“ வேணாண்டா
வெள்ள மாத்திர
அடக்
கண்டதுக்கெல்லாம்
முழுங்கி முழுங்கி
தொண்டையும் புண்ணா போச்சுதே
அட
வேணாண்டா
வெள்ள மாத்திர”
முன்பெல்லாம் த மு எ ச கலை இரவு மேடைகளில் தவறாமல் ஒலிக்கும் பாடல் இது.
தொடங்கியதுமே ஜனத்திரள் வெடித்துச் சிரித்து கைதட்டி ஆர்ப்பரிக்கும். எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவே அலுக்காது சுவைத்த பாடல் அது. அந்தப் பாடல் அவ்வளவு தூரம் ஜனங்களிடம் போய் சேர்ந்தமைக்கு அன்றைய தினத்தில் அரசாங்க மருத்துவ மனைகளில் வழங்கப்பட்ட “த.அ” வெள்ளை மாத்திரைகளே காரணம்.
தலை வலின்னு போனாலும், வவுத்து வலின்னு போனாலும், குளிர் காச்சல்னு போனாலும் அதே வெள்ளை மாத்திரையையே மாற்றாமல் கொடுக்கிறார்களே என்று மக்களிடம் இருந்த அயர்வு கலந்த சலிப்பே அந்தப் பாடலின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
“த” னா “ அ “னா என்னா தெரியுமா? தானா ஆனாதான் உண்டு. இந்த மாத்திரையால ஒன்னும் ஆகாது என்று அர்த்தம் என்று அப்போதைய கலை இரவு பேச்சாளர்களில் பெரும்பான்மையோர் பலத்து வெடிக்கும் ஆரவார்த்திற்கு இடையில் பேசுவது வழக்கம். நானும் ஒரு இருபது கலை இரவு மேடைகளிலாவது இதை பேசியிருப்பேன்தான்.
அந்த அளவுக்கேனும், “ த” னா “அ” னா மாத்திரைகளோடேனும் இன்றைக்கு இருக்கிற அளவில் அரசு மருத்துவ மனைகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா? என்பதற்கு சன்னமான அளவிற்கேனும் நம்பிக்கை தரக்கூடிய பதில் தட்டுப்பட மறுக்கிறது.`
அரசு மருத்துவ மனைகளின் அவசியம் குறித்து ஆக சமீபத்தில் உணர ஒரு வாய்ப்பு கிட்டியது.
“உங்க அப்பா செத்துக்கிட்டு இருக்கார், சார். நேரம் கடத்திப் பயனில்லை. இன்னும் பத்து நிமிடங்களுக்குள் அவரை தியேட்டருக்குள் கொண்டு போக வேண்டும்”
என்று மருத்துவர் சொன்னபோது கேட்டேன்,
“எவ்வளவு சார் ஆகும்”
அவர் சொன்ன மாத்திரத்தில்,
“சரிங்க சார், அழைத்து செல்லுங்கள்”
அழைத்துச் சென்றார்கள். ஒரு மணி நேரத்திற்கெல்லாம், செத்துக் கொண்டிருந்த என் தந்தையை உயிரோடு எங்களிடம் எங்களிடம் ஒப்படைத்தார்கள்.
என்ன,
மூன்று வட்டிக்கு ஒரு ஐம்பது , இரண்டு வட்டிக்கு ஒரு லட்சம், கைவசம் இருந்த ஐம்பது போக நண்பர்கள் கைமாற்றாய் கொடுத்த நாற்பது எல்லாவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
ஆக கையில் இல்லாவிட்டாலும் புரட்ட முடிந்தது என்பதால் அப்பா இன்று எங்களோடு இருக்கிறார். புரட்ட முடியாது போயிருப்பின் அப்பா படமாகி ஐந்து மாதங்களாகியிருக்கும்.
அதற்கு அடுத்த நாள் தம்பி விஷ்ணுபுரம் சரவணனோடு பேசிக் கொண்டிருந்தேன்,
“எல்லா அப்பாவும் அப்பாயில்லையா சரவணன்?”
“ அப்பான்னா அப்பாதான். ஏண்ணே?”
“ஒருக்கால் புரட்ட முடியாதவனோட அப்பான்னா செத்துட வேண்டியதுதானா, சரவணன்?”
“வேற வழி, சாக சாகப் பார்த்துக் கொண்டுதானே இருந்தோம்”
உடைந்தார்.
அவரது தந்தைக்கும் அப்பாவிற்குன் வந்ததுபோல் ஏதோ ஒரு நோய் வர புறட்டவும் முடியாது போகவே வேறு வழியேயின்றி ஏதோ அவரை திருப்தி படுத்துவதற்காக மாத்திரைகளை வாங்கிக் கொடுத்து அவர் பையப் பைய மரணிப்பதை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
உடைந்தேன்.
முடியாத எல்லா அப்பாக்களும் எல்லா அம்மாக்களும் காப்பாற்றப் படவேண்டும் எனில் பொது மருத்துவ மனைகள் பலுகிப் பெருக வேண்டும்.
ஆனால் இருக்கிற மருத்துவ மனைகளைக் காப்பாற்றவே படாத பாடு பட வேண்டியிருக்கிறது. புதுச்சேரி ஜிப்மர் சற்றேரக்குறைய பணம் கட்டி வைத்தியம் பார்க்கும் அரசு மருத்துவ மனையாகிப் போய்விட்டது.
இந்த மருத்துவமனைக்கு தன்னாட்சி அந்தஸ்தை வழங்க முடிவெடுத்த போதிலிருந்தே பிருந்தா காரத் மாநிலங்களவையில் இந்த மருத்துவனையைக் காப்பாற்ற போராடியதையும், மார்க்சிஸ்ட் கட்சியினர் அதற்காக முன்னெடுக்கும் தொடர் போராட்டங்களையும் நன்றியோடு கொள்ளவே வேண்டும்.
இது ஒரு புறமிருக்க “ மருத்துவக் கல்வியின் தரம் கவலை அளிக்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாக 01.07.2012 தினமலர் கூறுகிறது.
“சுகாதாரக் குறியீடுகள் மோசமாகவே தொடர்கின்றன” என்றும் அவர் கூறியதாகவும் தினமலர் தொடர்ந்து சொல்கிறது.
“ பிரசவ கால மரணங்களும், சிசு மரணங்களும் தனக்கு மிகுந்த கவலையைத் தருவதாக பிரதமர் கூறியிருக்கிறார்.
