மதியம் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.
“AHM சாரப் பார்க்கனும்.”
அன்பழகன் கை நீட்டிச் சுட்டவே என்னிடம் வந்தாள் அந்தக் குட்டி தேவதை.
“ என்னை ஏன் சார் கீழ உட்கார வச்சீங்க. பெஞ்ச் ல உக்கார வையுங்க சார்”
ஒன்றும் புரியாது போகவே திரு திருவென முழித்தேன்.
“ஏங்கிளாசு பாப்பாதான்” சேவியர் சொன்னான்.
இடது கையால் அவளை அணைத்தபடியே கேட்டேன்,
“ என்ன சாமி”
“ கீழ உட்கார முடியல. கால் வலிக்குது. பெஞ்ச் வேணும்”
இப்பொழுதும் ஒன்றும் புரியாது போகவே திறு திறு என்று விழிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
இப்பொழுதும் ஒன்றும் புரியாது போகவே திறு திறு என்று விழிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
விழித்தேன்.
“ வேற ஒன்னும் இல்ல சார், ரெண்டு புள்ளைங்கள கீழ உட்கார வச்சோம்ல. அதுல ஒன்னுதான் இது”
சேவியர் சொன்னான்.
புரிந்தது.
திருப்புத் தேர்வுக்காக அறை ஒதுக்கிய போது இரண்டு ஆறாம் வகுப்பு குழந்தைகளுக்காக ஒரு அறை ஒதுக்க வேண்டி வந்தது. சிறு பிள்ளைகள் தானே என்று இருக்கிற அறை ஒன்றிலேயே கீழே உட்கார வைத்தோம். வந்து விட்டாள்.
சிரித்துக் கொண்டே சொன்னேன்,
”சரிங்க கிழவி, போங்க வரேன்”
“ பெஞ்ச் எடுத்துட்டு வாங்க” சிரித்துக் கொண்டே ஓடி விட்டாள்.
“சரியாந்திர வெடிப் புள்ளடா சேவி”
“6B னா சும்மாவா?”
அவன் வகுப்புக் குழந்தை அவள்.
எல்லோரும் என்னை நக்கலடித்தார்கள். அவளிடம் நான் வறுபட்டதில் எல்லோருக்கும் ஏகத்துக்கும் மகிழ்ச்சி.
போய் ஒரு பெஞ்ச் போட்டு அவளை உட்கார வைத்தேன்.
சிரித்தாள்.
இப்ப சந்தோசமா கிழவிக்கு. அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு வந்தேன்.
சிரித்தாள்.
பெரிய பெரிய பள்ளிகளெல்லாம் தங்கள் பள்ளிகள் உருவாக்கிய மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆகியோரின் எண்ணிக்கையில் பெருமை பட்டுக் கொள்வார்கள்.
உறுதியாய் சொல்லலாம்,
நாங்கள் கங்குகளை தயாரித்து சமூகத்திற்கு தருகிறோம்.
பெரிய பெரிய பள்ளிகளெல்லாம் தங்கள் பள்ளிகள் உருவாக்கிய மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆகியோரின் எண்ணிக்கையில் பெருமை பட்டுக் கொள்வார்கள்.
உறுதியாய் சொல்லலாம்,
நாங்கள் கங்குகளை தயாரித்து சமூகத்திற்கு தருகிறோம்.
முதலில் சேவியருக்கு கை கொடுக்க வேண்டும். சரியாய் வளர்த்திருக்கிறான்.
வணக்கம் தோழர். நல்லாத்தான் இருக்கு. இப்படி குழந்தைகளிடம் இணக்கமாய் யார் இருக்கிறார்கள். பாப்பாவோடு பாப்பாவாக வளைய வரும் எட்வின் தோழருக்கு வாழ்த்துகள்.என்னை ஏன் கீழே உட்கார வைத்தே என கேட்பதற்கு உரிமை கொடுத்த உங்களை/பள்ளியை பாராட்டியே ஆக வேண்டும்.சபாஷ்....சரியான போட்டிதான்..ஜோடிதான்..மகிழ்வான அனுபவம்..எல்லா ஆரிசியருக்கும் வாய்க்குமா?
