அம்மா
அப்பா
அப்பாயி
அண்ணன்கள்
அண்ணிகள்
குழந்தைகள்
அப்புறம் நான்
கொஞ்சம் பெரிசுதான்
விடுங்கள்
குடும்ப அட்டையில்
கடைசிப்பக்க விளிம்புவரை
பெயர்கள் நீண்டாலும்
கழிவறை ஒன்றுதான்
ஆனாலும்
நகராட்சிக் கழிவறை
வரிசைதான் காலையில்
எழுப்பொலி வைத்துப் போனதுண்டு
நிம்மதியாய்க் கழிக்க
எழுப்பொலி
எல்லா அறைகளிலும் ஒலிக்க
புரிந்தது
வதந்திபோல் பரவியது
நுணுக்கம்
பற்கள் கடித்து
கால்கள் நெருக்கி
அவசர அவஸ்தையில்
கண்கள் செருக
கழிவறை வாளியில்
நீர் விழும் சத்தம்
ஏ. ஆர். ரஹ்மானாவது
இளையராஜாவாவது
வலிக்கும் அவஸ்தை
இடம் கிடைத்த நிம்மதி
தாள் போடும் வேளை
சிணுங்கியது தொலைபேசி
“கொஞ்சம்
யாருன்னு பாரேன்”
குபுக்கென கொப்பளித்தது
அம்மாவின் ஞானம்
“எந்தக் கடங்காரனோ
ஆமா
இப்ப நீ
எந்த ஊர்ல இருக்கிறதா
சொல்லித் தொலைய?”
அப்பா
அப்பாயி
அண்ணன்கள்
அண்ணிகள்
குழந்தைகள்
அப்புறம் நான்
கொஞ்சம் பெரிசுதான்
விடுங்கள்
குடும்ப அட்டையில்
கடைசிப்பக்க விளிம்புவரை
பெயர்கள் நீண்டாலும்
கழிவறை ஒன்றுதான்
ஆனாலும்
நகராட்சிக் கழிவறை
வரிசைதான் காலையில்
எழுப்பொலி வைத்துப் போனதுண்டு
நிம்மதியாய்க் கழிக்க
எழுப்பொலி
எல்லா அறைகளிலும் ஒலிக்க
புரிந்தது
வதந்திபோல் பரவியது
நுணுக்கம்
பற்கள் கடித்து
கால்கள் நெருக்கி
அவசர அவஸ்தையில்
கண்கள் செருக
கழிவறை வாளியில்
நீர் விழும் சத்தம்
ஏ. ஆர். ரஹ்மானாவது
இளையராஜாவாவது
வலிக்கும் அவஸ்தை
இடம் கிடைத்த நிம்மதி
தாள் போடும் வேளை
சிணுங்கியது தொலைபேசி
“கொஞ்சம்
யாருன்னு பாரேன்”
குபுக்கென கொப்பளித்தது
அம்மாவின் ஞானம்
“எந்தக் கடங்காரனோ
ஆமா
இப்ப நீ
எந்த ஊர்ல இருக்கிறதா
சொல்லித் தொலைய?”
ஆஹா. அருமை.
ReplyDeleteIntha varigal emmai silirkka vaithathu, ungal padaipukku en nanrigal!
Deleteமிக்க நன்றி தோழர்
Deleteவணக்கம் தோழர். கவிதை அருமை.. சொந்த அனுபவம் அல்லவா?
ReplyDeleteகவிதையின் இறுதி வரிகளை வாசிக்கையில் "எத்தன்" திரைப்படம் என் நினைவில் வந்தது! :)
ReplyDeleteஅருமை!
இக்க நன்றி தோழர்
Deleteகவிதையும் அருமை , சொல்லிய விதமும் அருமை. எல்லா அலைபேசி அழைப்புகளும் கடண்கொடுத்தவரிடம்மிருந்து வரும் என்று நினைக்காதீர்கள் சார். உங்கள்மேல் அதீத அன்புவைத்துள்ள என்னைபோன்றவர்களிடமிருந்தும் வரும் சார்.
