Thursday, January 16, 2014

நிலைத் தகவல் 23உங்களிடம் ஒரு நேர்காணல் எடுத்து ”காக்கைச் சிறகினிலே” தமிழர் திருநாள் சிறப்பிதழில் போடுவது என்று முடிவெடுத்தோம். எங்களிடம் உங்கள் தொடர்பெண் இல்லை.

முகநூலில் உங்கள் எண் கேட்டிருந்தேன். ஏகப் பட்ட எண்களை நண்பர்கள் தந்திருந்தனர். அதில் சில எண்கள் உங்களது இளைய தோழர்களின் எண்கள்.

15 முறைகள் ஏறத்தாழ முயற்சித்தும் உங்களைப் பிடிக்க முடியவில்லை. நடை பயணத்தில் இருந்தீர்கள். அல்லது ஓய்விலிருந்தீர்கள். இதற்குள்ளாக இதழின் வேலைகள் முடிந்து போயின. இந்த சிறப்பிதழின் முத்தாய்ப்பே உங்களது நேர்காணலாகத்தான் இருக்கும் என்று நினைத்திருந்தோம். கிடைக்காமல் போனதில் நொந்து போனோம். சரி தமிழ் வருடப் பிறப்பிற்காவது உங்களது நேர்காணலைப் பெற்ருவிட வேண்டும் என்பதில் சந்திர சேகர் பிடிவாதமாய் இருந்தார்.

ஒருவித சலிப்போடுதான் உங்களது எண்ணிற்கு தொடர்பு கொண்டேன். ஆச்சரியமாயிருந்தது , எடுத்தீர்கள். மிகவும் தளர்ந்திருந்தது உங்கள் குரல்.

காந்தியின் எளிமையைவிடவும் உங்கள் எளிமை ரொம்பக் காஸ்ட்லிங்க அய்யா

இப்படித்தான் துவங்கினேன். ஒரு குழந்தையைப் போல் சிரித்துவிட்டு கேட்டீர்கள்.

“எப்படி?”

இதழைப் பற்றியும் எங்களது ஆசை பற்றியும் சொன்னேன்.

ஜனவரி 2 அல்லது 4 கடவூர் வருமாறு சொன்னீர்கள். கடவூர் வருவதற்கான வழியையும் ஒரு சிறு குழந்தைக்கு புரிய வைப்பது போல் சொன்னீர்கள். எனது சொந்த ஊரே கடவூர்தான் என்று புன்னகையோடு சொன்னபோது வாய்விட்டு சிரித்தீர்கள். 

நாளை மறுநாள் ஜனவரி 2.

நானிருக்கிறேன். காக்கை இருக்கிறது.

சொன்ன சொல் தவற மாட்டீர்களாம், பொய் சொல்ல மாட்டீர்களாம், எல்லோரும் சொல்கிறார்கள்.

என்னிடம் மட்டும் ஏன் தந்தையே சொல் தவறினீர்கள்?

வரச் சொல்லிவிட்டு வரவேற்க நீங்களில்லாமல் ஏன் போனீர்கள்?

விளங்காதவன், தோஷிப் பயல் என்றெல்லாம் என்னைப் பற்றி சிலர் சொல்லும் போது ஒரு புன்னகையோடு கடந்து போகிறவன்தான். அது உண்மைதானோ என்று தோன்றுகிறது.

உங்கள் செய்திகளை முடிந்தவரை காக்கை கொண்டு சேர்க்கும்.

போய் வாருங்கள் தந்தையே

முகநூலில் வாசிக்க
https://www.facebook.com/photo.php?fbid=642026805838833&set=a.215651775143007.50424.100000945577360&type=1&stream_ref=10

10 comments:

 1. அமைதியாய் ஓய்வெடுக்கட்டும்

  ReplyDelete
 2. ஊடக வெற்றியால் இந்த இயற்கைமனிதரை, இவரது கொள்கைகளுக்கு எதிராகவே வாழும் சம்பந்தமில்லாதவர்கள் எல்லாம் போற்றிப் பேசும்போது அவரே முகம்திருப்பிக்கொள்வது போலும் புகழ்மாலைகள் அவரது சமாதியில இப்போது விழுகின்றன. இந்தச் சூழலில்,
  உண்மையாக வாழ்ந்த மனிதருக்கு,
  உண்மையான சொற்களால் செலுத்தப்பட்ட வித்தியாசமான அஞ்சலி. மனம் கசிகிறது எட்வின். .. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க அண்ணா

   Delete
 3. வணக்கம். இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
  http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_23.html

  ReplyDelete
 4. உங்கள் ஏமாற்றம் உள்ளத்தில்
  தைக்கும் உணர்வு வரிகளாய்.....
  காக்கையிடம் சொல்லுங்கள்
  விதைகளை இயங்க விட்டு
  விதைத்தவர் உறங்கினாலும்
  இயங்கும் விதைகள்
  இவர் எண்ணப்படியே
  இயங்குதல் மகிழ்வென்றே .

  ReplyDelete
 5. உங்கள் ஏமாற்றம் உள்ளத்தில்
  தைக்கும் உணர்வு வரிகளாய்.....
  காக்கையிடம் சொல்லுங்கள்
  விதைகளை இயங்க விட்டு
  விதைத்தவர் உறங்கினாலும்
  இயங்கும் விதைகள்
  இவர் எண்ணப்படியே
  இயங்குதல் மகிழ்வென்றே .

  ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...