Monday, February 25, 2013

குற்றம் குற்றமே

முன்னுரை:

இந்தக் குறுங்கட்டுரை2008 ஆண்டு எழுதப் பட்டு எனது “அந்தக் கேள்விக்கு வயது 98” என்ற நூலில் உள்ளது. அவசியம் கருதி இந்த முன்னுரையும் ஒரு பின்னுரையும் தரவேண்டி உள்ளது.

ஏறத்தாழ 600 ஆண்டுகளாக இல்லாத ஒரு வழக்கமாக இன்றைய போப்பாண்டவர் ஆக விரைவில் ஓய்வு பெறுகிறார். இந்த 600 ஆண்டுக்கால இடைவெளியில் ஒரு போப்பாண்டவரின் மரணத்தின் பொருட்டே புதிய போப்பாண்டவரை கத்தோலிக்கத் திருச்சபை கண்டிருக்கிறது. 

ஆக கத்தோலிக்கத் திருச்சபையில் ஒரு புதிய வரலாறினை இவர் படைக்கிறார். இயங்க இயலாத போது ஒதுங்கி ஒய்வெடுத்துக் கொண்டு புதிய ஒருவருக்கு இயங்க வாய்ப்பளிக்க வேண்டும் என்கிற அவரது சரியான முடிவினை தலை வணங்கி ஏற்கிறோம்.

அதே நேரம் திருச்சபை வரலாற்றில் இவரது பெயர் ஏற்கனவே ஒரு முக்கியமான இடத்தில் இடம் பெற்றுள்ளது. அதைத்தான் இந்தச் சின்னக் கட்டுரை பேசுகிறது.

.....................................................................................................................

“மதச் சார்பற்ற தன்மையுடைய விஞ்ஞானத்தின் பெயரால் நல்லிணக்கத்திற் கெதிரான இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப் படுகிறது என அறிவிக்கிறோம் “

இது ஏதோ ஒரு மதவெறியைத் தூண்டக் கூடிய மத வெறியர் ஒருவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டதற்கான அறிவிப்பு எனில் கவனம் குவிக்காமல் விட்டுவிடலாம்.

உலகத்தில் வாழும் மக்களில் பெரும் திரளான ரோமன் கத்தோலிக்கர்களின் தலைவராகத் திகழும் போப்பாண்டவர் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி ரத்துச் செய்யப் பட்டுள்ளது என்பதும், அதுவும் அவரது ஆளுகைக்கு உட்பட்டுள்ளபல்கலைக் கழகமே அதைச் செய்துள்ளது என்பதை அறிந்தது , ஏன்? என்ற ஆவல் இயல்பாகவே பிடித்துத் தள்ள உள்ளே நுழைந்தேன்.

“எல்லாச் சாலைகளும் ரோமை நோக்கி ” என்று சொல்வார்கள். உலகின் பெரும்பகுதி ரோமன் கத்தோலிக்கர்கள் என்ற பெரும்பான்மையின் செருக்கு மிகுந்த வெளிப்பாடாக நாம் இதைப் பார்க்கலாம். மேன்மைமிக்க வெளிப்பாடாக இதைக் கொண்டவர்களும் உண்டு. போப்பாண்டவரின் ஆளுமையும், செல்வாக்கும், உலகைக் கோலோச்சும் அந்த நிலை கொஞ்சமும் மாறாமல் இன்றும் அப்படியேத்தான் உள்ளது.

பிறகெப்படி இது சாத்தியப் பட்டது? ஏன் தேவைப் பட்டது?

லா சாட்னீஸா என்று ஒரு பல்கலைக் கழகம் ரோமில் உள்ளது.17.01.2008 அன்று போப்பாண்டவர் அவர்களின் அருளாசியுடன் அது அந்த ஆண்டிற்கான தனது மணியினஃஇத் துவங்கும் என்று முன்னர் அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த அறிவிப்புதான் பின்னர் திரும்பப் பெறப் பட்டது.

சரி, அப்படி என்ன தவறினை இன்றைய போப்பாண்டவர் செய்துவிட்டார்?

1633 ஆம் ஆண்டு கலிலியோ மீது ஒரு விசாரனை நடத்தப் பட்டது. திருச்சபையின் முன் கலிலியோ நிறுத்தப் பட்டார். எதற்கந்த விசாரனை?

சூரியனை மையமாக வைத்து பூமி இயங்குகிறது என்று 1633 இல் கலிலியோ அறிவித்தார். கத்தோலிக்கத் திருச்சபையோ , பூமி நிலையானது, அசையும் தன்மை அற்றது என்று நம்பியது. நம்பவும் சொன்னது. நம்ப மறுத்தவர்களைத் தண்டிக்கவும் செய்தது.