இவற்றை காரத்தோ, அத்வானியோ சொன்னால் அதில் ஒரு அர்த்தமுண்டு. பிரதமரே இப்படிப் பேசுவது என்பதுதான் எவ்வளவு முயன்றும் பிடிபட மறுக்கிறது.
சிசு மரணங்கள் குறித்து கவலையைப் பதிவதோடு ஒரு சராசரி குடிமகனே நிறுத்திக் கொள்ளக் கூடாது. போதிய மருத்துவ சிகிச்சையின்றி இறந்து போகும் குழந்தைகளில் எத்தனை பகத்களோ, எத்தனை பாரதிகளோ, எத்தனை அன்னை தெரசாக்களோ?
பிரதமர் இப்படி கவலைப் படுவதோடு தனது கடமையை சுறுக்கிக் கொள்வதை எதிர்த்து மக்கள் திரண்டு போராட வேண்டும்.
அவரது வேதனைகளிலேயே மிகவும் ஆழமான வேதனை இதுதான். அவர் சொல்கிறார்,
“இன்றைக்கும் மருத்துவ செலவுகளுக்காக, மூன்றில் இரண்டு பங்கு தொகையை மக்கள் கடன் வாங்கியே செலவிடுகின்றனர். அதிலும் மருந்துகளுக்காகவே அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது”
மக்கள் கந்து வட்டிக்கு கடன் வாங்கி மருந்து வாங்குவது குறித்து நானோ நீங்களோ கவலைப் படுவதில் பொருளிருக்கிறது. ஆனால் மருந்து வாங்குவதற்காக மக்கள் கடன் வாங்குவதைப் பார்த்து ஒரு பிரதமர் கவலைப் படுவதாகக் கூறுவது கூட ஏழை மக்கள் மீதான அவரது நக்கல் என்றே கொள்ள வேண்டியுள்ளது.
அவர் எதற்கு விசனப் பட வேண்டும்? ஊர் ஊருக்கு மருத்துவ மனைகளைத் திறந்து மருத்துவத்தை ஒரே கை எழுத்தில் பொதுப் படுத்தி ஏழை எளிய மக்களை கடன் வலையிலிருந்து மீட்க சர்வ வல்லமையுள்ள பிரதமர் இப்படிப் பேசுவதை மிக வன்மையாக கண்டிக்கவே வேண்டும்.
போக இப்படி கந்து வட்டிக்கும் மீட்டர் வட்டிக்கும் பல சமயங்களில் கிலோமீட்டர் வட்டிக்கும் கடன் வாங்கும் மருந்துகளில் , அதுவும் குழந்தைகளுக்கான “ஃப்ரீ ப்ரோ கிட், மற்றும் லேக்டோபாசில்” போன்ற தர நிலையற்ற மருந்துகள் விற்கப் படுவதாக உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கண்டுபிடித்திருப்பதாய் 22.08. 2012 “தீக்கதிர்” சொல்கிறது.
அமீர்கான் எழுதியதை மொழிபெயர்த்துள்ள “ தமிழால் இணைவோம்” என்ற இணைய குழுமம்,
”சர்க்கரை நோய்க்கு என்ன மருந்து தருவாய்? என தேர்வில் கேட்கப் படும் கேள்விக்கு மருத்துவ மாணவர் “GLIMEPRIDE" என்று பதில் எழுதுகிறார்.
இது சர்க்கரை நோயாளிகளுக்கு தரப்படும் உப்பு. பத்து வில்லைகள் கொண்ட அட்டையின் விலை இரண்டு ரூபாய்.
ஆனால் அதே நபர் மருத்துவர் ஆனதும் சர்க்கரை நோயாளிக்கு “ AMARYL" என்ற மருந்தினை பரிந்துரைக்கிறார். மேற்சொன்ன இரண்டின் பெயர்கள்தான் வேறே தவிர இரண்டும் ஒன்றுதான்.
ஒரே வித்தியாசம் மேலே சொன்ன "glimepride" இரண்டு ரூபாய். கீழே உள்ள "amaryl" நூற்றி இருபத்தி ஐந்து ரூபாய்.
"CENTRIZINE" என்பதும் “ CETZINE" என்பதும் ஜலதோசத்திற்கான வேறு வேறு பெயர்களைக் கொண்ட ஒரே மருந்துகள். ஒரு ரூபாய் இருபத்தி ஐந்து பைசா விலையுள்ள “:cetrizine" ஐ தவிர்க்கும் மருத்துவர்கள் முப்பத்தி ஐந்து ரூபாய் விலையுள்ள”cetzine" ஐயே பெரும்பாலும் பரிந்துரைக்கிறார்கள்.
மட்டுமல்ல "STREPTOKINASE" மற்றும் "UROKINASE" ஆகிய ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மாரடைப்புக்கான மருந்துகள் வேறு பிராண்டுகளில் ஐயாயிரம் ரூபாய்க்கு சந்தைகளில் விற்கப் படுகின்றன”
என்று அமீர்கான் எழுதியுள்ளதாக சொல்வதை எளிதாக கடந்து போக முடியவில்லை.
“ வடகிழக்கு கிராமப் புறங்களில் இரண்டாயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதம் தொடர்வது தமக்கு கவலை அளிப்பதாகவும், ஒரு மருத்துவருக்கு குறைந்த பட்சம் மூன்று செவிலியர்களேனும் தேவை என்ற நிலையில் இரண்டு மருத்துவர்களுக்கு மூன்று செவிலியர்கள் என்ற நிலை நீடிப்பதிலும் தாம் தாங்கொன்னாத கவலையோடிருப்பதாவும்” சொல்லியிருக்கிறார்.
இவர் இப்படி சொல்வதால் ஏதோ தெற்கில் மேற்கில் எல்லாம் போதிய மருத்துவர்களும் செவிலியர்களும் இருப்பதாக் கொள்ளக் கூடாது. இங்கும் சற்றேரக் குறைய அதே நிலைமைதான் என்பதை உள்வாங்க வேண்டும்.
ஒரு பிரதமர் இவ்வளவு புலம்புவது தேவையே இல்லை. சொடக்குகிற நேரத்தில் வணிகர்களிடமிருந்து மருத்துவத்தை தனது நேரடி நிர்வாகத்தில் கொண்டுவர முடியும் அவரால். ஆனால் செய்ய மாட்டார். காரணம் முதலாலிகள் விடமாட்டார்கள். அவர்களிடம்தான் இவர்களுக்குத் தேவையான பணம் இருக்கிறது என்பதென்னவோ உண்மைதான்.
