Thursday, August 9, 2012

”ஈழத்தில் நடந்ததை மறந்துவிடாதீர்கள்”

“சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
 இனிதென மகிழ்ந்தன்றும் இலமே”

இதை கனியன் எழுதி ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் கடந்திருக்கும்.

சாவது எங்களுக்கு ஒன்றும் புதிது இல்லை. என்ன செய்தேனும் வாழ்வை நீட்டிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியும் இல்லை. சாதல் என்ற ஒன்று இருப்பதை உணர்ந்தே வாழ்க்கையைத் துவக்கினோம். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலத்தை வாழ்க்கை என ஏற்பதிலும் எங்களுக்கு உடன்பாடு இல்லை. பிறப்பிற்கும் சாவிற்கும் இடைப்பட்ட காலத்தில் உருப்படியாய் நம் சமூகத்திற்கு என்ன செய்திருக்கிறோம் என்பதையே நம் வாழ்க்கையின் அளவாக கொள்கிறோம்.

வாழ்க்கையை, சாவைப் பற்றி வேறெந்தச் சமூகம் இந்த அளவிற்கு யோசித்திருக்கிறது என்று தெரியவில்லை.

“சாதலும் புதுவது இலமே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே”

என்கிற வரிகளுக்கு இப்போது ஒரு தமிழ் இளைஞன் பொழிப்புரையை உண்ணாதிருந்து எழுதிக் கொண்டிருக்கிறான்.

இனவெறி பிடித்ததும், அதன் விளைவாக ஒரு இனத்தை வேரோடு அழித்தொழிக்கும் முயற்சியில் பெருமளவு வெற்றி பெற்றும், அப்படியும் பசி அடங்காமல் மிச்சமிருக்கிற தமிழர்களைக் கொன்றழிக்க தொடர்ந்து முயன்றும் வருகிற இலங்கை அரசு அனுப்பியுள்ள இலங்கை விளையாட்டு வீரர்களை இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்க அனுமதிக்கக் கூடாது என்பது அவனது முதல் கோரிக்கை.

அது இந்த நேரத்திற்கெல்லாம் நிறைவேறாது போனது வேறு விசயம்.

ஆனால் அதில் உள்ள நியாங்களை அரைக்காலே வீசம் அளவிற்கு சுய நினைவு இருப்பவனாலும் தள்ளிவிட முடியாது.

இதை அவன் சொல்லும்போதும் அதில் உள்ள நியாயங்களை நாம் சொல்லும்போதும் சொல்கிறார்கள்,

“விளையட்டை விளையாட்டாப் பாருங்க தோழர், விளையாட்டு இணைப்பதற்காக, பிரிக்கிற வேலைக்கான உங்கள் அரசியலை இதில் திணிக்காதீர்கள்,ஆமாம்.”

 நிற வெறியோடு ஆட்டம்போட்டமைக்காக தென் ஆப்பிரிக்காவிற்கு விதிக்கப் பட்டிருந்த தடை நியாயம் என்றால் இனவெறியோடு சதிராடும் இலங்கைக்கு எதிராக சிவந்தன் கேட்கும் தடை ஆயிரம் மடங்கு நியாயம் கொண்டது.

ஜூலை மாதம் இறுதியில் ஒரு நாள் நள்ளிரவில் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறிப் புகுந்து அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த இருபத்தி மூன்று தமிழ் மீனவர்களை இலங்கை கடற்படை வன்மத்தோடு பிடித்துச் சென்று இம்சித்து சிறை வைத்தது.

