Thursday, December 29, 2011

கூடங்குளம் கரண்டு ஃபேக்டரி...



“எங்கள் கணவர் மார்களில் பெரும்பான்மையோர் குடிப்பதை அறவே நிறுத்தி விட்டார்கள். மீதமுள்ள சிலரும் குடிப்பதில் பெரும்பகுதி நிறுத்திக் கொண்டார்கள்.. கூடிய விரைவில் அவர்களும் முற்றாய் நிறுத்திவிடுவார்கள். எங்களை அடித்து துன்புறுத்துவதை நிறுத்திக் கொண்டதோடு வீட்டு வேளைகளில்கூட எங்களுக்கு கூடமாட ஒத்தாசை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்,” என்பதாக நீளும் மகிழ்ச்சியும் குதூகலமும் கலந்து கொப்பளிக்கும் பெண்களின் பேட்டியோடு நகர்கிறது இன்றைய (.28.12.2011) “நியூ இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்” இன் செய்தி ஒன்று.

யுகம் யுகமாக எது பெண்களை விடாது அழவைத்ததோ அதை முற்றாக அழித்துப் போட்டு அவர்களின் கண்ணீரைத் துடைத்து அவர்களை மலரச் செய்த தலைவன் யார்? அல்லது கடவுள்தான் யார்?

எந்தத் தலைவனாலும், இறைதூதனாலும் ஏன் இறைவனாலும் இது சாத்தியப் படாது. ஒரு மக்கள் போராட்டம் மட்டுமே இத்தகையதொரு மாற்றத்திற்கு காரணமாக அமைய முடியும் என்பது மீண்டுமொருமுறை நிறுவப் பட்டிருக்கிறது.

இடிந்தகரையில் நடைபெறும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின் 134 வது நாள் நிகழ்வுகளை சேகரிப்பதற்காக சென்ற அந்தப் பத்திரிக்கையின் செய்தியாளர்களிடம் போராடிக்கொண்டிருக்கும் அந்த மண்னின் பெண்கள் கூறியது இது.

எந்தவொரு மகத்தான மக்கள் போராட்டமும் இது போன்ற உப விளைவுகளையும் சேர்த்தே கொண்டு வந்து சேர்க்கும் என்பதுதான் நமக்கு வரலாறு சொல்லும் பாடம்.

உப விளைவே இவர்களது வாழ்க்கையில் இவ்வளவு மாற்றத்தினையும் மகிழ்ச்சியையும் கொடுக்க வல்லது எனில் போரட்டத்தின் இறுதி விளைவு சத்தியமாய் இதைவிட கோடி கோடி மடங்கு மாற்றத்தையும் உறுதியாய் கொண்டு வந்து சேர்க்கும் என்று நம்மால் உணர முடிகிறது.

”எங்கள் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கினை போராட்ட நிதியாக வழங்கிவிடுகிரோம்” என்று நீளும் அவர்களது நேர்காணலோடு நீள்கிறது அந்த செய்தி. உண்மையை சொல்வதெனில் தினமும் தினமும் செத்து செத்துப் பிழைக்கும் அன்றாடம் காய்ச்சிகளான, அதிலும் அறைகுறை வருமானத்திற்கான உழைப்பின் பெரும்பகுதி நேரத்தையும் போராட்டத்திற்காகத் தியாகித்து விட்ட பனையேறிகளும் மீனவர்களும் கிடைக்கும் தங்கள் சொற்ப வருமானத்திலும் பத்தில் ஒரு பங்கை போராட்டத்திற்களித்து போராடுகிரார்கள் எனில் ஏன் அவர்கள் போராடுகிறார்கள்?

“ஏம்பா கூடங்குளத்து கரண்டு ஃபேக்டரி வரக்கூடாதுன்னு இப்படி வம்படிக்குறீங்களே. நல்லா இருப்பீங்களா நீங்க .?” என்று விஷ்ணுபுரம் சரவணனின் நண்பரிடம் அவரது நண்பர் ஒருவர் கூறினாராம். ஆக, அவரைப் பொறுத்தவரை கூடங்குளம் அணு உலை என்பது சோப்பு ஃபேக்டரி மாதிரி, கார் ஃபேக்டரி மாதிரி மின்சாரம் தயார் செய்யும் ஒரு ஃபேக்டரி. அது உற்பத்தியைத் துவங்கி விட்டால் மின் தடை வராது, ஒரு ஆயிரம் ரெண்டாயிரம் பேருக்கு பிழைப்பு கிடைக்கும். ஒரு பத்து பதினைந்து பேர் கடை வைத்துப் பிழைக்கலாம், சுத்துப் புறம் வளர்ந்து விரிவடையும். இன்னும் சொல்லப்போனால் மின்சாரத்தின் விலைகூடக் குறையும். அதை ஏன் பாழாய்ப் போன இவர்கள் இப்படி மல்லுக் கட்டிக் கொண்டு எதிர்க்கிறார்கள் என்பது அவரது ஆதங்கம். ஆமாம் கூடங்குளத்தில் கரண்டு ஃபேக்டரி ஏன் வரக்கூடாது?