ஆனாலும் அவருக்கு சொல்லி வைப்போம். ஏழைகளின் உயிர் மீது கொஞ்சம் அக்கறை வையுங்கள்.
அவர்களிடம்தான் உங்களுக்கான வாக்குகள் இருக்கின்றன என்பதற்காகவேனும்.

வணக்கம் தோழரே..பதிவு படித்தேன். கொஞ்சம் கனமாகவும் உண்மை உறைந்து கிடப்பதையும் கண்டு நெஞ்சம் கனத்தது. நான் மறுபிறவி எடுத்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன். வேண்டாண்டா வெள்ளை மாத்திரையை ரசித்த ஜீவிகளில் நானும் ஒருவர்தான். இன்று அதனைக் கொஞ்ச்ம் ஆழமாக சிந்தித்தால், அரசு மருத்துவமனைகளின் நிலை முன்பை விட கொஞ்சம் பரவாயில்லை, சீரடைந்திருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். இதில் இடது சாரிகளின் பங்கு பெருமளவில் இருக்கிறது. தோழர், சகட்டு மேனிக்கு மாத்திரைகள் பெயரை அள்ளி விளாசி இருக்கிறீர்கள். மாத்திரைகளுடன் அத்தனை நெருங்கிய உறவா? இப்போது அகால நேரத்தில் ஒரு பிரச்சினை என்றால், தனியார் மருத்துவ மனைகளை விட, அரசு மருத்துவமனை பரவாயில்லை. ஏதோ ஒரு முதல் உதவி செய்கிறார்கள். நான் கூட அர்த்த ராத்திரியில் நெஞ்சு வலி வரும்போது, தனியார் மருத்துவமனைக்குச் சென்று தட்டி எழுப்பி அவஸ்தைப் படுவதை விட,அரசு மருத்துவமனைக்கே சென்றதுண்டுஅவசரத்துக்கு ஒரு மருத்துவராவது இருக்கிறார். நல்ல சிகிச்சையும் உண்டு தோழரே.. நீங்கள் கூறியபடி//“இன்றைக்கும் மருத்துவ செலவுகளுக்காக, மூன்றில் இரண்டு பங்கு தொகையை மக்கள் கடன் வாங்கியே செலவிடுகின்றனர். அதிலும் மருந்துகளுக்காகவே அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது”//, இதன ஒரு பிரதமர் சொல்வதுதான் வேதனையானது.அதற்கான தீர்வும் நீங்களே முன் வைத்துவிட்டீர்கள். இந்த கொள்கை மற்றும் விஷயங்கள் எதுவும் ஆட்சியாளர்கள் கையில் இல்லை. முதலாளிகள் கையில்தானே நாடு அகப்பட்டுக் கொண்டு அல்லாடுகிறது. இதனை என்றைக்கு புரிந்து கொண்டு இந்த மக்கள் வரப்போகிறார்கள். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம், இந்த அரசை திராவிடப்பாரம்பரியம்தான் தத்து எடுத்துக் கொண்டுள்ளது என்றே. எனக்கொரு மகன் பிறப்பான் என்று எம்ஜிஆர பாடியது போல, நல்ல கருத்துகளுடன் போராடும் மக்கள் நிச்சயம் வருவார்கள்.என்றுதான் நம்புகிறோம். அரசில், சமூகத்தில், பாரம்ப்ரியத்தில், மாற்றம் விழையும், விரைவில்..
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deletenalla pathivu
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteஎல்லா அப்பாவும் அப்பாயில்லையா சரவணன்?”//
ReplyDeleteபோதிய மருத்துவ சிகிச்சையின்றி இறந்து போகும் குழந்தைகளில் எத்தனை பகத்களோ, எத்தனை பாரதிகளோ, எத்தனை அன்னை தெரசாக்களோ? //
ஒரே வித்தியாசம் மேலே சொன்ன "glimepride" இரண்டு ரூபாய். கீழே உள்ள "amaryl" னூற்ரி இருபத்தி ஐந்து ரூபாய்.
ஒரு ரூபாய் இருபத்தி ஐந்து பைசா விலையுள்ள “:cetrizine" ஐ தவிர்க்கும் மருத்துவர்கள் முப்பத்தி ஐந்து ரூபாய் விலையுள்ள”cetzine" ஐயே பெரும்பாலும் பரிந்துரைக்கிறார்கள்.
"STREPTOKINASE" மற்றும் "UROKINASE" ஆகிய ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மாரடைப்புக்கான மருந்துகள் வேறு பிராண்டுகளில் ஐயாயிரம் ரூபாய்க்கு சந்தைகளில் விற்கப் படுகின்றன”//
இவற்றில் மருந்துக்கம்பெனிகளுக்கும் மருத்துவர்களுக்குமிடையே உள்ள நுண் அரசியலை தனிப்பதிவாக்கலாம் தோழர்!இடைப்பட்ட நம் உடல்நலம் மிகவும் கவலைக்கிடம்! சேவை மனப்பான்மை மட்டுமிறுத்தி 'தொழில்' செய்பவர்கள் பிழைக்கத் தெரியாதவர்களாகிவிட்ட காலமிது!
அவசியம் செய்ய வேண்டும்தான் தோழர். முயற்சி செய்கிறேன். மிக்க நன்றி நிலா தோழர்
Deleteஆழ்ந்து படிக்க வேண்டிய அற்புதமான பதிவு. ஏழை மக்களுக்கு நல்ல மருத்துவ வசதி வேண்டும்; ஆம், சரியான மருத்துவ கவனிப்பு கிடைக்காமல் மருந்துக்கடைகளில் அவர்கள் தனக்கு சரியென பட்ட மருந்துகளைச் சாப்பிட்டு அகால மரணம் அடைகிறார்கள்.
ReplyDeleteஎனக்கு தெரிந்த ஒரு பெண்மணி தனது 25 வயது மகளுக்கு தொடர்வாக, ஆஸ்த்மா நோய்க்கு 'Wyzolone' மாத்திரைகள் கொடுத்துக் கொண்டிருந்தார். சாதாரணமாக இந்த மாத்திரை ஊசிகளுக்கும் கட்டுப்படாமல் போகும் போது கடைசிப் பட்சமாக ஒரு வாரத்தில் 5 மாத்திரைகள் படிப்படியாக சாப்பிடும்படி கொடுப்பார்கள். இப்போது inhalerகள் வந்து விட்டன. Wyzolone சாப்பிட்டதால் அந்த பெண்மணி உடல் அளவுக்கு மீறி பருத்து இதய நோயினால் இறந்தார். ஒரு கொடுமை, அந்த மாத்திரையினால் தான் இறந்தார் என்பது அந்த தாய்க்கு இது வரை தெரியாது.
