சரியாகப் புரிந்துகொள்ளாமல் பெயரை வைத்தே தாங்கள் ஒரு கிறித்தவர் என்று சிலர் நினைத்துக்கொண்டால் அது அவர்கள் செய்யும் தவறு. நீங்கள் மட்டுமல்ல அவர்கள் வணங்கும் இயேசுநாதரும் ஒரு நாத்திகர்தான் என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள்.

    ReplyDelete
  48. மிக்க நன்றி தோழர் விமலதாசன்

    ReplyDelete
  49. கட்டுரையை படித்தேன்.
    மிக அழகாக (edit)நறுக்கி, கருத்தை ஒட்டிய வாசகங்கள்.
    படித்தவுடன் அப்படியே மனதில் பதிந்துவிட்டது.
    பெயருக்குப் பின்னால் எல்லாம் இருக்கின்றன.

    ReplyDelete
  50. பெயரில் என்ன இருக்கிறது?

    அழகான கவிதை...

    தொடர்ந்து பாரதிதாசன் பெயரைப் பற்றின கட்டுரையும் அறியத் தந்ததற்கு நன்றி தோழர்..

    ReplyDelete
  51. \\\\ Radha Krishnan said...
    கட்டுரையை படித்தேன்.
    மிக அழகாக (edit)நறுக்கி, கருத்தை ஒட்டிய வாசகங்கள்.
    படித்தவுடன் அப்படியே மனதில் பதிந்துவிட்டது.
    பெயருக்குப் பின்னால் எல்லாம் இருக்கின்றன.////

    மிக்க நன்றி தோழர் ராதாகிருஷ்ணன்

    ReplyDelete
  52. \\\ Venkadesan said...
    பெயரில் என்ன இருக்கிறது?

    அழகான கவிதை...

    தொடர்ந்து பாரதிதாசன் பெயரைப் பற்றின கட்டுரையும் அறியத் தந்ததற்கு நன்றி தோழர்..////

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  53. This comment has been removed by the author.

    ReplyDelete
  54. பெயரை காப்பத்துங்கப்பா என சொல்லும் உள்நோக்கம் இதில் இருக்கு....

    ReplyDelete
  55. ஆமாம் தமிழன் தோழர். அப்படியும் இருக்கலாம்.

    ReplyDelete
  56. பெயரில் எல்லாம் இருக்கிறது. ஒன்றுமே இல்லை. அணுகும் முறைதான் தெளிவிக்கும். கல்வி பற்றி எழுத வேண்டும் என்று ஒரு பின்னூட்டத்துக்கு பதில் எழுதி இருக்கிறீர்கள். கொஞ்சம் விரிவாகவே சிந்தனை பரிணாமங்கள் என்ற பதிவு எழுதி இருக்கிறேன். பிறர் பதிவுகளைப் படிக்க மாட்டீர்களா.?

    ReplyDelete
  57. யாருங்க அய்யா அப்படிச் சொன்னது. கணினியைப் பொறுத்தவரை என் ஞானம் குறைவு. எழுதுவேன் லிங்க் கொடுப்பேன், லிங்கோடு வந்தால் க்ளிக் செய்து வாசிப்பேன். அவ்வளவே.

    உங்கள் நண்பரது ரைஸ் கேக் பற்றிக் கூட பேசிக் கொண்டிருந்தேனே வீட்டில்

    ReplyDelete
  58. பெயருக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அரசியலையும் அதன் வக்கிரத்தையும் தோலுரிக்கும் பதிவு... மேலும் இதுபோன்ற விவாதங்களை முன்னெடுத்து செல்வோம்...

    ReplyDelete
  59. அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும். மிக்க நன்றி மதுசூதன்

    ReplyDelete
  60. //”பாரதியைப் பற்றி மற்றவர்கள் தவறாகக் கருதுவது போலவே நீயும் கருதுகிறாயே!அவரோடு நான் பன்னிரெண்டு ஆண்டுகள் பழகியிருக்கிறேன். அவருடைய உள்ளத்தில் சாதி வேறுபாடு அறவே இல்லை.பிராமணர்களை அவர் துளிக் கூட மதிப்பது இல்லை. அது போக என்னுடைய கவிதைகளில் கிடைக்க்ற முற்போக்கு கருத்துக் க்மளுக்கும் அவரே காரணம்.//

    //பாரதியை எற்றுக் கொண்டாடும் பலர் இன்னமும் பாரதி தாசனைத் தீண்டவேத் தயங்குகிறார்கள் என்பதில் ஏகத்திற்கும் உண்மை இருக்கவே செய்கிறது.

