Tuesday, July 17, 2012

கடன் வாங்கிப் படித்தல்

“இனி கல்விக் கடனைப் பெறுவதற்கு மாணவர்கள் தலையைக் குனிந்து கொண்டு வங்கிகளுக்குள் நுழையத் தேவை இருக்காது. நிமிர்ந்த தலையோடும் கம்பீரத்தோடும் அவர்கள் வங்கிகளுக்குள் கல்விக் கடனுக்காக நுழையலாம்.

ஒரு காலத்தில் கல்விக் கடன் ஒரு சலுகை போல இருந்தது உண்மைதான். ஆனால் இப்போது கல்விக் கடன் என்பது மாணவர்களின் உரிமையாக மாறியிருக்கிறது,”

என்பது மாதிரிப் பேசியிருக்கிறார் மத்திய அமைச்சர் சிதம்பரம் . ஆக கல்வியோ, வேலையோ மாணவ்ர்களது உரிமையாக மாறாது போயினும் கல்விக் கடனேனும் அவர்களது உரிமையாய் போயிருக்கிறது. இந்த மட்டிலும் உரிமை என்று சொல்லிக் கொள்கிற மாதிரி மாணவர்களுக்கு ஏதோ ஒன்றைத் தந்தமைக்காக அவரைப் பாராட்டியேத் தீர வேண்டும்தான்.

மேலோட்டமாகப் பார்த்தால்,

“கல்விக் கட்டணம் செலுத்த இயலாத ஏழை மாணவர்களது படிப்பு இடையில் நின்றுவிடக் கூடாது என்பதற்காகத்தானே இவ்வளவையும் செய்கிறார்கள். அதையும் குறை சொன்னால் எப்படி?” என்றுகூடத் தோன்றும்.

“பிச்சைப் புகினும் கற்கை நன்றே” என்றாள் அவ்வை. பிச்சை எடுத்தேனும் படி என்கிறாள் கிழவி. கொஞ்சம் இதை மாற்றிச் சொன்னால் கற்பதற்காக பிச்சை வேண்டுமானாலும் எடு என்றாகும்.

“உண்ணீர்
உண்ணீர் என்றே
ஊட்டாதார் தம் மனையில்
உண்ணாமை
கோடி பெறும்”

என்று சொன்ன அவ்வை கல்வி என்று வரும் போது அதற்காக பிச்சைகூட எடுக்கலாம் என்றுதானே சொல்லியுள்ளார். கல்விக்காக பிச்சையே எடு என்று சொன்ன அவ்வையைக் கொண்டாடுகிறீர்கள். ஆனால் கடனை ஏற்பாடு செய்து , அதை மாணவனது உரிமையாக்கி உரிமையோடும் கம்பீரத்தோடும் கடனைப் பெற்று கல்வியைத் தொடர் என்று சொல்லும் சிதம்பரத்தை நக்கலடிப்பீர்கள். நீங்களெல்லாம் உருப்படுவீர்களா? என்றும் சிலர் கேட்கக் கூடும்.

மீண்டும் சொல்கிறேன், மேலோட்டமாகப் பார்த்தால் இது நியாயமாகத்தான் படும். கொஞ்சம் உள் நுழைந்து அலசினால் இதன் பின்னனியில் இருக்கும் அயோக்கியத்தனம் அம்பலப் படும்.

இதில் நீண்ட விவாதம் இருக்கிறது. அதில் நமக்கெதுவும் தயக்கம் இல்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் சட்டென்று ஒன்றை சொல்லிவிட்டுத் தொடரலாம் என்று படுகிறது.

பிச்சை எடுத்து படிப்பதில் எந்தப் பிழையும் இருப்பதாகப் படவில்லை. ஒருக்கால் ஒரு பிள்ளை பிச்சை எடுத்துப் படிக்கிறான் என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொள்வோம்.அவன் படித்து முடித்ததும் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த என்னை கல்வி இந்த நிலைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்று பெருமிதத்தோடும் ஒரு வகையான பூரிப்போடும் எதிர்காலத்தை எதிர்கொள்வான்.

அவன் பிச்சை எடுத்து படித்தது அவனுக்கு எந்த விதத்திலும் சோர்வையோ அழுத்தத்தையோ தராது. மாறாக, பிச்சை எடுத்துக் கொண்டிருந்த என்னை கல்வி எந்த இடத்திற்கு உயர்த்திக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது பார் என்று   அடுத்தத் தலைமுறையை உற்சாகப் படுத்த உதவுவதாகவும் இருக்கும்.