மேலே சொன்ன எதுவும் உண்மை அல்ல என்பதை முதலில் சொல்லிவிட்டு தொடர்வதே சரியாக இருக்கும்.

”உலைக் கட்டுமானங்கள் மிகப் பாதுகாப்பன முறையில் கட்டமைக்கப் பட்டுள்ளன. மேகூடங்குளத்தில் அணு உலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில்1988 இல் கோபர்ச்சேவ் மற்றும் ராஜீவ் இருவரும் கையொப்பமிடுகின்றனர் “அணுக்கரு வழங்குவோர் குழுமத்தின்” ஒப்புதல் பெறவில்லை. எனெவே இதை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க் குரெலெடுத்தது அமெரிக்கா. ஏறத்தாழ இந்த நிலையிலேயே இப்பகுதி மக்களும் உலைக்கு எதிரான தங்கள் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார்கள். போராடுபவர்களைப் பார்த்து அரசும் இதன் ஆதரவாளர்களும் சொன்னார்கள் “அமெரிக்காவிடம் பணம் பெற்றுக் கொண்டு கூத்தடிக்கும் அமெரிக்க கைக்கூலிகள்” . இப்படிச் சொன்னவர்கள்தான் ஆட்சியே போனாலும் பரவாயில்லை அமெரிக்காவோடு அணு ஒப்பந்தம் செய்தே தீருவோம் என்று அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட உத்தமர்கள். மக்களின் எதிர்ப்பிற்கும் அமெரிக்காவின் எதிர்ப்பிற்கும் ஒரே காரணம்தான் என்பதை ஒத்துக் கொள்வதற்கு நாம் ஒன்றும் அவர்கள் அளவிற்கு புத்திசாளிகள் இல்லை. ரஷ்யாவோடு ஒப்பந்தம் என்பதைத் தவிர அமெரிக்கா இதை எதிர்ப்பதற்கு வேறு காரணம் எதுவுமில்லை என்பது நமக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் நன்றாகவே, மிக நன்றாகவேப் புரிகிறது.

லும் ரிக்டர் அளவில் ஆறு எண் வரைக்கும் நில நடுக்கம் ஏற்பட்டாலும் எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் உலை கட்டமைக்கப் பட்டுள்ளது. எனவே அச்சமே கொள்ளத் தேவையில்லை என்று அப்துல் கலாமே சொல்லியிருக்கிறார். அவரைவிட நீங்கள் என்ன பெரிய அறிவாளியா ?” என்றும் ஒரு புன்னகையோடு ஏளனிக்கிறார்கள் சிலர்.

சத்தியமாக அய்யா கலாம் அளவிற்கு நாம் படித்தவர்களோ அறிவாளிகளோ அல்லதான். ஆனாலும் அவர் சொல்லியிருக்கிற எல்லை அளவைக் கடந்து 6.5 ரிக்டர் அளவில் அந்தப் பகுதியில் எதிர் காலத்தில் ஒரு பூகம்பம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம் (அதைவிட அதிக அளவில்கூட நிலனடுக்கம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமென்றே சொல்கிறார்கள்) அதன் விளைவுகள் புக்சிமா, செர்னோபில் மற்றும் அமெரிக்காவின் மூன்று மைல் அணு உலை விபத்துக்களைவிடக் கொடுமையானதாகத்தானே இருக்கும். ஒருக்கால் அப்படி ஒரு பேரிடரே வராது. நாங்கள் இறைவனிடம் ஐ.எஸ்.டி போட்டு பேசிவிட்டோம் என்று கூட இவர்கள் சொல்லக்கூடும். அவர்களுக்கும் ‘செர்னோபில் மற்றும் மூன்று மைல் அணு உலை விபத்துக்கள் பேரிடர் விபத்துகளால் ஏற்படவில்லை. மனிதத் தவறுகளும் இயந்திரக் கோளாறுகளுமே கூட உலைகள் வெடிக்க காரணமாகக் கூடும்’ என்பதே நமது பாமரத்தனமான பதில்.

ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீது நமக்கு இருந்தாலும் கலாம் அய்யா மீது நாம் கொண்டிருக்கும் மதிப்பும் மரியாதையும் எந்த ஆக நவீன அளவுகோளையும் தாண்டி நீளும் தன்மை கொண்டவை. ஆனால் அதற்கு சற்றும் பொருத்தமே இல்லாமல் “செர்னோபில் விபத்தில் வெறும் 55 பேர் மட்டுமே இறந்து போனார்கள்.அதை ஏன் இவ்வளவு பெரிது படுத்துகிறார்கள்” என்பது மாதிரி சொல்லி நம்மை சங்கடப் பட வைத்திருக்கிறார்.

