Sunday, August 12, 2012

நினைவில் காடுள்ள மிருகத்தைப் பழக்க முடியாது

“ திரைப் படம் தொடங்கி பத்து நிமிடங்கள்கூட கடந்திருக்காது.

‘ உங்கள் திரையரங்கில் ஒரு வெடிகுண்டு வைத்திருக்கிறோம். முடிந்தால் காப்பாற்றிக் கொள்ளுங்கள்’

தொலை பேசி துண்டிக்கப்பட்டது.

‘ இதோ இப்படீங்கறதுக்குள்ளாக’மொத்த அரங்கமும் காலியாகிறது. தீயணைப்புத் துறையினர் வந்து சேர்வதற்குக் கால தாமதமாகும் சூழல். உள்ளே புகுந்து தேடலாம் என்று ஒரு யோசனை வருகிறது. ஆனால் அதை செய்யும் தைரியம் மட்டும் யாருக்கும் இல்லை.

“டேய் டைசா, இங்க வா! உள்ளப் போயி எங்கயாச்சும் குண்டு இருக்கான்னு பாரு.”

டைசன் ஒரு அநாதை. அப்படியே அவனுக்கு ஏதேனும் நிகழ்ந்தாலும் கேள்வி கேட்க யாரும் இல்லை என்கிற தைரியம் எல்லோருக்கும்.

குழந்தை உள்ளே நுழைகிறான். பென்ச்சுகள் அடியில், நாற்காலிகள் அடியில் என்று அங்குலம் அங்குலமாக அலசி எடுக்கிறான். இறுதியாக தீ என்று எழுதிய வாளி மணலில் இருந்தது. கிடாசும் போது வெடித்தது. அப்படியே மயங்கிப் போகிறான். சிறு சிறு காயங்கள்.

யாரும் கண்டுகொள்ள வில்லை. ஒரு ஏழைக் கிழவி அவனை எடுத்துப் போய் மருத்துவம் பார்க்கிறார்.

தேறுகிறான்.

கொஞ்சம் ஆளாகிறான் அனைத்து வகையிலும்.

ஒரு பஞ்சாயத்தில் மூன்று பிள்ளைகளோடு அப்பாவும் இவன் மற்றும் இவன் தம்பியோடு இவன் அம்மாவும் பிரிய, கொஞ்ச நாட்களிலேயே ஒரு அநாதை விடுதியில் இவர்களை விட்டுவிட்டு அம்மாவும் எங்கோ போய்விட..., இவனே இவனது தம்பியையும் திரை அரங்கத்தில் வேலை செய்து காப்பாற்றுகிறான்.

அந்த வெடிகுண்டு சம்பவம் நடந்த பிறகு இவனது தம்பியைப் பற்றியும் தகவல் இல்லை.

இவன் ஆளாகி தேடுகையில் மீண்டும் அவனது குடும்பம் முழுமையும் ஒன்றாகவும் வளமையாகவும் இருப்பதை அறிகிறான்.

அவர்களோடு இருக்க வற்புறுத்துகிறார்கள்.

“ எல்லோரும் இருந்த போதே என்னை அநாதையாக்கினீர்கள். இனி வேண்டாம். நான் அநாதைக் குழந்தைகளோடும் அவர்களுக்காகவுமே வாழப் போகிறேன் என்று முகத்தில் அறைந்துவிட்டு ஒரு அநாதை இல்லம் தொடங்கி மிகுந்த கஷ்டத்தோடு அதை நடத்தி வருகிறார்”

இதைப் படித்தால் ஏதோ ஒரு நாவலின் அல்லது திரைப் படத்தின் மொழிபெயற்புச் சுருக்கம் என்றுதான் தோன்றும்.சத்தியமாய் இல்லை , புதுக்கோட்டை மாவட்டத்தில் “சாராள் இல்லம்” தோழர் டைசன் அவர்களின் கதைதான் இது. தோழர் சுரேகா தனது வலையில் “சாராள் இல்லம்” என்ற பெயரில் இட்ட இடுகையின் சுருக்கம்தான் இது.