இதை எதிர்த்து சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் செய்தது. சமீப காலத்தில் எனக்கு மிக அதிகமாக ஆறுதல் அளித்த ஒரு விசயம் இது. அப்போது இடது சாரிகளை மிகக் கடுமையாக விமர்சிக்கும் அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியை உச்ச நிலையில் நின்று பல நேரங்களில் தவறாகவும் கொஞ்சம் விசமத்தோடும்கூட எழுதுகிற வழக்கம் கொண்ட “தினமலர்”  “இவரும் ஒரு அரசியல்வாதிதான்” என்று எழுதி அந்தப் போரட்டத்திற்கு ஒரே ஒரு தோழரோடு எந்த வித பந்தாவும் இன்றி மிக எளிமையாக நடந்து வந்த மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ஜி.ராமக்கிருஷ்ணன் அவர்களது படத்திப் போட்டிருந்தது

இந்தப் பத்தியை நான் எழுதியது எனது சொந்த விருப்பத்தின் பொருட்டே ஆகும்.உலகில் நடக்கும் அநீதிகளுக்கெல்லாம் எதிராக எந்த வித தியாகத்தின் விளிம்புவரைக்கும் சென்று போராடுகிற, மிக எளிமையான வாழ்க்கைக்கு சொந்தக் காரர்களாகத் திகழக் கூடிய தலைவர்களை உள்ளடக்கிய இந்த இயக்கம் ஈழப்பிரச்சினையை ஒரு இன அழிப்புப் பிரச்சினையாக கையில் எடுக்கவில்லையே என்கிற ஆதங்கம் எனக்கும் உண்டு. மட்டுமல்ல அவர்கள் இதை கையெடுக்கும் பட்சத்தில் இன அழிப்பிற்கெதிரான இயக்கம் வலுப்பெறும் என்றும் நான் நம்புகிறேன்.

அந்த இருபத்திமூன்று தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அத்து மீறி நுழைந்து பிடித்துச் சென்றதற்கு அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக நடந்த இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிராக இந்தியா அடைந்த பெரு வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாததன் விளைவுதான் என்றும் சொல்லப்படுகிறது. மட்டுமல்ல இந்தியா தொடரை வென்ற நாளில் இருந்து கடலுக்குள் போகும் மீனவர்கள் மிகுந்த அச்சத்தோடே போவதாகவும் கடலுக்குள் போகும் மீனவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கக் கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஜூலை இருபத்தி நான்காம் தேதி தினகரனில் ராமேஸ்வரம் மீனவர் சங்க நிர்வாகி சேகர் ‘ இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என்று கோருகிறார்.

ஏற்கனவே உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோதுவது உறுதியானபின் ஒருக்கால் அந்தக் கோப்பையை இலங்கையை வென்றிருக்குமானால் அதை தமிழ் மக்களைக் கொன்று குவித்த இலங்கை ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிக்க இருந்தார்களாம்.

நல்ல வேளை தோற்றார்கள். அதன் விளைவு நான்கு தமிழ் மீனவர்களைக் கொன்று குவித்தார்கள்.

இவ்வளவிற்குப் பிறகும் “ விளையாட்டை விளையாட்டாய்ப் பாருங்கள் தோழர்” என்று நம் முன்னே வைக்கப் படும் கருத்துக்களை நம்மால் ஏற்பதற்கு இயலவில்லை.

இதே லண்டனில் இருந்துதான் பேச வரவழைத்திருந்த கூட்டத்தில் பேச வேண்டாம் என்று சொல்லி ராஜபக்‌ஷேவைத் திருப்பி அனுப்பியது இங்கிலாந்து அரசு. மைனஸ் அளவில் இருந்த குளிரையும் தாண்டி தெறித்த தமிழ்த் திரளின் கோவக் கொதி நிலையை அது அங்கீகரித்தது.

ஆனால் ஒலிம்பிக் என்பது இங்கிலாந்து மட்டும் சம்பந்தப் பட்ட ஒரு விஷயமல்ல. அனைத்து தேசங்களும் உள்ளடங்கிய அமைப்பு சம்பத்தப்பட்ட விசயம் என்பதால்தான் அனைத்து தேசங்களின் கவனத்தையும் இது விசயத்தில் ஈர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்த இளைஞன் ஏறத்தாழ இருபது நாட்களாக உண்ணாதிருக்கிறான்.