அய்யோ அய்யா, 55 பேர் செத்தது பெரிது இல்லையா? இதைச் செய்தால் ஒரே ஒருவன் செத்துப் போவான் என்று தெரிந்த பின்னும் அதை ஒருவன் செய்தால் அவன் மனிதன்தானா அய்யா? விழித்துக் கொண்டே கனவு காணும் பித்துக்குளி கூட இப்படி உளற மாட்டானே. எப்படி இப்படி மாறினீர்கள் என்று நான் கேட்க மாட்டேன். இதுதான் நீங்கள் என்பது நன்றாகவே தெரியும். ஆனால் இவ்வளவு வெளிப்படையாகப் பேசுகிற தைரியம் எப்படி வந்தது? எதற்கு சுற்றி வளைத்து பேசிக் கொண்டு, நேரடியாய் சொன்னால் மட்டும் என்ன செய்துவிடுவார்கள் என்கிற, ஆமாண்டா அப்படித்தான் சொன்னேன் என்ன செஞ்சுடுவ? என்று கேட்கிற திமிர் கலந்த தொனி இருக்கிறது பாருங்கள் அதுதான் நாங்கள் சற்றும் எதிர் பார்க்காதது. அது சரி, எத்தனை பேர் செத்தால்தான் அதை நீங்கள் ஒரு பொருட்டாய் கொள்வீர்கள்? யூனியன் கார்பைடு மாதிரி குவியல் குவியலாய் செத்துத் தொலைத்தால்தான் உங்களுக்கு அதை ஒரு பொருட்டென ஏற்க மனமிரங்குமா?

அது சரி, செர்னோபில் கூட ஒரு விபத்து. செர்னோபில் விபத்தில் கூட 55 பேர்தானே செத்தார்கள் என்பதன் மூலம் எதை எங்களுக்கு உணர்த்த வருகிறீர்கள் அய்யா?. பயப்படாதீர்கள், அப்படியே விபத்து ஏதேனும் நிகழ்ந்தாலும் சொற்ப அளவில்தான் சாவு இருக்கும் என்று சொல்ல வருகிறீர்களா? உங்கள் இடது கால் சுண்டு விரலிலிருந்து உதிர்ந்து விழும் மண்ணளவிற்கும் பொருட்டில்லாத நான் கேட்கிறேன், எதிர்பார்க்கமல் ஏற்படும் உயிரிழப்பை விபத்து என்று கொள்ளலாம். ஆனால் சொற்ப அளவே நிகழும் என்ற அளவில் எதிர் பார்த்துவிட்டாலே அது விபத்தல்ல, கொலையாயிற்றே அய்யா?. உங்களைப் போன்ற சான்றோர்களையும் மேதைகளையும் எதிர்கால சந்ததியினர் கொலையாளிகளாகப் பார்த்துவிடக் கூடாதே என்பதற்குத்தான் இப்படிப் போராடித் தொலைக்கிறார்கள் .



2004 நவம்பர் மாதத்து “current science" இதழில் கேரளப் பல்கலைகழகத்தின் நில இயல் துறையை சேர்ந்த முனைவர் பிஜி அவர்களூம் சென்னை ஐ.ஐ.டி ராம்குமார் அவர்களும் கூடங்குலம் பகுதி எரிமலைக் குழம்புகளால் ஆனது என்று எழுதியிருப்பதை தனது பேட்டி ஒன்றில் மாலதி மைத்ரி மேற்கோள் காட்டியிருப்பதை இப்போது நாம் கவனத்தில் கொள்வது அவசியம்.

"மக்கள் அதிகமாய் நடமாடாத பகுதியில்தானே அணு உலை அமைக்கப் படுகிறது. பிறகு ஏன் இவ்வளவு பதறுகிறீர்கள்?” என்பது மாதிரியான ஒரு கேள்விக்கு, மக்கள் நடமாட்டமே இல்லாதப் பகுதியில்தான் இவை அமைக்கப் படவேண்டும் என்ற 29.04.1991 அன்று வெளியிடப் பட்ட எண் 828 (தமிழ்நாடு பொதுப் பணித்துறை) என்ற அரசாணையை பொருத்தமாக சுட்டிக் காட்டி இது அந்த அரசாணைக்கு புறம்பானது என்று சொல்வதையும், சுற்றுலாத் தளங்கள் மற்றும் புகழ் பெற்ற இடங்களுக்கு 20 கிலோமீட்டர் தொலைவு வரை அணு உலைகளை நிறுவக் கூடாது என்கிற AERA விதிகளையும் இது மீறுவதாக அவர் மிகச் சரியாக கூறுவதையும் நம்மால் உதாசீனப் படுத்திவிட முடியாது.

கல்பாக்கத்தில் இத்தனை ஆண்டுகளாக ஒரு பாதிப்பும் நிகழ்ந்து விடவில்லையே. அப்புறம் ஏன் இவ்வளவு பதட்டம் என்று கூட சொல்கிறார்கள். விபத்து திடீரென்றுதான் வரும் என்று நாம் அவர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நம்மைவிட அவர்களுக்கு இது மிக நன்றாகவே தெரியும். கல்பாக்கத்தில் பெரிய அளவில் விபத்துக்கள் நிகழவில்லையே தவிர அதன் பாதிப்புகளான கேன்ஸர் , ஆறு விரல் குழந்தைகள், மற்றும் பல்வேறு விதமான எலும்பு சம்பந்தமான வியாதிகள் இருக்கவே செய்கின்றன. கூடவே அவற்றை எதிர்த்து போராட்டங்களும் அந்தப் பகுதியில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. என்ன சோகம் எனில் அணு உலைக்கு எதிராகப் பேசுபவனை குண்டர் சட்டத்திலே போடு என்று பேசினால் பக்கம் பக்கமாகப் போடும் பத்திரிக்கைகள் அவற்றுக்கெதிரான போராட்டங்களை கண்டு கொள்வதே இல்லை.