இந்த நிலையில் கலிலியோ சற்று உரத்துக் குரலெடுத்து “ பூமி நிலையானது அல்ல, சூரியனைச் சுற்றி அது இயங்குகிறது” என்று அறிவித்தார்.  இவருக்கு முன்னரே கோபர் நிக்கஸ் இதைக் கண்டு பிடித்திருந்தார். காயம் படாமல், கழுமரம் ஏறாமல், அவஸ்தைக் கால ஜெபத்தோடு அமைதியாக செத்துவிட வேண்டும் என்ற தீராத ஆசை அவருக்கிருந்ததால், உயிருக்கு பயந்து அதை வெளியே சொல்லாமல் செத்துப் போனார்.

ஆனால் இதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாத கலிலியோ இதை கொஞ்சம் உரத்துச் சொன்னார். இது, திருச்சபையின் நம்பிக்கையை, விசுவாசத்திக் கேள்வி கேட்டதாக திருச்சபைக்குப் பட்டது. இது திருச்சபையின்பால் நம்பிக்கைக் கொண்டுள்ள கத்தோலிக்கர்களின் தேவ விசுவாசத்தை, கத்தோலிக்கக் கட்டமைப்பை உடைத்து விடுமோ என்று திருச்சபை அச்சப் பட்டது. திருச்சபையே விசுவாசத்தினால் கட்டப் பட்டது. “நம்பி விசுவாசிப்பவனைவிட நம்பாமல் விசுவாசிப்பவன் பாக்கியவான்” என்றும் சொல்லப் பட்டது. நம்பிக்கையைக் கேள்வி கேட்க அனுமதித்தால் அது விசுவாசத்தினால் மட்டுமே கவனத்தோடு கட்டமைக்கப் பட்டுள்ள திருச்சபையைக் குலைத்துப் போடும் என்று திருச்சபை நம்பியது. ஆகவே இதை அப்படியே விடுவது என்பது திருச்சபையை முடிவுக்குக் கொண்டு வருகிற ஒரு தொடர் செயலுக்கு கால்கோலும் என்று திருச்சபைக் கருதியது.

எனவே அன்றைய போப்பாண்டவர் தலைமையில் விசாரனைத் தொடங்கியது. விசாரனை என்பதை விட கட்டப் பஞ்சாயத்து என்ற பதமும், போப்பாண்டவரை அன்றைய நாட்டாமை என்பதுமே பொருத்தமாகப் படுகிறது.

பஞ்சாயத்து கலிலியோ தனது கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று தீர்ப்பு சொன்னது. திருச்சபையின் அழுத்தமான குரல் தந்த பயத்தில் கொஞ்ச ஆடித்தான் போனார் கலிலியோ. வேடிக்கைப் பார்க்கத் திரண்டிருந்த ஜனத் திரளின் முன் கலிலியோ தனது கருத்துக்களைத் திரும்பப் பெற்றார். ஆனாலும் அப்படியான கருத்தைச் சொன்னதற்காக அவர் சிறைப் பட்டார். பிறகு பைத்தியம் பிடித்துச் செத்தும் போனார்.

ஏறத்தாழ 360 ஆண்டுகளுக்குப் பிறகு 1990 வாக்கில் எந்த மேல் முறையீடுமின்றியே இது மறு விசாரனைக்கு வந்தது. இப்போது திருச்சபை தனது முடிவினை மாற்றிக் கொண்டது.பூமிதான் சூரியனைச் சுற்ருகிறது என்ற கலிலியோவின் கருத்தினை ஏற்ரது.

சுருங்கச் சொன்னால் மதத்தை விஞ்ஞானம் வென்றது.

அப்போது தற்போதைய போப்பாண்டவர் பெனெடிக் 16 ஆம் கார்டினல் ரட்சசிங்கர் என்றழைக்கப் பட்டார். அப்போது நடந்த விவாததில் இவர் மட்டுமே 1633 இல் திருச்சபை எடுத்த முடிவு சரி, கலிலியோவின் கருத்துதான் தவறு. ஆகவே கலிலியோவின் கருத்தை திருச்சபை நிராகரிக்க வேண்டுமென்று விடாப் பிடியாக வாதிட்டார். நல்ல வேளையாக அன்றைய பெரும்பான்மை இவருக்கெதிராகப் போகவெ, திருச்சபை தனது கருத்தை மாற்றிக் கொண்டது.

விஞ்ஞானத்தின் சகல கனிகளையும் ருசித்துக் கொண்டிருக்கக் கூடிய மதப் பழமைவாதியான தற்போதைய போப்பாண்டவர் தங்களது பல்கலைக் கழகத்தில் நுழைவதை, அருளாசி பகர்வதை அதே பல்கலைக் கழகத்தைச் சார்ந்த கல்வியாளர்களின் எதிர்ப்பைத்தான் கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்தோம்.

அவர்கள் நாத்திகர்களோ, திருச்சபைக்கு எதிரானவர்களோ அல்ல. தீவிர விசுவாசிகளே அவர்கள். இருதியாக பல்கலைக் கழகம் தவறு செய்தது போப்பாண்டவரே ஆயினும் அது தவறுதான் என்று முடிவெடுத்தது. போப்பாண்டவரின் நிகழ்ச்சியை ரத்து செய்தது.