எனது முகநூல் பக்கத்தில் பதிகிறேன்.
நன்றி திரு இரா எட்வின்.
மிக்க நன்றிங்க அய்யா
Deleteதோழர் எட்வின் அவர்களே! நல்ல பதிவு.! மருந்து விற்பனை பணியாளர்களூக்கு என்று ஒரு அகில இந்திய சங்கம் உள்ளது.அகில இந்திய அளவில்பலம்பொறுந்திய சங்கம். அவர்கள் மருத்துவத் துறையில் நடக்கும் சீர்கேடுகளை தெருத்தெருவாக பிரச்சாரம் செய்து வந்துள்ளார்கள். அவர்களின் தலைவர் மஜும்தார் ஏராளமாக கட்டுரைகளை எழுதியுள்ளார்.தமிழ்நாட்டில் ஜோஸஃப், சிவாகுரு போன்ற தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.தீக்கதிர்,peoples democracy ஆகியபத்திரிகைகள் பக்கம்பக்கமாக எழுதிவந்துள்ளன.கடந்த முப்பது ஆண்டுகளாக இதனை பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.என்ன செய்ய!? ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் அமீர்கான் சொன்னால்தான் நம் மண்டையில் ஏறுகிறது! இந்த அமீர்கான் அதே நிகழ்ச்சியின் போது மருந்து விற்பனைப் பணியாளர்களும் இதற்கு உடந்தை என்று நாக்கூசாமல் சொன்னார்! இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் ஆர்ப்பாட்டம்நடத்தியுள்ளார்கள்! பத்திரிகைகள் அதையும் இருட்டடிப்பு செய்து விட்டன! தோழா! "அசத்திய மேவ ஜெயதே" ! வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்.
ReplyDeleteமிக்க நன்றிங்க தோழர்.
Delete/// இந்த மருத்துவமனைக்கு தன்னாட்சி அந்தஸ்தை வழங்க முடிவெடுத்த போதிலிருந்தே பிருந்தா காரத் மாநிலங்களவையில் இந்த மருத்துவனையைக் காப்பாற்ற போராடியதையும், மார்க்சிஸ்ட் கட்சியினர் அதற்காக முன்னெடுக்கும் தொடர் போராட்டங்களையும் நன்றியோடு கொள்ளவே வேண்டும்.///
இப்படி ஒரு பாரா வைத்திருக்கிறேனே தோழர்
மிகவும் அருமை...
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteவணக்கம் தோழர். இது என்ன அநியாயம் நேற்று ஒரு இரண்டு பத்தில் வேண்டாண்டா வெள்ள மாத்திர பற்றி ஒரு விமர்சனப் பதிவு போட்டிருந்தேன். அதை நீக்கி விட்டீர்களே. இது கொஞ்ச்ம் ஓவராத் தெரியுதே.. தாங்கள் விருப்பப்பட்டவர்கள்தான் பதிவிட முடியுமா<? இது என்னய்யா அராஜகம்..
ReplyDeleteவணக்கம் தோழர். நீங்கள் தொடர்ந்து இதே போல குற்றம் சுமத்துகிறீர்கள். ஆனால் நான் யாருடையதையும் எடுப்பதில்லை.
Deleteநீங்கள் பதிவிட்டவுடன் பின்னூட்டம் தெரியாது தோழர்
ஓட்டு வாங்கவாவது ஏழைகள் உயிரோடு வாழ வழி செய்யுங்கப்பா
ReplyDeleteஅப்படிக் கேட்க வேண்டிய நிலையில்தான் தோழர் இருக்கிறோம். மிக்க நன்றி தோழர்
Deleteவணக்கம் தோழரே..பதிவு படித்தேன். கொஞ்சம் கனமாகவும் உண்மை உறைந்து கிடப்பதையும் கண்டு நெஞ்சம் கனத்தது. நான் மறுபிறவி எடுத்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன். வேண்டாண்டா வெள்ளை மாத்திரையை ரசித்த ஜீவிகளில் நானும் ஒருவர்தான். இன்று அதனைக் கொஞ்ச்ம் ஆழமாக சிந்தித்தால், அரசு மருத்துவமனைகளின் நிலை முன்பை விட கொஞ்சம் பரவாயில்லை, சீரடைந்திருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். இதில் இடது சாரிகளின் பங்கு பெருமளவில் இருக்கிறது. தோழர், சகட்டு மேனிக்கு மாத்திரைகள் பெயரை அள்ளி விளாசி இருக்கிறீர்கள். மாத்திரைகளுடன் அத்தனை நெருங்கிய உறவா? இப்போது அகால நேரத்தில் ஒரு பிரச்சினை என்றால், தனியார் மருத்துவ மனைகளை விட, அரசு மருத்துவமனை பரவாயில்லை. ஏதோ ஒரு முதல் உதவி செய்கிறார்கள். நான் கூட அர்த்த ராத்திரியில் நெஞ்சு வலி வரும்போது, தனியார் மருத்துவமனைக்குச் சென்று தட்டி எழுப்பி அவஸ்தைப் படுவதை விட,அரசு மருத்துவமனைக்கே சென்றதுண்டு. நல்ல சிகிச்சையும் உண்டு தோழரே.. நீங்கள் கூறியபடி//“இன்றைக்கும் மருத்துவ செலவுகளுக்காக, மூன்றில் இரண்டு பங்கு தொகையை மக்கள் கடன் வாங்கியே செலவிடுகின்றனர். அதிலும் மருந்துகளுக்காகவே அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது”//, இதன ஒரு பிரதமர் சொல்வதுதான் வேதனையானது.அதற்கான தீர்வும் நீங்களே முன் வைத்துவிட்டீர்கள். இந்த கொள்கை மற்றும் விஷயங்கள் எதுவும் ஆட்சியாளர்கள் கையில் இல்லை. முதலாளிகள் கையில்தானே நாடு அகப்பட்டுக் கொண்டு அல்லாடுகிறது. இதனை என்றைக்கு புரிந்து கொண்டு இந்த மக்கள் வரப்போகிறார்கள். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம், இந்த அரசை திராவிடப்பாரம்பரியம்தான் தத்து எடுத்துக் கொண்டுள்ளது என்றே. எனக்கொரு மகன் பிறப்பான் என்று எம்ஜிஆர பாடியது போல, நல்ல கருத்துகளுடன் போராடும் மக்கள் நிச்சயம் வருவார்கள்.அரசில், சமூகத்தில், பாரம்ப்ரியத்தில், மாற்றம் விழையும், விரைவில்..