மின்சாரம் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதைத் தவிர வேறு மாற்றே இல்லையே என்கிறார்கள். ஒரு மூன்று மாதங்களுக்கு முன்னால் எந்தப் பத்திரிக்கை என்று சரியாய் நினைவில்லை தினத் தந்தி அல்லது தினகரன் இலவச மலரில் வந்திருந்த ஒரு செய்தி மாற்று சாத்தியமே என்று சொல்கிறது.

ஏழாம்வகுப்பு அளவில் படிக்கும் இரண்டு மாணவர்களுக்கு வழங்கப் பட்ட விருதுகளைப் பற்றியது அது. ஒருவன் வீட்டிலிருக்கும் மின் விசிரியை தொடர்ந்து உற்று நோகியதன் விளைவாக ஒரு ஆய்வுக்கு நகர்கிறான். சக்கரம் சுற்றினால் மின்சாரம் எடுக்கலாம். மின்விசிரிதான் சுழல்கிறதே அதிலிருந்து மின்சாரம் எடுக்கலாமே என சிந்திக்கிறான். விளைவு அதற்கேற்றார்போல் ஒரு டைனமோ தயார் செய்கிறான். மின்விசிறி இயங்கும் போது ஒரு பெல்ட்டால் இணைக்கப்பட்ட

அதன் அருகில் பொருத்தப் பட்டுள்ள டைனமோவின் சக்கரமும் சுழற்றப் பட்டு மின்சாரம் தயாராகிறது. ஒரு அரை மணி நேரமானதும் மின் இணைப்பை துண்டித்து விடலாம். அரை மணி நேரம் அந்த டைனமோ உற்பத்தி செய்து சேமித்து வைத்திருந்த மின்சாரத்தைக் கொண்டு அடுத்த அரை மணி நேரம் மின்விசிறி ஓடும். இந்த அரை மணி நேரத்தில் மின் விசிரி இயங்கும் போது மீண்டும் டைனமோ மிசாரத்தை உற்பத்தி செய்யும்.

இன்னொரு மாணவன் சுழலும் ரயில் சக்கரங்களிலிருந்து மின்சாரம் தயாரிக்க இயலும் என்று நிறுவி இருக்கிறான்.

ஒரு நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு மணி நேரம் கூட மின்வெட்டே இல்லை என்ற செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடனில் பார்த்தேன். அவர்கள் காற்றாலை , சூரிய ஒளி போன்றவற்றால் மின்சாரம் தயாரிப்பதாகவும், தங்கள் தேவைக்கு மிஞ்சிய மின்சாரத்தை அவர்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தருவதாகவும் படித்தேன்.

இப்படியெல்லாம் மாற்றுப் பாதையில் வெற்றிகரமாக பயணிக்க பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்களாலேயே முடிகிறது எனில் அணு உலையை அமைத்தே தீருவது என்று ஒற்றைக் காலில் நிற்கும் இந்த மேதைக்ளால் முடியாதா?

வெய்யில் எவ்வளவு மகத்துவமானது என்பதை எஸ்.ரா விடம்தான் கேட்க வேண்டும். வெய்யிலின் தீராக் காதலர் அவர். மகத்துவம் மிக்க வெய்யிலை எப்படி வீணடிக்கிறோம்? ஒவ்வொரு சொட்டு வெய்யிலிலும் எவ்வளவு மின்சாரம் இருக்கிறது என்பது இந்த அணு உலையின் காதலர்களுக்கு ஏன் இன்னும் புரியாமல் இருக்கிறது?.அல்லது ஏன் இன்னும் புரியாத மாதிரி நடிக்கிறார்கள்.அல்லது என்ன செய்தால் இவர்களுக்குப் புரியும். அல்லது புரிந்தேதான் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்வார்கள்.

தமிழகத்தில் இவ்வளவு மின் தேவையும் இருளும் இருக்கிறபோது என் பாட்டனையும் அப்பனையும் தம்பி தங்கைகளையும் கூண்டோடு கொலை செய்த ராஜபக்‌ஷேவை திருப்தி செய்வதற்காய் கடலிலே குழாய் அமைத்து வழங்க இருக்கும் மின்சாரத்தை நிறுத்தினால் போதாதா?

“செர்னோபில்லில் நடந்ததை ஒரு குறிப்பிட்ட நாட்டில் நடந்த பேரழிவாகக் கொள்ள முடியாது.மாறாக இது மொத்த உலகத்தையேபாதித்துள்ள விஷயமாகக் கொள்ள வேண்டும்” என்று கோபர்ச்சேவ் சொன்னதையும் இங்கு பதிவது சரியாக இருக்கும்.