ஆனால் கடன் பெற்று படித்து வருபவனுக்கு வேலை கிடைக்கும் முன்னமே கடனும் வட்டியுமாக சேர்ந்து ஒரு பெரிய அழுத்தத்தைக் கொடுக்கும்.

பிச்சை எடுத்துப் படித்தவன் படித்து முடித்ததும் இலகுவாகி விடுகிறான். அவனால் சொல்ல முடியும்,

“பிச்சை எடுத்தவன்தான் நான். ஆனாலும் படிப்பு எனக்கு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது. பிச்சை எடுத்தேனும் படி” என்று.

கடன் வாங்கி படித்த்வனால் அப்படி சொல்ல இயலாது. அவனால் இப்படித்தான் சொல்ல இயலும்,

“கடன வாங்கிப் படிக்கிறதுக்கு நான் படிக்காமலே இருந்திருக்கலாம். வீணாப் போயிட்டேன். தயவு செஞ்சு கடன் வாங்கி படிச்சுடாத”

அமெரிக்கவைப் பற்றி இப்படி ஒரு தகவல் உண்டு,

அமெரிக்காவில் நிறைய பேர் கல்வியைத் தவிர்ப்பதற்கு அங்கு கல்வி நிறைய செலவு வைக்கிறதாம். சரி, கடன் வாங்கிப் படிப்பைத் தொடங்கலாம் என்று செய்பவர்கள் வட்டி கட்ட முடியாமல் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விடுகிறார்களாம்.

 நம் நாட்டிலும் வட்டி விகிதம் விவசாயக் கடனை விட, நகைக் கடனைவிட, ஏன் வாகனக் கடனை விட அதிகம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். தனி நபர்க் கடனுக்கு மிக நெருங்கிய வட்டி கல்விக் கடனுக்கு.

அநேகமாக 14 சதம் வட்டி கல்விக் கடனுக்கு.

பொறியியல் முதலாமாண்டு படிக்கும் ஒரு மாணவன் ஒரு வங்கியில் 60000 ரூபாய் கடன் வாங்குகிறான் என்று வைத்துக் கொள்வோம். முதலாமாண்டு முடியும் போது அதற்கான வட்டி (14 சதம் என்று வைத்துக் கொண்டால்) 8400 ரூபாய். ஆக 60000 கடன் வாங்கி முதலாமாண்டை அவன் முடிக்கும் போது அவனது கடன் தொகை மொத்தம் 68400 ரூபாய் என்றாகும்.

இப்போது இரண்டாமாண்டு அவன் 60000 ரூபாய் கடன் வாங்கினால் அந்த ஆண்டு முடிவில் அசல் 120000 ஆகும். இதற்கு வட்டி 16800 ரூபாய் அகும். முதலாமாண்டு வட்டி 8400 ருபாயை சேர்க்க இரண்டாமாண்டு முடிவில் மொத்த வட்டித்தொகை 25200 ஆகும். ஆக இரண்டாமாண்டு முடிவில் வட்டியும் முதலுமாக அவனது கடன் கணக்கில்1,45,200 சேரும்.

மூன்றாமாண்டு இன்னொமொரு 60,000 ருபாய் அவன் கணக்கில் சேர மூன்றாமாண்டு தொடக்கத்தில் அவன் கட்ட வேண்டிய அசல் 1,80,000 ரூபாய் ஆகும். அந்த ஆண்டு முடிவில் அந்த ஆண்டிற்கான வட்டியைக் கணக்கிட்டால் 25,200 ரூபாய் ஆகிறது. இதை முதல் இரண்டு ஆண்டுகளுக்கான தொகையோடு கூட்ட 50,400 ஆகிறது.

நான்கம் ஆண்டும் அவன் 60,000 ரூபாய் கடன் வாங்க அசல் மட்டும் 2,40,000 ரூபாய் ஆகிறது. அந்த ஆண்டு முடிவில் அந்த ஆண்டுக்கான வட்டி மட்டும் 33,600 வரும். ஆக மொத்த வட்டி 94,000 ரூபாய் ஆகிறது.