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
DeleteToday's Children are very clever/shrewd/practical; Lovely experience for You!
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteவாயுள்ள புள்ள பொழைக்குது! கேட்க பயந்த இன்னொரு புள்ளைக்கும் பெஞ்சில் இடம் கிடைச்சதா ?
ReplyDeleteகுழந்தைகள் உலகத்தில் பிழைப்பு இருப்பதும் கொடுப்பினையே. குழந்தைகள் உலகத்தில் பிழைப்பவரின் தோழமையும்...!
இருவரையும் சேர்த்துதான் உட்கார வைத்தோம்.
Deleteமிக்க நன்றி தோழர்
நிச்சயமாய் அது ஒரு அக்கினிக் குஞ்சுதான். அவளைப் போல் பல மாணவிகள் 6B-யில் உங்களுக்குக் கிடைக்கலாம். ஆனால் உங்களைப் போல் அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆசிரியத் தோழர் கிடைப்பார என்பது சந்தேகம்தான். அவளின் ஒவ்வொரு கட்டத்திலும் உங்கள் கைகள் அவளுக்கு இயன்றவரை துணையிருந்தால், அவள் கால்கள் இமயம் தொடுவது உறுதி...
ReplyDeleteஅப்படியே ஆகட்டும். மிக்க நன்றி தோழர்
Deleteஇவள் நிச்சயமாய் ஒரு அக்கினிக்குஞ்சுதான். அவளைப் போல் பல மாணவிகள் 6B-யில் உங்களுக்குக் கிடைக்கலாம். உங்களைப் போல் ஒரு ஆசிரியத் தோழமை அவளுக்கு மீண்டும் கிடைப்பது அரிது. உங்களைப் போன்ற ஒருவரின் கைகள் அவள் வாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்திலும் கிடைத்தால் அவள் கால்கள் இமயம் தொடுவது உறுதி...
ReplyDeleteகுழந்தையோடு குழந்தையாக வாழும் பாக்கியம் உங்களுக்கு
ReplyDeleteஆமாம் தோழர். அது ஒரு வரம்தான். மிக்க நன்றி தோழர்
Deleteஅழகுபா..
ReplyDeleteமிக்க நன்றி ஹேமா
Deleteஅன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (22.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறேன். நாளைய 22.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!
ReplyDeleteகர்வமிழந்து குழந்தைகளிடம் பழகும்போது நம் சுயம் வெகு அழகாக வெளிப்படுகிறது.... ரொம்ப அழகான பாராட்டத்தக்க பணி உங்களுடையது...தொடரட்டும்... வாழ்த்துக்கள் எட்வின்...
ReplyDeleteகோமாளிகளே குழந்தைகளை நெருங்க முடியும் என்பதை உங்களூர் வேலு சரவணனிடமிருந்து கற்றவன் நான். மிக்க நன்றி கனி
Deleteஆசிரியர் பணி மகத்தானது;எல்லா ஆசிரியர்களும் அதை உணர்ந்து செயல் பட வேண்டும்.நன்று
ReplyDeleteமிக்க நன்றி குட்டன் .தொடர்ந்து சந்திப்போம்
Deleteநல்ல லீடர் அமைந்து விட்டால் ஆசிரியர்களுக்கு வெற்றிதான்
ReplyDeleteஇந்த தைரியத்துக்காகவே பாராட்டபட வேண்டிய ”இளவரசி”அவள்...
ReplyDeleteஉரிமைகளை இப்படி தட்டிகேட்க நம்மளே..கூச்சம் கொண்டுஇருக்கும் காலத்தில்....பெருமைபடுகிறேன்...எட்வின்...சேவியருக்கும் என் வாழ்த்துக்கள்....
கொண்டாடப்பட வேண்டிய குழந்தை அவள். சேவியரும்தான். கொண்டாடுகிறீர்கள் என்பதை அவர்களிடம் சொல்லியுள்ளேன். மகிழ்ந்து போனார்கள். மிக்க நன்றி தோழர்
Deleteஅருமை எட்வின் சார்,,,
ReplyDeleteபிள்ளைகள் எப்போதுமே நம்மைப் போன்ற ஆசிரியர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். வாழ்வதன் அர்த்தத்தைக் கற்பித்துக்கொண்டே இருக்கிறார்கள். உங்களோடு சேர்ந்து அந்த குட்டி த் தேவதைக்கு என்னுடைய அன்பு முத்தங்கள்.
