Friday, July 27, 2012

அப்ப நான்?

சரியான ஆங்கிலம் , பிழையான ஆங்கிலம், நல்ல ஆங்கிலம் , மோசமான ஆங்கிலம் என்பதெல்லாம் கிடையாது என்று சொல்வதுண்டு. "standard english" என்று மட்டுமே ஒன்று இருப்பதாகவும் தெரிகிறது. அந்த “standard" ம் இடத்திற்கு இடம் மாறுபடுவதாகவும் இருக்கிறது.

உச்சரிப்பு , எழுத்து இரண்டுக்கும் தொடர்பே இல்லாத இடங்களே ஆங்கிலத்தில் மிக அதிகம். ஒலியும் எழுத்தும் இவ்வளவு முரண்பட்டு நிற்பதை வேறு எந்த மொழியிலும் பார்க்க இயலாது.

சொற்குற்றம், பொருட்குற்றம் என்பதெல்லாம் ஆங்கிலத்தில் அவ்வளவாகக் கண்டுகொள்ளப் படுவதில்லை என்றே சொல்லலாம். தொடர்புக்கு உதவினால் (communication) போதும் என்கிற நிலைதான்.

இதுதான் ஆங்கிலம் இப்படி விஸ்வரூபமெடுத்து உலகை தன் கரங்களுக்குள்ளும் கட்டுப் பாட்டிற்குள்ளும் கொண்டுவந்து வைத்துக் கொள்ள ஏதுவாயிருந்தது என்றும் சொல்லலாம்.

இரண்டு நாட்களுக்கு முன்னால் "black" என்ற தலைப்பிலொரு ஆப்பிரிக்க பெண் குழந்தை எழுதிய கவிதை தோழன் ஜானகிராமன் மூலமாக எனக்கு வந்தது. என்னை சுண்டி இழுத்தது அந்தக் கவிதையின் மொழி நடைதான்.

அமெரிக்க, லத்தீன் அமெரிக்க, ஐரோப்பிய, இந்திய, ஆப்பிரிக்க இப்படி எந்தத் தரத்திற்கும் கொஞ்சமும் ஒத்துப் போகாத ஒரு மொழி நடை. நம்மிடம் இருப்பது போல் ஆங்கிலத்திலும் பண்டிதர்கள் இருந்திருப்பின் தற்கொலை செய்திருப்பான் அல்லது அந்தக் கவிதையைக் கிழித்துப் போட்டுவிட்டு அதைத் தொட்ட கைகளை டெட்டால் விட்டுக் கழுவியிருப்பான். அப்படி ஒரு உடைசலான மொழி.

ஒன்று, அதை எழுதியக் குழந்தைக்கு ஆங்கிலம் எழுத அவ்வளவாகத் தெரியாதிருந்திருக்க வேண்டும். அல்லது எங்களை அடிமைப் படுத்திய  ஆங்கிலத்தை என்னால் முடிந்த அளவு சிதைத்து சின்னாப் பின்னப் படுத்துகிறேன் பார் என்ற கோவமாக இருக்க வேண்டும்.

காரணம் எதுவாயிருப்பினும் எனக்கு மகிழ்ச்சிதான்.  அவ்வளவாய் எழுதத் தெரியாதவள் எனில், சரியாய் எழுத வராத ஒரு குழந்தையால் உடைந்த நடையில் இவ்வளவு பெரிய வலியை இவ்வளவு சரியாகவும் நேர்த்தியாகவும்
கொண்டு சேர்க்க முடிந்திருக்கிறதே என்ற மகிழ்ச்சி.

அடிமையாக்கியதனால் வந்த கோவமெனில், ஆதிக்கத்தை இப்படி நொறுக்கிப் போட்ட செய்நேர்த்திக்காகவும் மகிழ்ச்சி.

அவள் எழுதுகிறாள்,

"when i born i black
when i grow up i black  
when i go in sun i black
when i scared i black
when i sick i black
and when i die i still black
and u white fellows
when u born u pink
when u grow up u white
when u go in sun u red
when u cold u blue
when u scared u yellow
when u sick u green
when u die u grey
and u call me coloured

இப்படியாக நீள்கிறது அந்தக் கவிதை.

கொஞ்சம் அந்த மொழி நடையைப் பாருங்கள்.. இவ்வளவு மோசமான நடை எவ்வளவு அழுத்தமாக விசயத்தை சொல்கிறது பாருங்கள்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள், நானும் ஜானகியும் அரை மணி நேரம் அலை பேசியில் அவளது மொழி குறித்து சிலாகித்தோம். இந்த மொழியை வைத்து இவ்வளவுஅழுத்தமாக விளங்க வைக்கிறாளே. உண்மையிலுமே அவள் தேர்ந்த ஆளுமைக்காரி என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டோம்.