பெரிதாய் எதையும் சாதித்துவிடுவோம் என்ற எந்தவிதமான மிகை நம்பிக்கையும் சிவந்தனிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அவன் மிகச் சரியாய் சொல்கிறான்,

“ ஈழமக்களின் பிரச்சினை மீது சர்வ தேசத்தின் கவனத்தைத் திருப்பவே எனது இந்தப் போராட்டம்.”

உலகில் எங்குமே காண இயலாத ஒரு விசயம் இந்தத் தமிழ் இனப் படுகொலைதான். வரலாற்றில் எத்தனையோ இன அழிப்புகளும் இனப் படுகொலைகளும் பதிவாகி இருக்கின்றனதான். ஆனால் இது அவை எதனோடும் சன்னமாகவேனும் பொருந்திபோகாது தனித்திருக்கும் தன்மை கொண்டது. வரலாற்ரில் பதிவாகி உள்ள எந்த இனப் படு கொலாஇயும் இன அழிப்பும் அதன் அரசாங்கத்தாலேயே நிகழ்த்தப் பட்டதல்ல. அப்படி தன் சொந்த மக்களையே கொன்றழித்த ராஜபக்‌ஷேமீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரனை நடத்த வேண்டும் என்பது அவனது இரண்டாவது கோரிக்கை.

09.01.2011 அன்று சென்னையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ‘பாகுபாடுகள் மற்றும் இனவெறிக்கு எதிரான சர்வதேச இயக்கத்தின்’ தலைவர் நிமல்கா ஃபெர்னாண்டோ பேசியதைஅதே மாதம் பதினாறாம் தேதி வெளியான ஜூனியர் விகடன் வெளியிட்டிருந்தது. அதை நினைவு கூர்வது இந்த நேரத்தில் அவசியமாகிறது.

“கிழக்கு மாகானத்தில் நல்ல வளங்கள் இருந்த போதும் மக்கள் வேலையின்றி வறுமையில்தான் வாழ்கிறார்கள். இதனால் தமிழ் மக்கள் சொந்த கிராமங்களை விட்டு வெளியேறுகிறார்கள். உடனடியாக, அந்தப் பகுதிகளில் மற்றவர்களைக் குடியமர்த்தி அங்கே இனப் பரப்பல் விகிதத்தை மாற்றி வருகிறார்கள். இஸ்ரேல் - பாலஸ்தீனம் போன்றதொரு மிக மோசமான நிலைமை இலங்கையில் உருவாகிறது.அதுவும் சீனா போன்ற நாடுகளின் உதவியோடு நடக்கிறது.”

இவர் ஒன்றும் தமிழ்ப் பெண்ணுமல்ல. இன்னும் சொல்லப் போனால் தமிழ் பேசவேத் தெரியாத சிங்களப் பெண். இவர் இப்படிப் பேசி இருபது மாதங்களாகின்றன. இந்தக் காலத்தில் நிலைமை இன்னமும் மோசம் அடையவே செய்திருக்கிறது.

தமிழர் பகுதிகளில் சிங்களவர்களை குடியமர்த்துவதை நிறுத்த வேண்டும் என்பதே சிவந்தனின் மூன்றாவது கோரிக்கை.

மட்டுமல்ல தமிழ் யுவதிகளை சிங்கள ஆண்களை விட்டு வன்புணரச் செய்து , அவர்களைக் கர்ப்பமாக்குவதன் மூலமும் இன அழிப்பு வேலையை செய்கிறது சிங்கள அரசு.

முள்ளி வாய்க்கால் பொன்ற வதை முகாம்களிலும் சிறைகளிலும் வாடும் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது இவனது நான்காவது கோரிக்கை.

அகதிகளாக வருவோரை கருணையோடும், மனிதாபிமானத்தோடும் உலக நாடுகள் ஏற்க வேண்டும் என்பது அவந்து இறுதி கோரிக்கை.

நியாயமில்லாத எந்தக் கோரிக்கையையும் அவன் முன் வைக்கவில்லை.