முதலில் மதப் பழமை வாதிக்கும், மதப் பழமை வாதத்திற்கும் எதிராகத் திரண்டு கொதித் தெழுந்த அந்த 67 கல்வியாளர்களையும் சிரம் தாழ்த்தி, வணங்கி வாழ்த்துகிறோம்.

நியாயம் போப்பாண்டவருக்கு எதிர்த் தளத்தில் இருப்பதை உணர்ந்த திருச்சபை நியாயத்தின் பக்கம் நின்றதற்காக அதனை வணங்குவோம்.

இந்த நிகழ்வை இந்தியாவில் உள்ள கல்வி நிலையங்கள் அருள்கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும், மதவாதிகளின் நெருக்கடியை, பழமைக் கூத்தை வெறி கொஉ எதிர்க்க வேண்டும் என்றும் ஆசைப் படுகிறோம். அன்றைக்கே ஒருவன் தமிழில் சொன்னான்,

“நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே”

முடிவுரை:

போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர் போப்பாண்டவராகவே மரணிப்பார் என்ற நடை முறையை மாற்றி இயலாமையை உணர்ந்து அடுத்தவருக்கு வழி விட்டிருக்கும் இன்றைய போப்பாண்டவரின் செயல் அவர் மிகவும் பக்குவப் பட்டிருக்கிறார் என்பதையே உணர்த்துகிறது. இந்தப் பக்குவத்தின் நீட்சியாக அவர் ஓய்வு பெறும் இந்த்த் தருவாயில் பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்ற உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்.

20 comments:

  1. சிறப்பான பதிவு. பாராட்டுக்குரிய, நன்றிக்குரிய கட்டுரை.
    -குமரேசன்

    ReplyDelete
  2. “நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே”

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழர். மிக்க நன்றி. தொடர்ந்து சந்திப்போம்

      Delete
  3. மதத்தை விஞ்ஞானம் வென்றது...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர். தொடர்ந்து சந்திப்போம்

      Delete
  4. மதத்தை விஞ்ஞானம் வென்றது....

    ReplyDelete
  5. நண்பருக்கு வணக்கம் .இந்த கட்டுரையை இரண்டாவது தடவையாக படித்து விட்டேன் .அதற்க்கு வாய்ப்பளித்த நண்பர் எட்வின் அவர்களுக்கு மிக்க நன்றி .நீதி என்பது எப்போதுமே சாகாது .அது தான் இங்கும் நிலை நாட்டப்பட்டுள்ளது .வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. இரண்டு முறை சிரமப் படுத்தியமைக்காக வருந்துகிறேன். ஆனாலும் இரண்டு முறையும் வாசித்து கருத்தினைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழர்

      Delete
  6. காலம் கடந்து ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் விஞ்ஞானத்தை மறுக்கமுடியாதல்லவா! நல்ல வேலை 'டார்வின்' எழுதியதோடு நிறுத்திக்கொண்டார் இல்லையென்றால் அவரும் கிருஸ்த்துவ பலிபீடத்தில் கர்த்தரின் பேரால் மிககொடூரமாக 'புருனே'வைப்போல் கொல்லப்பட்டிருப்பார் ! பாவம் இயேசு கிருஸ்த்துவால் ரட்சிக்க தானே முடியும்! காப்பாற்றமுடியுமா என்ன!

    ReplyDelete
  7. சிறப்பான பதிவு.உயரிய சிந்தனையை இரண்டாவது முறையாகப் பதிவு செய்திருந்தாலும்,இப்போது தான் படிக்கும் எங்களுக்குப் பயனுள்ள பதிவே.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. மிக்க நன்றி தோழர். தொடர்ந்து இந்தப் பக்கம் வந்து வாசித்து கருத்துப் பகிர்வது மகிழ்ச்சியாய் இருக்கிறது. மிக்க நன்றி தோழர்

      Delete
  8. தற்போது விருப்ப ஓய்வு பெரும் போப்பாண்டவர்கள் கலிலியோ அறிவியல்
    கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லையா.

    ReplyDelete
    Replies
    1. இதுவரை இல்லை தோழர். எப்படி இருக்கிறீர்கள்?

      Delete
  9. விஞ்சானம் மதத்தை வென்றதா தெரியாது அடியேனுக்கு. ஆனால் நியாயமானது உண்மையானது எதுவோ அது எப்போதும் வெல்லும். மிக அருமை தோழரே. மதம் என்பதே மனிதனால் உருவாக்க பட்டது தானே. அதில் மாற்றம் வருவது தவறில்லை. நம் அறிவுக்கு எட்டாத விஷயங்களை பற்றி தெரிந்தவர் பகரும்போது அடிமை தனமோ ஈகோவோ தடுக்கும் போதுதான் இப்படி நடக்கிறது. ஆனாலும் பின்னர் அறிவு வெல்கிறது என்பது உங்கள் கட்டுரையின் சாரமாக கருதுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மதம் என்பதே மனிதனால் கட்டமைக்கப் பட்டதுதான். மிக்க நன்றி தோழர்

      Delete
  10. Good article...so I send the whole article to some thousand email IDS..such articles should be forwarded by all..my congratulations Edwin --vimalavidya

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...