அவன் படிப்பை முடிக்கும் வரைதான் தனி வட்டி. அதன் பிறகு கூட்டு வட்டிக்கு போய்விடுமாம். எனில் அவன் நான்காமாண்டு முடிக்கும் போது அவன் வாங்கிய அசல் 2,40,000 ரூபாயோடு அது வரை உள்ள மொத்த வட்டியான 94, 600 ரூபாயும் சேர்ந்து 3,34,600 ரூபாய் அவன் கணக்கில் அசலாகிவிடும்.

இனி ஒவ்வொரு மாதமும் வட்டியும் அசலோடு சேர்ந்துவிடும். எனில்,

படிப்பு முடிந்த முதல் மாதம் அவன் கட்ட வேண்டிய வட்டி ஏறத்தாழ 3,900 ரூபாய். வேலை இல்லாமல் கட்ட முடியாமல் போனால் இந்த 3, 900 ரூபாயும் அசலோடு சேர்ந்து 3,38,500 ரூபாயாகும். அடுத்த மாதம் 3,38,500 ரூபாய்க்கு வட்டி கணக்கிடப் படும்.

எவ்வளவு பெரிய கடன் வலையில் நம் பிள்ளைகளைத் தள்ளுகிறார் பாருங்கள்.

இவ்வளவு ஆபத்தான சிக்கல் இது என்பது கூட்டல் கழித்தல் கணக்கையே தப்பு தப்பாக செய்யும் எனக்கே புரிகிறது என்றால் காங்கிரஸின் மூளை என்று சராசரி காங்கிரஸ் காரர்களாலும், இந்தியாவின் மூளை என்று உச்ச நிலையில் நின்று யோசிக்கக் கூடிய காங்கிரஸ்காரர்களாலும் பெருமையோடு கொண்டாடப் படுகிற சிதம்பரம் அவர்களுக்கு இது புரியாது என்று நம்புவதற்கு நான் என்ன மன்மோகன்சிங்கா?

இவ்வளவு புரிந்தும் ஏன் நெஞ்சை நிமிர்த்தி கடன் வாங்கப் போ என்று தள்ளுகிறார். காரணம் மிகவும் எளிதானது.

மாணவனை வங்கிக்கு தள்ளுவதன் பின்னனியில் இருப்பது மாணவனின் எதிர்காலமல்ல, கல்லூரி தாளாளரின் எதிர்கால லாபம். கல்லூரி தாளாளர் என்பதை விடவும் கல்லூரி முதலாளி என்பதே பொருத்தமாக இருக்கும். சில கல்லூரிகளில் தாளாளர் ஓனர் என்றே அனைவராலும் விளிக்கப் படுகிறார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு பொறியியல் கல்லூரியில் சற்றேரக் குறைய 3,500 இடங்கள் இருக்கலாம். கொஞ்சம் கூடவோ குறையவோ இது இருக்கலாம். இதில் 2,000 பேர் விடுதியில் தங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். மூன்று நேரமும் 2,000 பேர் சாப்பிடக் கூடிய உணவகம் ஒன்றிற்கு அவர் உரிமையாளர் ஆகிறார். ஒவ்வொரு நேரமும் 2,000 பேர் சாப்பிடக்கூடிய உணவகம் எனில் அது ஏறத்தாழ இரண்டு சரவணபவன் ஹோட்டல்களுக்கு சமம்.

ஒரு நாளைக்கு 6,000 பேர் சாப்பிடக்கூடிய ஹோட்டல் எனில் மளிகைச் சாமான்களை, காய்கறியை, பாலை வேறு கடையிலா வாங்க அவருக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கும். எந்தக் கணக்கிலுமே சேராமல் அவர் ஒரு பெரிய மளிகைக் கடைக்கும், காய்கறி மற்றும் பால் கடைக்கும் அதிபராகிறார்.

ஏறத்தாழ 3,500 மாணவர்களும் அனைத்து நோட்டுகள் மற்றும் புத்தகங்கள், எழுது பொருட்கள் ஆகியவற்றை வாங்கும் போது ஒரு மிகப் பெரிய ஸ்டேஷனரி கடைக்கு உரிமையாளாராகிறார்.

ஒரு கேண்டீன் உரிமையாளாராகிறார்.

குறைந்தபட்சம் 25 பேருந்துகளுக்கும் உரிமையாளாராகிறார்.

ஒரு கல்லூரியை ஆரம்பித்தால் உப விளைவுகளாக இத்தனை வணிகத் தளங்களுக்கும் முதலாளியாகிறார்.