ஆனால் அவளது திறமையை , ஆளுமைக்கு கொஞ்சமும் குறைந்தவளல்ல என்று என் பிள்ளை ஒருவன் இன்று நிரூபித்தாள்.

இன்று எங்கள் பள்ளியில் உடற்றிரப் போட்டிகள் நடந்தன.

 நல்ல வெயில் . பொங்கிக் கரைபுரண்டு ஓடியது உற்சாகம்.  நானும் சக ஆசிரியர் ஒருவரும் பிள்ளைகளை ஒழுங்குப் படுத்திக் கொண்டிருந்தோம்.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருத்தி மிகுந்த உற்சாகத்தோடு அங்கும் இங்கும்பறந்து கொண்டிருந்தாள். அவளும் நாங்களும் நேருக்கு நேர் நின்றபோது,

good morning”

“ஏய் சாரெல்லாம் கிடையாதா”

“ you no sir now”

”பாருங்களேன். இங்க்லீஷ் க்ளாஸ்ல ஒரு வார்த்தை வராது.இப்ப பாருங்க அன்பு எப்படி கிழிக்கிறான்னு. ஆமா, சம்மரி படிச்சியா நீ”

விளையாட்டாய்தான் கேட்டேன். வெடித்து சிரித்து சொன்னாள்,

you no english sir  i no student now"

மிரண்டு கேட்டேன்,

 “அப்ப?”

சொன்னாள்

”:this no class
i no student 
you no teacher"

அப்புறம்...?

“this ground
i athelate
he refree"

”அப்ப நான் ?”

“bloody audience"

சிரித்துக் கொண்டே ஓடிவிட்டாள். எப்போதுமே அவள் செல்லம்தான்.

இவள் பேசியதும் உடைந்த ஆங்கிலம்தான். ஆனால் என்னமாய் புரிய வைத்துவிட்டாள்

ஒன்று தோன்றுகிறது எல்லா விதத்திலும் இவர்களை இப்படியே கொஞ்சம் அனுமதித்து கொஞ்சம் ரசிக்கப் பழகினால்தான் என்ன?




22 comments:

  1. மொழி என்பது நம் எண்ணங்களை பிறருக்கு புரியவைக்கத்தானே?

    ReplyDelete
  2. /// வரலாற்று சுவடுகள் said...
    மொழி என்பது நம் எண்ணங்களை பிறருக்கு புரியவைக்கத்தானே? ///

    ஆமாம் தோழர்.

    ஆனாலும் மொழிதான் நம் அடையாளம்.

    நம்மை அழிக்க வேண்டுமெனில் முதலில் நம் மொழியை சிதைத்தால் போதும்.

    மிக்க நன்றி

    ReplyDelete
  3. தயக்கமும் தாழ்வு மனப்பான்மையுமே நம்மை முன்னேற விடாத பெருந்தடைகள். அந்த மாணவி நல்லதொரு தடைதாண்டிப் பந்தய வீராங்கனை. அவளை அப்படியே வளரவிடுவதே அவளை முன்னேற்றும். மொழியாயினும் சரி, செயலாயினும் சரி... உங்களைப் போன்ற சிந்தனை எல்லோருக்கும் வாய்த்தால் குழந்தைகள் நிச்சயம் உருப்படுவார்கள்; தங்கள் கனவுகளைக் கைப்பற்றுவார்கள். எண்ணப் பகிர்வுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  4. முன்பெல்லாம் “Yes, Sir ; No Sir “ என்று கூச்சப் படுவார்கள். இப்போதெல்லாம் கிராமத்துப் பிள்ளைகள் கூட முடிந்த வரையில் சரியோ, தவறோ ஆங்கிலத்தில் பேச ஆசைப் படுகிறார்கள். அல்லது புரிய வைக்கிறார்கள். காரணம் தொலைக் காட்சிதான். நல்ல விஷயம்தான்.

    ReplyDelete
  5. நம் தாய் மொழிக்கு இல்லாத சிறப்பு எந்த மொழிக்கும் இல்லை.

    " தமிழ், பிறமொழித் துணையின்றித் தனித்தும் இயங்கும், தழைத்தும் ஓங்கும் " என்று கூறினார் கால்டுவெல் அவர்கள்.