ஏற்கனவே 14000 கோடிகளுக்கு மேல் கொட்டியாகிவிட்டது . இவ்வளவு செலவு செய்த பிறகு விட்டுவிட முடியுமா?. வீணாக்க முடியுமா? என்றும் அடிக்கடி கேட்கிறீர்கள் சான்றோர்களே?.

1,76,000 கோடியிலிருந்து வேண்டுமானால் இந்த 14000 கோடியை கழித்துக் கொண்டு அருள்கூர்ந்து எங்களை விட்டு விடுங்களேன். 14000 கோடி செலவளித்து செய்த சவப் பெட்டி என்பதற்காக செத்துவிடு என்றால் இயலாது என்று போராடுவதற்காக எங்களை மன்னித்து விடுங்கள் பெரியோர்களே.

நன்றி: “காக்கைச் சிறகினிலே” “ அலை செய்திகள்” இணைய இதழ்

42 comments:

  1. நல்ல பதிவு ஐயா...

    ReplyDelete
  2. Good morning sir. I read the article. Open statement of the Koodamkulam people.samy

    ReplyDelete
  3. திரு நாகேஷ் நடித்த ஒரு திரைப்படம் நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை. படம் நினைவில்லை ஆனால் அதில் நாகேஷ் விளக்கையோ நெருப்பையோ கண்டால் , தீ பிடித்து எரிந்து எல்லாம் அழியும் கற்பனையில் அழுவது நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. thiru.g.m.balasubramaniam.,please come and live at kalpaakkam or koodankulam.

      Delete
  4. 14000 கோடி செலவளித்து செய்த சவப் பெட்டி என்பதற்காக செத்துவிடு என்றால் ....அருமையான குத்து.

    கூடங்குளத்தில் கரண்டு ஃபேக்டரி ஏன் வரக்கூடாது? என ஒவ்வொரு வினாவாக எழுப்பி அவைகளுக்கு உங்களின் பாணியிலேயே பதிலளித்தவிதம் அருமை.
    மாற்றுப் பாதையில் வெற்றிகரமாக பயணிக்க காட்டிய வழிகளும் மிகச்சரியே
    ஆயினும் அனைத்து குரல்களையும் குழிதோண்டி புதைத்து விட சக்தி வாய்ந்த த்ந்திரிகள் அல்லவா நாட்டில் கோலோச்சுகிறார்கள்,
    இன்னும் கொஞ்சம் உரக்க குரல் எழுப்பவேண்டுமோ!

    ReplyDelete
  5. நம்நாட்டில் ஆன்மீக தலைவர்கள் என தங்களை கூறிக்கொள்பவர்களின் பின்னால் கண்களை மூடிக்கொண்டு திரளும் மக்களைப் பார்க்கும் போது...ஏன் இது போன்ற போராட்டங்களில் மக்கள் சக்தி முழுமையாக வெளிப்படுவதில்லை என்ற ஏக்கம் வருவது உண்மையே.

    ReplyDelete
  6. தேசத்த்ரோகி உதயகுமார் அமெரிக்காக்காரனிடம் கால் நக்கி வாங்கிய கூலியில் உங்களுக்கு எவ்வளவு கொடுத்தான்.

    ReplyDelete
  7. @ Rathnavel

    மிக்க நன்றிங்க அய்யா

    ReplyDelete
  8. @ Venkadesan

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  9. @Samy

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  10. \\\G.M Balasubramaniam said...
    திரு நாகேஷ் நடித்த ஒரு திரைப்படம் நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை. படம் நினைவில்லை ஆனால் அதில் நாகேஷ் விளக்கையோ நெருப்பையோ கண்டால் , தீ பிடித்து எரிந்து எல்லாம் அழியும் கற்பனையில் அழுவது நினைவுக்கு வருகிறது.///

    மிக்க பொறுப்போடும் அதைவிடக் கூடுதலான மரியாதையோடும் அய்யாவின் கவனத்திற்கு “அஞ்சுவது அஞ்சாமை பேதமை” என்பதை நினைவு படுத்துகிறேன்

    ReplyDelete
  11. \\\\ Uma said...
    நம்நாட்டில் ஆன்மீக தலைவர்கள் என தங்களை கூறிக்கொள்பவர்களின் பின்னால் கண்களை மூடிக்கொண்டு திரளும் மக்களைப் பார்க்கும் போது...ஏன் இது போன்ற போராட்டங்களில் மக்கள் சக்தி முழுமையாக வெளிப்படுவதில்லை என்ற ஏக்கம் வருவது உண்மையே. ///

    ஏக்கம் நிறைவேறும் உமா. தொடர்ந்து போட்டு வைப்போம்.ஜனங்கள் திரளும் போது எல்லாம் சரியாகும்

    ReplyDelete
  12. \\\\ Raja said...
    தேசத்த்ரோகி உதயகுமார் அமெரிக்காக்காரனிடம் கால் நக்கி வாங்கிய கூலியில் உங்களுக்கு எவ்வளவு கொடுத்தான். ///

    முதலில் உங்களை அன்போடு வணங்கி வரவேற்கிறேன்.