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
ReplyDeleteன்ன சொல்வது அண்ணன்.. பாதிக்கட்டுரைக்கு மேல் விம்மலோடுதான் படிக்கமுடிகிறது. எங்களுக்கு அப்பா.. சிலருக்கு பபச்சிளங்குழந்தைகள்.. இன்னும் இன்னும் எத்தனை எத்தனை உறவுகள்..உயிர்களை பலிகொடுக்கபோகிறோமோ.. எங்கள் மண் விஷயமாகியதற்கு மயிரளவும் நாங்கள் பொறுப்பல்ல.. ஆனால் அது தரும் நோய்களும் நோய்களுக்கான சிகிச்சைக்கு பணமன்றி மரணமும் எங்களுக்கு. எங்கள் ஊர் நீரை திருடி சம்பாதித்தவன் மினரல் வாட்டரில் கால் கழுவுவான் நாங்கள் உப்புத்தண்ணீர் குடித்து தோல்நோயை சொறிந்து அழைத்துக்கொள்ளவேண்டும். காசு இருக்கிறவன் மட்டும் பிழைப்பான் என்பதாக இந்த வாழ்வு சொல்லிகொடுக்க கொடுக்க இந்த உலகில் அறம் ஒன்றை அகராதியில் மட்டுமே காணமுடியும். [ஆறுதல் செய்தி.. அம்மாவுக்கு சக்கரை மற்றும் பிரஷர் . அரசு மருத்துவமனையில்தான் ஒன்றரை ஆண்டுகளாக காட்டி வருகிறோம். மனிதாபிமானத்தை தொலைத்துவிடாத ஒன்றிரண்டு மருத்துவர்களால் இயங்கி கொண்டிருக்கிறது எல்லாமும்.] ---விஷ்ணுபுரம் சரவணன்
ReplyDeleteமுழுப் படிவையும்விட உங்களது இந்தப் பின்னூட்டம் மிக ஆழமாகப் பேசுகிறது சரவணன். வலிக்கிறது
Deleteன்ன சொல்வது அண்ணன்.. பாதிக்கு மேல் மெல்லிய விம்மலோடுதான் வாசிக்கமுடிகிறது. எங்கள் மண் நஞ்சாவதற்கு துளியளவும் நாங்கள் காரண்மல்ல. ஆனால் விஷமாக்கப்பட்ட நிலம் தரும் நோய்களும் அதனை சரிசெய்ய முடியாமல் மரமரணமும் எங்களுக்கு. எங்கள் ஊர் நீரை திருடி உறிஞ்சியவன் மினரல் வாட்டரில் கால் கழுவுவான் நாங்கள்தான் உப்பு தண்ணீரை குடித்து சொறிந்து தோல்நோயை அழைத்துக்கொள்ளவேண்டும். காசு இருப்பவனே உயிருண்டு என இவ்வாழ்வு உணர்த்திக்கொண்டேயிருப்பதால் அறம் என்பதை இனி நாம் அகராதியில்தான் பார்க்கவேண்டும். [ஆறுதலான செய்தி: அம்மாவுக்கு சர்க்கரை மற்றும் பிரஷர் . கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அரசு மருத்துவ மனையில் மருத்துவம். மனிதாபிமானமுள்ள சில மருத்துவர்கள் இயங்குகிறது எல்லாமும், எல்லோரும்.]
ReplyDeleteவிஷ்ணுபுரம் சரவணன்
பொது மக்களிடம் ,மருத்துவம் தொடர்பாக இருக்கும் அறியாமையை ,உங்கள் பதிவின் மூலம் தெரியப்படுத்தி உள்ளீர்கள்...நன்றி ஐயா.
ReplyDeleteநீங்கள் செய்வதில் இது ஒரு சின்னத் துளி தோழர். மிக்க நன்றி
Delete//ஏழைகளின் உயிர் மீது கொஞ்சம் அக்கறை வையுங்கள். அவர்களிடம்தான் உங்களுக்கான வாக்குகள் இருக்கின்றன என்பதற்காகவேனும். //
ReplyDeleteவேதனை.. ஆட்சியை எப்படிக் காப்பாற்றுவது என்பதிலேயே காலங்கள் ஓடிவிடும் போல இருக்கிறது. பிறகு எங்கே மக்களைப் பற்றி நினைக்கப் போகிறார்கள்.
மிக்க நன்றி இளங்கோ
Deletesameebathil en thozhiyin thanthai iranthu ponaar hart attack aanaal kurippitta samayathirkul admit cheithargal 40 daya ICU vil vaithu vittu piragu irantha body i koduthargal enge pogirathu india maruthuvam verum business agi ponotho? 15 lakhs bill katti body veliye vanthathu enna solla innum thozhi antha athirchiyil irunthu veliye varavillai yaarai solla???
ReplyDeleteபெயரைப் போடாததால் தெரியவில்லை. ஆனாலும் நீங்கள் சொல்வது மிகை கலக்காத உண்மைதான் தோழர். மிக்க நன்றி
Deleteமனம் கனத்த பதிவு தோழரே.எல்லாமே வியாபாராமகிவிட்ட உலகில்....பணம் பணமென்று உயிர்கள்கூட வியாபாரம்தான்.என்றுதான் மாறுமோ நம் நாடுகளில் இந்தச் சாபங்கள் !
ReplyDeleteஆமாம் ஹேமா மனசு ரொம்பவே வலிக்கிறது. மிக்க நன்றி ஹேமா.
Deleteநல்ல பதிவு தோழர்..
ReplyDeleteசுகாதாரத்தையும் கல்வியையும் பணம் காய்க்கும் மரமாய் மாற்றிய புதிய பொருளாதார கொள்கையை உயர்த்திபிடித்து,கல்வியும்,சுகாதாரமும் காசு இருப்பவனுக்கே என்று மாற்றிய காங்கிரஸ் அரசின் கையாகலாத்தனம் இன்றி வேறு ஒன்றும்,பிரதமரின் கூற்றும் மக்கள் மீது தனக்கு அக்கறை இருப்பதாய் காட்டிக்கொள்ளூம் முயற்சியே அன்றி வேறில்லை,தங்களின் கட்டுரை மத்திய அரசின் மருத்துவதுறையின் மேல் இருக்கின்ற அக்கறையின்மையை சுட்டிகாட்டுவதோடு மாற்றத்திற்க்காய் மக்கள் அணிதிரள வேண்டுகிறது...