உலகச் சமூகமே சாவின் விளிம்பின் விளிம்பு வரைக்கும் உண்ணாது சென்று கொண்டிருக்கும் அந்த இளைய மகனது கோரிக்கையைக் காது கொடுத்து கேள். சரி எனப் பட்டால் வினையாற்று.

போதும் சிவந்தா,

இன்னும் நீண்டு போகவே செய்யும் இந்தப் போராட்டம். போராட உன்னைப் போன்ற இளைஞர்கள் வேண்டும். விரதத்தை முடி.

மீண்டும், தமிழர்களைப் பார்த்து நிமல்கா சொன்னதை நினைவு கூர்வது அவசியம்,

“ நடந்ததை மறந்து விடுமாறு அரசாங்கம் திரும்பத் திரும்பச் சொல்கிறது.போரில் அழிக்கப் பட்ட எந்த ஒன்றையும் எளிதில் மறந்துவிட முடியாது. நீங்களும் மறந்துவிடாதீர்கள்.”







36 comments:

  1. “ நடந்ததை மறந்து விடுமாறு அரசாங்கம் திரும்பத் திரும்பச் சொல்கிறது.போரில் அழிக்கப் பட்ட எந்த ஒன்றையும் எளிதில் மறந்துவிட முடியாது. நீங்களும் மறந்துவிடாதீர்கள்.”
    அருமையான வரிகள். வேதனை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அய்யா

      Delete
  2. எட்வின் அவர்களே! "சிவந்தா விரதத்தை முடி" என்று நீங்கள் கெட்டுக்கொண்டது மிகவும் சரியான ஒன்று."பால்கன்" நாடுகளை ஒன்றாக்கியதும் முதலாளித்துவம்தான்.பிரித்ததும் அவர்கள் தான். ஒரு நாட்டை கூறு பொடுவதும் ஒன்றிணைப்பதும் அவர்களின் லாபத்தைப் பொறுத்தது.ஈழம் பிரிவது தான் இலங்கைதமிழர்களுக்கு நலமானது என்று கருதுவோர் உண்டு. ஒன்று பட்ட இலங்கைதான் இந்தப் பகுதிக்கு நல்லது என்று கருதுவோரும் உண்டு. ஒன்று பட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சமுரிமையும்,பாதுகாப்பும் அளிக்கபடவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கருது கிறது. இன்று காலையில் தான் யோ.கர்ணன் என்பவர் எழுதியதை படித்தென்.புலம் பெயர்ந்த,மற்றும் வெளிநாட்டுத் தமிழர்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தாலே.எங்கள் பிரச்சினை தீர்ந்துவிட வாய்ப்பு அதிகம் என்கிறார். ஒரு வேண்டுகோள்! உணர்ச்சி வசப்படுவது மட்டுமே நியாயத்தை கொடுக்காது! அன்புடன்---காஸ்யபன்.

    ReplyDelete
  3. //// Rathnavel Natarajan said...
    “ நடந்ததை மறந்து விடுமாறு அரசாங்கம் திரும்பத் திரும்பச் சொல்கிறது.போரில் அழிக்கப் பட்ட எந்த ஒன்றையும் எளிதில் மறந்துவிட முடியாது. நீங்களும் மறந்துவிடாதீர்கள்.”
    அருமையான வரிகள். வேதனை.///

    மிக்க நன்றிங்க அய்யா

    ReplyDelete
  4. உணர்வுள்ள எந்த தமிழனும் மறக்க கூடாத ஒரு மோசமான நிகழ்வு!

    ராஜபக்சேவின் வாழ்க்கை முடிந்துவிடவில்லை சகோ! இன்னும் நிறைய இருக்கிறது, என்றாவது ஒரு நாள் இவைகளுக்கு அவர் பதில் சொல்லியே தீர வேண்டும்! அது நிச்சயம் நடக்கும்!

    ஏனெனில் புரட்சி எப்போதும் பின்னோக்கி பயனிப்பதில்லை அதன் இலக்கை அடையாமல்!