    என்ன, உங்களைப் போல அசிங்கமாகவும் அநாகரிகமாகவும் பேசமாட்டோம் என்ற உங்களது தைரியம் இருக்கிறது பாருங்கள் , என்ன செய்வது, விடுங்கள். உங்கள் விமர்சனத்தை அப்படி ஏதேனும் இருப்பின் வையுங்கள் நாகரீகத்தோடும் வையுங்கள். பொறுப்போடு பேசுவோம்.

    ReplyDelete
  13. தோழர், அப்துல் கலாம் போன்ற அறிவிலியலாளர்களின் நோக்கம் அணு உலைகளிலிருந்து மின்சாரம் தயாரிப்பது அன்று; அணுகுண்டு தயாரிப்பதுதான் என்ன்பதால்தான் மின்னுற்பத்திக்கான பிற வழிகளைத் திட்டமிட்டு மறைக்கிறார்கள் என்பது உண்மையல்லவா?

    ReplyDelete
  14. @ யரலவழள
    மிக்க நன்றி தோழர். எல்லாம் தெரிந்த கலாம் போன்ற ஒரு மனிதர் வாயை சரியாகத் திறந்துவிட்டால்...அப்பப்பா...

    ReplyDelete
  15. கடுவன் பூனை(குட்டிபூனை)December 30, 2011 at 8:46 PM

    காலங்காலமாக ஆட்சியாளர்கள் மாறுகிறார்கள்.மக்கள் பிரச்சனைக்கு சரியான தீர்விருந்தும் தீர்ப்பதில்லை.

    மாற்று எரிசக்தி முறைகள் இன்னும் பரவலாக்கப் படவேண்டும் தோழர்.

    ReplyDelete
  16. // சொற்ப அளவே நிகழும் என்ற அளவில் எதிர் பார்த்துவிட்டாலே அது விபத்தல்ல, கொலையாயிற்றே அய்யா?.//

    நீண்ட பதிவு எனினும் இரண்டு முறை வாசித்து விட்டேன்...கனமான வரிகள் ஐயா..நன்றி...

    ReplyDelete
  17. \\\ கடுவன் பூனை(குட்டிபூனை) said...
    காலங்காலமாக ஆட்சியாளர்கள் மாறுகிறார்கள்.மக்கள் பிரச்சனைக்கு சரியான தீர்விருந்தும் தீர்ப்பதில்லை.

    மாற்று எரிசக்தி முறைகள் இன்னும் பரவலாக்கப் படவேண்டும் தோழர். ///

    மிக்க நன்றி தோழர்,
    ஆட்சியாளர்கள் மாறிக் கொண்டுதானிருக்கிறார்கள். யார் வரவேண்டுமோ அவர்கள் அது குறித்து அக்கறையோடு முனைப்பு காட்டுவதாகவே தெரியவில்லை. இந்த தேர்தல் நடைமுறிகளுக்குள் அவர்கள் இன்னும் தங்களை சரியாய்ப் பொருத்திக் கொள்ளவில்லை.

    விடுங்கள் அது ஒரு பெருங்கனவு. மாற்று எரிசக்தி குறித்து நாம் இன்னும் இன்னும் நிறைய விவாதிப்போம்.

    ReplyDelete
  18. \\\ மயிலன் said...
    // சொற்ப அளவே நிகழும் என்ற அளவில் எதிர் பார்த்துவிட்டாலே அது விபத்தல்ல, கொலையாயிற்றே அய்யா?.//

    நீண்ட பதிவு எனினும் இரண்டு முறை வாசித்து விட்டேன்...கனமான வரிகள் ஐயா..நன்றி... ///

    மிக்க நன்றி தோழர் மயிலன் தோழர்.