அதேசமயம் 58 வயதை நெருங்கிய எனது தந்தைக்கும் 53 வயதை கடந்த தாய்க்கும் மருத்துவ செலவிற்க்காய் நானும் சேமிக்கவேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தி உள்ளது.அதற்க்காய் மிக்க நன்றி...
சுரணையற்ற காங்கிரஸ் அரசு வீழ்ந்து என்று இடதுசாரிகள் தலைமையில் ஒரு சோசலிச அரசு அமைகிறதோ அன்று கல்விக்காய்,சுகாதாரத்திற்காய்,வேலைக்காய் மக்கள் ஏங்கவேண்டிய அவசியம் இருக்காது என நினைக்கிறேன்...அதற்க்கான வேலையில் உங்களின் இதுபோன்ற பதிவுகள் சிறிது முன்னெடுக்கும் என நம்புகிறேன் தோழர்...
நன்றி தொடர்க
மிக்க நன்றி தோழர். மிகவும் நெகிழ்ந்தே போனேன். இந்தப் பதிவிற்கு சற்றும் குறையாதது இந்த பின்னூட்டம். மீண்டும் என் நன்றிகள் தோழர்
Deleteநல்ல பதிவு தோழர்..
ReplyDeleteசுகாதாரத்தையும் கல்வியையும் பணம் காய்க்கும் மரமாய் மாற்றிய புதிய பொருளாதார கொள்கையை உயர்த்திபிடித்து,கல்வியும்,சுகாதாரமும் காசு இருப்பவனுக்கே என்று மாற்றிய காங்கிரஸ் அரசின் கையாகலாத்தனம் இன்றி வேறு ஒன்றும்,பிரதமரின் கூற்றும் மக்கள் மீது தனக்கு அக்கறை இருப்பதாய் காட்டிக்கொள்ளூம் முயற்சியே அன்றி வேறில்லை,தங்களின் கட்டுரை மத்திய அரசின் மருத்துவதுறையின் மேல் இருக்கின்ற அக்கறையின்மையை சுட்டிகாட்டுவதோடு மாற்றத்திற்க்காய் மக்கள் அணிதிரள வேண்டுகிறது...
அதேசமயம் 58 வயதை நெருங்கிய எனது தந்தைக்கும் 53 வயதை கடந்த தாய்க்கும் மருத்துவ செலவிற்க்காய் நானும் சேமிக்கவேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தி உள்ளது.அதற்க்காய் மிக்க நன்றி...
சுரணையற்ற காங்கிரஸ் அரசு வீழ்ந்து என்று இடதுசாரிகள் தலைமையில் ஒரு சோசலிச அரசு அமைகிறதோ அன்று கல்விக்காய்,சுகாதாரத்திற்காய்,வேலைக்காய் மக்கள் ஏங்கவேண்டிய அவசியம் இருக்காது என நினைக்கிறேன்...அதற்க்கான வேலையில் உங்களின் இதுபோன்ற பதிவுகள் சிறிது முன்னெடுக்கும் என நம்புகிறேன் தோழர்...
நன்றி தொடர்க
ஒரு பிரதமர் இவ்வளவு புலம்புவது தேவையே இல்லை. சொடக்குகிற நேரத்தில் வணிகர்களிடமிருந்து மருத்துவத்தை தனது நேரடி நிர்வாகத்தில் கொண்டுவர முடியும் அவரால். ஆனால் செய்ய மாட்டார். காரணம் முதலாலிகள் விடமாட்டார்கள். அவர்களிடம்தான் இவர்களுக்குத் தேவையான பணம் இருக்கிறது என்பதென்னவோ உண்மைதான். என்கிற வரிகளில் தெரிந்து போகிறது இது தரகு முதலாளித்துவ நாடு என்பது. .பாட்டாளிகளின் வியர்வையையும் ரத்தத்தையும் உறிஞ்சும் இந்த தரகு முதலாளித்துவ அரசு முதலாளிகளின் உழைப்புக்கு எங்கள் உயிரை கொடுக்கிறது. நல்ல படைப்பு தோழரே !
ReplyDeleteஏழைகளின் உயிர் மீது கொஞ்சம் அக்கறை வையுங்கள். அவர்களிடம்தான் உங்களுக்கான வாக்குகள் இருக்கின்றன என்பதற்காகவேனும். என்று சொல்லியாவது பயனைப் பெறமுடியாது இவர்களிடம் ...

வணக்கம் தோழரே,
ReplyDeleteமிகவும் அருமையான பதிவு. கல்வியும்,மருத்துவமும் மக்களுக்கு இலவசமாக கிடைக்கும் காலமே, இந்தியா வல்லரசு என்று கூறுவதற்கு தகுதியான நாடகும்.அக்காலம் விரைந்து வர மக்களிடம் விழிப்புணர்வு வேண்டும்.தங்களின் இப்பதிவு நிச்சயம் வழி நடத்தும்.
மிகச் சரியாக சொன்னீர்கள்.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
இப்படி இதெல்லாம் தான் எழுத வேண்டும் எட்வின் ..
ReplyDeleteஎன் பதிவுகளைப் பார்க்க சிறிது கூச்சமாகவே உள்ளது.
இருப்பினும் செயலாய் செய்ய இது போன்ற பதிவுகள் ஊக்குவிக்கின்றன .அதற்கு நன்றி .
இருபத்தி ஐந்து லட்சம் குறைந்த பட்சம் கொடுத்து சேரும் மருத்துவர்களுக்கு இதைப் பற்றியெல்லாம் என்ன கவலை இருக்கக் கூடும்?
இதற்கு மாற்று என்ன?
அதையும் கருத்திடுங்களேன்
மிக்க நன்றி பத்மா.
Deleteமுதலில் ஐந்து லட்சம் எல்லாம் தாண்டி நாற்பது வரை போய்விட்டது.
ஆனால் ஒவ்வொரு மருத்துவ மாணவருக்கும் அவர் படிப்பை முடிக்க நம் வரிப் பணத்திலிருந்து குறைந்த பட்சம் ஒன்றரைக் கோடி செலவாகிறது.ஆகவே அவரைக் கேட்க நமக்கு உரிமை இருக்கிறது.