    நாம் இரண்டு நிமிடம் பிற மொழி கலக்காமல் பேச முடியும்.
    ஆனால் இக்கால குழந்தைகளிடம் அவ்வாறு பேச முற்பட்டால் தோற்று போய் விடுவோம்.
    நீங்கள் சொல்வது போல் ரசிக்கப் பழகி விட்டால் போதுமே.

    நன்றி... (த.ம. 4)

    ReplyDelete
  6. நல்ல ரசம்..! ஆங்கிலத்தைப் பிழையாகப் பேசுகிறாளா சரியாகப் பேசுகிறாளா என்பதல்ல அந்த நேரத்து விஷயம். அவளின் நகைச்சுவை உணர்வு சூழலை இனிமையாக்கி இருக்கிறது.. இயந்திரகதியில் பாடங்களை நோக்கி வகுப்பைத் தொடர்ந்து கொண்டிருந்தாலும் இடையிடையே, ஏதாவதொரு மாணவனின் உடல்மொழியோ, நகைச்சுவைப் பேச்சோ சட்டென்று சூழ்நிலையை மாற்றிப் போட்டுவிடும் தன்மையுடையது, அவனின் குறும்பையும் நகைச்சுவையையும் . எத்தனை ஆசிரியர்கள் ரசிக்கிற மனோ பாவத்தில் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
    =dhanalakshmi

    ReplyDelete
  7. மற்றவர்களுக்கு, நாம் நினைப்பதை புரிய வைத்தால் அது தானே மொழி..

    ReplyDelete
  8. /// Seeni said...
    purinthaal sarithaane....///

    ஆமாம் சீனி தோழர். மிக்க நன்றி

    ReplyDelete
  9. /// கீதமஞ்சரி said...
    தயக்கமும் தாழ்வு மனப்பான்மையுமே நம்மை முன்னேற விடாத பெருந்தடைகள். அந்த மாணவி நல்லதொரு தடைதாண்டிப் பந்தய வீராங்கனை. அவளை அப்படியே வளரவிடுவதே அவளை முன்னேற்றும். மொழியாயினும் சரி, செயலாயினும் சரி... உங்களைப் போன்ற சிந்தனை எல்லோருக்கும் வாய்த்தால் குழந்தைகள் நிச்சயம் உருப்படுவார்கள்; தங்கள் கனவுகளைக் கைப்பற்றுவார்கள். எண்ணப் பகிர்வுக்கு மிகவும் நன்றி. ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  10. //// தி.தமிழ் இளங்கோ said...
    முன்பெல்லாம் “Yes, Sir ; No Sir “ என்று கூச்சப் படுவார்கள். இப்போதெல்லாம் கிராமத்துப் பிள்ளைகள் கூட முடிந்த வரையில் சரியோ, தவறோ ஆங்கிலத்தில் பேச ஆசைப் படுகிறார்கள். அல்லது புரிய வைக்கிறார்கள். காரணம் தொலைக் காட்சிதான். நல்ல விஷயம்தான். ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  11. //// திண்டுக்கல் தனபாலன் said...
    நம் தாய் மொழிக்கு இல்லாத சிறப்பு எந்த மொழிக்கும் இல்லை.

    " தமிழ், பிறமொழித் துணையின்றித் தனித்தும் இயங்கும், தழைத்தும் ஓங்கும் " என்று கூறினார் கால்டுவெல் அவர்கள்.

    நாம் இரண்டு நிமிடம் பிற மொழி கலக்காமல் பேச முடியும்.
    ஆனால் இக்கால குழந்தைகளிடம் அவ்வாறு பேச முற்பட்டால் தோற்று போய் விடுவோம்.
    நீங்கள் சொல்வது போல் ரசிக்கப் பழகி விட்டால் போதுமே.

    நன்றி... (த.ம. 4) ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  12. /// dlakshmibaskaran said...
    நல்ல ரசம்..! ஆங்கிலத்தைப் பிழையாகப் பேசுகிறாளா சரியாகப் பேசுகிறாளா என்பதல்ல அந்த நேரத்து விஷயம். அவளின் நகைச்சுவை உணர்வு சூழலை இனிமையாக்கி இருக்கிறது.. இயந்திரகதியில் பாடங்களை நோக்கி வகுப்பைத் தொடர்ந்து கொண்டிருந்தாலும் இடையிடையே, ஏதாவதொரு மாணவனின் உடல்மொழியோ, நகைச்சுவைப் பேச்சோ சட்டென்று சூழ்நிலையை மாற்றிப் போட்டுவிடும் தன்மையுடையது, அவனின் குறும்பையும் நகைச்சுவையையும் . எத்தனை ஆசிரியர்கள் ரசிக்கிற மனோ பாவத்தில் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
    =dhanalakshmi ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  13. //// இளங்கோ said...
    மற்றவர்களுக்கு, நாம் நினைப்பதை புரிய வைத்தால் அது தானே மொழி.. ////

