Tuesday, April 29, 2025
தயவு செய்து படிக்க வேண்டியதைப் படிங்க
Tuesday, April 22, 2025
அவர் வேந்தரா இல்லையா
Saturday, April 19, 2025
நீங்கள் செய்வதாக சொன்னதன்றி
தேர்தல் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் வசதி உண்டு. தபால் மூலம் வாக்களிப்பதில் நிறைய
சிரமங்களை நாங்கள் எதிர்கொள்ளவும் நேர்ந்தது. பலரால் வாக்களிக்க முடியாத சிக்கலும்கூட ஏற்பட்டது.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது அப்படியானதொரு வாக்குச்சாவடியில் சான்றொப்பமிடும் ஊழியர்களில் ஒருவனாக (எதற்கு அதிகாரி வேஷமெல்லாம்) பணியாற்றினேன்.
சான்றொப்பம் பெற்றுக்கொண்ட பலர் எங்கள் மேசையிலேயே பேலட் பேப்பரை வைத்து உதயசூரியனுக்கு வாக்களித்தனர். ரகசியமாக வாக்களியுங்கள் என்று விரட்டினாலும் இதிலென்ன சார் ரகசியம் வேண்டிக் கிடக்கிறது என்று சொல்லிக்கொண்டே உதயசூரியனுக்கு வாக்களித்தவர்களும் உண்டு.
விரட்டி விரட்டி அப்போது திமுகவிற்கு வாக்களித்த அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்தான் இன்று, ”திமுக தனது கடைசி பட்ஜெட் கூட்டத்தை நடத்திக்கொண்டிருப்பதாகவும் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வாக்குகளை சேர்த்தால் நாற்பது லட்சம் வாக்குகளுக்குமேல் தேறும் என்றும் அவற்றில் ஒன்றுகூட திமுகவிற்கு விழாமல் பார்த்துக்கொள்வோம் என்று சமூக வலைதளங்களில் குமுறிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த அளவிற்கு கொதி நிலையில் இருக்கும் அவர்கள் திமுக அரசாங்கம் மோசமான அரசாங்கம் என்றோ, மக்கள் விரோத அரசாங்கம் என்றோ, சமூகநீதிக்கு எதிரான அரசாங்கம் என்றோ எந்த இடத்திலும் ஒருபோதும் குற்றம் சாட்டுவதில்லை.
2) செலவற்ற கோரிக்கைகளைக்கூட காதுகொடுத்து கேட்க மறுப்பது
3) அதற்கான போராட்டங்களை கிஞ்சிற்றும் மதிக்காமல் அலட்சியப்படுத்துவது
4) தேவையே இல்லாமல் புதிய சிக்கல்களை உருவாக்கியது
ஜோசப் மார்த்தி “Instead, the school should go to the student” என்று சொல்வார். பள்ளிகளை குழந்தைகளை நோக்கியும் மருத்துவத்தை வீடுகளை நோக்கியும் இந்த அரசாங்கம் நகர்த்தத் தொடங்கி இருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியோடே இந்தக் கூடுதல் சுமையை இவர்கள் ஏற்கிறார்கள். ஆனால் தங்களது வாழ்க்கை தெருவிற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக தெருவிற்கு வந்து போராடும் ஊழியர்களை இந்த அரசு கண்டுகொள்ளவே இல்லை.
35 விழுக்காடு காலிப்பணியிடங்கள் என்றால் 35 விழுக்காடு சம்பளப் பணம் மிச்சம் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் இப்படிக் குவியும் பணத்தில் இருந்து அங்கன்வாடிப் பணியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், சத்துணவு ஊழியர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க இயலாதா என்ற இவர்களின் கேள்வியின் நியாயம் சிறுபிள்ளைகளுக்கே புரியுமே, முதல்வருக்குப் புரியாதா?