அரசு நினைத்தால் இது ஒரு நாள் வேலைதான்
நினைக்காது
அதற்கு ஒன்று மக்களைத் திரட்டிப் போராட வேண்டும்
அதைத்தான் செய்துகொண்டிருக்கிரோம்
ReplyDeleteAloysius Devadass Asj Health கார்டு என்ற ஒன்று இல்லாதிருந்தால் நினைதுப்பார்கவே முடியவில்லை .......ஸ்கேன் எடுப்பதற்கு மட்டுமே ஒன்றரை லட்சங்களை
செலவுசெய்துவிட்டு இன்னும் 20 நாட்களில் திரும்பி வாருங்கள் நோய் என்ன என்று கண்டுபிடித்துவிடலாம்
என்று சர்வ சாதாரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நான் நாளுக்கு நாள் செத்து கொண்டிருந்ததை
உறவுகள் பார்த்துக்கொண்டுதான் இருந்தன . சரி எல்லோரும் வந்து பார்த்துப்போக வசதியை இருக்கட்டுமே என்று திண்டுக்கல் சென்றேன்.
அரசு மருத்துவர் திண்டுக்கல் காட்டாஸ்பத்திரியில் பரிந்துரைததன்பெரில் மதுரையில் ஆஹா சிறந்த
எளிமையான மருத்துவர் விவேகாநந்தன் சென்னையில் எடுத்த அதனை ஸ்கேன் களையும் புறந்தள்ளிவிட்டு
எளிமையான விழுங்க சிரமமான 30 வெள்ளை மாத்திரைகளை 10 நாட்களுக்கு கொடுத்து அதோடு வீட்டுக்கு
அனுப்பி விட்டார். மேலும் 6 மாதங்களுக்கு அதே மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடவும் பரிந்துரை செய்தார்.
எனக்கு இரண்டாவதுமுறையாக உயிர்தந்த தாய் ( கடவுள் ) என்றே நினைக்கிறேன் செலவு செய்தது என்னவோ
10 நாடகளில் படுக்கைக்கும் உணவுக்கும் மருத்துவரும் செவிலியரும் வந்து கவனித்துக்கொள்ளவும் 15 ஆயிரம் மட்டுமே
இதையே சென்னையில் இருந்து கவனிப்பதன்றால் நினைத்து பார்க்கவும் முடியவில்லை. இதே மருந்து மாத்திரைகள்
அரசு மருத்துவமனைகளில் வெறும் நூறு ரூபாய் மட்டுமே.௦ 10 நாடகளில் உங்கள் கணவர் மரணித்து விடுவார் என்று
நாள் குறித்த பலலட்சம் ரூபாய்களை கறந்துவிட்டு சமீபத்தில் வந்துள்ள பெயர்தெரியாத காய்ச்சல் என்றும் மரணம் உறுதி என்றும்
கைவிரித்த தனியார் மருத்துவர்களை விட எல்லாவிதத்திலும் அரசு மருத்துவர்கள் நடமாடும் தெய்வங்களாகவே செயல் படுகிறார்கள்
என்பது மறுக்க முடியாத உண்மை. இல்லையென்றால் நான் இறந்து நான்கு வருடங்கலகியிருக்கும். என்பிள்ளைகள் அப்பாவை இழந்திருப்பார்கள். உனது கட்டுரையை வாசிக்கும் எனக்கு பாக்கியம் கிடைதிருக்காது நானும் இந்த பதிவில் எழுதியும் இருக்க மாட்டேன். ஆஹ உடனடியா பிரதமருக்கு எழுதி அரசு மருத்துவமனைகளை தரமாக நிர்வகிக்க ஏற்பாடு செய்யவேண்டும் தோழர்களே. வெள்ளை மாத்திரைகள் கேளிபொருள் அல்ல உயிர் காக்கும் நிச்சயம் என்போன்ற உயிர்களை காக்கும். நன்றி எட்வின்
அழுது ஓய வெகு நேரமாச்சு அலாய்
Deleteபொதுத்துறையை எல்லா வடிவங்களிலும் ஒழிப்பது என பொருளாதாரப் பெருச்சாளிகள் எடுத்த முடிவின்படி மருத்துவம், கல்வி, தகவற்றொடர்பு ஆகியன தற்பொழுது காவுவாங்கப்படுகின்றன. போக்குவரத்து மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருக்கிறது. இதனைப் பார்த்து 'மண்'மோகன் சிங் என்னும் பொருளாதார நரி புலம்புகிறது.
ReplyDeleteஆமாம் தோழர். போக்கு வரத்தை பலிகொடுத்தால் கல்வியும் பலியாகும். எங்கேயோ நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இடித்துக் கொண்டு நிற்கும். நாம் தொய்வின்றி போராடிக் கொண்டே இருப்போம்
Deleteமிக்க நன்றி தோழர்
பொதுத்துறையை முற்றிலுமாக ஒழித்துவிடுவது எனக் கங்கணம் கட்டிக் கொண்டு செயற்படுகின்றன பொருளாதார நரிகள். அந்த நரிகளின் தோழர்தான் நம்மூரில் பிரதமராக வேலைபார்க்கும் (?) "மண்"மோகன் சிங் என்னும் பொருளாதாரப் புலி(?). எனவேதான் மருத்துவம், கல்வி, தகவற்றொடர்பு முதலியவற்றை நீலிக் கண்ணீர் வடித்துக்கொண்டே கொன்றுகொண்டிருக்கிறார். அக்கொலையை விரைவுபடுத்துவது போல அறிந்தும் அறியாமலும் அத்துறையில் உள்ள பணியாளர்கள் அவருக்கு துணைபோய்க் கொண்டிருக்கிறார்கள்.
ReplyDeleteஎன்ன விலை கொடுத்தேனும் பொதுத் துறைகளை காப்பாற்றியே ஆக வேண்டும்
Deleteayya !
ReplyDeletevethanai!
unmai!
மிக்க நன்றி தோழர்
Deleteyar varuvar ithai ketpatharku yendru ketpavarghal athigam intha naattil atharku kural koduthu munne vanthu thalamai yerka oruvar illai yenbathuthan vedikkai..... ( yevarathu manamaavathu punpaduthi erunthal mannika vendum ennai....)