கேட்கலாம்,

இதற்கும் மாணவர்களது வங்கிக் கடனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

இருக்கிறது.

இவ்வளவு பெரிய முதலாளி லாபமடைய வேண்டுமெனில் 3,500 மாணவர்கள் வேண்டும்.  அவர் மாணவர்களைப் பார்க்கிறார். மாணவர்களிடம் பணமில்லை என்பது புரிகிறது. அரசாங்கத்தைப் பார்க்கிறார்.

“மாணவர்கள் வராவிட்டால் நான் தெருவுக்கு வந்து விடுவேன்”

அரசாங்கம் சொல்கிறது,

“விடுவோமா. தைரியமாகப் போங்கள். கடன் கொடுத்து மாணவர்களை அனுப்பி வைக்கிறோம்.”

முதலாளிகள் சொல்லியிருக்க வேண்டும்,

“விசுவாசம் மாறாமல் இருப்போம்.”

கல்வி பொதுப் படும் வரை இத்தகைய அசிங்கங்கள் நிகழ்ந்து கொண்டுதானிருக்கும்.

தாளாளர் முதலாளியாகிவிடுவார். கல்வி சரக்காகிவிடும். மாணவன் வாடிக்கையாளனாகிவிடுவான். அரசோ முதலாளி நட்டப் படாமல் பார்த்துக் கொள்ள்ளும்.

நாம் என்ன செய்யப் போகிறோம்?



37 comments:

  1. 1977 ல் நான் சென்னையில் குடியிருந்த காலனியில்
    படிப்பு வராத ஒருவர் மளிகை கடை
    உதவியாளாராக இருந்தார் .

    2009 ல் தான் மறு சந்திப்பு நடந்தது
    இப்போது கல்வி தந்தையாக
    கவுரவ முனைவர் பட்டம் பெற்றவராக
    நான்கு இன்ஜினியரிங் கல்லுரிகள்
    உரிமையாளராக இருக்கிறார்
    வளர்ந்த வழிகள் தவறானவை .
    சமுகம் கல்வியை பெரும் வணிகம்
    ஆக்கிவிட்டது
    அரசு துணை நிற்கிறது
    மாணவர் சமுதாயம் பெருகிவிட்டது .
    PRICE IS DETERMINED
    BY THE DEMAND AND SUPPLY

    DEMANDக்குகான MONEY POWERஐ
    கடனாக அரசு தருகிறது
    தவறான வழியில் வாழ முனைந்தோர்
    பெரும் செல்வம் சேர்க்கவும்
    மனித வளம் பெருகிய எம்தாய் திருநாடு
    கடன் வாங்கி படித்து
    திரை கடல் ஓடி த்ரிவியம் சேர்த்து
    கடனை கட்டி வாழ வகை செய்யும்
    பாரத சமுதாயம் வாழ்க வாழ்கவே

    ReplyDelete
  2. 1977 ல் நான் சென்னையில் குடியிருந்த காலனியில்
    படிப்பு வராத ஒருவர் மளிகை கடை
    உதவியாளாராக இருந்தார் .

    2009 ல் தான் மறு சந்திப்பு நடந்தது
    இப்போது கல்வி தந்தையாக
    கவுரவ முனைவர் பட்டம் பெற்றவராக
    நான்கு இன்ஜினியரிங் கல்லுரிகள்
    உரிமையாளராக இருக்கிறார்
    வளர்ந்த வழிகள் தவறானவை .
    சமுகம் கல்வியை பெரும் வணிகம்
    ஆக்கிவிட்டது
    அரசு துணை நிற்கிறது
    மாணவர் சமுதாயம் பெருகிவிட்டது .
    PRICE IS DETERMINED
    BY THE DEMAND AND SUPPLY

    DEMANDக்குகான MONEY POWERஐ
    கடனாக அரசு தருகிறது
    தவறான வழியில் வாழ முனைந்தோர்
    பெரும் செல்வம் சேர்க்கவும்
    மனித வளம் பெருகிய எம்தாய் திருநாடு
    கடன் வாங்கி படித்து
    திரை கடல் ஓடி த்ரிவியம் சேர்த்து
    கடனை கட்டி வாழ வகை செய்யும்
    பாரத சமுதாயம் வாழ்க வாழ்கவே

    ReplyDelete
  3. அருமையாக அலசியிருக்கிறீர்கள், காங்கிரஸ்காரர்கள் எவனுக்கும் துளி நன்மைசெயததில்லை என்பதற்கு இதுவே சாட்சி.!