Thursday, April 17, 2025
திருநெல்வேலியில் ஒரு பள்ளியில்
ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை அரிவாளால் வெட்டியிருக்கிறான்
Wednesday, April 16, 2025
65/66, காக்கைச் சிறகினிலே, ஏப்ரல் 2025
19.03.2025 அன்று அதிகாலை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பி இருக்கிறார். முதலில் அவருக்கு நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம். அவரது திரும்புகை திட்டமிட்டபடி சரியான நேரத்தில் இயல்பாக நடந்து முடிந்திருக்கிறது.
Tuesday, April 15, 2025
ரிவர்னா தண்ணி இருக்கனுமாம்
கிரிஷ் சார் இன்று கல்லைணக்குப் போயிருக்கிறார்
தண்ணீர் இல்லை
ரிவர்னா தண்ணி இருக்கனுமாம்
டேம்னா நெறைய தண்ணி இருக்கனுமாம்
தனக்கு ரிவர் பூரா தண்ணி வேணும்னு
அழுது அடம் பண்ணியிருக்கிறார்
நல்வாய்ப்பாக,
குல்பி ஐஸ்காரர் வந்து சாரிடமிருந்து எல்லோரையும் காப்பாற்றி இருக்கிறார்
14.042025
Monday, April 14, 2025
கொஞ்சம் பொறுங்கள் மார்க்ஸ்
அன்பின் மார்க்ஸ்,
Friday, April 11, 2025
மொழி உயிரனையது
17.07.1903
ரஷ்ய சமூக- ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது காங்கிரஸ் பிரஸ்சல்சில் தொடங்குகிறது
கிட்டத்தட்ட 13 அமர்வுகள் அங்கு நடந்த நிலையில்
காவல்துறை அடாவடி செய்யவே
அடுத்த அமர்வுகள் லண்டனுக்கு மாற்றப்படுகிறது
கிட்டத்தட்ட அனைத்து அமர்வுகளுமே போல்ஷிவிக்குகளுக்கும் மென்சிவிக்குகளுக்கும் இடையிலான போராட்டங்களால் நிறைந்து கசிகிறது
மென்சிவிக்குகளின் தலைவராகவே காங்கிரஸ் முழுவதும் செயல்படுகிறார்
மொழிகளின் சமத்துவம் குறித்து பிரச்சினையிலும் குடிமக்களின் சம உரிமையே போதுமானது என்கிறார் மாரித்தவ்
இதை மிகச் சரியாக இதை எதிர்கொள்கிறார் லெனின்
தேசிய இனங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகள் உள்ளன
சில தேசிய இன மக்கள் தங்களது தாய்மொழியைப் பயன்படுத்தக் கூடாது என்று தடுக்கப்படுகிறார்கள்
எனவே மொழிகளின் சமத்துவம் என்பது முக்கியமானது என்கிறார்
மொழி உயிரனையது
Thursday, April 10, 2025
அவர்களுக்கு பிரச்சினை என்றால்
இன்று இருவர் கூறிய இரண்டு விஷயங்களை ஸ்டாலின் சார் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது
முதல் விஷயத்தை சொல்லியிருப்பவர் மருத்துவர் அய்யா
இன்றே துணை வேந்தர்களை நியமித்து விடுங்கள். பிரச்சினை இருந்தால் அவர்கள் கோர்ட்டுக்கு போகட்டும் என்கிறார்
இன்னொருவர் தோழர் தராசு ஷ்யாம்
ஆளுனருக்கு ஒரு மசோதா வருகிறது
ஒப்புதல் கொடுக்க வேண்டும்
அல்லது நிராகரிக்க வேண்டும்
தேவைப்படும் பட்சத்தில் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்
ஆளுநர் திருப்பி அனுப்பியபிறகு அதை மீண்டும் சட்டமன்றம் நிறைவேற்றி அவருக்கு அனுப்பினால் அதற்கு ஒப்புதல் தருவதைத் தவிர வேறு வழி இல்லை