ReplyDeleteநகர்புற வாழ்வின் அவலங்களையும் எதார்த்த வாழ்வின் உண்மையையும்
ReplyDeleteவறுமையின் கோரத்தையும் கேமரா இல்லாமல் வார்த்தைகளாலேயே படம்பிடிக்குது உந்தன் கவிதைகள்
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அலாய்
Deleteகழிவறை வாளியில்
ReplyDeleteநீர் விழும் சத்தம்
ஏ. ஆர். ரஹ்மானாவது
இளையராஜாவாவது
நல்ல வரி .மிகச் சிறந்த படைப்பு தோழர்
//இப்ப நீ
ReplyDeleteஎந்த ஊர்ல இருக்கிறதா
சொல்லித் தொலைய?”//
அருமை தோழர்! எதார்த்தம்....!
ஆஹா எவ்வளவு நாளாச்சு தோழரோடு பேசி
Deleteம்ம்.... நல்லாத் தான் எழுதுறீங்க....
ReplyDeleteமிக்க நன்றி ப்ரியா
Deleteஆனா மருத்துவமனை கட்டுரை பற்றி நிறைய சொல்ல வேண்டி இருக்கு... இரண்டொரு நாளில் எழுதுறேன் எட்வின்...
ReplyDeleteவணக்கமும் நன்றியும் ப்ரியா,
Deleteப்ரியா அவசியம் நிறைய எழுத வேண்டும்.தவத்தோடு இரு கையேந்தி
ReplyDelete
என்ன தோழர் இது?
ReplyDeleteஆரம்பம் கூட்டுக்குடும்பம் பற்றிச் சொல்கிறீர்களென வாசித்து வந்த நான் கடைசிப் பந்தி வாசித்ததும் குபுக்கென சிரித்துவிட்டேன்......!
ReplyDeleteமிக்க நன்றி ஹேமா
Deleteஇந்த அவஸ்தையை நன்கு அனுபவித்த என் அலுவலக நண்பர் ஒருவர் வீடு வாங்கினால் அல்லது கட்டினால் இரு கழிப்ப றைகளுடன் இருக்க வேண்டும் என்று கனவு கண்டு வந்தார்.
ReplyDeleteச. வீரமணி
ரொம்ப நல்லா இருக்கு தோழர்.
Deleteமிக்க நன்றி தோழர்
நல்ல வரிகள் சார்... நன்றி...
ReplyDeleteபுரை தீர்ந்த நன்மை பயக்குமெனின் பொய் சொல்லப் பழகுவதும் ஞானம்தான்...ஆனால் அதை விடவும் தாயின் புரிதலே ஞானமாகப் படுகிறது.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteஎதார்த்தமான நிகழ்வு ,.படிப்பவர் பெரும்பலோர் வீட்டில் நிகழ்வது .... சொல்லும் தோணி அழகு .....உங்களால் மட்டும் சொல்லகூ டிய யதார்த்தம் ....
ReplyDeleteஅருமை.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteமுகநூலில் இருக்கிறேன் என்று சொல்லவேண்டியது தான் ......ஹ ஹா ஹா ....அருமையான உண்மையை வெளிச்சம் காட்டும் கவி ...
ReplyDeleteஅப்படிக்கூட சொல்லலாம்ல்
Deleteபோல இருக்கே
அருமை தோழரே...!!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவதந்திபோல் பரவியது
ReplyDeleteநுணுக்கம்
பற்கள் கடித்து
கால்கள் நெருக்கி
அவசர அவஸ்தையில்
கண்கள் செருக
கழிவறை வாளியில்
நீர் விழும் சத்தம்..............மிக அவஸ்தையான ஒவ்வொரு காலையினதும் உணர்சிகள் .
மிக்க நன்றி தோழர்
Deleteம்ம்ம்.....எதார்த்தம் சார்
ReplyDeletesuper nanbare
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deletesuper nanbare
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Delete