    ReplyDelete
  4. ayya!

    nalla alasal!

    naan ippothaan yosikkiren...

    ReplyDelete
  5. சிந்தனையை தூண்டக் கூடிய பதிவு.

    ReplyDelete
  6. எட்வின் அவர்களே! எங்கள் எல்.ஐ.சி தொழிர்சங்கத்தின் தலவர் சுனில்மைத்ரா அவர்கள்கூறுவார்கள். "நாம் உதிய உயர்வுக்காக போராடுவோம். நமக்கு ஆதரவு மக்கள்தான். அதே சமயம் தொழிலதிபர்கள் நமது ஊதிய உயர்வை நம்பியிருக்கிறார்கள் என்பதைமறந்துவிடக்கூடாது. அரசு அவர்களுக்கு நேரடியாக உதவாது. அவர்கள்தயாரிக்கும் பொருட்களை. வாங்குபவர்கள் நாம்.ஃபிரிட்ஜ்,தொலைக்காட்சிப் பெட்டி,ஸ்கூட்டர், ஏ.சி எல்லாம்விற்கவேண்டாமா! அதனால் அவர்களுக்கும் நம் உதிய உயர்வில் அக்கரை உண்டு" என்பார். தண்ணிப் பாம்பு மாதிரி நாக்கைத் துருத்தி துருத்தி பெசும் சிதம்பரம் எதைச் சொன்னாலும்செய்தாலும் அது முதலாளிகளுகுச் சாதகமாகவே இருக்கும்!---காஸ்யபன்.

    ReplyDelete
  7. அன்புள்ள தோழருக்கு, இந்த சந்தை இவர்களுக்கு போததாம்! உள்ளூர்காரன் கொள்ளையடித்தது போதாதென்று அன்னிய கல்வி கம்பனிகளையும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க துடிக்கிறது சோனியா மன்மோகன் அரசு

    ReplyDelete
  8. ஆழ்ந்து சிந்தித்து எழுதி இருக்கிறீர்கள்.
    ஆனால் படிக்க பணமில்லாம்ல் ஈட்டிக்காரனிடம் பணம் வாங்குவதைவிட வங்கியில் பணம் பெறுவதே மேல் என்றுதான் மாணவர்கள் நினைக்கிறார்கள். மேலும் கடன் தள்ளுபடியாகும், அல்லது வட்டிவிகிதம் குறைக்கப்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் நம்புகிறார்கள். (பேசிக்கொள்வதை கேட்டிருக்கிறேன்)
    கல்வித்ந்தைகளுக்கென்ன.. வேலைக்கு வேலையுமாச்சு வேட்டியும் வெள்ளையாச்சு...

    ReplyDelete
  9. நன்றாக அலசியிருக்கிறீர்கள்... அதே நேரத்தில் உமா அவர்களின் கருத்துகளும் யதார்த்தமானது...

    ReplyDelete
  10. /// மீனாட்சி சுந்தரம் சோமையா said...
    1977 ல் நான் சென்னையில் குடியிருந்த காலனியில்
    படிப்பு வராத ஒருவர் மளிகை கடை
    உதவியாளாராக இருந்தார் .

    2009 ல் தான் மறு சந்திப்பு நடந்தது
    இப்போது கல்வி தந்தையாக
    கவுரவ முனைவர் பட்டம் பெற்றவராக
    நான்கு இன்ஜினியரிங் கல்லுரிகள்
    உரிமையாளராக இருக்கிறார்
    வளர்ந்த வழிகள் தவறானவை .
    சமுகம் கல்வியை பெரும் வணிகம்
    ஆக்கிவிட்டது
    அரசு துணை நிற்கிறது
    மாணவர் சமுதாயம் பெருகிவிட்டது .
    PRICE IS DETERMINED
    BY THE DEMAND AND SUPPLY

    DEMANDக்குகான MONEY POWERஐ
    கடனாக அரசு தருகிறது
    தவறான வழியில் வாழ முனைந்தோர்
    பெரும் செல்வம் சேர்க்கவும்
    மனித வளம் பெருகிய எம்தாய் திருநாடு
    கடன் வாங்கி படித்து
    திரை கடல் ஓடி த்ரிவியம் சேர்த்து
    கடனை கட்டி வாழ வகை செய்யும்
    பாரத சமுதாயம் வாழ்க வாழ்கவே ///