அந்தப் பதிவின் இறுதிப் பாரா

“ நம் பதிவர் சமூகத்தால் முடியாதது எதுவும் இல்லை.என் நோக்கமெல்லாம் நாம் ஒவ்வொரு பதிவரும் ஒவ்வொரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நம்மால் ஆன கல்வி, உணவு, உடை,உதவிகளைச் செய்ய வேண்டும்.இது நம் நிலைக்கு மிகச் சிறியத் தொகையாகத்தானிருக்கும். இதை நாம் கூட்டாகவும் செய்யலாம்.இரண்டு மூன்று நபர்கள் சேர்ந்து ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம். ஒரு ஆண்டுக்கு ஆகும் செலவைத் தந்துவிட்டால் ஒரு குழந்தை தன் வாழ்வை உங்களின் பெயரால் வாழும்.

வாருங்கள் வடம் பிடிப்போம்”

இந்தக் கடைசிப் பகுதி என்னை என்னவோ செய்தது.

பதிவர்கள் நினைத்தால் சேர்ந்தோ தனியாகவோ அநாதைக் குழந்தைகளைத் தத்தெடுக்கலாம் என்கிறார். ஆனால் ஒரு பதிவர் நினைத்தால் இணையத்தை எவ்வளவு லகுவாக நல்ல காரியத்திற்குப் பயன் படுத்தாலாமென்பதற்கு சுரேகா ஒரு நல்ல உதாரணம்.

யார் இந்த ஆள் என்று பார்க்கலாமே என்று அவருடைய தன் குறிப்பைப் பார்க்கலாம் என்றபோதுதான்,

“ நினைவில் காடுள்ள மிருகத்தைப் பழக்க முடியாது. நான் அந்த மிருகம். இதோ காடு நோக்கி...” என்று இருந்தது. ‘ ஐ! நம்ம ஜாதி’ என்று மனசு துள்ளியது. நல்ல வேளையாக அங்கே அவரது அலைபேசி எண் கிடைத்தது.

தொடர்பு கொண்டேன்.

ஆச்சரியம் என்னை அவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. ஞானாலயா அய்யா அவருக்கு ஏற்கனவே எனது நூலை வாசிக்கக் கொடுத்திருந்திருக்கிறார்.

பேசினோம் பேசினோம் பேசிக் கொண்டே இருந்தோம்.

இணையத்தின் மூலம் அதிலும் குறிப்பாக முக நூல் மற்றும் வலைதளத்தின் மூலம் இந்தச் சமூகத்தை நாம் விரும்புகிறமாதிரி புரட்டிப் போட்டுவிட முடியும் என்பதில் என்னை விடவும் உறுதியாக இருந்தார்.

தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறேன். நல்ல விளைவுகளை மட்டுமல்ல ஒரு நல்ல பதிவு இப்படி சில இம்சைகளையும் சேர்த்தேதான் கொண்டு வந்து சேர்க்கும் என்பதை அவர் இப்போது உணர்ந்திருக்கக் கூடும்.

why g?
என்று ஒரு பதிவு.

கல்வி வியாபாரிகள் கையில் சிக்கிக் கொள்ளும் போது இடைத் தரகர்கள் என்னவெல்லாம் வேலை செய்வார்கள் என்பதை அழகாக சொல்கிறது.

சமீபத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் இவரது நண்பரின் குழந்தையை சேர்ப்பதற்காகப் போயிருக்கிறார்கள். எப்படியேனும் அந்தப் பள்ளியில் தன் பிள்ளையை சேர்த்துவிட வேண்டும் என்பதில் அவரது நண்பர் பிடிவாதமாக இருந்திருக்கிறார்.

எப்படியோ ஒரு இடைத் தரகர் மூலம் பெருந்தரகரைப் பார்க்க சென்றிருக்கிறார்கள்.அந்தப் பெருந்தரகரும் அந்தப் பள்ளியின் முதலாளிகளில் ஒருவர்.சிறந்த நடிகர். ஒரு சிறந்த நடிகரின் மகன். ஒரு பெரும் பெரும் பெரும் நடிகரின் சகலையும் கூட.