    பாரதி தாசனை ஏற்றுக் கொண்டாடும் பலர் பாரதியை நிராகரிக்கிறப் போக்கும் இருக்கவே இருக்கிறது.//

    //பாம்பையும் பார்ப்பனையும் சேர்த்துப் பார்த்தால் பார்ப்பானை அடித்து விட்டு பாம்பை அடி” என்பதில் அவர் எப்போதும் சமரசமற்று இருந்தார். இதை அவர்தான் சொன்னார் என்று சொல்பவர்களும் உண்டு.//

    ஒரு விவாதத்தை கிளப்பும் கட்டுரையை சுவாரஸ்யமாக ஆரம்பித்து நிறைய தகவல்களையும் கொடுத்து ரசிக்கவும் சிந்திக்கவும் விவாதிக்கவும் செய்திருக்கிறீர்கள்..

    ReplyDelete
  61. /// sathish prabu said...
    //”பாரதியைப் பற்றி மற்றவர்கள் தவறாகக் கருதுவது போலவே நீயும் கருதுகிறாயே!அவரோடு நான் பன்னிரெண்டு ஆண்டுகள் பழகியிருக்கிறேன். அவருடைய உள்ளத்தில் சாதி வேறுபாடு அறவே இல்லை.பிராமணர்களை அவர் துளிக் கூட மதிப்பது இல்லை. அது போக என்னுடைய கவிதைகளில் கிடைக்க்ற முற்போக்கு கருத்துக் க்மளுக்கும் அவரே காரணம்.//

    //பாரதியை எற்றுக் கொண்டாடும் பலர் இன்னமும் பாரதி தாசனைத் தீண்டவேத் தயங்குகிறார்கள் என்பதில் ஏகத்திற்கும் உண்மை இருக்கவே செய்கிறது.

    பாரதி தாசனை ஏற்றுக் கொண்டாடும் பலர் பாரதியை நிராகரிக்கிறப் போக்கும் இருக்கவே இருக்கிறது.//

    //பாம்பையும் பார்ப்பனையும் சேர்த்துப் பார்த்தால் பார்ப்பானை அடித்து விட்டு பாம்பை அடி” என்பதில் அவர் எப்போதும் சமரசமற்று இருந்தார். இதை அவர்தான் சொன்னார் என்று சொல்பவர்களும் உண்டு.//

    ஒரு விவாதத்தை கிளப்பும் கட்டுரையை சுவாரஸ்யமாக ஆரம்பித்து நிறைய தகவல்களையும் கொடுத்து ரசிக்கவும் சிந்திக்கவும் விவாதிக்கவும் செய்திருக்கிறீர்கள்.. ///

    மிக்க நன்றி சதீஷ்.

    ReplyDelete
  62. சமீப நாட்களில் நான் படித்ததில்...ஆகச்சிறந்த கட்டுரையாக இதனைக் கொள்கிறேன் தோழர்!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சுரேகா

      Delete
    2. அதிகமாய் மகிழ்ந்தேன் நான்

      Delete
  63. மிக நல்ல கட்டுரை தோழர் .

    ReplyDelete
  64. எனக்கும் ஒரு அனுபவம் நேர்ந்தது .

    என் பெயரை மட்டுமே வைத்து என்னை பார்க்காமல் பேசி வந்தார் என் உயர் அலுவலர்.

    அவர் ஒருமுறை என் அலுவலகத்திற்கு வந்த பொழுது என்னைப் பார்க்க நேர்ந்தது.

    இந்த சந்திப்பிற்குப் பிறகு அவர் பேசும்பொழுது ஒரு கூடுதல் மரியாதையை இப்போது என்னால் உணர முடிகிறது.

    கண்டிப்பாக பெயரில் இருக்கிறது....