    மிக்க நன்றிங்க அய்யா

    ReplyDelete
  11. /// வரலாற்று சுவடுகள் said...
    அருமையாக அலசியிருக்கிறீர்கள், காங்கிரஸ்காரர்கள் எவனுக்கும் துளி நன்மைசெயததில்லை என்பதற்கு இதுவே சாட்சி.!////

    மிக்க நன்றி தோழர். அதுதான் அவர்களின் அசல் குணம். அவர்களை விட்டால் ஒரு பெரிய மத வாதம்.

    இரண்டையும் தவிர்த்த ஒரு மூன்றாம் கட்டமைப்பை உருவாக்க இயலாமல் போனதுதான் இந்த தேசத்தின் துயரம்.

    ReplyDelete
  12. /// Seeni said...
    ayya!

    nalla alasal!

    naan ippothaan yosikkiren... ///

    மிக்க நன்றி தோழர் சீனி

    ReplyDelete
  13. /// kashyapan said...
    எட்வின் அவர்களே! எங்கள் எல்.ஐ.சி தொழிர்சங்கத்தின் தலவர் சுனில்மைத்ரா அவர்கள்கூறுவார்கள். "நாம் உதிய உயர்வுக்காக போராடுவோம். நமக்கு ஆதரவு மக்கள்தான். அதே சமயம் தொழிலதிபர்கள் நமது ஊதிய உயர்வை நம்பியிருக்கிறார்கள் என்பதைமறந்துவிடக்கூடாது. அரசு அவர்களுக்கு நேரடியாக உதவாது. அவர்கள்தயாரிக்கும் பொருட்களை. வாங்குபவர்கள் நாம்.ஃபிரிட்ஜ்,தொலைக்காட்சிப் பெட்டி,ஸ்கூட்டர், ஏ.சி எல்லாம்விற்கவேண்டாமா! அதனால் அவர்களுக்கும் நம் உதிய உயர்வில் அக்கரை உண்டு" என்பார். தண்ணிப் பாம்பு மாதிரி நாக்கைத் துருத்தி துருத்தி பெசும் சிதம்பரம் எதைச் சொன்னாலும்செய்தாலும் அது முதலாளிகளுகுச் சாதகமாகவே இருக்கும்!---காஸ்யபன். ///

    ஆமாம் தோழர். அவர்கள் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் ஏற்றுவதன் பின்னனியே அதுதானே

    ReplyDelete
  14. /// Christopher said...
    அன்புள்ள தோழருக்கு, இந்த சந்தை இவர்களுக்கு போததாம்! உள்ளூர்காரன் கொள்ளையடித்தது போதாதென்று அன்னிய கல்வி கம்பனிகளையும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க துடிக்கிறது சோனியா மன்மோகன் அரசு ///

    மிக்க நன்றி தோழர்.

    வேலை நிறைய இருக்கு தோழர்

    ReplyDelete
  15. /// Uma said...
    ஆழ்ந்து சிந்தித்து எழுதி இருக்கிறீர்கள்.
    ஆனால் படிக்க பணமில்லாம்ல் ஈட்டிக்காரனிடம் பணம் வாங்குவதைவிட வங்கியில் பணம் பெறுவதே மேல் என்றுதான் மாணவர்கள் நினைக்கிறார்கள். மேலும் கடன் தள்ளுபடியாகும், அல்லது வட்டிவிகிதம் குறைக்கப்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் நம்புகிறார்கள். (பேசிக்கொள்வதை கேட்டிருக்கிறேன்)
    கல்வித்ந்தைகளுக்கென்ன.. வேலைக்கு வேலையுமாச்சு வேட்டியும் வெள்ளையாச்சு... ///

    மிக்க நன்றி உமா.