பெருந்தரகரை நேரில் பார்க்க இயலாது. எதுவாக இருப்பினும் இடைத் தரகர் மூலமே சொல்லி அனுப்ப சொல்கிறார் பெருசு. இடைத் தரகர் போய் வருகிறார்.

”அய்யா பேசிவிடுவார். குழந்தையை தேர்வெழுத சொல்லுங்கள். முடிந்துவிடும். அய்யாவுக்கு 75000 ரூபாய் வேண்டும் “’ என்கிறார்.

தருகிறார்கள்.

பையன் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இடம் மறுக்கப் படவே பெரியவரைப் பார்க்கப் போகிறார்கள்.

இப்போதும் நேரடியாய் சந்திக்க அனுமதி இல்லை. இடைத் தரகர் உள்ளே போய் வெளியே வருகிறார்.

“எண்ட்ரென்ஸ்ல ஃபெயில்னா ஒன்னும் செய்ய முடியாதாம்”

ஒரு வழியாக கிடைக்காத இடத்திற்கு தொலைபேசி செலவிற்கு என்று 6000 ரூபாயை எடுத்துக் கொண்டு மீதியை பெறுகிறார்கள்.

இந்தப் பதிவில் அவர் அந்தப் பள்ளியின் பெயரையோ, பெருந்தரகர் யார் என்றோ சொல்லவில்லை. ஆனால் தலைப்பின் வழியும் அந்த பெருந்தரகரின் புகைப் படத்தையும் போடுகிறார். அந்தப் பதிவை இப்படி முடிக்கிறார்,

“இதுபோல் எத்தனை ஆறாயிரம் ரூபாய்களில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்?”

இதற்கு பெரிய துணிச்சல் வேண்டும்.

அந்தப் பெரிய தரகரின் தாயார்தான் அரசு கல்வி குறித்து முடிவெடுக்க நியமித்த் குழுவில் இருந்தவர். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வாய் கிழிய தரமான கல்வி குறித்தும் எப்படியெல்லாம் அர்ப்பணிப்போடு கல்வி சேவை செய்ய வேண்டும் என்றும் கிடைக்கிற ஊடகங்களின் வழி முழங்குகிறவர்.

“யாருன்னு கேட்காமலே சின்னக் குழந்தையும் சொல்லும்”  எஜமானரின், தளபதியின் சகளை. அவரை அம்பலப் படுத்தி ஒரு பதிவை அதுவும் சினிமாத் துறையில் இருப்பவரால் எப்படி போட முடியும்?

 உண்மையைச் சொன்னால் உயிரை உயிலெழுதி கொடுத்துவிட்டு வந்தவனால் மட்டுமே இதை இப்படி எழுத முடியும்.

மிகுந்த கவனத்தோடும் அக்கறையோடும் கட்டப்பட்டு ஏறத்தாழ மூன்று தலைமுறைகளாக படாத பாடுபட்டு காப்பாற்றப்பட்டு வந்த ஒரு குடும்பத்தின் போலியான பிம்பத்தை ஒரே ஒரு பதிவின் மூலம் பொடிப் பொடியாக தகர்த்து எறிகிறார்.

ஒருமுறை வண்ணை வளவன் சொன்னார்,

“எப்போதுமே
என் கையில்
பேணாதான் இருக்கும்
என்று சொல்வதற்கு
நான் ஒன்றும் நீயல்ல
நண்பனே

தேவைப் படும்போது
காலம் தரும் கருவி
என்
வலது கைக்கு வரும்

தானாகவே பேணா
மறைந்து போகும்”

இதற்கு பெயர்தான் மக்கள் எழுத்தாளன் என்பது. மக்களுக்காக எழுதுவதும் தேவைப் படும் எனில் எழுதியதை செயலாற்ற களமிறங்குவதும்தான் நல்ல எழுத்தாளனின் அடையாளமாகும்.

“சுரேகா” நல்லதொரு மக்கள் தளம்.

எழுதுவதோடு நிற்கவில்லை இவர். தனது நண்பர் கேபிள் சங்கரோடு இணைந்து “கேட்டால் கிடைக்கும் ” என்றொரு குழுமத்தை ஏற்படுத்தி அதன் மூலம் ஏராளம் செய்து வருகிறார்.