    ReplyDelete
  19. மாற்று சக்திகள் என்பதை நாம் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கான காரணங்கள் நிறைய உண்டு. நீங்கள் சொல்லிய பதிவுகளின் கருத்துக்களோடு உடன் படுகிறேன். நிறைய எழுதியும் ஆகிவிட்டது. ஆனால், அறிவின் பால் தங்களை உயர்ந்தவர்கள், உடனடியாக வளர்ச்சி என்கிற ஐரோப்பிய அமெரிக்க மாடல்களை வைத்து, அங்கே முடிந்து போனதை நம் மண்ணின் தொடங்க ஆர்வமாய் இருக்கிறார்கள்.
    பழைய வண்டிகளை வளராத நாடுகளுக்கு அனுப்பி குறைந்த விலையில் விற்பதைப் போன்று. அங்கே ஓட்ட முடியாத தொழில் நுட்பம் இவைகளை இந்தியா ஏற்றுக் கொள்ளுகிறது.
    அதுமட்டுமலாமல், அணு உலை எதிர்ப்பு என்பது மாற்று வழிகளில், சுத்தமான, விரையக் கிடக்கிற காற்றையும் சூரிய ஒளியையும் பயன்படுத்த முடியும் என்பதை ஏனோ அறவே ஏற்க மறுக்கிறார்கள்.
    சொன்னால் அமேரிக்கா எவ்வளவு கொடுத்தது, கைக்கூலி எவ்வளவு கிடைத்தது என்பது போன்ற வசைவுகள் தான் கிடைக்கிறது. அணு உலை விபத்து ஏற்பட்டால் ரஷ்யா எந்தப் பொறுப்பையும் ஏற்காது என்று நம் பாரதப் பிரதமர் அறிவித்திருக்கிறார். அமெரிக்காவோடு ஒப்பந்தம் போடுகிறது அரசு. அமெரிக்க மற்றும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு வாசலைத் திறந்து விடுகிறது அரசு. எந்த அமெரிக்கக் கைக் கூலிகளிடம் இவர்கள் கூலி பெற்றார்கள் என்பதை மட்டும் இவர்கள் பேச மாட்டார்கள்.
    என்ன செய்வது?
    கனி இருப்பக் காய் கவர்ந்தற்று என்பது நமக்குப் புரிவதே இல்லை..

    நேரம் இருப்பின் என்னுடைய பழைய பதிவுகளை வாசியுங்கள்.
    http://unmayapoyya.blogspot.com/

    ReplyDelete
  20. அன்பின் இரா.எட்வின்,என் கருத்துக்கு மதிப்பு கொடுத்துவேறு வித அணுகலை சுட்டியதற்கு நன்றி. என் பதிவு எண்ணாச்சிதறல்கள் படிக்க வேண்டுகிறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. நல்ல தகல்வலும்,பதிலடிகளும் தந்த நல்ல பதிவு...

    ReplyDelete
  22. இதே அப்துல் கலாம் முல்லைப் பெரியாறு அணையை மேலும் பலப் படுத்த வேண்டும் என்று கூறியுள்ளதும்..
    ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்து அறிக்கையில் கற்பனைக்கு எட்டாத வகையில் இயற்க்கை சீற்றம் இருந்ததால் நடந்த விபத்து என்று குறிப்பிட்டுள்ளதும்...
    தானே புயல் தற்பொழுது கடலூரிலும் புதுவையிலும் மின்சாரத்தையும் தொலை தொடர்பையும் துண்டித்து உள்ளதையும் நினைவு கூற வேண்டும் அணு உலை ஆதரவாளர்கள்...

    ReplyDelete
  23. அன்பு எட்வின் அவர்களே!"யார் வரவேண்டுமோ அவர்கள் அக்கரை காட்டவில்லை. தேர்தல் நடைமுறைகளை ...." புரிகிறது.என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யலாம்?வாருங்கள் தோழரே வீதிக்கு . வராமல் எதுவும் நடக்காது!---காஸ்யபன்

    ReplyDelete
  24. சாலை விபத்துகளில்கூட தினமும் நூற்றுக்கணக்கில் இறக்கின்றனர். எனவே சாலையில் எந்த வாகனமும் செல்லக்கூடாது என்று போராடவேண்டியதுதான்.

    ReplyDelete
    Replies
    1. road accident differs from nuclear plant accident.please read more about nuclear hazzards.

      Delete
  25. சரவணகுமார் முத்துசாமிJanuary 6, 2012 at 5:53 AM

    மிக்க ஆக்கபூர்வமான கருத்துக்கள் நண்பரே.....
    என் முகநூல் சுவரில் உங்கள் அனுமதியுடன் பதிகிறேன்.....

    /// *எந்தத் தலைவனாலும், இறைதூதனாலும் ஏன் இறைவனாலும் இது சாத்தியப் படாது.

    *இப்படிச் சொன்னவர்கள்தான் ஆட்சியே போனாலும் பரவாயில்லை அமெரிக்காவோடு அணு ஒப்பந்தம் செய்தே தீருவோம் என்று அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட உத்தமர்கள்

    *மனிதத் தவறுகளும் இயந்திரக் கோளாறுகளுமே கூட உலைகள் வெடிக்க காரணமாகக் கூடும்

    *மாற்று சாத்தியமே

    * மின்விசிறி இயங்கும் போது டைனமோ மிசாரத்தை உற்பத்தி செய்யும். சுழலும் ரயில் சக்கரங்களிலிருந்து மின்சாரம் தயாரிக்க இயலும். இப்படியெல்லாம் மாற்றுப் பாதையில் வெற்றிகரமாக பயணிக்க பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்களாலேயே முடிகிறது

    *மகத்துவம் மிக்க வெய்யிலை எப்படி வீணடிக்கிறோம்? ஒவ்வொரு சொட்டு வெய்யிலிலும் எவ்வளவு மின்சாரம் இருக்கிறது....?

    *14000 கோடி செலவளித்து செய்த சவப் பெட்டி என்பதற்காக செத்துவிடு என்றால் இயலாது.... ///

    ReplyDelete
  26. @அப்பு

    மிக்க நன்றி தோழர். “உண்மையா பொய்யா” பார்த்தேன்.