இரண்டாவது முறையாக வரும் மசோதாவை திருப்பி அனுப்பவோ குடியரசுத் தலைவருக்கு அனுப்பவோ அவருக்கு அதிகாரம் இல்லை
சரி, இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினாலும் அந்த மசோதாவை குடியரசுத் தலைவரேகூட நிராகரிக்க முடியாது என்கிறது தீர்ப்பு
எனவே நீட் விலக்கு குறித்த கோரிக்கையை குடியரசுத்தலைவருக்கு ஆளுனர் அனுப்பியதும் தவறு
நீட் விலக்கை குடியரசுத் தலைவர் நிராகரித்ததும் தவறு
எனவே இன்றுமுதல் தமிழ்நாட்டில் நீட் இல்லை என்று அறிவியுங்கள் என்றும்
அவர்களுக்கு பிரச்சினை என்றால் அவர்கள் கோர்ட்டிற்கு போகட்டும் என்று ஷ்யாம் சொல்கிறார்
இவை இரண்டையும் ஸ்டாலின் சார் பரிசீலிக்க வேண்டுகிறோம்
10.04.2025
அவர் பெயிலென்றே கொள்வோம்
இந்த கட்டிங்கை வைத்து தோழர் M S Rajagopal கொதித்திருந்தார்
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய முதல் பேச் மாணவன் நான்
1978 இல் எழுதினேன்
+2 விலும் முதல் பேச் நான்
இது 1980
என்னைவிட குறைந்தபட்சம் 10 வயதேனும் மூத்தவர் ஸ்டாலின் சார்
எனவே அவர் 10 ஆம் வகுப்பு படித்தபோது பொதுத்தேர்வு என்பது 11 ஆம் வகுப்பில்தான்
11 + 1 +3 என்பது அன்றைய வடிவம்
அவரது 10 ஆம் வகுப்பு மதிப்பெண் அவரே நினைத்தாலும் வாங்குவது கடினம்
தமிழ் - 22ஆ
ஆங்கிலம் 18
கணக்கு 33
அறிவியல் வரலாறு 39
என்று ஒரு மதிப்பெண் பட்டியலை வைத்திருக்கிறார்கள்
ஏதோவொரு பத்திரிக்கை கட்டிங்தான் அது
அது என்ன அறிவியல் வரலாறு 39 என்று தெரியவில்லை
சரி
அறிவியலில் 39
வரலாறு 39 என்று கொள்வோம்
அந்தக் காலத்தில்
வரலாறு பூகோளம்தான் வரலாறு இல்லை
அப்போது elective என்று ஒரு விருப்பப் பாடம் இருக்கும்
அது எங்கு போனது என்று தெரியவில்லை
அது சரி
ஆமாம், அவர் பெயிலென்றே கொள்வோம்
அதற்கென்ன?
அவர் செய்த மாபெரும் பிழைகளுள் ஒன்று சாம்சங் விசயம்
அவரை விமர்சிப்பது என்றால் சாம்சங் பிரச்சினையில் ஸ்டாலின் நிலை குறித்து விமர்சித்திருக்கவேண்டும்
12 மணிநேர வேலைத் திட்டத்தை அவர் கொண்டுவர முனைந்தபோது அதை விமர்சித்திருக்க வேண்டும்
நேற்று கூட நடுக்காவிரி காவல் நிலையம் முன்பு இரண்டு பெண்கள் நஞ்சருந்தி அதில் ஒருவர் இறந்திருக்கிறார்
காவல்துறையின் அவலம் குறித்து விமர்சிக்கலாம்
போங்கப்பா
ஏதாவது குட்டிச்சுவர் கிடைத்தால்
முதுகை சொரிந்து கொள்ளுங்கள்
10.04 2025
Wednesday, April 9, 2025
அவர் ஆங்கிலத்தில் பேசட்டும்
இந்தியன் எக்ஸ்ப்ரஸ், ந்யூஸ் டைம், இந்தியா டுடே போன்ற சேனல்களில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கொடுத்துள்ள நேர்காணல்களைப் பார்த்த பிறகு திமுக தலைமைக்கானஎன் கோரிக்கை
ஆளுநரே வேண்டாம் என்று
ஆளுநரின் அதிகாரம் குறித்து 08.04.2025 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து ஒப்பினீயன் தமிழ் சேனலில் தோழர் வல்லம் பஷீர் சொன்ன ஒரு விஷயம் எனக்கான பாடம்
சோசலிச எதிர்ப்பு உரையை...