NIIT யில் பணம் கட்டி ஏமாந்த பாலாஜி அவர்களது பணத்தை போராடி வாங்கித் தந்திருக்கின்றனர். அதே நேரத்தில் நடந்த விஷயத்தை அம்பலப் படுத்தவும் செய்கிறார் தனது வலை மூலம். படிப்பவர்கள் ஏமாந்து விடாமல் இருக்கலாம்.

எழுதி என்னத்தக் கிழிச்சீங்க? என்று கேட்பவர்களுக்கு தோழர் சுரேகாவின் வலையையும் செயல்பாடுகளையும் திமிறோடு சொல்ல முடியும்.

இவரது வலை ஆக்கப் பூர்வமானது. மட்டுமல்ல நல்ல கருத்துக்களில், உள்ளடக்கத்தில் கவனம் செலுத்துவோர் அழகியலில் கவனம் செலுத்த மாட்டார்கள் என்று ஒரு பேச்சு உண்டு. அதையும் உடைத்திருக்கிறார் தோழர் சுரேகா.

மிக அழகான, ஈர்க்கிற வலை இவருடையது.

கலையாயினும் வலையாயினும் மக்களுக்காகவே என்று உரத்து சொல்கிறது “சுரேகா”

பாருங்கள்
http://www.surekaa.com/

49 comments:

  1. கடந்த வாரம் தான் தோழர் சுரேகா+கேபிளின் "கேட்டால் கிடைக்கும்" முகநூல் குழுமம் பற்றி அறிந்தேன் உயரிய பணியை செய்துகொண்டிருக்கிறார்கள்! அனால் அங்கேயும் சிலர் தங்கள் வலைப்பதிவு பதிவுகளை விளம்பரபடுத்தும் நோக்கில் பகிர்ந்து வருவது வேதனைக்குரியது! நல்ல பதிவு தோழரே!

    ReplyDelete
    Replies
    1. வணக்கமும் நன்றியும் தோழர். இது எல்லா இடங்களிலும் நடக்கவே செய்யும் தோழர். காலத்தின் கையில் இருக்கும் சல்லடையில் இவை தேங்கி நீர்த்துப் போகும்.இயலுமெனில் சுரேகாவோடு பேசுங்கள்.

      Delete
  2. ஐயா மிக அருமையான தகவல்களை சுருக்கமாக கூறினீர்கள் .. டைசன் ஐயாவின் கதை எதோ சினிமா என்று தான் நினைத்தேன்.. இப்படியான மனிதர்களை நாம் மறந்தே விடுகின்றோம்..அல்லது தெரியாமல் போய்விடுகின்றது...

    சுரேகா அவர்களின் நற்பணி பாரட்டத்தக்கதே. அநாதை என்ற வார்த்தை எனக்கு உடன்பாடு இல்லை.. ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்கும் மனோபாவம் நம்மவர்களில் மிகவும் குறைவு.. சொந்த ரத்தம் தேடுவோர் அல்லவா நாம் .. ஆனால் அது மாறும்.. ஆதரவற்ற பிள்ளைகளுக்கு நம்மால் ஆன உதவிகளும், அவர்கள் பாதுகாப்பாக வளர ஒரு நல்ல குடும்பமும் மிக அவசியமாகும் ... பலருக்கும் சென்றடையவேண்டிய பதிவாகும் ...

    பகிர்ந்தைமுக்கு நன்றிகள் !!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர். அவர்களை வேறு என்ன பெயரிட்டு அழைத்தாலும் அந்த வலி ம்மாறாது தோழர். ஆனாலும் உங்களின் அந்த உணர்வு நிலையோடு ஒன்றிப் போகிறேன்.

      தொடர்ந்து சந்திப்போம் தோழர்.