    ReplyDelete
  5. /// kashyapan said...
    எட்வின் அவர்களே! "சிவந்தா விரதத்தை முடி" என்று நீங்கள் கெட்டுக்கொண்டது மிகவும் சரியான ஒன்று."பால்கன்" நாடுகளை ஒன்றாக்கியதும் முதலாளித்துவம்தான்.பிரித்ததும் அவர்கள் தான். ஒரு நாட்டை கூறு பொடுவதும் ஒன்றிணைப்பதும் அவர்களின் லாபத்தைப் பொறுத்தது.ஈழம் பிரிவது தான் இலங்கைதமிழர்களுக்கு நலமானது என்று கருதுவோர் உண்டு. ஒன்று பட்ட இலங்கைதான் இந்தப் பகுதிக்கு நல்லது என்று கருதுவோரும் உண்டு. ஒன்று பட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சமுரிமையும்,பாதுகாப்பும் அளிக்கபடவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கருது கிறது. இன்று காலையில் தான் யோ.கர்ணன் என்பவர் எழுதியதை படித்தென்.புலம் பெயர்ந்த,மற்றும் வெளிநாட்டுத் தமிழர்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தாலே.எங்கள் பிரச்சினை தீர்ந்துவிட வாய்ப்பு அதிகம் என்கிறார். ஒரு வேண்டுகோள்! உணர்ச்சி வசப்படுவது மட்டுமே நியாயத்தை கொடுக்காது! அன்புடன்---காஸ்யபன்.///

    மிக்க நன்றிங்க தோழர்

    ReplyDelete
  6. /// வரலாற்று சுவடுகள் said...
    உணர்வுள்ள எந்த தமிழனும் மறக்க கூடாத ஒரு மோசமான நிகழ்வு!

    ராஜபக்சேவின் வாழ்க்கை முடிந்துவிடவில்லை சகோ! இன்னும் நிறைய இருக்கிறது, என்றாவது ஒரு நாள் இவைகளுக்கு அவர் பதில் சொல்லியே தீர வேண்டும்! அது நிச்சயம் நடக்கும்!

    ஏனெனில் புரட்சி எப்போதும் பின்னோக்கி பயனிப்பதில்லை அதன் இலக்கை அடையாமல்! ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  7. விரும்பிப் படித்தேன். கட்டுரையின் தீவிரம் என்னைத் தாக்கி அலைக்கழிக்கிறது.
    எனினும், இந்தக் கட்டுரையின் நோக்கம் புரியவில்லை ஐயா. தமிழன் சாகிறான் என்று அத்தனை பேரும் சொல்கிறார்கள் - தமிழ்நாட்டுக் கட்சிகள் பத்திரிகைகள் அத்தனையும் சாடுகின்றன. உருப்படியாக யாரும் எதையும் தலைமை தாங்கிச் செய்யவில்லையே? இலங்கைத் தமிழர் வளம் கருதி சாகுவரை உண்ணாவிரதம் போன்ற போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்பாட்டம் இல்லாமல் நடத்தும் நாளை எதிர்பார்க்கிறேன். உலக அளவில் விழிப்பு ஏற்பட்டு இந்தச் சிக்கல் தீர்ந்தாலும் தீரலாம்.

    ReplyDelete
  8. //உலகில் எங்குமே காண இயலாத ஒரு விசயம் இந்தத் தமிழ் இனப் படுகொலைதான்.

    இல்ல சார். சமீப நைஜீரியா, பாஸ்னியா, சிரியா வரை இனப்படுகொலை என்பது நூற்றாண்டுகளாய் நம்மைப் பீடித்த நோய். நம் வீட்டைச் சுற்றி நடப்பது மட்டும் நமக்குத் தெரிகிறது, புரிகிறது. பாஸ்னியா முஸ்லிம் செத்தால் எனக்கென்ன கவலை, இலங்கைத் தமிழன் கூட தமிழன் என்பதால் ஒரு விழிப்பு.. அவ்வளவு தான். என் வீட்டில் யாராவது செத்தால் தான் எனக்கு எரியும்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியெல்லாம் இல்லை தோழர்.