    --பார்த்தசாரதி

    (ரஜினி நடித்த சிவாஜி படத்தில் வரும் ஆதி கேசவன் எனும் கதாபாத்திரத்தின் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர். சத்தியமாய் பெயரில் இருக்கவே இருக்கிறது.

      Delete
  65. பெயரில் இருக்கிறது ---very good article on social thoughts. when many religion friends inclusive of atheists mingle in the way of wishes, there would be great arena of thinkers. may be order of the day towards harmony. on Bharathi Dasan, ur view is correct. but, the great problem s with pseudo-Brahimns. proud of ur page.

    ReplyDelete
  66. பெயரில் இருக்கிறது ---very good article on social thoughts. when many religion friends inclusive of atheists mingle in the way of wishes, there would be great arena of thinkers. may be order of the day towards harmony. on Bharathi Dasan, ur view is correct. but, the great problem s with pseudo-Brahimns. proud of ur page.

    ReplyDelete
  67. பெயர் மட்டுமே நம்மை முன்னிலை படுத்துகிறது ஒருவரை நினைவில் கொண்டு வர அவரின் பெயர்தான் அடையாளமாகிறது ஆகவே பெயரற்ற ஒன்றை நம்மால் உள்வாங்கிக்கொள்ள முடியாது முதல் கவிதை அற்புதம் ஒவ்வொரு வார்த்தையும் நமக்குள் எத்தனை பாவனைகளை கொண்டு வருகிறது கவிதையின் வரிகளை மீண்டும் ஒருமுறை படித்தால் உணருவீர்கள்
    "சேரி
    பறையன்
    தேவடியாள்
    பீ, மூத்திரம், கொசு
    பன்னி
    கழுதை, கருவாடு
    பூணூல்
    அப்பம், வடை, தயிர் சாதம்"

    ஒவ்வொரு பெயரும் ஓராயிரம் அதிர்வுகளை உள்ளுக்குள் அதிர செய்கிறது ஆக சிறந்த பதிவையும் பாரதிதாசனின் அகத்தையும் படம் பிடித்து காட்டியதற்கு நன்றி

    ReplyDelete
  68. arummaiyana katturai.unarchipoorvamana pudhia thagavalgal. Bharathidhasanin kolgaipidippai thagundha sandrukalodu sirappaga ezhudhiyirukkireerkal thozhar. vazhthukkal.

    ReplyDelete
  69. // யாரையும் அவராகப் பார்க்காமல் சார்ந்து பார்த்து மிகைப் படக் கொண்டாடுவதோ அல்லது நியாயமே இல்லாத அளவிற்கு நார் நாராய்க் கிழிப்பதோதான் இன்றைய மரபாக இருக்கிறது.
    //
    :)
    நம்மைப்பற்றி நம்மை அறிமுகம் செய்ய முதலில் பெயரைத்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது,எடை போட்டுவிடுகிறோம் அல்லது எடைபோடப்பட்டு விடுகிறோம் ஜாதி,மதம்,இனம் என சகலத்தையும் அந்த ஒற்றை பெயர் கொண்டு !
    பெயரில் நிறையவே இருக்கிறது

    ReplyDelete
  70. உண்மை தான் அய்யா. எனது மற்றும் என் கணவர் பேரை கேட்கிற சங்கர நேத்ராலய ரிசப்சனிஸ்ட் மாமி சித்த காலம்பரே வாரேல என்கின்றனர்!!!!!!!!!!.நான் புதுகை கஸ்தூரி ரெங்கனின் மனைவி மைதிலி .பெயரில் எல்லாமே இருக்கிறது .

    ReplyDelete
    Replies
    1. இருக்கு தோழர் நிச்சயமா தோழர்.

      Delete
  71. ஆருமையான பதிவு, என்னை யோசிக்க வைத்தது.அத்தனையும் உன்மை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர் ராஜா

      Delete
  72. கட்டுரை மிக அருமை! , பார்ப்பனர், வடமொழி, நாத்திகம்.....இவையெல்லாம் இன்றைய தலைமுறைக்குத் தேவையில்லாத வார்த்தைகளாகி விட்டன.!!

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...