இந்த மாத தீரா நதியில் எனது “இவனுக்கு அப்போது மனு என்று பேர் ” நூல் விமர்சனம் வந்துள்ளது.
ப்ரியாராஜ் எழுதியிருக்கிறார். கொஞ்சம் என்று சொல்லக் கூடாது, நிறையவே மிகைதான். கொஞ்சம் கூச்சமாகக்கூட இருக்கிறது. மனிதர் பெருந்தன்மையால் பிசைந்து செய்யப் பட்டிருக்க வேண்டும்.அவர் சொல்கிற கருத்துக்களோடு எந்த அளவு விகிதாச்சாரத்தில் நூல் தகுதியில் பொருந்திப் போகிறது என்று தெரியவில்லை.
என்றாலும் முதல் முறையாக ஒரு வெகுஜன இலக்கிய இதழில் எனது படைப்பு விமர்சிக்கப் பட்டிருப்பதில் எவ்வளவுதான் மொத்தமான போர்வை கொண்டு மூடினாலும் எல்லாம் கடந்து மகிழ்ச்சி கசிவதைத் தடுக்க முடியவில்லை.
இந்தப் புள்ளி வரை ப்ரியாராஜ் யாரென்று தெரியவில்லை. தோழரது பெருந்தன்மைக்கும், தீராநதிக்கும் என் அன்பும் நன்றியும்.
மிக்க மகிழ்ச்சி...
ReplyDeleteமிக்க நன்றி மது
Deleteவாத்துக்கள் தோழரே! மகிழ்ச்சி :-)
ReplyDeleteமிக்க நன்றி வெண்ணிலா
Deleteமிக்க மகிழ்ச்சியும் என் வாழ்த்துக்களும்..
ReplyDeleteமிக்க அன்பும் நன்றியும் ஜெயந்தி
Deleteமிக்க மகிழ்ச்சியும் என் வாழ்த்துக்களும்..
ReplyDeleteதோழரது பெருந்தன்மைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteதோழமையின் பெருந்தன்மைக்கு நன்றியும் வாழ்த்துகளும்.தொடரட்டும் உங்கள் பணி.
ReplyDeleteஎழுத்துக்கு உரிய நேரத்தில் கிடைக்கும் அங்கீகாரம் படைப்பாளனுக்கு செய்யும் மரியாதையாகிறது. உங்கள் எழுத்து அந்த மரியாதையை பெற்றுத் தருகிறது. வாழ்த்துக்கள்.
ReplyDelete- வதிலைபிரபா
அன்புள்ள எட்வின் அவர்களுக்கு...
ReplyDeleteவணக்கம். நீண்ட நாட்களுக்குப் பின் உஙகள் பதிவிற்குள் வந்திருக்கிறேன். என் பணியிடத்தில் சிக்கல்கள் நீங்கள் அறிந்ததுதான். இருப்பினும் அது பொதுவான எல்லாருக்குமான சிக்கல்கள். எனவே மனது எதுவும் நிகழ்ந்துவிடாது என்கிற நம்பிக்கை அசைக்கமுடியாமல் இருக்கிறது.
போகட்டும். தீராநதி விமர்சனத்தை நானும் படித்துவிட்டேன். உங்கள் எழுத்துக்களைக் கொண்டு மிகச் சரியாகவே மதிப்பிட்டிருக்கிறார். நானும் அப்புத்தகத்தைப் படித்துவிட்டு மறுபடியும் உங்களுக்கு எழுதுவேன். உங்களின் பேச்சை பெசண்ட் அரங்கில் கேட்டு பிரமித்துப்போனவன். கொஞ்சம் காதலும்கூட அந்தப் பேச்சில். தெளிவான கணீரென்ற திட்டமிட்ட பேச்சு. கற்றுக்கொள்ளவேண்டும். தவிரவும் உங்கள் எழுத்தும் அப்படியே. எனவே தீராநதி விமர்சனம் நுர்று விழுக்காடு சரியே. தீராநதிக்கென்று ஒரு தனித்த இலக்கிய அடையாளம் உள்ளது. எனவே உங்கள் எழுத்தின் தரத்தை உணர்ந்த காரணத்தாலேயே விமர்சனமும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
உங்களின் எழுத்துக்களுககு கிடைத்த மரியாதை அது. தரம் என்றைக்கும் அதன் இலக்கில் தடையின்றி சேரும் என்பதற்கு இதுவே சான்று. உங்கள் புத்தகத்தைப் படித்துவிட்டு மறுபடியும் எழுதுகிறேன்.
வாழ்த்துக்கள்..
ReplyDelete