      அழிவது தமிழன் என்பதாலேயே கண்டு கொள்ளப்படவில்லையே என்கிற வலிதான்

      Delete
  9. /// Seeni said...
    unmai ayya! ////

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  10. ///அப்பாதுரை said...
    விரும்பிப் படித்தேன். கட்டுரையின் தீவிரம் என்னைத் தாக்கி அலைக்கழிக்கிறது.
    எனினும், இந்தக் கட்டுரையின் நோக்கம் புரியவில்லை ஐயா. தமிழன் சாகிறான் என்று அத்தனை பேரும் சொல்கிறார்கள் - தமிழ்நாட்டுக் கட்சிகள் பத்திரிகைகள் அத்தனையும் சாடுகின்றன. உருப்படியாக யாரும் எதையும் தலைமை தாங்கிச் செய்யவில்லையே? இலங்கைத் தமிழர் வளம் கருதி சாகுவரை உண்ணாவிரதம் போன்ற போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்பாட்டம் இல்லாமல் நடத்தும் நாளை எதிர்பார்க்கிறேன். உலக அளவில் விழிப்பு ஏற்பட்டு இந்தச் சிக்கல் தீர்ந்தாலும் தீரலாம். ///

    முதலில் உங்கள் கருத்திடலுக்கு நன்றி சொல்கிறேன். தோழர்,எனக்கும் அந்த எதிர் பார்ப்பு உண்டு. அவர்கள் இதைக் கை எடுக்கும் போது இது வலுப்பெறும் என்று நம்புபவன் நான். அவர்கள் எடுக்காததில் கவலையோடே இருக்க முடிகிறது.

    ReplyDelete
  11. நேர்மையாய் சிந்திப்பதற்கும் சிந்தித்ததை சொல்வதற்கு தைரியம் வேண்டும்.. சில நேரங்களில் இப்படிப்பட்ட கட்டுரைகளை படித்துவிட்டு மௌனமாய் ஏற்றுக்கொண்டு கடந்து போக கூட நேர்மையும் தைரியமும் வேண்டியிருக்கிறது..

    ReplyDelete
    Replies
    1. இந்த அளவிற்கு ஒப்புக்கொள்ளுமளவிற்கு இடமளித்த உங்கள் நேர்மைக்கு தலை வணங்கி நன்றி சொல்கிறேன்

      Delete
  12. இந்தப் போராட்டம் எப்போது முடியும் என்பதே தெரியவில்லை...

    ஆனால் எதற்கும் ஒரு முடிவு உண்டு என்பது மட்டும் உறுதி... அந்த நாள் விரைவில் வரட்டும்...

    ReplyDelete
    Replies
    1. வரும் தோழர்.

      வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  13. ஐயா... ஒரு சின்ன வேண்டுகோள் : இந்த உலவு லோகோ அல்லது ஓட்டுப்பட்டையை எடுத்து விடவும். உங்கள் தளம் திறக்க ரொம்ப நேரம் (more than 10 minutes) ஆகிறது.....

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.bloggernanban.com/2012/06/remove-ulavu-vote-buttons.html) சென்று பார்க்கவும். நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. முயற்சிக்கிறேன் தோழர். மிக்க நன்றி.

      Delete
    2. ஆம் தோழர்..நண்பர் திண்டுக்கல் தனபாலன் சொல்வது போல அந்த ஒட்டுபட்டையால் தங்கள் தளம் திறக்க நீண்ட நேரம் ஆகிறது..

      Delete
    3. அவற்றை எடுக்காமலே அதை சரி செய்து தருவதாக இனிய தோழர் ஒருவர் சொல்லியிருக்கிறார். முடியாவிட்டால் அவசியம் வில்லையை எடுத்து விடலாம் தோழர். மிக்க நன்றிங்க தோழர்.