    ReplyDelete
  16. /// குடந்தை அன்புமணி said...
    நன்றாக அலசியிருக்கிறீர்கள்... அதே நேரத்தில் உமா அவர்களின் கருத்துகளும் யதார்த்தமானது... ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  17. எத்தனை புள்ளி விபரங்கள்.... ஆச்சர்யமாக இருக்கிறது... எல்லாவற்றிலும் மோசடி...!! கல்விக்கு கடன், நீங்களும் கோடீசுவரர் ஆகலாம், உலகம் போற்றுபவராக இருக்கிறார் ஆனால் அவருக்கு சொந்த மண்ணில் ஓட்டுரிமை இல்லை... இன்னும் எத்தனை எத்தனையோ... நாம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றோம்? இதைப் பதிவு செய்து விட்டு நானும் கல்விக்கடன், கோடீசுவரர் ஆவதற்கு விண்ணப்பம், எனக்கு ஓட்டுரிமையில்லை என்றாலும் அமைதியாக வருவது....இப்படித்தான் போய்க்கொண்டிருப்பேன்...:-(( வேதனையும், வெட்கமும் மட்டுமே மிச்சமாகின்றது என் தேசத்தை நினைத்து........:-((

    ReplyDelete
  18. /// SANTHOSHI said...
    எத்தனை புள்ளி விபரங்கள்.... ஆச்சர்யமாக இருக்கிறது... எல்லாவற்றிலும் மோசடி...!! கல்விக்கு கடன், நீங்களும் கோடீசுவரர் ஆகலாம், உலகம் போற்றுபவராக இருக்கிறார் ஆனால் அவருக்கு சொந்த மண்ணில் ஓட்டுரிமை இல்லை... இன்னும் எத்தனை எத்தனையோ... நாம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றோம்? இதைப் பதிவு செய்து விட்டு நானும் கல்விக்கடன், கோடீசுவரர் ஆவதற்கு விண்ணப்பம், எனக்கு ஓட்டுரிமையில்லை என்றாலும் அமைதியாக வருவது....இப்படித்தான் போய்க்கொண்டிருப்பேன்...:-(( வேதனையும், வெட்கமும் மட்டுமே மிச்சமாகின்றது என் தேசத்தை நினைத்து........:-(( ///

    மிக்க நன்றி தோழர் பிரேமலதா

    ReplyDelete
  19. நல்ல அலசல் சார்... கேள்விகளும் அதற்குண்டான விளக்கங்களும் அருமை...
    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

    என் தளத்தில் : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

    ReplyDelete
  20. /// திண்டுக்கல் தனபாலன் said...
    நல்ல அலசல் சார்... கேள்விகளும் அதற்குண்டான விளக்கங்களும் அருமை...
    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்...வாழ்த்துக்கள்... ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  21. //கல்வி பொதுப் படும் வரை இத்தகைய அசிங்கங்கள் நிகழ்ந்து கொண்டுதானிருக்கும்.

    தாளாளர் முதலாளியாகிவிடுவார். கல்வி சரக்காகிவிடும். மாணவன் வாடிக்கையாளனாகிவிடுவான். அரசோ முதலாளி நட்டப் படாமல் பார்த்துக் கொள்ள்ளும்.

    நாம் என்ன செய்யப் போகிறோம்?//



    #100 இளைஞர்களைக் கேட்ட விவேகாநந்தர் வருவாரா...?
    இல்லை காந்திதான் மீண்டும் வருவாரா...?
    இல்லை யார் வருவார் என காத்திருக்க வேண்டும்?
    ம்ம்ம்... நமக்கு என்றுதான் ரோஷம் வருமோ, அன்றுதான் விடிவும் வரும்.
    ஆனால் நிச்சயம் ஒரு நாள் விடியும்...

    ReplyDelete
  22. /// Anonymous said...
    //கல்வி பொதுப் படும் வரை இத்தகைய அசிங்கங்கள் நிகழ்ந்து கொண்டுதானிருக்கும்.

    தாளாளர் முதலாளியாகிவிடுவார். கல்வி சரக்காகிவிடும். மாணவன் வாடிக்கையாளனாகிவிடுவான். அரசோ முதலாளி நட்டப் படாமல் பார்த்துக் கொள்ள்ளும்.

    நாம் என்ன செய்யப் போகிறோம்?//



    #100 இளைஞர்களைக் கேட்ட விவேகாநந்தர் வருவாரா...?
    இல்லை காந்திதான் மீண்டும் வருவாரா...?
    இல்லை யார் வருவார் என காத்திருக்க வேண்டும்?
    ம்ம்ம்... நமக்கு என்றுதான் ரோஷம் வருமோ, அன்றுதான் விடிவும் வரும்.
    ஆனால் நிச்சயம் ஒரு நாள் விடியும்... ///

    இந்த கோவத்தை தலை வணங்கி வழிமொழிகிறேன்

    ReplyDelete
  23. நந்தன்ஜீவாJuly 19, 2012 at 8:48 PM

    சுடும் உண்மை. சட்டென்று பதில் அளிக்க இயலவில்லை. உங்கள் ஆழ்ந்த சிந்தனைக்கு தலைவணங்குகிறேன்.இதற்கான் தீர்வு ஒட்டுமொத்த மக்கள் கைகளில்தான் உள்ளது.