ReplyDeleteஅச்சச்சோ அருமை தோழர். மிக்க நன்றி
Deleteyar varuvar ithai ketpatharku yendru ketpavarghal athigam intha naattil atharku kural koduthu munne vanthu thalamai yerka oruvar illai yenbathuthan vedikkai..... ( yevarathu manamaavathu punpaduthi erunthal mannika vendum ennai....)
ReplyDeleteஅப்படியெல்லாம் இல்லை தோழர்.
Deleteஎந்த ஒரு பிரச்சினைக்காகவும் எதையும் தியாகித்து களமேகும் தோழர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்களால்தான் இந்த அள்விற்கேனும் நம்மால் முடிகிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பெயரோடு வந்தால் மிகவும் மகிழ்வேன்.
Migavum. Nandragha erunthathu... Aanal oru chinna kavalai mattum ennul erunthu kondethan varukirathu... kural koduppavarkalin ennai athikarikkirathu aaanal atharku nikaratha thalamai yerpavargalin ennai illai enbathuthan vedikkai.. Thatti ketpom thayanghamal .. thannambikkai ullavanuku thairiyam mattume thunai.. Poraduvom yethirikalai nokki alla.. yaam yaamekke theriyamal vittukodutha aadaiyalaithai adaiya.....
ReplyDeleteVashikarshan..

Sorry ,I am unable to send my comment in tamil because ,when i click below,as you said,this page goes away..[1].central should abolish trade names of the drugs.As u said, the same drug is selling at different prices.All BIG pharmaceuticals bribe heavily to the central govt.,So selling in generic name is impossible in india.[2] I request all public that you must have ur own FAMILY DOCTOR [M.B.B.S.,IS ENOUGH].He will help in emergency even when u donot have money.90 % doctors are like this.you must choose as u wish.[3]you should not straight away go to specialists or unknown corporate hospitals,[they may extract or suck money][4]E.S.I.hospitals are comparitively better than PHC or D.H.Q.hospitals.[5]public should not buy medicines from the medical shop as all are using steroids which will damage ur health in future.DR.R.M.R.SANTHI LAL.,RAJAPALAYAM.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteகுடிமக்களுக்கு கல்வியும் மருத்துவம் வழங்குவது அரசின் கடமை.ஆனால் நம் பாரத திருநாட்டில் அரசு அவற்றை தனியாரிடம் விற்று மக்களை நட்டாற்றில் விட்டு விட்டது.என்ன செய்வது? மாற்றம் வேண்டின் சரியான அரசினை அமைக்க நம் வோட்டுரிமை பயன்பட வேண்டும்.அதுவரை கனவு காண்போம்.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteநல்லவர்களை நிற்க வைப்பதும், மக்களை நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க செய்வதற்குமான மிக நீண்ட வேலை நமக்கிருப்பதாகவே படுகிறது.
Deleteமிக்க நன்றி தோழர்.
அரசு மருத்துவமனைகள் என்றாலும், வெள்ளை மாத்திரைகள் என்றாலும் கொஞ்சம் அலட்சியமாகத் தான் இருக்கிறது எல்லோருக்கும்... இலவசமாய் கிடைக்கும் எதற்கும் மதிப்பில்லை தானே...
ReplyDeleteஆனால் எத்தனையோ தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும், அரசு மருத்துவமனைகள் தரமாகவும், அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், இன்ன பிற பணியாளர்கள் மனிதத் தன்மையோடும் தான் இருக்கிறார்கள்... அரசு மருத்துவமனைகளை நாடி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
முதலில் நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னோடு பேசும் ப்ரியாவிற்கு நன்றி.
Deleteயாரும் வெள்ளை மாத்திரைகளையோ அரசு மருத்துவ மனைகளையோ அலட்ட்சியப் படுத்தவில்லை ப்ரியா. இந்தக் கட்டமைப்பைக் காப்பாற்ர வேண்டியே நமது போராட்டம்
"CENTRIZINE" என்பதும் “ CETZINE" என்பதும் ஜலதோசத்திற்கான வேறு வேறு பெயர்களைக் கொண்ட ஒரே மருந்துகள். ஒரு ரூபாய் இருபத்தி ஐந்து பைசா விலையுள்ள “:cetrizine" ஐ தவிர்க்கும் மருத்துவர்கள் முப்பத்தி ஐந்து ரூபாய் விலையுள்ள”cetzine" ஐயே பெரும்பாலும் பரிந்துரைக்கிறார்கள்.
ReplyDeleteunmaiyai uraka solungal. ulagam unaratum.
உண்மையய் உரக்க சொல்வோம்.
Deleteமிக்க நன்றி தோழர்
இந்திய மருத்துவதுறை பனம்காச்சி மரமாக மாறி வெகுநாளாகிவிட்டது சார். இது பனத்தில் புரளும் நம்ம பிரதமருக்கும் , அந்த அமிர்கானுக்கும் நல்லாவே தெரியும். அரசாங்கம் மக்கள்மேல் அவர்களின் சுகாதாரத்திற்காக அதிக அக்கரை காட்டுவதில்லை ஊழல்செய்து நாட்டின் வளத்தை கொள்ளை அடிப்பதிலேயேயும் அப்படி அடித்தவர்களை காப்பாற்றுவதிலேயும் அதிகம் கவனம் செலுத்துவார்கள்.
ReplyDeleteஉங்களின் இந்த பதிவு மருத்துவதுறையின் இன்றைய நிறை, குறைகளை நன்றாக எடுத்துகாட்டுகிறது.
நண்றி சார்.

This comment has been removed by the author.
ReplyDeleteமன்மோஹன்சிங் பல நேரம் தான் பிரதமர் என்பதை மறந்து விடுகிறார். அப்படி மறந்து விட்ட ஒரு தருணம் தான் இது என கருதுகிறேன். பரவாயில்லை அவரிடம் அவரையும் மீறி மனிதம் தலை காட்டுகிறது.
ReplyDelete--
அய்யோ வர வர நம்ம பெருந்தன்மைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது தோழர்.
Delete“என்னை நானே திருடன் என்று சொன்ன பிறகு நீ யார் அதை சொல்ல “ என்று கேட்கிற ரகம் இது.
மிக்க நன்றி தோழர்
ஏழைகளை யார் என்றைக்குப் பொருட்டாக எண்ணினார்கள்?
ReplyDeleteஎவ்வளவு கசந்தாலும் எவ்வளவு வலித்தாலும் நீங்கள் சொல்வதுதான் உண்மை . மிக்க நன்றி தோழர்
Delete