      Delete
  3. இன்றைய நிலவரம் எப்படி இருக்கிறது? கல்வி வியாபாரிகளின் நிலைமை எப்படி இருக்கிறது? படித்துப் பாருங்கள். இன்னொரு அருமையான தளத்தையும் அறிமுகப்படுத்துகிறார். http://www.surekaa.com/ நன்றி திரு இரா எட்வின்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அய்யா

      Delete
  4. இன்று அதிகாலையில் ஒரு புதிய ,சமூகச் சிந்தனையாளரின் எண்ணங்களைப் பார்த்து வியந்து நிற்கிறேன்.உண்டாலம்ம இவ்வுலகம் இவர்களால் தான்.
    -பழனி.சோ.முத்துமாணிக்கம்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர். தொடர்ந்து சந்திப்போம்

      Delete
  5. பொறுப்பு மிக்க பதிவு ....

    ReplyDelete
  6. பொறுப்பு மிக்க பதிவு ,,,சேவை என்ற வார்த்தை எனக்கு பிடிக்காது ,,இது நாம் செய்யும் கடமை ,,கடமையாற்ற புறபடுவோம்..காவியம் படைப்போம்...

    ReplyDelete
    Replies
    1. சேவை என்பதற்கும் கடமை என்றுதான் கொள்ள வேண்டும். ஆனாலும் இந்த உணர் நிலையோடு நானும் ஒத்துப் போகிறேன் தோழர். மிக்க நன்றி.

      Delete
  7. எனக்கு மிகவும் பிடித்த தளங்களில், இந்த தளமும் ஒன்று...

    பலரும் அறிய அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர். இப்போது வலை விரைவாய் திறக்கிறதா?

      Delete
  8. மிக்க நன்றி தோழர்...!! அன்பை அதீதமாக வெளிப்படுத்தியிருக்கிறேன். இன்னும் உற்சாகமாக எழுதுவேன். இயங்குவேன்.. நன்றி மீண்டும்!

    ReplyDelete
    Replies
    1. கிரீடத்திற்குரிய தலை சுரேகா. ஏதோ என்னால் முடிந்த தலைப்பாகை. மிக்க நன்றி சுரேகா.

      Delete
    2. நன்றி மிகுதியில்... வார்த்தையைக்கூட தவறாக எழுதிவிட்டேன்...

      அன்பை அதீதமாக வெளிப்படுத்தியிருக்கிறேன். அல்ல..!!

      அன்பை அதீதமாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்...!!

      நீங்கள் வேறு நான் வேறு என்று எண்ணாதிருந்திருப்பேன் போல..

      Delete
    3. இரண்டுமே ஒன்றுதான் சுரேகா

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. நீங்கள் தந்த சுட்டியின் மூலம் சுரேகா தளம் படித்தேன்.. அருமையாக இருக்கிறது.. பொது நலனை முன்னிறுத்தி எழுதும் மக்கள் எழுத்தாளர்களுக்கே சக எழுத்தாளனையும் பாராட்டும் இயல்பு வரும்..தொடரட்டும் உங்கள் நல்ல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் பணி..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழர்.அறிமுகமே தேவையில்லாத தோழர் சுரேகா.தொடர்ந்து சந்திப்போம். மிக்க நன்றி தோழர்

      Delete
  11. அருமை. உற்சாகமளிப்பதாகவும், நம்பிக்கையளிப்பதாகவும் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர். தொடர்ந்து சந்திப்போம்

      Delete
  12. நல்ல பதிவு என்பதை விட நல்ல பகிர்வு என்பது பொருத்தமாக இருக்கும் தோழர்.

    ReplyDelete
    Replies
    1. பதிவா பகிர்வா என்பதல்ல தோழர் விஷயம். இது ஒரு அறிமுகம். அத்தோடு என் வேலை முடிந்துவிட்டதாகவே கருதுபவன்.
      மிக்க நன்றி தோழர்

      Delete
  13. நல்லதொரு இடுகை வாசித்தேன் மனது நிறைவடைகிறது ...நாம் என்ன செய்தோம் என்னும் சிந்தனை நிரம்பியே...!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம். முடிந்ததை செய்வோம். மிக்க நன்றி தோழர்.