    மிக்க நன்றி இளங்கோ

    ReplyDelete
  14. குழந்தை பேச்சின் தவறுகளை ரசித்து பின் திருத்துகிற தாய் போல ஆங்கிலத்தை ஆசிரியர்கள் கற்பிக்க ஆரம்பித்தால் மாணவர்களும் சிறப்பாக தேறுவார்கள்.. அந்த வகையில் தங்கள் கருத்து மிகவும் சரியானதே.. அதற்கு essay க்களை மனப்பாடம் செய்ய சொல்லி மார்க் போடும் நம் கல்வி முறை பெருமளவுக்கு மாற வேண்டும்.. தொடர்புக்குதான் மற்றொரு மொழி எனும் போது உயர்நிலை பள்ளி கல்வி வரை ஆங்கிலத்தை spoken english க்கு முக்கியத்துவம் கொடுத்தே பாடங்களை கொண்டுவரலாம் என கருதுகிறேன்.. கல்லூரி கல்வியில் ஆங்கில எழுத்து புலமை க்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.. ஆனால் ஆங்கிலத்தை தவிர மற்ற பாடங்கள் தாய் மொழியில் காற்றலே சிறப்பு..

    ReplyDelete
  15. /// sathish prabu said...
    குழந்தை பேச்சின் தவறுகளை ரசித்து பின் திருத்துகிற தாய் போல ஆங்கிலத்தை ஆசிரியர்கள் கற்பிக்க ஆரம்பித்தால் மாணவர்களும் சிறப்பாக தேறுவார்கள்.. அந்த வகையில் தங்கள் கருத்து மிகவும் சரியானதே.. அதற்கு essay க்களை மனப்பாடம் செய்ய சொல்லி மார்க் போடும் நம் கல்வி முறை பெருமளவுக்கு மாற வேண்டும்.. தொடர்புக்குதான் மற்றொரு மொழி எனும் போது உயர்நிலை பள்ளி கல்வி வரை ஆங்கிலத்தை spoken english க்கு முக்கியத்துவம் கொடுத்தே பாடங்களை கொண்டுவரலாம் என கருதுகிறேன்.. கல்லூரி கல்வியில் ஆங்கில எழுத்து புலமை க்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.. ஆனால் ஆங்கிலத்தை தவிர மற்ற பாடங்கள் தாய் மொழியில் காற்றலே சிறப்பு.. ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  16. வணக்கம தோழர். படித்தேன், ரசித்தேன்,பரவசித்தேன், கட்டுண்டு போனேன். மொழி என்பது என்ன? எண்ணத்தின் உருவை வெளிக்காட்டத்தானே. அது ஒரு தொடர்பு ஊடகம். அது தன் பணியைச் செய்தால் போதும்லலவா? அவள் பேசியது அவளின் எண்ணம், மகிழ்வு, ரசனை, நகைச்சுவையை தங்களிடம் வெளிப்படுத்தி விட்டது.மொழி தன் பணியை நிறைவேற்றி விட்டது. இதில் இடையில் என்ன இலக்கணம் கத்தரிக்காய் எல்லாம். குழ்ந்தைகளை மனப்பாடம் செய்ய ஊக்கப்படுத்தாமல்..இப்படி அவர்கள் போக்கிலே பேசவிட்டு மொழியில் வல்லவராக்கலாம். தோழரே.. இதில் அன்பு பேசிய்து மட்டுமின்றி,அதைப் பற்றிய தங்களின் நோக்கும், பதிவும்,பரந்துபட்ட பார்வையும் அதிகம் பாராட்டப்படவேண்டியவை.. வாழ்த்துகள். நிரம்ப எழுதவும்.

    ReplyDelete
  17. Replies
    1. மிக்க நன்றிங்க அய்யா

      Delete
  18. வணக்கம்
    கருத்தை புரிய வைக்கத்தானே மொழி.புரிந்துவிட்டதே.இப்படியாவது துணிவாகப் பேசினாளே.மகிழ்வாய் உள்ளது
    .

    ReplyDelete
  19. தவறாக இருந்தாலும் ரசித்து பிழைதிருத்தவேண்டும். பழிக்க கூடாது. ஆங்கிலம் என்பது ஒரு மொழியே.

    ReplyDelete
    Replies
    1. அது ஒரு மொழி மட்டுமே என்பதை புரிய வைக்கத்தான் படாத பாடு படுகிறோம்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...