    மிக அருமை. அங்கும் எனது கருத்துக்களை பதிவேன்.

    ReplyDelete
  27. \\\ G.M Balasubramaniam said...
    அன்பின் இரா.எட்வின்,என் கருத்துக்கு மதிப்பு கொடுத்துவேறு வித அணுகலை சுட்டியதற்கு நன்றி. என் பதிவு எண்ணாச்சிதறல்கள் படிக்க வேண்டுகிறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள். ///

    மிக்க நன்றிங்க அய்யா. உங்கள் கருத்துக்கும் மதிப்பு கொடுத்தா... உங்கள் மீதான எனது மரியாதையை அளவிட அளவுகோள் ஒன்றினை இனிதான் உர்பத்தி செய்ய வேண்டும் அய்யா

    ReplyDelete
  28. \\\ மரு.சுந்தர பாண்டியன் said...
    நல்ல தகல்வலும்,பதிலடிகளும் தந்த நல்ல பதிவு..///

    மிக்க நன்றி டாக்டர்

    ReplyDelete
  29. \\\ suryajeeva said...
    இதே அப்துல் கலாம் முல்லைப் பெரியாறு அணையை மேலும் பலப் படுத்த வேண்டும் என்று கூறியுள்ளதும்..
    ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்து அறிக்கையில் கற்பனைக்கு எட்டாத வகையில் இயற்க்கை சீற்றம் இருந்ததால் நடந்த விபத்து என்று குறிப்பிட்டுள்ளதும்...
    தானே புயல் தற்பொழுது கடலூரிலும் புதுவையிலும் மின்சாரத்தையும் தொலை தொடர்பையும் துண்டித்து உள்ளதையும் நினைவு கூற வேண்டும் அணு உலை ஆதரவாளர்கள்... ///

    மிக்க நன்றி தோழர் சூர்யஜீவா.ஒத்த அலை வரிசை கொண்ட தோழர்கள் முதலில் கரம் கோர்ப்போம்

    ReplyDelete
  30. \\ kashyapan said...
    அன்பு எட்வின் அவர்களே!"யார் வரவேண்டுமோ அவர்கள் அக்கரை காட்டவில்லை. தேர்தல் நடைமுறைகளை ...." புரிகிறது.என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யலாம்?வாருங்கள் தோழரே வீதிக்கு . வராமல் எதுவும் நடக்காது!---காஸ்யபன் //

    மிக்க நன்றி தோழர். வீதியில் தானே இருக்கேன் தோழர்

    ReplyDelete
  31. மிக்க நன்றி தோழர் விஜயக்குமார் முத்தையா

    ReplyDelete
  32. \\\ Robin said...
    சாலை விபத்துகளில்கூட தினமும் நூற்றுக்கணக்கில் இறக்கின்றனர். எனவே சாலையில் எந்த வாகனமும் செல்லக்கூடாது என்று போராடவேண்டியதுதான். ///

    மிக்க நன்ரி ராபின்.
    என்றோ ஒரு நாள் சாகத்தான் போகிறோம் என்பதற்காக இன்ரைக்கே கல்லரையில் போய் படுத்துக்க முடியாது. நாளைக்கு மரணம் உறுதி எனினும் வாழ்வதற்கான போராட்டம் உன்னதமானது ராபின்

    ReplyDelete
  33. \\\ சரவணகுமார் முத்துசாமி said...
    மிக்க ஆக்கபூர்வமான கருத்துக்கள் நண்பரே.....
    என் முகநூல் சுவரில் உங்கள் அனுமதியுடன் பதிகிறேன்..... ///

    மிக்க நன்றி சரவணக்குமார்.

    ReplyDelete
  34. superb sir but madam soniya ji and manmohan sing don't know how our people feel about this project, they need only one thing currency from russia

    ReplyDelete
  35. மிக்க நன்றி மணி. என்ன ஆளையே காணோம்.
    அவர்கள் அவர்கள் வேலையை பார்க்கிறார்கள் நாம் தொடர்ந்து நமது தளத்தில் இயங்குவோம்

    ReplyDelete
  36. இதில் எனக்கு உடன்பாடு இல்லை. நாகரிகத்தை பற்றி பேச போராடும் பலருக்கு தகுதி இல்லை என்று தன தோன்றுகிறது. இதில் திரு.உதயகுமாரனும் பல முறை உரையாடல்களில் இந்த ஆதரவாளர்கள் கேவலமான முறையில் பேசியதில் இருந்து எனக்கு இதில் எனக்கு வெறுப்பு தான் வந்தது.

    ReplyDelete
  37. சரியான பதிவு .....கூடங்குளம் பற்றி நானும் ஒன்றும் தெரியாத நபராக தான் இதுவரை இருந்தேன் ...யாரிடம் கேட்டபது என்பது பெரிய கேள்வி என் மனதில் இருந்தது .....அருமையான விளக்கம் ...இது ஒரு சமூக பணி..மற்றும் கடமை ....நன்றி ....நட்புடன் சசி ....

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...