Tuesday, January 28, 2014

நிலைத் தகவல் 24



  • கீர்த்தனா அவங்க அம்மா மாதிரி. பயங்கற பக்தி. தூங்கும்போது மண்டியிட்டு ஜெபம் செய்து, காலண்டரில் இருக்கும் ஏசு படத்துக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, அறையின் எல்லாத் திக்கும் திரும்பி காற்றிலே சிலுவைக் குறியிட்டுவிட்டுதான் தூங்குவாள்.

    நேற்றும் அப்படித்தான் , வந்திருக்கும் தங்கை மகள் நிவேதியை தூக்கிக் கொண்டு ஏசு படத்தை வணங்கி முத்தமிட்டவுடன் நிவேதியிட யேசப்பா சொல்லு என்றாள்.

    எங்கள் கிராமத்தில் இப்போது தொடர்ச்சியாக சபரிமலை போய்க் கொண்டே இருப்பார்கள். தினமும் ஒரு பேச் போவார்கள். அனுப்பி வைக்க பஜனைக்கு அம்மாவோடு இவளும் போய் வருவதால் எந்த சாமிப் படத்தைப் பார்த்தாலும் அய்யப்பூ எங்கிறாள்.

    யேசப்பா சொல்லு என்று கீர்த்தி சொன்னதும் குட்டி “அய்யப்பூ” என்றாள்.

    “ இது அய்யப்பா இல்லடீ ”சேசப்பா” சொல்லு”

    “ அய்யப்பூ “

    “ இல்லடீ, சேசப்பா சொல்லு”

    “ அய்யப்பூ”

    “ சேசப்பா “

    “ அய்யப்பூ “

    சலித்துப் போன கீர்த்தி சொன்னாள்,

    “ அய்யப்பா “

    வம்புக்கென்று இப்போது நிவேதி சொன்னாள்,

    “ சேசப்பூ “

    கடகடவென்று விட்டு சிரிக்கவே கேட்டேன்,

    “ ஏம்பா சிரிக்கிற? ”

    “ரெண்டும் ஒன்னுதானே. அதனாலதான்... “

    சிரித்தேன்.

    “ நீங்க ஏன் சிரிக்கிறீங்க ? “

    “ ரெண்டுலயும் ஒன்னும் இல்லதானே. அதனாலதான்... “

    முகநூலில் வாசிக்க

11 comments:

  1. ரெண்டுலயும் ஒன்னும் இல்லதான்
    அருமை தோழரே

    ReplyDelete
  2. அ டடா... குழந்தைகள் சிலநேரம் பெரியவர்களுக்குப் பாடம் நடத்திவிடுவார்கள் என்பதை மீண்டும் காட்டியிருக்கிறாரகள் கடைசி வரிக்கும் அதுக்கு முந்தின வரிக்குமான வேறுபாடுகள்
    திமுக வுக்கும் திக வுக்குமான வேறுபாடு
    அண்ணாவுக்கும் பெரியாருக்குமான வேறுபாடு
    மதச்சார்பின்மைக்கும் மதஇன்மைக்குமான வேறுபாடு
    ஒரு கடவுளுக்கும் ஒன்னும் இல்லைக்குமான வேறுபாடு
    சொல்லிக்கிட்டே போகலாம்ல...
    நல்ல குழந்தைகள்... நம் ஆசிரியர்கள்... நன்றி எட்வின்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அண்ணா

      Delete
  3. இந்த சேசப்பூ, அய்யப்பூ, என்று படித்ததும்நண்பர் ஒருவரின் பதிவில் காஞ்சி பெரியவர் சொன்னதாகச் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது ஜீசஸ் ஏசூஸ் ஏசு ஈச என்று வார்த்தைகள் மருவி இருக்கலாம் என்றும் கிரிஸ்து கிரிஸ்திவன் கிருஸ்னன் என்பதும் வந்திருக்கலாம் என்று பொருள் வரும்படி இருந்தது. இதுஎதுவுமே இல்லை என்பதும் ஒரு பரிமாணமே

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, ஆஹா, மிக்க நன்றிங்க அய்யா

      Delete
  4. ரெண்டும் ஒண்றுதான்....!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சரவணன் தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...