    ReplyDelete
  24. ஒட்டுக்கு பணம் வாங்குவது தவறென புரிந்தாலே எல்லாம் சரியாகும். அதுவே மையம்.

    ReplyDelete
  25. /// நந்தன்ஜீவா said...
    சுடும் உண்மை. சட்டென்று பதில் அளிக்க இயலவில்லை. உங்கள் ஆழ்ந்த சிந்தனைக்கு தலைவணங்குகிறேன்.இதற்கான் தீர்வு ஒட்டுமொத்த மக்கள் கைகளில்தான் உள்ளது ///

    மிக்க நன்றி தோழர்.

    மக்கள் கைகளில்தான் தீர்வு உள்ளது. ஆனால் மக்களைத் தயார் செய்ய வேண்டிய பொறுப்பு நம் கைகளில்தான் இருக்கிறது.

    ReplyDelete
  26. /// Nandan Jeeva said...
    ஒட்டுக்கு பணம் வாங்குவது தவறென புரிந்தாலே எல்லாம் சரியாகும். அதுவே மையம். ///

    அது ஒரு சின்னப் புள்ளிதான் தோழர்

    ReplyDelete
  27. கல்வியைச் சீரழிக்கும் கடன்வலையை வலுவான விவரங்களோடு அம்பலப்படுத்தும் பதிவிற்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  28. //// இரா.தெ.முத்து said...
    கல்வியைச் சீரழிக்கும் கடன்வலையை வலுவான விவரங்களோடு அம்பலப்படுத்தும் பதிவிற்கு வாழ்த்துகள் ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  29. வாழ்த்துக்கள் தோழர். அற்புதமாக தகவல்களை சொல்லி இருக்கிறீர்கள் .

    ReplyDelete
  30. //// நா சாத்தப்பன் said...
    வாழ்த்துக்கள் தோழர். அற்புதமாக தகவல்களை சொல்லி இருக்கிறீர்கள் . ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  31. கமல்ராஜ் ருவியேJuly 26, 2012 at 11:13 PM

    சிறிதாய்... எளிமையாய் விவரிக்க முடியாத சித்தாந்ததை சிறு நிகழ்வுடன் அமைத்த விதம் அருமை... நல்ல ஆசிரியன் .. தன் மாணவனிடம் கற்கிறான்... தந்தை தன் பிள்ளையிடம் கற்கிறான்.............. வெள்ளச்சி என்ற ஒற்றை வார்த்தையில் அந்த குழந்தையின் அழகு சுட்டித்தனம் குணாதிசயம் விளக்கிய விதம் உங்கள் எழுத்தின் சிறப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  32. இந்த பதிவை-
    வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்!

    வருகை தாருங்கள்!
    தலைப்பு ; படித்தவர்கள்.....

    ReplyDelete
  33. தோழர் சீனா அவர்களின் அறிமுகம் மூலம் உங்கள் பதிவை கண்டேன், இது என் முதல் வருகை! உங்களின் பதிவுகள் அருமை!
    "விடை தேடும் காதல்" .......
    காதலிக்கும் அனைவருக்காகவும்... காதலை நேசிப்பவருக்கும்... காதலின் விடை தேடும் காதலி எழுதும் கவிதை இது....
    உங்களை என் வலைக்கு அன்புடன் வரவேற்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. உங்களது மேலான வருகைக்கு மிக்க நன்றி தோழர்.
      அவசியம் வலையினைப் பார்க்கிறேன்

      Delete
  34. சுவாதியும் கவிதையும்October 12, 2013 at 10:14 AM

    வாழ்த்துக்கள்....வித்யாசமான சிந்தனைகள்.....{ கஸ்டப்பட்டு திண்டுக்கல் தனபாலன் சார் ட்ட கேட்டு கேட்டு blog சரி பண்ணியதோடு பார்க்கவும் வருகிறேன்} புதுக்கோட்டை க்கு வந்ததுக்கு நன்றி

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...