Tuesday, December 13, 2011

சிரிக்கும் துறவிகள்


"காக்கை சிறகினிலே” இந்த மாத இதழில் ஜென்னைப் பற்றி நீண்ட, சுவையான கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார் அய்யா ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி. இதை அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன். அதனூடே “சிரிக்கும் துறவிகள்” என்ற கதை ஒன்றினை சொல்கிறார். அதை எனது மொழியில் இங்கே தருவதை எனது இன்றைய கடமையாகவே கருதுகிறேன்.

மூன்று துறவிகள் சீனாவில் இருந்தார்கள். மூவரும் சதா சர்வ காலமும் சிரித்துக் கொண்டே இருந்ததால் அவர்களை மக்கள் “சிரிக்கும் துறவிகள்” என்றே அழைத்தார்கள். எதற்காக சிரிக்கிறோம் என்பது அவர்களுக்கே விளங்காத நிலையில் பையப் பைய மக்களும் அவர்களோடு சேர்ந்து சிரிக்க ஆரம்பித்திருந்தார்கள்.

ஒரு நாள் அந்த மூவரில் ஒரு துறவி இறந்து போனார். ஊரே திரண்டு நின்று அழுது தீர்த்தது. ஆனால் மற்ற இரண்டு துறவிகளும் நண்பனின் பிணத்தருகே நின்று சிரித்துக் கொண்டே இருந்தனர். எரிச்சலடைந்த மக்கள் அவர்களிடம் சென்றனர்.

“ நண்பனின் பிணமருகே நின்று சிரிக்கிறீர்களே. இது உங்களுக்கே அசிங்கமாக இல்லையா?”

“இல்லை”

“பாவிகளா. உருப்படுவீங்களா”

“ பந்தயத்தில் எங்களை அவன் ஜெயித்து விட்டான். அதுதான் சிரிக்கிறோம்”

“பந்தயமா?”

“ஆமாம், எங்களில் யார் முதலில் சாவது என்பது பந்தயம். அவன் ஜெயித்து விட்டான். அதை நினைத்துதான் சிரிக்கிறோம்”

வாயடைத்துப் போனார்கள்.

செத்த துறவி ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.

“ நான் சதா சிரித்துக் கொண்டே இருந்ததால் அழுக்கென்னை அண்டவே இல்லை. எனவே நான் செத்துப் போனதும் என்னைக் குளிப்பாட்டாமல் அப்படியே எரித்து விடுங்கள்.”

அப்படியே செய்தார்கள்.

அப்போது அவர் தனது உடைகளுக்குள் ஒழித்து வைத்திருந்த வெடிகள் வெடித்தன. வானத்தில் சில ஜொளித்து வேடிக்கை காட்டின. எரியூட்ட வந்திருந்த எல்லோரும் சிரித்தார்கள்.

என்ன ஒரு பந்தயம்? வென்றவன் தனது வெற்றியைக் கொண்டாடவே இயலாது என்று தெரிந்திருந்தும் தோற்றவர்கள் தங்களது தோல்விக்காக துவளாமல் வென்று இல்லாமல் போனவனது, அல்லது இல்லாமல் போய் வென்றவனது வெற்ரியை கொண்டாடுவது என்பது இருக்கிறதே... அப்பப்பா... ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னமே கதை சொல்லி இருக்கிறார்கள். 

அநேகமாக தனது மரணத்திலும் மக்கள் சிரித்து மகிழ எதையோ வைத்து விட்டுப் போன மகத்தான மனிதன் இவனாகத்தானிருக்கும். 

6 comments:

 1. நல்லதொரு விடயத்தை சொல்லினிற்கும் கதையை உங்கள்பாணியில் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 2. வ‌ண‌க்க‌ம் தோழ‌ர்! முழுக்க‌ட்டுரையும் 'காக்கை' இத‌ழில் ஓரிரு முறை வாசித்தும் அட‌ங்கா பிர‌ம்மிப்பு த‌ங்க‌ள் ப‌திவின் இறுதி வ‌ரிக‌ளால் ஆசுவாச‌மான‌து.

  ReplyDelete
 3. அருமை...... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

  என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...

  ReplyDelete
 4. காக்கைச் சிறகினிலே இதழ் வருவது தெரியாமல் 3 வது இதழைத்தர்ன் வாங்கினேன். நான் சொல்ல வந்ததைத் தாங்கள் தெளிவுபடுத்திவிட்டீர்கள். தெரிந்த நண்பர்கள் ஐந்து பேரை இதுவரை அந்தக் கட்டுரையைப் படிக்க வைத்துவிட்டேன். எட்டுப்பக்கங்கள் நீர்த்துப்போகாத ஒரு அவசியமான கட்டுரை. ஜென்னைப் பற்றி எனக்கிருந்த ஐயங்களையும் தீர்த்துவிட்ட கட்டுரை அது. ஞானாலயா கிருஷ்ணமூர்த்திக்கு மனமார்ந்த நன்றிகள் உங்களின் வழியாக. இதுபோன்ற தரமான கட்டுரைகள் அடங்கிய புத்தகங்களை வாசித்தால்கூட போதும் தரமான படைப்பாளிகள் உருவாவார்கள். ஆசிரியர் வைகறைக்கு மிகுந்த நன்றிகள். உங்களுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 5. ஒவ்வொரு பகிர்வின் முடிவிலும் முத்தாய்ப்பாய் மிளிரும் உங்கள் வரிகள் முத்துக்கள். கலக்குறீங்க எட்வின்!

  ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...