      Delete
    4. எடுத்தாயிற்ரு தோழர். இப்பொழுது விரைவாய் திறக்கிறது பாருங்கள்

      Delete
  14. விளையாட்டை விளையாட்டாக‌ப் பார்க்க‌லாம்; 'வினை'யாட்ட‌த்தை...?

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நிலா தோழர்

      Delete
  15. Replies
    1. மிக்க நன்றி தோழர். தொடர்ந்து சந்திப்போம்

      Delete
  16. உயிர்ப்பும் துடிப்புமான அந்த வலி மறந்து போக கூடியதா? நன்றி நிமல்காவிற்கும் உங்களுக்கும் தான்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மணிச்சுடர்

      Delete
  17. ஐயா....பெருமூச்சு மட்டுமே.சிவந்தன்....இன்னொரு உயிரைப் பலி கொடுக்க முடியாத நிலை....சொல்ல முடியவில்லை ஐயா !

    ReplyDelete
  18. தவணை முறையில் உண்ணாவிரத நாடகமாடிய ஒரு கோமாளிக்கு கொடுத்த முக்கியத்துவத்தைக் கூட நமது ஊடகங்கள்சிவந்தனுக்குக் கொடுக்கவில்லையே தோழர்

    ReplyDelete
  19. என்ன சொல்வது என்றும் என்ன செய்வதன்று என்றும் சகோதர இனத்துக்கு ஒன்றும் செய்ய முடியாத இந்தியாவில் சிக்கிக் கிடக்கும் மனிதர்களுள் ஒருவனாக இருக்கிறோமே என்ற வேதனையை வெளிப்படுத்தல்-உணர்தல் அந்த எழுத்தின் உண்மை.

    ReplyDelete
  20. //பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலத்தில் நம் சமூகத்திற்கு என்ன செய்திருக்கிறோம் என்பதையே நம் வாழ்க்கையின் அளவுகோலாகக் கொள்கிறோம்//

    //உலகச் சமூகமே சாவின் விளிம்பின் விளிம்பு வரைக்கும் உண்ணாது சென்று கொண்டிருக்கும் அந்த இளைய மகனது கோரிக்கையைக் காது கொடுத்து கேள். சரி எனப் பட்டால் வினையாற்று//

    மிகச் சரியாகச் சொன்னீர்கள். நன்றாக எதையும் அளந்து இட்ட சமூகம் தான் இன்று நன்னிலம் தேடி அலைகிறது. விரைவில் நம்நிலம் அடைவோம். அதுவரை முயல்வோம்.. எதையும் மறவோம். பட்ட வலியல்ல; எம் இனம் கத்திய கதறிய அலறல்கள் எம் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். எமை உயிர்ப்பித்துக் கொண்டே யிருக்கும். உணர்வோடிருக்க உள்ளுருத்திக் கொண்டேயிருக்கும்..

    சிவந்தன்கள் இனி கூடிக் கொண்டேயிருப்பார். அதை நிறுத்தும் புள்ளி ஒரு சம நியாயம் கிடைத்த இடமாகயிருக்கும்..

    வித்யாசாகர்

    ReplyDelete
  21. நான் படித்த அருமையான வரிகள. படித்ததில் பகிர எண்ணியவை... எனது பக்கத்தில் பகிர்கிறேன். எனது அருமை நண்பருக்கு நன்றி. வாழ்த்துகள்.
    தமிழ்நாட்டில் விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் ஆரம்பிப்போம் என்று சொல்ல யாருக்காவது தைரிய மிருக்கிறதா..........?. தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகளால் எதுவும் சாதித்து விட முடியாத. தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகள் போன்று ஒரு மக்கள் இயக்கம் தோன்றினால் தான் மாற்றம் கைகூடும். தமிழ்நாட்டு மாணவர்களின் எழுச்சிப் போராட்டம் தரணியெங்கும் வாழும் தமிழருக்கு புது நம்பிக்கை தருகின்றது.

    துளசிதாஸ் சுப்ரமணியம்
    மலேசியா

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...