      Delete
  14. எட்வின் அவர்களே! பெரிய"ஜி" டெல்லியில் பணியாற்றிய போது அடித்தது இப்பொது தொடருகிறது! அந்தக்காலத்து அமெச்சூர் நடிகர்களை கேட்டால் கதை கதையாகச் சொல்வார்கள்! தோழர் சுரேகா கொஞ்சம் கவனமாக இருக்கட்டும்! வாழ்த்துக்களூடன்---காஸ்யபன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழர்.இப்ப கொஞ்சம் அதிகம் தோழர். பிள்ளைகள் 16 அடி அல்ல 160 அடி பாய்கிறார்கள். மிக்க நன்றி தோழர்.

      Delete
  15. நல்ல எழுத்தை இப்படி மனமகிழ்ந்து பாராட்டுவது அருமை சார். இன்னும் நன்கு எழுத ஊக்கமளிக்கும்

    நேரிலும் பழக மிக இனிய மனிதர் - நண்பர் சுரேகா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர். தொடர்ந்து சந்திப்போம்

      Delete
  16. நல்ல பதிவுகளை தொடர்ந்து பகிர்தல் மட்டுமின்றி அறிமுகம் செய்வதற்கு மிக்க நன்றி தோழர்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மணிச்சுடர்

      Delete
  17. நல்ல பதிவு தோழர்.

    தோழமையுடன்
    தமிழ்மணி (facebook/tamilmani75

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர்.தொடர்ந்து சந்திப்போம்

      Delete
  18. வணக்கம் தோழரே... எதனை வேண்டுமானாலும் சமூக பயன் உள்ளதால மாற்ற முடியும். தங்கள் எண்ணத்தில் சமூக அக்கறை இருந்தால்.//எழுதி என்னத்தக் கிழிச்சீங்க? என்று கேட்பவர்களுக்கு தோழர் சுரேகாவின் வலையையும் செயல்பாடுகளையும் திமிறோடு சொல்ல முடியும்.//

    ReplyDelete
  19. ஊக்க
    நீரூற்றல்

    வலை
    கண்டேன் இணைத்துக் கொண்டேன்
    சுரேக அவர்களின் நல் பணிக்கு
    பாட்டுக்கள்

    உங்கள் பெருந்தன்மைக்கு
    என் நன்றிகள் சார்

    ReplyDelete
    Replies
    1. இணைத்துக் கொண்டமைக்கு நன்றி தோழர். தொடர்ந்து சந்திப்போம்

      Delete
  20. சுரேகாவின் தளத்தை ஏற்கனவே அறிந்திருந்தாலும், உங்களின் மூலம் திரும்ப நினைவுக்கு கொண்டு வந்ததற்கு தங்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  21. உண்மையைச் சொன்னால் உயிரை உயிலெழுதி கொடுத்துவிட்டு வந்தவனால் மட்டுமே இதை இப்படி எழுத முடியும்.

    உண்மையாண் உண்மை00

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழர்.
      மிக்க நன்றி

      Delete
  22. எவ்வளவு பெரிய விஷயம் ஐயா.....ஆனால் எதையும் ஈழத்தோடு இணைத்துப் பார்க்கவே மனம் ஓடுகிறது எனக்கு !

    ReplyDelete
    Replies
    1. அதுதான் தோழர் இயல்பானதும் நியாயமானதும். நானும் உங்களோடுதான். மிக்க நன்றி ஹேமா

      Delete
    2. நான் படித்த அருமையான வரிகள. படித்ததில் பகிர எண்ணியவை... எனது பக்கத்தில் பகிர்கிறேன். எனது அருமை நண்பருக்கு நன்றி. வாழ்த்துகள். தமிழ்நாட்டில் விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் ஆரம்பிப்போம் என்று சொல்ல யாருக்காவது தைரியமிருக்கிறதா? தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகளால் எதுவும் சாதித்து விட முடியாத. தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகள் போன்று ஒரு மக்கள் இயக்கம் தோன்றினால் தான் மாற்றம் கைகூடும். தமிழ்நாட்டு மாணவர்களின் எழுச்சிப் போராட்டம் தரணியெங்கும் வாழும் தமிழருக்கு புது நம்பிக்கை தருகின்றது.

      துளசிதாஸ் சுப்ரமணியம்
      மலேசியா

      Delete
    3. மிக்க நன்றி தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...