மிக்க நன்றி ஹரணி. எப்படி இருக்கீங்க?
Deleteஉரிமையை உணரத்தலைபட்டது மட்டுமின்றி கேட்கவும் செய்த துணிச்சல் பாராட்டுக்குரிய விசயம் . நிச்சியமாய் நீங்களும் பாராட்டுக்குரியவர் தான்.
ReplyDeleteஆமாம் தோழர். மிக்க நன்றி தோழர்
Deleteஉரிமையைக் கேட்டு பெறுதலை இங்கிருந்து தான் துவங்க வேண்டியிருக்கிறது.
ReplyDeleteபகிர்ந்தமைக்கு மகிழ்ச்சியும், நல்லாசிரியனுக்கு பாராட்டுக்களும்.
நிச்சயமாய் இங்கிருந்துதான் துவங்க வேண்டும். மிக்க நன்றி தோழர்
ReplyDeleteInteresting and meaningful incident. Here teachers should learn such things.
ReplyDeleteநாம் சொல்வதை எல்லாம் குழந்தைகள் கேட்பார்கள் என்று எதிர்பார்ப்பது நம்முடைய தவறு தானே!
ReplyDeleteஅவர்களிடமிருந்து கொள்வதற்கு ஏராளம் இருக்கிறது மது. மிக்க நன்றி
Deleteநல்ல பதிவு சார்
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteநல்ல சமூகம் அமைய வித்திடுவாள்....அருமையான பதிவு
ReplyDeleteநிச்சயம் நம்பலாம்.
Deleteமிக்க நன்றி தோழர்
arumaiyana pathivu sir
ReplyDeleteமிக்க நன்றி முத்துக் குமார்
Deleteஅருமை... இப்படியான ஆசியரையைப் பெறவில்லையே என்று மனம் ஏங்குகிறது..
ReplyDeleteமிக்க நன்றி ஆதிரா
Deleteஉரிமையை கேட்கும் தைரியம் குழந்தைப் பருவத்திலேயே வந்ததற்கும் அந்த தைரியத்தையும் ஊட்டி பாடம் சொல்லிக்கொடுத்ததிற்கும் பெருமை படுவோம்....
ReplyDeleteபெருமைக்குரிய தங்களைப்போல ஒரு ஆசிரியராவது எல்லா பள்ளிகளிலேயும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் தோழர்....
இருக்கவே செய்கிறார்கள் தோழர். கெட்டுது மட்டுமே அறியக் கிடைக்கின்றன. நல்லதுகளையும் தர வேண்டும்
Deleteநல்ல பதிவு சார் :)இன்று பல பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இது போன்ற தோழமை வாய்ந்த ஆசிரியர்கள் கிடைப்பது அரிதாகிவிட்டது ... இன்று குழந்தைகள் சொன்னதைச் செய்யும் இயந்திரங்களாகவே வளர்க்கப் பட்டு வருகிறார்கள் என்பது வருந்தத்தக்க விடயம்...அந்த குழந்தை கொடுத்து வைத்தவள் தான் உங்களை போல ஒரு நல்லாசிரியரை பெறுவதற்கு !!! வாழ்த்துக்கள் ஐயா!!!
ReplyDeleteஇக்க நன்றி தோழர்
Deletesharp
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deletesharp
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
DeleteWhen my colleagues were humiliated in a meeting by a Superior Officer, noted for
ReplyDeletegiving punishment if anybody disagreed with him I protested and said they are also
officers with self-respect and you have no right to criticize them in open meeting.That
guts I got it from my school days. Those time the teachers were happy when we say
something without fear and they encouraged us to raise our voice against any injustice. My reminiscences went back to 50 years and I thank the teacher for his humbleness and pray God to give him all and bless him. I respect him and bow before him.
மிக்க நன்றி தோழர்
Delete