காங்கிரஸ் இயக்கத்தில் இரட்டை உறுப்பினர் முறை அங்கீரிக்கப் பட்டிருந்த காலம்.
Tuesday, April 8, 2025
இனி நிர்மலா பெயரைக் கேட்டால் அவனது கண்களும் சிவக்கும்
நிதியமைச்சர் நிர்மலானு கேட்ட மாத்திரத்தில் உன் கண்களில் தெரியும் வெறுப்பு நான் எப்போதும் உன்னிடம் பார்க்காதது. ஏன் மாப்ள
உங்களுடையதாகவும் இருக்கலாம்
வாயில் காவலர்களை
வாடகைக்கு அமர்த்தினார்கள்
அவர்கள் சல்யூட்டை
தலையசைத்து ஏற்றுக் கடந்தேன்
ஒருவர்
வாயில் காவலராயிருக்கிறார்
பேச எனக்கு ஏதுமிருந்ததாக
உணரவில்லை நான்
மூன்றாவது வீட்டில்தான்
ஒரு கௌரவ விரிவுரையாளர்
எனக்கென்ன பேச இருந்தது
அரசுப் பேருந்து கனவில் இருக்கும்
தனியார் பேருந்து ஓட்டுனர்
அடுத்த வீட்டில்
அடுத்த வீடு
என்னுடையதாகத்தான் இருக்கவேண்டுமென்ற
அவசியமில்லை
இதைப் படித்துக் கொண்டிருக்கும்
உங்களுடையதாகவும் இருக்கலாம்
Monday, April 7, 2025
கம்யூனிஸ்டுகள் இல்லாவிட்டால் இந்தியா இருக்குமா?
எங்களை கிண்டல் செய்பவர்களுக்கு (விமர்சிப்பவர்களுக்கு அல்ல) எனக்கும் தோழர் யெச்சூரிக்கும் வேறுபாடெல்லாம் இல்லை
Sunday, April 6, 2025
நெகிழ்ச்சியும் நன்றியும்
தங்களிடமிருந்து பிரிந்து வந்த கட்சியின் அகில இந்திய மாநாட்டை வாழ்த்தும் CPI
நெகிழ்ச்சியும் நன்றியும்
மதுரை
06.04.2025
Thursday, April 3, 2025
”கற்க நிற்க தக”
ஜார் மன்னர் தன் குடும்பத்திற்கான சொத்துக்களை கொஞ்சமும் முறையற்ற வகையில் சேர்த்துக்கொண்டிருந்த நேரம். அவரது மனைவி ரியல் எஸ்டேட் வணிகத்தில் என்னென்ன முறைகேடுகளை செய்ய இயலுமோ அத்தனையையும் செய்து சொத்துகளை வாரிக் குவித்துக்கொண்டிருக்க மக்களோ வாழ்வின் விளிம்பு நிலைக்கு சென்றுகொண்டிருந்தார்கள்.
இதை முதலில்.....
அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
-
தேர்தல் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் வசதி உண்டு. தபால் மூலம் வாக்களிப்பதில் நிறைய சிரமங்க...
-
ஜார் மன்னர் தன் குடும்பத்திற்கான சொத்துக்களை கொஞ்சமும் முறையற்ற வகையில் சேர்த்துக்கொண்டிருந்த நேரம். அவரது மனைவி ரியல் எஸ்டேட் வணிகத்தில் ...